Author Topic: கண்கள் பேசும் வார்த்தை புரியாதோ ..  (Read 2299 times)

Offline MoGiNi


நீண்ட காத்திருப்புக்கு அப்புறம் கிடைத்த அந்த பஸ் சீட்டில் ஆசுவாசமாக சாய்ந்து கொண்ட ஜீவா ஒரு நின்மதி பெருமூச்சை விட்ட வண்ணம் சுற்றும் முற்றும் பார்வையை சுழல விடடான் . பல்லின மக்களின் நிறக்கலவையாக அந்த பஸ் நகர்ந்துகொண்டிருந்தது .

எப்பொழுதும் ஐரோப்பிய நாட்டின் காலைகள் இப்படித்தான் இயந்திரத்தனமாய் இயங்கிக்கொண்டிருக்கும் . அடுத்த பஸ் நிறுத்தத்தில் ஒரு வயதான வெள்ளைப் பெண்மணி  உள்ளேறி இருக்கைகாக கண்களால் துழாவுவதை பார்த்த பலரும் தங்கள் கண்களை மூடி தூங்குவதை போல் பாசாங்கு செய்வதை அந்த மூதாட்டியும் உணர்ந்திருப்பார் போலும் , மெதுவாக புன்னகைத்துக் கொண்டே சற்று நகர்ந்து கொண்டிருந்த பொழுது " அம்மணி இந்த இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள் " எனும் அந்த நாட்டு மொழி , குரல் அந்த பஸ்ஸில் இருந்த சிலரை திரும்பி பார்க்க வைத்தது, அதில் ஜீவாவும் ஒருவன் .

கைகளின் மா நிறத்தை வைத்து அந்த குரலை வைத்தும் யாரோ ஆசிய நாட்டவர் என்ற முடிவுக்கு வர முடிந்தது அவனால், மற்றபடி இறுகிய குளிர் ஜக்கெட்டில் உடலை போர்த்தி ஒரு கருப்பு நிற கை ப் பையை சுமந்து முதுகு காட்டி நின்ற அவளை அவளது முகத்தை அவன் பார்த்தானில்லை.. சரி யாரோ உதவும் மனது கொண்டவள் , நல்லவள் எனும் எண்ணம் மட்டுமே அவன் மனதுக்குள் ஓடி ஓய்ந்தது.

நகரும் பஸ்ஸின் மென்மையான அசைவு அவனுக்கு தாலாட்டுவதை போல் இருக்கவே இன்னும் 45 நிமிட பயணத்தை கண் மூடி பயணிக்க அவன் தீர்மானித்திருந்தான் . மூடிய இமைகளுக்குள் அவன் காதலி உறங்க விடாமல் இம்சை செய்தாள். 

அவன் அண்ணியின் தங்கை சித்ரகலா... இருபத்தின் ஆரம்பத்தில் இளமை துள்ள என்ன மைத்துனரே என்னை கட்டி கொள்ள கசக்குமா என கண் சிமிட்டி  கேட்டகணத்தில் தடுமாறி சரிந்த மனதுக்குள் புகுந்து இன்னும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள்  ஆனந்த சொரூபி .  கொஞ்சம் குழந்தை தனமான போக்கு தான் , எதை பார்த்தாலும் அதை தனக்கு சொந்தமாக்க வேண்டும் என நினைக்கும் எண்ணம் , பிடிவாதம், அவனுள் அவனை திருத்திவிட முடியும்  எனும் நம்பிக்கை இருந்தது ..

மீண்டும் சித்ரகலா உருவம் அவன் கண்ணுக்குள் வந்து இதழ்களில் புன்னகையை பரவ விட்டிருந்தது ... கண் விழித்து பார்த்தவன் அட இன்னும் 5 நிமிடங்கள் தான், தான் சேர வேண்டிய தரிப்பிடம் வந்துவிடும்  என்பதை உணர்ந்து நிமிர்ந்து அமர்ந்து சுற்றும் மறுபடி கண்களை துளாவ விட்டான்.

