FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on October 30, 2023, 04:53:02 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: Forum on October 30, 2023, 04:53:02 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 327

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/327.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: Sagi2023 on October 30, 2023, 09:09:39 PM
             இராவணா..!
                    இராவணா...!!
                          பத்து தலை பராக்கிரமசாலி
                   என் பாதம் படிகிறான்..
        பணிய வைக்க பார்க்கிறான்...
      இந்த பாவையை பார்வையோடு...!!

உன் பத்து கைகளும் இறுக பற்ற துடிக்கிறது..!!
                        என் பற்றா  தேகத்தை ..
பார்த்து பத்திரம்..  நீயோ...?
          ஆயுள்கைதி ஆகிவிட போகிறாய்
                      என் ஆடைகளுக்குள்...

       தோற்று விடுவாய் என்றாலும்..
                  போரிடவே முனைகிறாய்...
பெற்றுவிடுவேன் அவளை என்றே விளைகிறாய்....!!
               உன் தலைமுதல் கால் வரை..
                     என் விரல் பதிக்கும் காலம் எப்போது என
பேசுவதை நிறுத்திவிட்டு.....   இன்று..!!
      என் உடலை ஆராய தொடங்குவிட்டது அவன் இதழ்கள்..

பேச தயங்கி மருண்ட பொழுதுகள் ஏராளம்..
              நூறு முறை சண்டையிட்டு
ஆயிரம் முறை அனணத்து கோள்கிறாய் இறுக்கமாக ....
             இன்று இடைவெளிகளே இல்லை..
                    இல்லை இல்லை என சொல்ல மனமில்லை...
தெரிந்தும் தெரியாமலும் திருடுவான் என்னை...
               மாயக்காரன்...!!  மாயக்காரன்...!!

ஒரு மாத ஏக்கத்தை ...என்னிடம் ஒரே வினாடிக்குள் ......
          சிறை வைக்க பார்க்கிறான் அவன்....!!
உயரங்களை அவன் கணகிடவில்லை..
        உடலோடு உடல் பேசும் ஒரு இஞ்ச்ச் இடைவேளியில்...
               உயிரோடு உறவாட பார்க்கிறான்...கள்வன்....!!!

பார்வையால் என்னை விழுங்குவதை நிறுத்திவிட்டு இன்று
                       .................................ஒரு படி மேலே சென்று ....!!!
அவன் விரல்கள் என் நாணநரம்புகளை மீட்டுகிறது வீணையை போல்..
         அவன் பசிக்கு இறையாக்கி விடுவான் போல என்னை...

                          முன்னிரவில் தயங்கிய அவன்..
               பின்னிரவில் மயக்கிவிட்டான் அவளை...

விட்டுவிடு என்று அவள் உதடுகள் கூத்தாடினாலும்...
        விலகி விடாதே என்று கதறுகிறது அவன் உள்ளம்...!!!
இரவுகளின் ஆழியிலே மீனாக துடிக்க வைக்கிறான்.. !!!
       துடிக்கிறேன்.... என்றாலும் அதை செவி வழியே ருசிக்கிறான்....!!

திருடா ....  என் உயிரை உரசி ....
      தீ மூட்டி அதில் ஏன் குளிர்காய துடிக்கிறாய்...
                 கை தொட்டு ........
                   கண் கெட்டு........
                      இதழ் சுட்டு..........
                         இதயம் விட்டு.......
              இடறிய கண்ணத்தில்
                            பதித்துவிட்டான்
                                        முதல் முத்தத்தை...!!!

மச்சங்களுக்குள் மிச்சத்தை தேடுகிற உதடுகள் ..
இடையிடையே... இடையை பிழிகிறது அவன் விரல்கள்..
உடையின்றி உடலாகியது அவன் அரவணைப்பு ...

காதல் கொள்ளாமல் கலவு கண்டுவிட்டேனா
என நானும் ...
காமம் அல்லாமல் களவு கொண்டு விட்டானோ
என அவனும்...

                  உன்னோடு இல்லா இரவுகள்.....
      என்னோடு கொல்லை கனவுகள்...
நேற்று நான் நின்று சிரித்த இடம் ..?
    இன்று என்னை பார்த்து சிரிக்கிறது ..!
கொள்ளைகாரனிடம் கொள்ளை போனதா உன் மனம் என்று....

இன்று இரவு எனக்கானவளாய் இரு ....
          என்னவளாய் மட்டும் இரு .......
                    என்னோடு இரு......
என பிதற்ற வைத்துவிட்டேன் அவனை....

