Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 301  (Read 1339 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 301

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 183
  • Total likes: 789
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum





இரவெல்லாம் கண் விழித்து
இருளையே போர்வையாக்கி
காலம் நேரம் பாராமல்
கனவுலகில் பறந்தோம்..

காற்றில் கை நீட்டி
உன்னை கண்டெடுத்து
காலமெல்லாம் கைகோர்த்து
கர்வமாக உன் காதலுடன் வாழ நினைத்தேன்...

நம்மை நாம் ரசித்து போது
நம்மால் கோபமானதென்னவோ அந்த நிலவும் நட்சத்திரங்களும் தான்
ஆம் அவற்றை நாம் ரசிக்க தவறினோம் என்பதால்...



இருளின் வெளிச்சமாய்
வாழ்வின் இருள் நீக்கி
என் வானில் என்றுமே பௌர்ணமியாய்
உலாவந்த நிலா...
பகலையும் இருளாக்கி சென்றதேனோ....

இரவிலும் நிழலாய் இருந்த நீ
பகலிலும் மறைந்த நிழலாய்
கனவின் கற்பனையாய் கூட இல்லாமல்
கண்காணா தூரம் சென்றதேனோ...

என் வாழ்வின்..
நம்பிக்கையாய் நின்ற நீ
நயவஞ்சகன் ஆனது ஏனோ

தனிமையில் தவித்து
தன்னுயிர் மாய்க்க துணிவேன்
என்று தப்பு கணக்கு போட்டாயோ...

தனிமை என் துணையாய் மட்டுமல்ல
என் தன்னம்பிக்கையும் ஆனது...
நீ இருந்த இடம் இருளாகவே இருக்கட்டும்
நிழலாய் கூட உன் நினைவுகள் வேண்டாம்
தனிமையின் துணையில் தலை நிமிர்ந்து..
தரணியை வெல்ல கற்றுக்கொண்டேன்..


இரவின் அமைதியை
நிலவின் ஒளியை
நட்சத்திரங்களின் ஜொலிப்பை
மொத்தத்தில் உலகின் அழகை ரசிக்கிறேன்..

நீ அருகில் இருந்தபொழுது
குறுகிய கூடாய் இருந்த என் உலகம்
நீ இல்லாமல்...
பறந்து விரிந்த ஆகாயமாய்
கரை காணாக்கடலாய்
இருளாத இரவாய் என்றும் இருக்கிறது...


தனிமையே தன்னம்பிக்கையாய்
பழி சொற்களே படி கற்களாய்
முடியும் என்பதே வாழ்வின் மந்திரமாய்
துணிவே துணையாய்
என்னுடன் கைகோர்த்து நிற்க்க
கர்வமான காதலுடன் இன்றும் வாழ்கிறேன்
ஆம் நான் என்ற கர்வமும்
என் மீதான என் காதலுடன்
இன்றும் வாழ்கிறேன் இன்பமாக....
❤❤❤❤❤❤❤❤







« Last Edit: December 20, 2022, 10:41:39 AM by VenMaThI »

Offline KS Saravanan

இரவின் மடியில் நாம்..!

தனிமையிலும் இனிமைதரும் இதமான இந்த இரவில் 
அன்பே என்னருகே நீ இருப்பதினால்
தென்றல் காற்றும் குளிர்காற்றாய் உணர்கிறேன்..!

செயற்கயான வெப்பமும்
வெதுவெதுப்பாய் இருக்குதடி..!

புதிதாய் பூத்த மல்லி பூவின் நறுமணமோ
மனதை மயக்கி வருடுதடி..!

இதுவரை சொல்லாத வார்த்தைகளை
மனம் சொல்லிவிட துடிக்குதடி..!

மௌனம் காக்கும் இரவுதனில்
உன் கண்கள் மௌன மொழி பேசுதடி..!

உண் கன்பாஸை புரியுமென
நட்சத்திரங்களும் கண் சிமிட்டுதடி..!

நிலவை பார்க்கும்போதெல்லாம்
அன்பே உன் நினைவும் தோன்றுதடி..!

உன்னை பார்க்க முடியாமல், வெட்கத்தால்
நிலவொளியும் மலையின் பின்னால் மறையுதடி..!