அந்த பெண் அவனுக்கு முன் இருக்கையில் இருப்பது அவனுக்கு தெரிந்தது . அவள் முகத்தை பார்க்க முடியவில்லை தலை முடியை தூக்கி ஒரு கொண்டையாக போட்டு கேயார் கிளிப் மாட்டி இருந்தாள்.
விலை உயர்ந்த சென்ட் போலும் நறுமணம் நாசியை துளைத்தது .  அன்றைய நாளிதழை ஆராய்ந்தவண்ணம் இருப்பது தெரிந்தது .

அவனது தரிப்பிடம் வந்தது எழுந்து அவள் முன்பாக வந்து பஸ் நிறுத்துவதட்காக காத்திருந்த சில வினாடிகளில் மீண்டும் அவன் பார்வை அவள் மீது பாய்ந்தது .. என்ன உணர்ந்தாளோ  அவளும் நிமிர்ந்துபார்த்தாள், அவள் போட்டிருந்த கரு நிற கண்ணாடியின் வழியே  அவனை உறுத்து பார்ப்பது போல் இருந்தது , சடடென முகத்தை திருப்பவும் தரிப்பிடத்தில் பஸ் நிற்கவும் சரியாக இருந்தது ....



                                                                                - தொடரும்
« Last Edit: October 31, 2020, 08:29:23 PM by MoGiNi »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !

ஹனி டார்லிங் ! அருமையான எழுத்து நடை ! அழகான சொற்கள் !  தொடரட்டும் கதை பயணம் !அடுத்த episodekaka   ஆவலுடன் waiting !  :-* :D


Offline MoGiNi

உம்மா டார்லிங் எழுதிட்டே இருக்கேன் .. :P :P :-* :-*
« Last Edit: October 31, 2020, 11:05:23 PM by MoGiNi »

Offline MoGiNi

2)


என்றைக்கும் இல்லாதவாறு தலை வலி மண்டையை பிளந்து விடும் போல் இருந்தது மதுவந்திக்கு .. கால நிலை மாற்றமாக இருக்குமோ இல்லை உடலுக்குள் ஏதாவது மாற்றமாக இருக்குமா ... சிந்தனையை ஓடவிட்ட்டபடி இருந்தவளை..

" என்ன மதி  தலை வலி இன்னும் சரியாகலையா , வாயேன் ஒரு ஒரு  பிளாக் டீ  ஸ்ட்ரோங்கா குடிக்கலாம் தலைவலியும் பறந்திடும்  கொஞ்சம் ரிலாக்ஸ்சாவும் இருக்கும் .." எனும் தோழி சரண்யாவின் அழைப்பு மதுவந்திக்கு சரியென்றுபடவே " சரி வா போகலாம் " என்று இருக்கையை விட்டு எழுந்தாள்.

கொஞ்சம் பொறு என்று தோழியை நிறுத்தியவள்,  கணணியை லோக் அவுட் செய்துவிட்டு மணிபர்ஸை எடுத்து சில்லறையாக பணம் உள்ளதா என்று சரி பார்த்து நிமிர்ந்தாள்.

இதையெல்லாம் கவனித்த சரண்யா " இருந்தாலும் இதெல்லாம் ஓவர் மதி ஒரு ஐந்து ரூபாய் கூட என் பர்சில் இருந்து தர முடியாத அளவுக்கு நான் கஞ்சஸ் இல்லைம்மா .. பர்ஸ் அத அங்கேயே வச்சிட்டு வா " என என முறைத்தவளை ஒரு சிறு புன்னைகையோடே  எதிர்கொண்டு நடக்கலானாள் மதுமிதா .

" நீ திருந்தவே போறதில்லடி " என்று மனத் தாங்கலுடன் கூடவே ஒட்டி நடந்தாள் அவள் ஆருயிர் தோழி சரண் எனும் சரண்யா ...