வினாக்கு விடையளிக்காமல் ......
       காத்திருப்பகளோடு அவன் காத்திருக்கையில்...
                   அவன் தழுவும் முன்..
உறக்கம் என்னை தழுவி விட்டது ..
இன்று...    விருந்து கிடைக்கும் என எண்ணியவனுக்கு..
                             மருந்து கூட கிடைக்கவில்லை ... !!!

பதறிய மனதும் பிதறுகிறது அவனிடம்...!!
           கள்வன் ஆகிறான் அவன்..!!
                     என்னிடத்தில்
         கள்வனின் காதலி ஆவேனா
                  உன்னிடத்தில்...!!!

                                       இப்படிக்கு ...
                                              (உன் இதயம் கவர்ந்த நான்)
                                                               சகி தயாநீ.
                                                     




Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: Vijis on October 30, 2023, 10:24:32 PM
உன் கண்களை பார்த்து பேசா முடியாத என் அன்பை கடிதத்தில் எழுதிகிறேன் உன்னையும் உன் அன்பையும் சுமக்கும் என் இதயத்துக்கு இன்று தான் வெளிச்சம் ஒரு நாள் உன்னை காணவில்லை என்றாலும் அன்றய நாள் கனவாகவே முடிகிறது முன்புயெல்லாம் ஏதோ ஏதோ நினைக்கும் என் மனது இன்று உன்னையும் உன் நினைவுகளையும் மட்டுமே நினைக்கிறது உன் மேல் நான் வைத்த அன்பு நீ இருக்கும் வரை இல்லை என் உயிர் பிரியும் வரை கடவுள்கிட்ட வேண்டுவது ஒன்று மட்டும் தான் உன் மூச்சு காற்று உள்ளயே வாழவேண்டும் அந்த வாழ்க்கை நீண்ட நேரம் பயணிக்க வேண்டும் உனக்கு நேரம் இருந்தால் நினைத்து பார் என்னையும் என் அன்பையும் உன்னை என் வாழ்க்கையில் பொக்கிஷமாக தந்த கடவுளுக்கு நன்றி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: Minaaz on October 30, 2023, 11:09:36 PM
யார் அவள்....??
 
அரண்மனை வாயிலில் மேளங்கள் முழங்கிட......
 பல்லக்கில் ஒய்யாரமாய் வந்திறங்கிட்ட  ராணி போல் .....
என் மனதில் மலர்ந்தவள் அவளோ,,......
வானத்து நிலவென
 இம் மண்ணில் களம்  இறங்கிட்டதேவதை அவளோ....

யாரையும் தேடாத என் விழிகள் ,..
அவளிடம் சரணடைந்திட்ட சந்தர்ப்பமதில்,...
யாரும் புரியாத இலக்கணக் கவியை சுமந்த புத்தகம் அவளோ....
தெரியாத உலகை ஓவியமாய் வரைந்திட  வந்த ஓவியம்  அவளோ
தாயென   என்னை அரவணைத்திட,....
தாரமாய் உருமாறிய தெய்வம்தான் அவளோ....


கானகத்திலும் கண்டனம் தெரிவித்த சந்தண மரம்தான் அவளோ....
அவளை மெச்சிட மொழிகள் தேடிக் கொண்டிருக்க, ......
அவள் மீது மலர்ந்த காதல்..,வளர் பிறையென வளர்ந்தோடிட.......
வார்த்தைகள் இன்றி திக்குமுக்காடி நின்றிருக்கையில்,
 அப்போதுதான் மலர்ந்திட்ட மலரென..,
 கன்னங்கள் சிவந்திட, தரையோடு விரல்கள் உரசிட,...
 தன் காதலையும் வெளிப்படுத்தி நின்றாள் என்னவள்....

என்னவளிடம் பேசிட தயங்கிட்ட மனது
கைகளால் வரைந்திட்ட மடலை நீட்டி நின்றிற்று....
நம் இருவரையும் எண்ணித்தான் எழுதப்பட்டன
காதல் காவியம் என்ற
கிண்டலும் சினுங்க;லுமாய்
பதிவிடப்பட்ட என் மடலில்
மங்கையவள், என்னவளாய் பதிவாகிற்று.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: VenMaThI on October 31, 2023, 02:27:37 AM


என் அய்த்த மவனே
என் ஆசை காதலனே

மரத்த சுத்தி ஆடயில
மனசுல ஏதும் தோணலையே...
மங்கைப்பருவம் வந்தப்ப
மன்மதனாத்தான் தெரிஞ்சயே...