அன்பே மின்மினி பூச்சிகளும்
உனைக்கான மின்னுதடி..!

இரவல் வாங்கி பழக்கமில்லை..!
 
இரவே உன்னை என்னிடமே தந்துவிட
விடியலிடம் கேட்கிறேன்..!

விடயலை தேடி பலர் காத்திருக்க
அன்பே நாமோ சற்று இளைப்பாற
காத்திருக்கின்றோம் இரவின் மடியில்..!

Offline Neenga Ninaivugal

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Yes

நீங்கா நினைவுகள்

கரம் பற்றி இருந்தோம் காலமெல்லாம் வாழ்வோம் என்று
காற்றினில் கரைந்தாய் நீயோ
கரையவில்லை உன் நினைவுகள் என்னில்

நீ உடன் இருந்தபோது நிலவின் குளிர்ச்சி என்னை தொட்டதில்லை நட்சத்திரங்களின் சூடோ என்னை தாக்கியது இல்லை ஏனென்றால்
நீ என் அருகில் இருக்கும் போது அவைகளும் வெட்கப்படும் நாணப் படும் உன் அழகை கண்டு

தனித்திருந்தோம் என்றும் தனிமையில் இருந்ததில்லை
விடியாத இரவுகள் கண்டதுண்டு
விடியலைத் தேடி சென்றதில்லை
ஈருடல் ஓர் உயிராய் ஆனதும் அன்றே
இன்றோ......

நீங்காத நினைவுகளா என்றும் என் நினைவில்
உன் குரல் ஓசை குழலோசையாய்
என்றும் கேட்கின்றது என் அலைபேசியில்
நீ விட்டு சென்றது துயரமே ஆயினும்
நாம் வாழ்ந்த அந்த நாட்கள் என்றும் நீங்கா நினைவுகளாய் என்னுள் ...

Offline Dear COMRADE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Male
  • என் இனிய தனிமையே✍️
என்னவளே எனதுயிரே
எனக்கென்றே பிறப்பெடுத்த
எந்தன் இதயத் துடிப்பே
தீராக் காதலால்
தினம் எனை ஆளும் தேவதையே....

கோபம் எனும் கூராயுதம்
வரம்பு மீறி எனைச் சாய்க்க
சொல் எனும் கல் கொண்டு
உனை நோக்கி நான் எறிந்தேன்
ஓர் வார்த்தையேனும் உரைக்காது
கண்ணம் வழியே நிலம் தொட்ட
கண்ணீரால் மறுமொழி தந்தாய்
வெந்நீராய் நிற்கும் எந்தன்
ஊடலின் உச்சம் அறிந்தேன்....

சிந்திய கண்ணீர் துடைக்க
சிவந்த உன் கண்ணங்கள்
சிரிப்பால் மீண்டும் நிறைக்க
சின்ன சின்ன ஆசைகள் என
என்றோ நீ உரைத்த ஒன்றை
செப்பனே செய்ய சிந்தனை செய்தேனடி
எந்தன் செல்லக் கிளியே...

ஆரவாரம் இல்லா இராப்பொழுது
எமை அன்றி எவருமில்லா நொடிப்பொழுது
அள்ளித் தெளித்த தாரகைகள் நடுவே
அக்கினியின் இளஞ்சூட்டில்
மிருதுவாய் மேனி வருடும்
சில்லென்ற காற்றோடு
உந்தன் கரம் பற்றி அமர்ந்தேனே
எந்தன் இதய வாசலின் திறவுகோலே...

தென்றலின் தீண்டுகையால்
தேகம்  குளிரால் நடுங்கிடவே
இடக்கரம் இறுகப் பிடித்து
தோளோடு தலை சாய்ந்தாய்
தோற்றுப் போனதடி ஊடல் - மெல்ல
தொடக்கம் ஆனதடி நம் கூடல்...

அடடா
விண்மீன்கள் பிரகாசிக்கின்றதே
அன்பே நீ உதிர்ந்த சிரிப்பினிலே...

