தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 334

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 334

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

VenMaThI:



மலர் சூடும் மணவாளன்
மங்கையின் திருவாளன்
மனம் கவரும் கள்வனவன்
மதியை வெல்லும் மாயவன் ...

கனவுலகில் மிதக்க செய்யுமடா
தென்றலாய் உன் தீண்டலின் ஸ்பரிசம் ...
நாணமும் முகம் சிவக்க நாணுமடா - நீ
நங்கை அவளை நாடும் பாங்கில் ...

சந்தித்த நொடியா - இல்லை
உன்னை பற்றி சிந்தித்த நொடியா
அறியேனடா இன்றும் நான்
உன்னிடம் என்னை தொலைத்த நொடியை ...

உன்னுள் தொலைத்ததை
உன்னுள் தேட ஆசை ..
உன்னுடன் இருக்கும் பொழுதில் மட்டும் அல்ல
என் உயிர் போகும் பொழுது வரை ..

நித்தமும் கை கோர்த்து
நொடியும் நீங்காமல்
நிம்மதியாய் வாழும்
நிறைவான வரம் வேண்டும் ...

கண் பார்க்கும் தூரம் வரை
கால் நோக நடக்க வேண்டும்
கல்லறை செல்லும் வரை .. என்
கண்ணாளன் தோள் சாய்ந்து ....

Vijis:
என்னவனே
 ஓர் பாதை பயணத்தில் சந்தித்தோம் அன்று எனக்கு காவலனாகவும் இன்று கணவனாகவும் வந்தாய்

 என் பிறந்தநாளுக்கு உன் காதலின் பரிசாக மலர்களை கொடுத்து உன் அன்பை வெளிப்படுத்திய தருணம் நான் புதிதாக பிறந்தது போல் அறிந்தேன்

 உன் விழிகளை பார்த்து என் காதலை கூறவில்லை என்றாலும் என்னுள் உணராத புது உணர்வாய் உணர்ந்தேன்

உன்னை என் மனதில் சுமந்து எதுவுமே அறியாதவள் போல் ரசித்து பல வருடங்கள் காத்திருந்தேன்

 நம் மொழிகள் பேசவில்லை என்றாலும் எனக்காக நீயும் உனக்காக நானும் நாம் இருவரும் நம் காதலோடு காத்துகொண்டு இருந்தோம்

 காதலனாக கைகோர்க்க நினைத்த எனக்கு உறவுகளோடு வந்து மனைவி என்ற பெருமையை அளித்தாய்

அன்றும் இன்றும் என் விழிகள் ஏங்குவது உன்னை காணவே என் கூந்தல் தேடுவது உன் விரல் பட்ட மலரை சுடவே

 உன்மேல் நான் வைத்த காதல் என்னுயிர் பிரியும் வரை நாம் நம் வாழ்க்கை என்னும் பயணப்பாதையில் நீண்டதூரம் பயணிக்க வேண்டும்

நீ கொடுத்த வரமான நம் குழந்தைகளும் இறைவன் கொடுத்த வரமான உன்னையும் என்றும் பிரியேன் காதலோடு உன் மனைவி

Madhurangi:
என்னவன்

பொன்னகைகள் வரதட்சணையாய் எதிர்பார்க்கும் உலகில்
உன் புன்னகைக்கு ஈடு எதுவென்பான் என்னவன்..
மலர் சூட குழல் தொடும் முன் மிச்சமின்றி சொச்சமின்றி  முழுதாக
என் மனம் தொட்டவன் என்னவன்..

மரண காயங்களின் தழும்புகளை கூட சுவடின்றி
மறைய செய்யும் மருந்தாளன் என்னவன்..
 மறுத்து மறந்து வாழ்ந்த வாழ்வின் இன்பங்களை புத்துயிரோடு
மீண்டும் மலரச்செய்தவன் என்னவன்...

சிரிப்புகளுக்கு மாத்திரமின்றி சிந்தனைகளுக்கும்
மறுஜென்மம் அளித்தவன் என்னவன்..
என்னோடு என் கனவுகளையும் நேசிக்கும்
பெண்ணியம் பேசும் கண்ணியவான் என்னவன்..

அன்பொன்றே மொழியாக கொண்டவன் என்
சர்வமும் அவனே என்றாகி போனவன் என்னவன்..
சலிப்பின்றி திகட்ட திகட்ட அன்பு செய்பவன்
உயிராகவும் உறவாகவும் மாறிப்போனவன் என்னவன்..

எதுகை மோனகையற்ற என் மொத்த கற்பனை
கிறுக்கல்களின் காரணகர்த்தா என்னவன் ..
மீள மனமும் இல்லாமல் வழியும் இல்லாமல் தன்னுள்ளேயே
மீண்டும் மீண்டும் மூழ்க செய்கிறான் என்னவன்.

NiYa:
வாடிய மலராய் நான்

அன்று நான் பட்டு புடவையிலும்
அவன் பட்டு வேட்டியிலும்
மணமகனும் மணமகளுமாய்
மணவறையில் ...

காதல் திருமணம்  இல்லைதான்
பெண்பார்த்து நடந்தது
இந்த கல்யாணம் முன் பின் அறியாத முகத்திலும்
அவன் ஆண் தோரணையில் மலைத்து போனது நிஜம் தான்
 
திருமணத்தில் அவன் சுட்டிய மலரும்
அவன் இட்ட திலகமும்
மனம் நிறைவாய் போனதும்
என் மனதில் அவன் நுழைந்ததும் அப்போதுதான்

இந்த ஈராண்டில் உண்மைக்காதலை
கற்பித்தது என்னவன் தான்
அவனின் அன்புதான்
அன்பிற்கு அடிமையானது என் மனது

இத்தனை வருடமாய் ஏங்கிய அன்பை
கண்டேன் என்னவனின் கண்களில் நான்
அனுமதி இன்றி நெருக்காத கண்ணியம்
அனைத்திலும் அவனுள் தொலைந்து போனேன் நான்

யாரோ கண்பட்டால் போல்
அவரை எனக்கு நிரந்தரமாய்
கொடுத்துவைக்கவில்லை
என்றவருத்தம் தான் இப்போதும் எனக்கு

ஓர் உடலாய் இருந்த நாம்
இன்று நான்மட்டும் தனிமரமாய்
இறுதியில் நீ சூடிய அந்த வாடிய பூவும்
எனக்கு சொந்தம் அற்று போனது அன்பே ...

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version