பச்சமட்ட கட்டயில
வெச்ச கண்ணு வாங்கலையே..
அன்று முதல் இன்று வரை
இந்தப்பாவி உன்ன மறக்கலயே...

தயங்கி தயங்கி பார்த்த காலமெல்லாம்
ஆத்துத்தண்ணி போல் ஓடிப்போச்சு..
மறஞ்சு மறஞ்சு பார்த்த காலமெல்லாம்
மாயமா மாலையேறித்தான் போச்சு..

மாமனே உன்ன பாத்து
மாசமும் பல ஆச்சு..
மாப்பிள்ளையா உன்ன பாக்கும்
காலமும் கை கூடியாச்சு...

மணவரையில மாலை மாத்தி
மஞ்ச தாலி தான் கட்டி..
பொஞ்சாதியா என்ன நீயும்
கூட்டிப்போ கையோடு கை கோர்த்தி....

அப்பன் ஆத்தாள கூட்டி வந்து
மொறப்பொண்ண பரிசம் போடு...
அப்படியே இந்த கடுதாசிய
படிச்சு பாத்து பதில் போடு...

இது வெறும் கடுதாசி இல்ல மாமா
என் காதலை உனக்கு சொல்லும் இதயம்..
இது
துடிப்பதும்
துண்டாய் சிதரிப்போவதும்..
உன் கையில தான் இருக்கு..

இப்படிக்கு
உன்னவள் ❤️❤️❤️❤️❤️❤️


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: Mr.BeaN on October 31, 2023, 11:58:44 AM

கை பேசி காலத்துல
கடுதாசி தந்தவளே

கை கூடும் காதலுடன்
எனக்காக பிறந்தவளே

உன்னோட புன்முறுவல்
என்ன தான் மாத்திருச்சு

உன்னோட சேரத்தான்
ஆசையையும் கூட்டிருச்சு

மரத்தத்தான் சுத்தி வந்து
நானும் காதலிக்கவில்லை

மனசெல்லாம் உன் நெனப்பு
இல்லாம இருந்ததில்லை

உன்னை நான் பாக்குறப்போ
உன் முகமே தெரியுதடி

நாணத்தில் நான் இருக்க
மத்ததெல்லாம் மறையுதடி

எப்படித்தான் சொல்லுறது
எனக்கும் தோனவில்லையடி

எனக்கும் உன் மேல
காதலும் தான் உள்ளதடி

கடுதாசி பிரிச்சு நான்
படிக்கவும் போறதில்லை

படிசுத்தான் உம்மனசு
தெரியனும்னு ஏதுமில்லை

எப்படி உன் கடுதாசி
பத்திரமா வைப்பேனோ

அது போல காதல் உன்ன
கண் இமையா வச்சுக்குவேன்

காதலுடன் திருவாளர் பீன்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: TiNu on October 31, 2023, 09:21:07 PM


 
அவன் வருகைக்காக காத்திருந்த 
நேரங்கள் இரணமாக வலித்தது..
இப்பொழுது தான் நடுநிசி ஆகிறது.
எப்போது வருவான் அவன்?..
நொடிபொழுதுகள் யாவும்
நாட்கணக்கில் நகருகின்றனவே..

எப்பொழுது பொழுது புலருமென..
ஜன்னலை பார்த்து பார்த்து.. என் விழிகளும்
வைகறை நேரத்து அடிவானம் போல
நிறம் மாறி சோர்வாக..  சோர்ந்தது..
திடீரென குயில் கூவும் குரல்...
திடிக்கிட்டு விழித்தேன்.. நான்..

சூரியனின் செங்கதி கீற்றுகள்..
என் முகத்தில் பளீரென விழ
ஐயோ! என துள்ளி எழுந்தேன்.
கதிரவன் ஒளிர தொடங்கி
பல நாழிகை கழிந்துவிட்டதே.
அவனை காண என் கண்களும்
புழக்கடை வாசலை நோக்கின..

அவன் முன்னே அழகாக தெரிய
என் மனம் நினைக்க.. என்னை நானே 
அழகாக நேர்த்தியுற அலங்கரித்தேன்-பின்   
புள்ளிமான் என எழுந்து, மயிலென
புழக்கடை வேலியோரம் நடந்தேன்..
அங்கே நான் கண்ட காட்சி... என் மனம்..
எங்கேஎங்கோ பறக்க அங்கே அவன்.
 