சிறு பிள்ளையாய் நீ மாறி - அந்த
ஆகாய பூக்களை எண்ணியபடி
ஆயிரம் ஆயிரம் கதைகள் சொல்ல
அமைதியாய் நான் இருந்து
ஆமாம் போடுகின்றேன் - உனை
காயப்படுத்தி விட்டேன் என்ற
மனதோடு சஞ்சரிக்கும்
இனம்புரியா சஞ்சலங்களோடு
மன்னிப்பாயோ என்று - வார்த்தையின்றி
என் விழி சொல்லும் மொழி
உன் செவியோரம் வந்து சேருமோ...

இராப் பொழுதே
விரைந்து நீயும் செல்லாதே
இயற்கையின் விதிவிலக்காய்
விடியாமல் இன்னும் நீளாயோ என
விண்ணை நோக்கிய ஓர் விண்ணப்பம்..........

Offline MeoW

  • Newbie
  • *
  • Posts: 9
  • Total likes: 51
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
சந்திரனுக்கு படிக்கட்டுகளில் ஏறுவோம்,
பிறகு உட்கார்ந்து பூமியின் நீலக் குளத்தின் அழகைப் பாருங்கள்,
 நாம் அலையும்போது சந்திரன் நம்மை வழிநடத்தும்,
இரவை நிரப்ப அன்புடன்.
வாழ்க்கை மிகவும் மந்திரமானது,
நிலப்பரப்பு பூமியால் வடிவமைக்கப்பட்டது மிகவும் கவர்ச்சிகரமான இந்த கற்பனையில்,
நாம் அடையும் அன்பிற்கு இடைநிறுத்துவோம்,
 சந்திரன் எல்லையில்லாமல் பிரகாசிக்கிறது,
முடிவிலி காதல் நாம் மிதிக்கும் ஒவ்வொரு அடிச்சுவடுகளிலும் துளிர்க்கிறது,.
நட்சத்திரங்கள் நல்ல அயலவர்கள்,
இந்த புதிய இடத்தில் எங்கள் காதல் மகிழ்ச்சியாக இருக்கிறது, மகிழ்ச்சியான ஆசீர்வாதத்துடன் இந்த அண்ட ஆற்றல் மழை,
இந்த தருணம் அதிசயம்,
இந்த இன்பமான இரவை நாம் தழுவுவோம்,
அந்த இரவை நாம் நம் இனிய இல்லமாக மாற்றினோம்.

Offline MoGiNi

என்புருக்கும்
மார்கழியின்
ஓர் ஒப்பனைத்
திருநாள் அது
உனக்குள் நானும்
எனக்குள் நீயுமாக
அணுவுக்குள் இறங்குவதாய்
நினைந்துருகிய இராப் பொழுது...

உனக்கு இன்னும்
நினைவிருக்கிறதா
சந்தேகம்தான்..
ஓர் நீண்ட பிரிவுக்கான
ஒத்திகையாக இருந்ததா
இன்றுவரை விடைகாண
வினவிது...


வானத்து மின்மினியை
உன் மடிசாய்ந்து
எண்ணிவிட துடித்த மனது..
மௌனமாகவே நீ

மெல்லிய காற்றின்
செல் இடைத்தீண்டல்களில்
சிலிர்த்து கிளர்ந்த
மேனி
எரியும் நெருப்பை விஞ்சிய
உஷ்ணத்தை
உன்னிடம் யாசித்திருந்தது..

மௌனங்களில்
சிதறிய நிமிடத் துளிகளின் முடிவில்
உஷ்னம் உதடுகளை
தழுவியிருந்தது..
நிமிடங்களா
மணித்துளிகளா..
கடந்திருந்தது....

கொழுத்திய நெருப்பும்
அணைந்து அடங்கி இருந்தது..

அந்த இரவு கழிந்து
இன்றோடு பல இரவுகள்
நகர்கிறது நத்தை என..

ஒன்று மட்டும் நிச்சயம்
நான் நீயாகவும் இல்லை
நீ நானாகவும் இல்லை
இருந்தால்
இந்த பிரிவாகவும் வாய்ப்பில்லை..

இன்றும் அதே இரவு
அதே மின்மினிகள்
அருகில் நீ மட்டும் இல்லை...


