தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 335

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 335

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Lakshya:
பெண்கள் தந்தையை
அதிகம் நேசிக்க காரணம்,
எவ்வளவு அன்பு வைத்தாலும்
தன்னை ஏமாற்றாத ஒரே ஆண்
அவளின் தந்தை மட்டுமே....

ஆயிரம் உறவுகள்
நம் அருகில் இருந்து
நமக்கு ஆறுதல் சொல்லி கட்டி
அணைத்தாலும்..
அப்பாவின் அரவணைப்பில்
ஆறுதலுக்கு ஈடாகாது எதுவும்...

ஒரு ஆணிடம் அடம்  பிடித்து சாதிக்கலாம் என கற்று குடுத்தது தந்தை மட்டுமே....
பெண்களை பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும் தன்னை பெற்ற அம்மா வின் மறுபிறவி மகள் என்று....

ஒரு பெண் சாதிக்க முதல் தூணாக நின்றவர் தந்தை மட்டுமே...
அப்பாவின் கண்களுக்கு தன் மகள்கள் எப்பொழுதும் குழந்தைகளே...

மகள்களின் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண நினைக்கும் ஜீவன் அப்பா...

அப்பாவின் இரண்டாவது தாய் மகள்...மகளின் முதல் ஹீரோ தந்தை...
வாழ்க்கை முழுவதும் தியாகம் செய்ய தயங்காத உயிர் அப்பா....

அப்பாவின் தோழில் ஏறி சாமியை பார்க்கும் போது தெரியவில்லை சாமியின் தோள் மீது தான் ஏறி இருக்கிறேன் என்று!

நெடு தூரம் கைகளை பிடித்து நடை பழக கற்று குடுத்த உங்களை நரை வந்த பின் நான் பாத்து கொள்கிறேன் அப்பா...

பெண் பிள்ளையாக இருந்தாலும் கடைசி வரை உங்களுடன் இருப்பேன் அப்பா..இது சத்தியமே...

Lonely Warrior:
அன்பு மகனே

இரும்பில் செய்த இதயம் எனக்கென 
எண்ணி இருந்தேன் இறுமாப்போடு 
கரைந்து தான் போனது  இதயம்
உன் பிஞ்சு விரல் தொட்ட நிமிடம் 

அசகாய சூரனும்
அசைந்தே தான் போவான்
தன் பிள்ளை மேனி தொடுகையிலே ,
நான் மட்டும் என்ன அதற்கு விதி விலக்கா .


கருவிலே சுமந்த உன் அன்னை
மார்பிலே தாங்கும் முன்னே ,
இரு கரம் ஏந்தி தாங்கி விட்டேன்
என் நெஞ்சினிலே உன்னை  .


உன் பிஞ்சு கால் கொண்டு என் நெஞ்சிலே
நீ உதைத்திட்டாய் காரணம் பின்பு அறிந்தேன் ,
அந்த பஞ்சு மெத்தை வேண்டாம்
உன் நெஞ்சினில் என்னை உறங்கவை அப்பா என்று .


ஆயிரம் காலத்து  பயிரடா    நீ  !
என் குலம்  காக்கவந்த உயிரடா  ! 
நீயும் கண்ணாடி போல் தான் மகனே
என்னைகாண்கிறேன்  உன் முகத்தினிலே …

VenMaThI:


பிள்ளை

என் தாயுமானவனே...

பத்து மாதம் கருவில்
பக்குவமாய் சுமப்பவள் தாய் என்றால்
நித்தம் நித்தம் நினைவில்
பொக்கிஷமாய் சுமப்பவன் நீ...

தன் உதிரத்தை பாலாய் கொடுத்து
உணர்வுகளை ஊட்டுபவள் தாய் என்றால்
உன் பிம்பமாய் என்னை நினைத்து
உன் உயிராய் என்னை பார்ப்பவன் நீ..

எட்டாப் பருவத்திலும் உலகை
எட்டிப்பார்க்க உன் தோள்களில் சுமப்பாய்..
பருவமான காலமதில் தோள் கொடுக்கும்
தோழனாய் என்னை கருத்தாய் காப்பாய்...

உடல் அளவில் மட்டுமேயன்றி
மனதளவிலும் உறுதிகொண்டு
வாழ்வை வெல்லும் வீரனாய்
பார் போற்றும் பிள்ளையாய்
பக்குவமாய் செதுக்கும் நீ --
ஒவ்வொரு பிள்ளையின் வாழ்விலும் கிடைத்த
மிகப்பெரிய பொக்கிஷமே.....


தந்தை

யான் பெற்ற மகனே..

கருவில் சுமக்கயில் உன் அசைவுகளை
உணர்ந்து பூரித்தால் உன் அன்னை
உன்னை என்று என் கைகளில் உணர்வேன் - என்ற
காத்திருப்பின் பலனாய் என் கைகளில் வந்த கடவுளடா நீ...

எம் தந்தை என்னை என்றுமே
தண்டித்தும் கண்டித்தும் வளர்த்தாரடா
அவருள்ளும் ஒரு தாயுள்ளம் இருந்திருக்கும் என உணர்ந்தேன்
உன் பிஞ்சு உடலை என் கைகளில் ஏந்திய நொடியில்...

என்றாகிலும் உன்னை நான் அதட்ட நேர்ந்தால்
அன்பு குறைந்ததென எண்ணிவிடாதே..
இந்த உலகை எதிர்கொள்ள உன்னை பக்குவப்படுத்துகிறேன்
என்பதை என்றுமே உன் கருத்தில் கொள்ளடா...

உன் அன்னையுடன் சேர்ந்து உயிர் கொடுத்து
எம் வாழ்வின் அர்த்தமாய் உம்மை பெற்றோமடா...
உன்னில் என்னை கண்டேனடா... என்றுமே
உன்னை என் உயிரினும் மேலாய் காப்பேனடா...

NaviN:
அன்பு மகனே!!!!
எதற்கும் துணிந்தவனாய் இருந்த என்னை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்தது உன்னுடைய பிறப்பு..
எத்தகைய துன்பம் வந்தாலும் உன்னுடன் இருக்கும் தருணம் அனைத்தும் மறந்து போகும்..
உன்னை வயிற்றில் சுமக்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்றாலும் இறுதி வரை என் நெஞ்சில் சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது..
உன்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நீ விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன்..
அன்பு மகனே!!
அடியெடுத்து வா..
அகிலமும் உனக்கடா...
துள்ளி ஓடுகையில்
புள்ளி மான் ஓட்டம்
உன்னில் கண்டேனடா..
ஆசை வார்த்தையிலும்
அதட்டி பேசுகையிலும்
அடிபணிவேன் உன்னோடு..
உனக்குள்ளே போ
உன்னை தேடு
உன்னை அறிவாய்
உலகை வெல்வாய்...

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version