என் வெண் புன்னகை.. அவன் கைகளில்
என் நிறை சந்தோசம்.. அவன் கைகளில்..   
என் நெடுநாள் அவா.. அவன் கைகளில்..
என் இன்பக்கனவுகள்.. அவன் கைகளில்..
என் பலநாள் காத்திருப்பு.. அவங்க கைகளில்..   
என் முழு எதிர்காலம்.. அவன் கைகளில்..

அவன் அருகில் ஓடி போய் நின்றேன்..
அவனை குளிர் முகம் பார்த்த பின்தான் 
எனக்கு என் உயிர் என்னிடம் வந்தது..
அவசர அவசரமாக.. அவனை கேட்டேன்..
டேய் மடையா.. எல்லாம் ஓகே தானே..
சீக்கிரமாக கொடு..   சீக்கிரமாக கொடு..   

ஆமா ஆமா.. நீ கேட்டது போல..
5 வருட பல்கலைக்கழக தேர்வுகளின் ..
கேள்வித்தாள்கள் பதிவிறக்கிவிட்டேன்
சரிபார்த்துக்கொள்..   நான் கிளம்புறேன்..
அந்த காகிதம் என் கைகளில் தவழ..
நானோ! பொன்வானில் மிதந்தேன்!!!

இம்முறையும் நானே! கல்லூரியின்
முதல் மாணவி என்ற கனவில்!!!!!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: Mani KL on November 01, 2023, 03:49:34 PM
முள்ளு வேலியின் அருகில் நின்ற கள்ளி பெண்ணே

வரவை நோக்கி காத்திருந்த பெண்
பூத்து குலுங்கிய புன்னகை தந்த பெண்

பாவாடை தாவணியில் பார்த்தேன்

கண்களுக்கு ஓய்வு கொடுக்க இமைகள் மறுத்தது
 துடிப்பை கூட்டியது இதயம்
சிரிப்பை கொட்டியது பற்கள்
 உன்னை வர்ணித்து
மடலில் வரிகளாக கொட்டியது விரல்கள்
இரு உள்ளங்களை இணைக்க
மடலை  நீட்டியது கைகள்

மடலில் சொற்களால் கவிதையில் தந்தேன் அன்பை
முகத்தில் புன்னகையுடன் பார்வையில் தந்தாய் அன்பை

 மடலை கைகள்
கை மாறும் முன்னே
கண்கள் அன்பை
 பார்வையால் இடம்  மாற்றியது

காலங்கள் மாறலாம்
கனவுகள் மாறலாம்
கடந்த கால நினைவுகள் மாறாது
ரத்தத்தை மஷியாக்கி
அன்பின் சின்னத்தை அடையாள மாக்கி
அம்புகளோடு மடலில் வரைத்த காலம்
கை பேசி இல்லாத காலம்
காண துடித்த காலம்
கண்களால் அன்பை பரிமாறிய காலம்
சொல்ல தயங்கிய காலம்

கை பிடிக்கும் வரை
கனவுகளோடு வாழ்ந்த காலம்

கனா காலம்


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: Unique Heart on November 02, 2023, 05:49:39 AM
என் அவளை தேடும் பயணம்

என்னவளே ! படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்திற்கும் சுவாசம் எப்படி இன்றியமையாததோ,

அது போல் என்னில் உன் நினைவுகள் இன்றியமையாதவை..

இளங்காற்றும் பொறாமை கொள்ளும், என் அவளின் மெல்லிய சிணுங்கல் கண்டு.

தாகம் தீர்க்கும் தண்ணீரும், தாகம் கொள்ளும், என் அவளின் தேகம் கண்டு...

செங்கதிரும் நகைத்து நிற்கும், என் அவளின் நாணம் கண்டு...

என்னவளே !  நேசம் எனும் மையினால், காதல் எனும் உன் ஓவியம் வரைந்தேன், என் இதயம் எனும் காகிதத்தில்..

இதயத்தில் வரையப்பட்டதாலோ, ஏனோ?  நீ தொலைவில் இருந்த பொழுதும் என்னுள்ளம் தொடர்ந்து உன் நினைவுகளுடனே பயணிக்கின்றது...

வாழ்வில் எண்ணற்ற பயணங்கள் துவங்கி முடிந்த பொழுதிலும்,

என் தேவதையின் கைகோர்க்கும் அக்காதல் எனும் பயணத்திலே தொடர்ந்து பயணிக்க விரும்புகிறது என் உள்ளம்...