Offline KaathalaN

  • Newbie
  • *
  • Posts: 12
  • Total likes: 37
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
   💖🕉காதலியை தேடி சென்றேன்  தேவதையை கண்டுகொண்டேன் 🕉💝

         பெண்ணே உன்னோடு இருக்கும் 
இந்த நொடி அந்த வானம் இருளாக இருந்தும், அதில் இருக்கும் நிலா அழகாக இருப்பதைபோல் ,என் வாழ்வில் துன்பம் இருந்தாலும், அதை மறைக்கும் நிலவாக நீ என்னோடு இருக்கின்றாய்.

         எப்போதும் நினைத்து கொண்டு இருந்தேன் காதல் என்பது என்னவென்று, நீ என்னோடு இருக்கும் இந்த இரவின் போது தான் புரிகின்றது ,காதல் ஓர் அற்புதமான உணர்வு என்று .

       இந்த இரவிலும் ஒளி வீசும் உன் கண்களால் நீ என்னை பார்க்கும் பார்வை...ஐயோ நான்  அந்த உணர்வை எப்படி சொல்வது...அந்த உணர்வு நான் அப்போதுதான் புதியதாக பிறந்து போன்று  இருந்தது..

           ஆம்...காதல் என்பது அற்புதமான உணர்வு மட்டும் இல்லை அது நம்முடைய புதிய பிறப்பும் கூட...
         
      இந்த பிறப்பினால் நம் மனதில் அன்பு மட்டுமே இருக்கும்.....

           உன் கைகளில் என் கைகளை கோர்க்கும் அந்த தருணம் என் இதயம் துடிப்பு அதிகம் ஆனது... உடல் சிலர்த்து சுகமான குளிர் காய்ச்சல் வந்தது போன்று இருந்தது..

         எனக்கு என்ன ஆகின்றது என சிந்தனை செய்தேன், அப்போது தான் புரிந்தது  நான் பிறந்தது அன்பு மட்டுமே நிறைந்து இருக்கும் சொர்க்கம் என்று.....

         ஆம்...அது  சொர்க்கமே  தான்... உன் கண்கள்
 அந்தசொர்க்கத்திற்கு  வழி.... உன் கைகள் அந்த சொர்க்க வாசலின் சாவி...

       💖 முழுவதுமாக பார்த்தால் அந்த சொர்கமே நீ தான் என் தேவதையே💖
       
   இப்போது புரிகின்றது ...என்னை இந்த பூ உலகில் இருந்து விடிவித்து அன்பு மட்டுமே நிறைந்திருக்கும் சொர்கதிற்கு அழைத்து செல்ல பிறந்த தேவயே நீ தான் என்று......

           💖✨அன்பே சிவம் ✨💖

       

Offline Mechanic

  • Newbie
  • *
  • Posts: 21
  • Total likes: 49
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


நான் அழ விரும்பினாலும் உன்னுடன் சிரிக்கிறேன்
நீ இல்லாமல் நான் வாழ வேண்டுமானால் ...நான் இறந்துவிடுவேன்
உன்னுடன் நான் இருக்க விரும்புகிறேன் ஒவ்வொரு இரவும் பகலும்
உன்னுடன் நான் நேசிக்கிறேன் என் வாழ்க்கையை.... இப்படியே இருக்கட்டும்...
காரணங்கள் பல உள்ளன
உன்னால் நான் சுவாசிக்க முடியும் , எதுவும் முக்கியமில்லை உன்னை தவிர
உன் காதல் என் பெயரை கிசுகிசுக்கிறது
உன்னுடன் சந்திரன் பிரகாசமாக ஒளிர்கிறது
உன்னுடன் என் இதயம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது மற்றும் பாடுகிறது
நீ என்னுடையவள் என்பதை அறிந்து என்னை பலவற்றை உணர வைக்கிறது,
உன்னுடன் என் மகிழ்ச்சி நல்ல மற்றும் கெட்ட பருவத்தில் நீடிக்கிறது
உன் பக்கத்தில் நான் ஒருபோதும் பிரிய மாட்டேன்
இது உனக்குத் தெரியும் என்று நம்புகிறேன்

« Last Edit: December 21, 2022, 11:02:00 PM by Mechanic »