                                                          §§§§§§§§§



"மச்சான் மழை அதிகமா பெய்யும் போல இருக்கு வா இந்த ரெஸ்டாரண்ட் ல ஒரு சாயா சாப்பிடலாம்.." என்று அழைத்த நண்பன் ரமேஷிடம்.. " சரி மச்சி எனக்கும் குடிச்சா நல்லாருக்கும் என்று தோணுது  வா குடிக்கலாம் " என்று கூறியவாறே  ரமேஸுடன் கூட அந்த கபேதிரியா நோக்கி நடந்தான் ஜீவா ..

மதியம் தாண்டி 4 மணிக்கெல்லாம் இந்த நாட்டு மக்கள் தேநீர் மீது கொண்ட மோகத்தை  அங்கே இருந்த கூட்டம் பறை சாற்றியது .. விதவிதமான தேநீர் சிற்றுண்டி வகைகளுடன்  அந்த கபேதிரியாவில்  இருந்து வந்த நறுமணம் அதை கடந்து செல்பவரை  நிச்சயம் உள்ளே இழுத்து ஒரு கப் அருந்த வைக்கும் என்பதில் ஜீவாக்கு எந்த ஐயமும்  இல்லை .

இந்த இடத்தில இருக்கலாம் என்று அழைத்த ரமேஷ் காட்டிய இடத்தில் அமர்ந்து தேநீருக்கான ஆடரை கொடுத்து நிமிர்ந்த இருவர் கருத்தையும் எதிரே  ஒரு மேசை தள்ளி அமர்ந்து தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த இரு பெண்களும் கவர்ந்தார்கள்கள்..

ஒருத்தி பின்புறம் மட்டுமே தெரிந்தது முகம் தெரிவதாயில்லை .. அவள் எதிரே இருந்தவள் நன்றாகவே தெரிந்தாள்.. கொஞ்சம் ஒல்லியான உருவம் மாநிறத்திலும் கம்மியான தோல் நிறம் குட்டையாக வெட்டிய முடி .. கொஞ்சம் கோபமாக இருக்கிறாள் என்பது அவளது கண்கள் அவள் தோழியை உறுத்து பார்த்ததிலேயே தெரிந்தது ...

ரமேஸும் ஜீவாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள் ...சார்  நீங்கள் ஆடர் செய்தவை" என்று மேசை மீது கொண்டு வைத்தவற்றுக்கான பணத்தை ரமேஷ் தர முன் வரவும் இல்லை நான் கொடுக்குறேன் என முன் வந்து ஜீவா கொடுக்கவும் . " சரி மச்சி நெக்ஸ்ட் நான் தரேன் " அப்டின்னு தன் மணிபர்ஸை மூடி உள்ளே வைத்தான் ரமேஷ் ...

இவர்கள் உரையாடல் எதிரே கோபமுற்று இருந்தவள் கண்ணிலும் கருத்திலும் பட்டிருக்கும் போலும் ..

" ஏண்டி என் மானத்த வாங்குறே .. நானே பணம் தறேண்டி நீ எனக்கு அடுத்தமுறை சேர்த்து கொடு , ப்ளீஸ் நான் இந்தமுறை தரேன் .. அந்த பசங்கள பார்த்தியா அவங்க எப்படி டீசண்டா நடந்துக்குறாங்க , நீ ஏண்டி இப்டி இருக்கிறே ... சத்யமா முடியலடி .. என" கோபமாக அலுத்துக் கொண்டாள் அந்த குட்டை முடிக்காரி...

இவள் பேசவே மாட்டாளா... என்ன அமைதியவே அவ டீயை குடிக்கிறாள் என இவர்கள் இருவரும் நினைத்திருப்பார்கள் போலும் ... நினைவைலைகள் சில வேளைகளில் அவர்களை சென்றடையும் போலும் ... நீண்ட  நேரம்  காத்திருக்க வைக்காது அந்த பெண் எதோ சொல்ல ஆரம்பித்தாள் ...

