FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on January 16, 2024, 11:02:50 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334
Post by: Forum on January 16, 2024, 11:02:50 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 334

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/334.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334
Post by: VenMaThI on January 17, 2024, 02:08:42 AM



மலர் சூடும் மணவாளன்
மங்கையின் திருவாளன்
மனம் கவரும் கள்வனவன்
மதியை வெல்லும் மாயவன் ...

கனவுலகில் மிதக்க செய்யுமடா
தென்றலாய் உன் தீண்டலின் ஸ்பரிசம் ...
நாணமும் முகம் சிவக்க நாணுமடா - நீ
நங்கை அவளை நாடும் பாங்கில் ...

சந்தித்த நொடியா - இல்லை
உன்னை பற்றி சிந்தித்த நொடியா
அறியேனடா இன்றும் நான்
உன்னிடம் என்னை தொலைத்த நொடியை ...

உன்னுள் தொலைத்ததை
உன்னுள் தேட ஆசை ..
உன்னுடன் இருக்கும் பொழுதில் மட்டும் அல்ல
என் உயிர் போகும் பொழுது வரை ..

நித்தமும் கை கோர்த்து
நொடியும் நீங்காமல்
நிம்மதியாய் வாழும்
நிறைவான வரம் வேண்டும் ...

கண் பார்க்கும் தூரம் வரை
கால் நோக நடக்க வேண்டும்
கல்லறை செல்லும் வரை .. என்
கண்ணாளன் தோள் சாய்ந்து ....

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334
Post by: Vijis on January 18, 2024, 01:42:49 AM
என்னவனே
 ஓர் பாதை பயணத்தில் சந்தித்தோம் அன்று எனக்கு காவலனாகவும் இன்று கணவனாகவும் வந்தாய்

 என் பிறந்தநாளுக்கு உன் காதலின் பரிசாக மலர்களை கொடுத்து உன் அன்பை வெளிப்படுத்திய தருணம் நான் புதிதாக பிறந்தது போல் அறிந்தேன்

 உன் விழிகளை பார்த்து என் காதலை கூறவில்லை என்றாலும் என்னுள் உணராத புது உணர்வாய் உணர்ந்தேன்

உன்னை என் மனதில் சுமந்து எதுவுமே அறியாதவள் போல் ரசித்து பல வருடங்கள் காத்திருந்தேன்

 நம் மொழிகள் பேசவில்லை என்றாலும் எனக்காக நீயும் உனக்காக நானும் நாம் இருவரும் நம் காதலோடு காத்துகொண்டு இருந்தோம்

 காதலனாக கைகோர்க்க நினைத்த எனக்கு உறவுகளோடு வந்து மனைவி என்ற பெருமையை அளித்தாய்

அன்றும் இன்றும் என் விழிகள் ஏங்குவது உன்னை காணவே என் கூந்தல் தேடுவது உன் விரல் பட்ட மலரை சுடவே

 உன்மேல் நான் வைத்த காதல் என்னுயிர் பிரியும் வரை நாம் நம் வாழ்க்கை என்னும் பயணப்பாதையில் நீண்டதூரம் பயணிக்க வேண்டும்

நீ கொடுத்த வரமான நம் குழந்தைகளும் இறைவன் கொடுத்த வரமான உன்னையும் என்றும் பிரியேன் காதலோடு உன் மனைவி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334
Post by: Madhurangi on January 18, 2024, 11:29:21 AM
என்னவன்


பொன்னகைகள் வரதட்சணையாய் எதிர்பார்க்கும் உலகில்
உன் புன்னகைக்கு ஈடு எதுவென்பான் என்னவன்..
மலர் சூட குழல் தொடும் முன் மிச்சமின்றி சொச்சமின்றி  முழுதாக
என் மனம் தொட்டவன் என்னவன்..

மரண காயங்களின் தழும்புகளை கூட சுவடின்றி
மறைய செய்யும் மருந்தாளன் என்னவன்..
 மறுத்து மறந்து வாழ்ந்த வாழ்வின் இன்பங்களை புத்துயிரோடு
மீண்டும் மலரச்செய்தவன் என்னவன்...

சிரிப்புகளுக்கு மாத்திரமின்றி சிந்தனைகளுக்கும்
மறுஜென்மம் அளித்தவன் என்னவன்..
என்னோடு என் கனவுகளையும் நேசிக்கும்
பெண்ணியம் பேசும் கண்ணியவான் என்னவன்..

அன்பொன்றே மொழியாக கொண்டவன் என்
சர்வமும் அவனே என்றாகி போனவன் என்னவன்..
சலிப்பின்றி திகட்ட திகட்ட அன்பு செய்பவன்
உயிராகவும் உறவாகவும் மாறிப்போனவன் என்னவன்..

