Author Topic: உங்கள் வீட்டிலுள்ள பொருட்கள் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும்  (Read 1100 times)

Offline Little Heart

நம் வீட்டிலுள்ள பொருட்களை சுத்தம் செய்வதை ஒரு பெரும் வேலையாக எண்ணுகிறோம். ஆனால் அந்தப் பொருட்கள் தங்களைத் தானே சுத்தம் செய்துகொள்ளும் என்றால் அது எப்படி இருக்கும்? இதைத் தான் சுவிஸ் தாவரவியல் நிபுணரான கார்ல் வில்ஹெல்ம் வான் நாகெலி 1893 ல் கண்டறிந்துள்ளார். இதற்கு “ஒலிகோடைனமிக்” விளைவு என்று பெயர். இதன்படி உலோகங்களின் நச்சுத்தன்மை நுண்ணுயிர்கள் அல்லது பாக்டீரியாக்கள் போன்றவற்றை அழிக்கவல்லது. இவை எந்த அளவிற்கு அழிக்கும் எனச் சரியாகத் தெரியவில்லை என்றாலும், இந்த உலோகங்கள் நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்துபவையாக உள்ளன, குறிப்பாக வீடுகளில் உள்ளன என்பது தான் ஆச்சரியம். உதாரணமாக, நகைகள், சில்வர் பாத்திரங்கள், மற்றும் கதவின் கைப்பிடிகள் சுயமாகத் தன்னைத்தான் சுத்தம் செய்துகொள்பவையாகும்.

இவை பாக்டீரியாக்களைக் கொல்லுமே தவிர வைரஸ்களை அழிக்காது. ஏனெனில் வைரஸ்கள் உணவிலிருந்து வெளியேறிய உடனே அழிந்துவிடக்கூடியது. நீங்கள் உபயோகிக்கும் அனைத்து உலோகங்களும் இத்தகைய பண்புகளைக் கொண்டுள்ளதா என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது, ஒரு சில உலோகங்களுக்கு இத்தகையத் திறன் இல்லாமலும் இருக்கலாம். பித்தளையால் செய்யப்பட்ட கதவுக் கைப்பிடிகள், ஒலிகோடைனமிக் விளைவிற்குட்பட்டு செயல்படும்; இவை எட்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும். ஆனால், எஃகு அல்லது அலுமினியம் போன்ற உலோகங்களால் இந்த விளைவினை ஏற்படுத்த இயலாது. இதனால் அவை சுத்தமாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு.

என்ன நண்பர்களே, உலோகங்களில் இப்படியும் விஷயங்கள் உள்ளன என்று ஆச்சரியமாக இருக்கின்றதா?