"லுக் சரண்யா..உனக்கு நான் பலதடவை சொல்லிட்டேன் எனக்கான செலவை நான்தான் பார்த்துக் கொள்ளுவேன் அதுக்கு  சம்மதித்தால் மட்டுமே என்னால் உன்கூட வெளிய வர முடியும் என்று சொல்லி இருக்கிறேன் ..அதை நீ மறந்தால் நான் பொறுப்பில்லை .. இப்படி அடுத்தவர் முன்னிலையில் என்னை நீ அவமானப் படுத்துறது போல் நடந்து கொள்வாயென நான் நினைக்கல ..  மத்தவங்க எப்படி நடந்துக்குறாங்க என்றது எனக்கு முக்கியம் இல்ல நான் எப்படி நடந்துக்கணும்னு எனக்குள்ள ஒரு இதோட இருக்கேன் .. உனக்கு தெரியாதது இல்ல , இனிமேல் இப்டி நடந்துக்காத , இல்ல இப்டிதான்னா இதுவே நா உன்னோட வெளிய வார கடைசி தடவையா இருக்கும் , லுக் இதையும்  கேட்டுக்க  அடுத்த மேசைல உக்காந்து நாம என்ன பேசுறோம்னு காது கொடுத்து கேட்க்குறவங்களோட ஒப்பீனியன் உனக்கு வேணும்னா மான அவமானமா இருக்கலாம் எனக்கு இல்லை கிளம்புறேன் ... "

கோர்வையா பேசி முடித்து அந்த இருக்கையை விட்டு எழுந்து இவர்கள் பக்கம் திரும்பி ஒரு பார்வையை  கனலாக வீசி சென்றவளை பார்த்து இருவருமே பிரமித்து உக்கார்ந்திருந்தனர் ...

" மது ... ஸ்டாப் ... இருடி நானும் வாறன் ... அடி இருடி" எனும்  அவள் தோழி சரண்யாவின் அழைப்பு காதிலே வாங்காதது போல் விறு விறு வென  வெளிக்கதவை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் மது எனும் மதுவந்தி .....
« Last Edit: October 31, 2020, 11:00:39 PM by MoGiNi »

Offline Darth Vader

  • Jr. Member
  • *
  • Posts: 50
  • Total likes: 73
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ''Do or Do Not There is No Try''
ரெம்ப கோபக்காரங்களா இருபாங்கா போல மதுவந்தி. மத்துவந்தியின் கோபத்தின் உச்சம் எதுவரை செல்லும் என்பதை எதிர் பார்த்து இருக்கிறேன். தொடர்ந்து பயணிக்க வாழ்துக்கள் மோகினி.

Offline MoGiNi

மதுவந்தி ... ஹ்ம்ம்ம் காத்திருங்கள் தொடர்ந்து படியுங்கள் .. எல்லை தெரியுதா பாக்கலாம் டார்த்து :P :P

Offline MoGiNi

3)


"  டீ ஆறுது குடி மச்சான் ... "  என்று சிரித்துக்கொண்டே தன் தேநீர் கோப்பையை எடுத்து தேநீரை பருக ஆரம்பித்தான்  ராஜேஷ் ..

" ஹஹ்ஹா ..  ஆமா மச்சி குடிக்கலாம்" ன்னு ஆரம்பிச்ச ஜீவா மனதில் முறைத்து சென்ற அந்த பெண் முகம் நிழலாடியது ..

" ஜீவா அந்த பொண்ணு பார்க்க நல்லா இருக்கா .. ஆனா ஏண்டா  சின்ன விசயத்துக்கு கோபப்படுறாள் ... லவர் கூட ஏதும்  போல .. அந்த முகம் ...க்யூட் ல .." என வினவிய நண்பனுக்கு சிரித்துக் கொண்டே  " ஏண்டா அவ நம்மள கேவலமா சொல்லிட்டு போறா உனக்கு அது கொஞ்சமும் மைண்ட்ல எட்டல ? உப்ப நீ அப்படியே தினம் 2 ஸ்பூன்  சுகருக்கு பதிலா  சேர்த்துக்கோ .." என நக்கலாக பதில் கொடுத்தான் ஜீவா .