எதுகை மோனகையற்ற என் மொத்த கற்பனை
கிறுக்கல்களின் காரணகர்த்தா என்னவன் ..
மீள மனமும் இல்லாமல் வழியும் இல்லாமல் தன்னுள்ளேயே
மீண்டும் மீண்டும் மூழ்க செய்கிறான் என்னவன்.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334
Post by: NiYa on January 18, 2024, 12:25:28 PM
வாடிய மலராய் நான்

அன்று நான் பட்டு புடவையிலும்
அவன் பட்டு வேட்டியிலும்
மணமகனும் மணமகளுமாய்
மணவறையில் ...

காதல் திருமணம்  இல்லைதான்
பெண்பார்த்து நடந்தது
இந்த கல்யாணம் முன் பின் அறியாத முகத்திலும்
அவன் ஆண் தோரணையில் மலைத்து போனது நிஜம் தான்
 
திருமணத்தில் அவன் சுட்டிய மலரும்
அவன் இட்ட திலகமும்
மனம் நிறைவாய் போனதும்
என் மனதில் அவன் நுழைந்ததும் அப்போதுதான்

இந்த ஈராண்டில் உண்மைக்காதலை
கற்பித்தது என்னவன் தான்
அவனின் அன்புதான்
அன்பிற்கு அடிமையானது என் மனது

இத்தனை வருடமாய் ஏங்கிய அன்பை
கண்டேன் என்னவனின் கண்களில் நான்
அனுமதி இன்றி நெருக்காத கண்ணியம்
அனைத்திலும் அவனுள் தொலைந்து போனேன் நான்

யாரோ கண்பட்டால் போல்
அவரை எனக்கு நிரந்தரமாய்
கொடுத்துவைக்கவில்லை
என்றவருத்தம் தான் இப்போதும் எனக்கு

ஓர் உடலாய் இருந்த நாம்
இன்று நான்மட்டும் தனிமரமாய்
இறுதியில் நீ சூடிய அந்த வாடிய பூவும்
எனக்கு சொந்தம் அற்று போனது அன்பே ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334
Post by: Sun FloweR on January 18, 2024, 06:57:28 PM
சோறும் இறங்கவில்லை..
தொண்டைக் குழியில்
பச்ச தண்ணியும் போகவில்லை..
மாமன் நினைப்புல
மயிலு நான்
காத்திருக்கேன் தவிப்புல ..

வயக்காட்டுல
கரிச்சாங் குருவி
கத்துதய்யா..
வீட்டுக்குள்ள ஒருத்தி
மனசு ஏங்குதய்யா...

பரிசம் போட்டு,
பந்தக்கால் நட்டு,
பீப்பி ஊதி
விருந்து வைக்கணும் ஊருக்குள்ள..
மாலை மாத்தி
மூணு முடிச்ச
கழுத்துல ஏந்தி
நிக்கணும் நான் மேடையில..

பாவி மவ
உறங்காமத்தான் முழிச்சிருக்கேன்..
ஆவி போனாலும்
உம் மடியில தான்
நான் கிடப்பேன் ..

பொருத்தமான சோடியினு ஊருக்குள்ள பேச்சிருக்கு..
மருதைக்கு போகையில
தாலி ஒன்னு நீ வாங்கு..

அர்த்த சாமத்திலும்
கனவுல நீ வருகிறாய்...
கனவுல வந்து நீ
பூச்சூட்டி அழகு பார்க்கிறாய்..

காத்திருந்து காத்திருந்து கார்த்திகையும் கரைஞ்சு போச்சு..
பாத்திருந்து பாத்திருந்து மார்கழியும் உதிந்து போச்சு..

தைப் பிறந்தா
வழி பிறக்குமாம்
எஞ்சோட்டு பொண்ணு ஒருத்தி சொன்னா..
மச்சானே உன்
மனம் திறந்தா
நாம ஜோடியாவே ஆகிக்கலாம்...

சித்திரை வரை
சிறுக்கி மவ காத்திருப்பேன்..
செல்ல மாமன் நீ
வரலைனா உன் வீட்டு முன்
தீக்குளிப்பேன் ..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334
Post by: SweeTie on January 18, 2024, 07:31:46 PM
காதோரம் லோலாக்கு  நானானால்   
ஆதாரம்  நீயாவாயா  கண்மணி
கண்ணோரம்   நீ சிந்தும்   காதலில்
சேதாரமாகுதடி  என் இதயம்

காட்டு தீயினைப்போல் 
கொழுந்துவிட்டு எரியுதடி 
அணைக்க  வழி தெரியாமல்
தவிக்குதடி  என் நெஞ்சம் 

பற்றி இழுக்குதடி  பளிங்குபோல் உன்மேனி
பரிதவிச்சு போகுதடி பாழான   என் மனசு 
வயல்காட்டு  பொம்மை  போல  காவலனாய்
வழிநெடுக காத்திருக்கேன்  நீ வரும்  நாள் 

;பெரியவங்க  சொன்னாங்க   
தை  பொறந்தா  வழி பொறக்கும்
தைரியமா  இருடா னு
தையும் பொறந்தாச்சு   நெல்லும் வேளாண்சாச்சு
உன் மனசு மட்டும் இன்னும் தொறக்கலையே

எப்ப சொல்லுவியோ  ஏது  சொல்லுவியோ 
பக்கு பக்குனு  துடிக்குதடி  என் மனசு 
எத்தின  நாள் காத்திருப்பேன்  மஞ்சள் கயிறோட
சுணக்கமேண்டி   இன்னும் சீக்கிரமே சொல்லு

கொட்டுமேளம் கொட்டி   ஊர் கூட்டி 
பந்தி வச்சு   பரிமாறி   செஞ்சுவச்ச கல்யாணம்
அத்தனையும்  வாழ்ந்ததா   சரித்திரமா   இருக்கு ?
இரு மனமும்  இணைஞ்சு  ஓண்ணாக  வாழ்ந்தா
அதுதாண்டி   நெசமான கல்யாணம் !!!!