என் அவளை நோக்கிய பயணம் அது வெகு தொலைவு ஆன பொழுதிலும், பயணத்தின் முடிவுதனில் தேவதை அவள் தரிசனத்தை எண்ணியே மனம் ஆறுதல் கொள்ளும்..

உலகில் ரசிக்க ஆயிரம் அற்புதங்கங்கள் இருந்தபோதிலும்,

அனைத்தையும் மறந்து நான் ரசிப்பது,  என் தேவதையின் கைகோர்க்கும் அந்த அற்புத நாளை என்னிய பயணத்தையே..

தொலைவுகள் தொடர்ந்த போதிலும், தொடர்ந்து பயணிக்கும் என் நெஞ்சம் என் தேவதையின் நினைவுகளுடன்...... (AHAMED AARONN )....
(குறிப்பு : பதிவிற்கு மன்னிக்கவும் 😁)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: joker on November 02, 2023, 02:45:03 PM
உன்னை நினைக்கையில்
வார்த்தைகள்
வழுக்கி விழுகிறது
என் பேனா மையிலிருந்து

உன்னை கண்ட நொடி
வாழ தொடங்கி விட்டது
என் மனம் உன்னோடு

இயற்கை கொஞ்சும்
நந்தவன சோலை,
நறுமணம் பரப்பி 
பூத்து குலுங்கும் மல்லிகை,
குயில்கள் காதல்
காதில் கூவ
துடங்கிவிட்டன
வண்ண வண்ண பட்டாம்பூச்சி
சுற்றி சுற்றி பறக்கிறது மகிழ்ச்சியில்
வேறென்ன வேண்டும்
என் காதலை உன்னிடம் சொல்ல
ஏற்ற சூழலாய்

தென்றல் தான்  வீசுகிறது
ஆனால்
என்னமோ
பேரலையாய்
இழுத்து செல்கிறது
என்னை
உன்னிடம் 
உன் அழகு

என் எழுத்துக்களில்
பிழைகள் இருக்கலாம்
ஆனால்
உன்னை படைத்தவன்
செதுக்கியிருக்கிறான்
பிழையின்றி
அழகிய தேவதையாய்

இதோ
என் காதலை எழுத்துக்களாய்
தாங்கிய இந்த காகிதம்
 
உன் கைகளில் சுமந்து
"ம்" என்ற ஒற்றை சொல் போதும்
உன்னை வாழ்நாள் முழுவதும்
சுமக்க நான்
காத்திருக்கிறேன்

காகிதத்தில்
ஓர் பக்கம்
வார்த்தைகளால்
நிரப்பி விட்டேன்
மறுபக்கம்
நிரப்பி விடு
நினைவுகளாலோ
அல்லது
உன் அன்பினாலோ
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 327
Post by: Mayajal on November 02, 2023, 10:32:29 PM
என் மோகனமே !
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்வுகளை
மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அன்பிற்கு ஒரு கடிதம்.

உன்  கண்கள் மீதான என் காதலைச் சொல்லி
நீ உன் அன்பில் என்னை பார்ப்பாய் என்று நம்பினேன்
உனது அன்பு பார்வையால்
என் இதய வானத்தை ஒளிர செய்கிறாய்
உனது புன்னகையில் நான் இருக்கும் இடம் பிரகாசமாகிறது.

உனது வார்த்தைகள் பூக்களைப் போல
ஒவ்வொரு வரியிலும் மலரும்
இதமான இசைச்சாரலில் நான் நனைய
கான மழையில் இதயம் துடிக்க
ஓ அன்பே ! என் இதயத்தின் இனிமையான மெல்லிசையே!

உன் அன்பு, என் தங்குமிடம், அதுவே பாதுகாக்கான புகலிடம்
உன்னில் நான் என் சரியான இடத்தை காண்கிறேன்
உன் கரம் பிடித்து நெஞ்சில் சுமந்திட
விரும்பும் உன் உயிர் காதலன்.

என் கனவுகளை நிஜமாக்க வாழ்வதற்கு
போதாது இந்த ஓர் ஜென்மம்
மீண்டும் ஒரு ஜனனம் இருந்தால்
நீயே வேண்டும் என் உயிராக
காதலின் அர்த்தம் புதிதாய் உணர
இனிதே இணைவோம் ! அகம் மகிழ்வோம் !