"மச்சி பொண்ணுங்க கிட்ட நாம வெட்கம் மானம் ரோசம் கோபம் இதெல்லாம் பார்க்க கூடாதுடா அதிலும் அழகான பொண்ணுங்க கிட்ட கூடவே கூடாது ... ஹாஹாஹா " என வாய் விட்டு சிரித்த நண்பனை கொஞ்சம் கோபமும் சிரிப்பும் கலந்த குரலோடு .." 2 ஸ்பூன் இல்லடா 2 கிலோ தினம் சேர்த்துக்கணும் நீ .. வா போகலாம் "  ன்னு எழுந்து நடக்கலானான் ஜீவா ....

இருவர் மனதிலும் இரண்டு விதமான எண்ணங்களை விதைத்தது அறியாமல் மதுவந்தி தன் இருக்கையில் அமர்ந்து அவளுக்கான வேலையில் மூழ்கி இருந்தாள் ..

                                       


                                                §§§§§§§§§§§§




" எக்ஸ்கியூஸ்மீ... எனும் குரலில் நிமிர்ந்த மதுவந்தி  இவன் எங்க இங்க வந்தான் ... பின்னாடியே வந்திருப்பானோ.. இல்லை இருக்காது  இது பேங்க் யார் வேணா வரலாம் போகலாம் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வருகிறார்கள் இதில் நினைக்க என்ன இருக்கிறது .. ஆனாலும் இது நாள்வரை இவனை நான் இங்கு பார்த்ததில்லையே எனும் எண்ணங்கள் ஓட ... சடடென சுதாரித்து   

"எஸ் ப்ளீஸ்  என்னுடைய பெயர் மதுவந்தி நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும் .." என்று சாதாரண உரையாடலை ஆரம்பித்தாள் ..

தன் குரலுக்கு திரும்பி பதில் கொடுத்தவளை பார்த்த ஜீவாவுக்கும் சரி கூட நின்ற ராஜேஷுக்கு சரி சாக் தான் .  உதடுகள் புன்னகை பூத்திருந்தாலும் கண்களில் கவனம் தெரிந்தது அது ஜீவாவின் கண்களில் பட தவறவில்லை .. சுதாரித்துக்கொண்டு ..

" மிஸ் மதுவந்தி .. என்னுடைய பேங்க் கார்டு ஒர்க் பண்ணல .. என்னால எந்த பேங்க் ட்ரான்க்சக்சனும்  பண்ண முடியல .."

" சரி உங்க பேங்க் கார்ட் அண்ட் பாஸ்போர்ட் அல்லது ஐ டி  கார்ட் கொடுக்க முடியுமா" என  கேட்டவளுக்கு இரண்டையும் கொடுத்து விட்டு காத்திருந்தான் ..

 கணனியில் பார்வையை ஓட  விட்டபடி அவனது தகவலை  கார்டில் பார்த்து டைப் பண்ணிய விரல்களில் அவன் கண்கள் ஓடியது .. அழகான மெல்லிய விரல்கள் அதில் ஒரு மெல்லிய ரிங் ... அடர் சிவப்பில் நெய்ல் போலிஷ் .. அளவுக்கு அதிகமா இல்லாம அளவான நீளத்தில் நகங்கள் .. நீளமான மூக்கு அன்று கருப்பு கண்ணாடியில் பளபளத்த கண்கள் இன்று கண்ணாடி  இல்லாமல் அழகாக இருந்தது .. ஐ லாஷ் .. ஆர்டிபிஷியலா இருக்குமோ .. தவறாமல் அழகு நிலையம் போறவள்னு மட்டும் நன்றாக தெரிந்தது ... அவள் பார்க்கும் வேலைக்கு அதுவும் தேவைதான் .. பெர்சனாலிட்டி ரொம்ப தேவைப்படுற ஒரு ஜாப் தான் சோ குத்தமில்ல .. இப்படியா அவன் எண்ண ஓட்டங்கள் ஓடும் பொழுது அதை கலைக்கும் விதமா ..

