Videos > Video Songs

உலகில் இசைத்திருத்தல்

(1/2) > >>

Aadava:
http://www.youtube.com/v/nMO5Ko_77Hk&feature=player_embedded

அமி...

இசையின் மகிழ்வான தருணங்களிலெல்லாம் இந்த பாடல் எனது செவிகளில் கேட்டுக் கொண்டேயிருக்கும். தேனொத்த அடர்ந்த குரல்வளம் அமி”க்கு. குரல்வலை இட்டு இழுக்கும் வெகுசிலருள் அமி இருப்பாள் என்பதில் சந்தேகமென்ன.?

Love is a losing game" -இந்த வரிகளை கவனிக்கும்பொழுதெல்லாம் ஏற்படும் குறுநகை மாறுவதேயில்லை. தோற்று தோற்று வீழும் விளையாட்டு. காதலருள் தோல்வியே காதல் விளையாட்டு.

ஓரிரவு மிக அடர்ந்த நிசப்தத்தில் இப்பாடலைக் கேளுங்கள். கண்களில் நீர் வழிவதைத் தடுக்கவியலாது.

Amy winehouse.... எனது இனிமையான இன்னிசை நாயகி, இன்று உயிரோடு இல்லை... குரல் என் உயிரை எடுத்து எடுத்து மீண்டும் உடலத்தில் விடுகிறது...
என்னே ஒரு விளையாட்டு!

Aadava:
http://www.youtube.com/v/9mQJaXwGPlg&feature=player_embedded

மிக அருமையான காதல்பாடல். தொழில்நுட்ப விஷயங்களுடன் இதிலுள்ள ஆச்சரியமே அன்னா கோர்னிகோவா தான். பாடல் வெளிவந்த சமயங்களில்தான் தெரியும் என்ரிக்கின் காதலி அன்னா என்று.

Aadava:
http://www.youtube.com/v/agrXgrAgQ0U&feature=player_embedded

ஃபெர்குசன் ஃபெர்ஜி..

BEP (Black Eyed Peas)ல் shut up என்றொரு மிக அருமையான பாடல் தான் ஃபெர்ஜியின் எனக்கு அறிமுகப் பாடல். இதெல்லாம் ஒரு பாடலா என்ற கணக்கில் தவிர்த்து வந்தேன். ஒருநாள் மனது முழுக்க வெறுமையாக இருந்தபொழுது அந்த பாடலைக் கேட்கும்பொழுது அதில் ஃபெர்ஜியின் குரல் எழுப்பிய எழுச்சியை இன்னும் என்னால் மறக்க முடியாது. அவ்வளவு அழுத்தமான இனிமையான குரல் அது. பாய்ஸ் திரைப்படத்தில் வரும் பாடல் கூட்டணியைப் போன்ற இந்த குழுவினரின் சில பாடல்கள் (அதிலும் ஃபெர்ஜியின் அனத்தம் மிகப்பிரசித்தம்) என்றுமே மறக்க இயலாதவை.
இந்த பாடல் BEP இலிருந்து தனியே வந்து The Dutchess என்றொரு ஆல்பம் பாடியிருந்தார். ஆல்பம் வந்த பொழுதே இந்த பாடல் Singles ஆக வெளியே வரும் என்று  எதிர்பார்த்திருந்தேன்.

பலநாடுகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த பாடல் இது!

Aadava:
http://www.youtube.com/v/bKDdT_nyP54&feature=player_embedded

இந்த பாடலை யாரும் கேட்டாலும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது. திரும்பத் திரும்பக் கேட்கப்படும் பாடலிது. அதன் சிறப்பான ஆண்குரல்களுக்காகவே மிகப்பெரிய ஹிட் ஆன பாடல். அகான் மற்றும் எமெனெம் ஒரு ஆச்சரிய கூட்டணி. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத குரல் கூட்டு.

இப்பாடலைத் தழுவி பொல்லாதவன் படத்தில் “மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்” என்றொரு பாடல் வந்திருப்பதை நீங்கள் உணரமுடியும்.

மிக அருமையான ஆரவாரமற்ற பாடல்... இசை மற்றும் அகானின் குரலுக்காக...

Aadava:
http://www.youtube.com/v/1TADyXC2K0g&feature=player_embedded



இது Rap வகையைச் சார்ந்த பாடல். பாடலைக் கேட்கும்பொழுதே உங்களுக்குத் தோன்றும் அது என்ன வகை என்று.

எமெனெம் இன் இப்பாடல் ஆஸ்கர் விருது பெற்றது.. 8 மைல் எனும் திரைப்படத்தில் எமெனெமே நடித்திருப்பார். ஒரு தாழ்நிலை பாடகன் எப்படி முன்னுக்கு வருகிறான் எனும் கதை ஓரளவு எமெனெமின் வாழ்க்கையோடு தொடர்புக்குரியது.

இப்பாடல் கேட்கும்பொழுது ஏற்படும் குறுகுறுப்பு மறக்க்வியலாதது. ராப் பாடகர்களில் மிகவும் புகழ்பெற்ற எமெனெமின் மாஸ்டர் பீஸ் இது என்றும் சொல்லலாம்.

கேட்டுப் பாருங்கள்.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version