 




 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334
Post by: HiNi on January 19, 2024, 02:15:30 PM

மெல்ல திறந்தேன் அறையின் கதவை

வீட்டில் அனைவரும் சலசலப்புடன் ஆரவாரமாய்!!

ஊர் வாய் கெழவிகள் ஒரே கலகலப்புடன் கூட்டமாய்!!

வீட்டு வாசலில் குழந்தைகள் ஜல்ஜல் என்று
அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்கும் பட்டமாய்!!

தென்றலுக்கு நாட்டியம் ஆடும் தோரணைகள் அலங்காரமாய்!!!

என் அம்மா என்னை உற்று நோக்கி நடந்தாள்
"ஏன்டியம்மா இன்னும் தயாராகலையா?"
"இதோ" என்று  நகர்ந்தேன் சஞ்சலப்புடன்!!!

எளிமையாக கேட்டு விட்டாள்  இந்த கேள்வியை!!

புரியவில்லையா உணரவில்லையோ என் மனதின் வேதனையை!!

ரீங்காரம் அடித்து கதறும் குரல் கேட்கவில்லையோ?

பெற்றெடுத்து அன்புடன் வளர்த்த என் குடும்பமா?

ஆசையாய் கட்டிய இதய கோபுரத்தின் என்னவனா?


மெளனமாய்  தலை குனிந்து நின்றேன்
பெண் பார்க்கும் படலம் முன்
ஒரு மன சடலமாய்!!!

சிறு விநாடிகளும் இமைய மலைப் போல் கடக்க
கூட்டத்தில் ஒளித்தது
நான் ரசித்து கேட்கும் என்னவனின் குரல் இசை!!!

பட்டாம்பூச்சி போல் என் உள்ளம் சிறகடிக்க
பறபறவென தேடிய என் கண்களை!!

ஆனந்த கண்ணீரில் சிறையில் அடைக்க
மலர் சூட காத்திருந்தான்
என்னவன் எனக்கு மணவாளனாய்!!!

இன்பதிர்ச்சியில் சொப்பனம் களைய!!

அடடா இவை அனைத்தும் கனவா?

அழகிய கள்வனை காணும் சந்தர்ப்பத்திற்க்கு
ஏங்கி தவித்து
இன்பமாய் நாணத்துடன் சென்றேன்!!!🤗

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334
Post by: Vethanisha on January 20, 2024, 10:34:10 AM
பொன்னாலே  எனக்கு ஒன்னும்
அலங்காரம்   தேவை இல்ல
காதோரம் நீங்க சூடும் ஒத்த பூ
போதும் மாமா

அமெரிக்கா ஐரோப்பா   
சுத்தி பாக்க தேவை இல்ல
காலம் முழுக்க உங்க மடியோரம்
சின்ன இடம் போதும் மாமா

வித விதமா பட்டு புடவை
தழைய தழைய தேவை இல்ல
உங்க அணைப்பினிலே நிறைஞ்சிருக்க
மனசு வைங்க போதும் மாமா

கலர் காலரா வளையல் ஒன்னும்
என் கை நிறைக்க தேவை இல்ல
என்  கையோடு உங்க  கை கோர்த்து
களனி சுத்தி பாப்போம் மாமா
 
பிச்சா பர்கர் தங்கபஸ்பம்
 இப்ப எனக்கு தேவையில்ல ( அப்புறம் பாத்துக்கலாம்)
உங்க கையாலே சமைச்சு  ஒரு வாய்
 ஊட்டி விடுங்க போதும்  மாமா

என்ன முன்ணனிருத்தி
எனக்காக எதுவும் செய்யும்
என் கனவுகலே  மதிச்சு
 அதுக்காக உழைக்கும்
என் உறவ தன் உறவா
அன்போடு நடத்தும்
தங்க புள்ளே நீங்க மாமா

என்ன நம்பி கூட வாங்க
கண் கலங்காம
பாத்துக்குறேன் மாமா ❤️
 




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334
Post by: Lonely Warrior on January 21, 2024, 07:14:33 AM
பெயர் தெரியாத என் வருங்கால வாழ்கை துணையே  , சீக்கிரம் வந்து விடு வழித் துணையாக அல்ல என் வாழ்கை துணையாக . பெயர் தெரியாத என்னவளே தெரிந்து கொள்ள ஆசை ,உன் பெயரை அல்ல . உன்னை 🥰