" மிஸ்டர் ஜீவிதன் ... வழக்கமாக வருடா வருடம் இது நடைபெறுற ஒண்ணுதான் ... கஸ்டமர் நேர வந்து கவுண்டர்ல அவங்க டீடெயில்ஸ் புதுப்பிக்கணும் ... உங்களுக்கு நாங்கள் தபால் அனுப்பி இருக்கின்றோம் வர சொல்லி நீங்கள் வராத பட்ஷத்தில் பேங்க் கார்ட் லாக் செய்திருக்கிறார்கள் .. நான் அதை திரும்பி ஆக்டிவேட் பண்ணி தருகிறேன்  .. வெயிட் .." ன்னு கூறியவாறு அவளது இருக்கையை விட்டு எழுந்து பாஸ்போர்ட் காப்பி பண்ண சென்றாள்..

" ம்ம்ம் டேய் மச்சி செம ஸ்மார்ட் டா இவ .. திமிர் கொஞ்சம் இருக்கும் போல .. ஆனா செம்ம  " ன்னு கிசுகிசுத்தவனை " ஸ்... சும்மா இருடா காதுல விழுந்தா அவ மறுபடி ஏதா சொல்லுவா வெளிய போய் பேசலாம்" ன்னு அடக்கவும் அவள் திரும்பி வந்தாள்.

" இந்தாங்க சார் உங்க பாஸ் அண்ட் ஐ டி கார்ட் .. 
 பணம்  உங்க அக்கவுண்டில் இருந்து எடுக்க விரும்புறீங்களா" ன்னு கணனியில் பார்வையை ஓட விட்டபடி கேட்டாள்  அவள் ..

இல்லை .. நன்றி உங்கள் உதவிக்கு நன்றி மிஸ் மதுவந்தி .. சென்று வருகிறோம் இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் " என அந்த நாட்டு மொழியில் விடை பெற்றான் அவன் ..

அந்த நேரம் பார்த்து அந்த குட்டை முடிக்காரி அங்கு வந்தாள் .. அவள் முகத்தில் கோபம் தெரிந்தது ... இவர்களை கண்டதும் குழப்பமாக அது மாறியது ... புருவத்தை உயர்த்தி என்னனு அவள் மற்றவளை கேட்பதும் பார்வை வடடதுல் விழுந்தது ...

" நன்றி  உங்கள் வாழ்த்துக்களுக்கு .. உங்களுக்கும் அது உரித்தாகட்டும் மிஸ்ட்டர் ஜீவிதன் " என மின்னலாய் ஒரு ஒரு விரிந்த புன்னகையை வீசினாள் அவள் .

ஒரு கணம் பிரமித்து போன ஜீவிதன் சுதாரித்துக்கொண்டு விரிந்த புன்னகையை பதிலாக கொடுத்து விடை பெற்றான் ..

வெளிக் கதவை நோக்கி இவர்கள் நகரவும் அந்த குட்டை முடி சரண்யா  இவளிடம் குனிந்து ரகசியமாக எதையோ கேட்கவும் இவள் மறுப்பாக தலசைப்பதும் இவர்கள் கண்ணுக்கு புலப்பட்ட்து ..

ஆனாலும் அவர்கள் என்ன பேசுவார்கள் எனும் சிந்தனையை மீறி  அவளது அந்த சிரிப்பு அவனை சிந்தனையை ஆட்க்கொண்டிருந்தது...

                                                                         

                                                               தொடரும்

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !


ஹனி டார்லிங் ! :-* கதை செம பாஸ்ட் ! அதைவிட ஜீவா மனசு ரொம்ப fast  ! characters  பேர் அழகா இருக்கு டார்லிங் !  :-*  I Like your way of Writing darlz ...தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் ஹனி டார்லிங் ! :-*


Offline Stranger

  • Newbie
  • *
  • Posts: 14
  • Total likes: 29
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
 miga nanru. mohini

Offline SweeTie

Honey  sooooper!!!    vaalthukal.