FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on April 30, 2017, 12:02:24 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 145
Post by: Forum on April 30, 2017, 12:02:24 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 145
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/145.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 145
Post by: SwarNa on April 30, 2017, 01:21:32 PM
தாய்மை
சூல் கொண்ட நாள் முதலாய்
கண்ணின் மணிபோல் காத்திட்டாய்
எட்டி உதைத்திட்ட பிஞ்சுக்கால்களை
முத்தமிட்டு கொண்டாடினாய்
எனக்கு ஒவ்வாமல் போகுமென
உதறினாய் பிடித்த உணவுகளை
முதன்முதலில் நான் கேட்ட தாலாட்டு எது தெரியுமா அம்மா ?
சீரான உன் இதயத்துடிப்பே
சீராட்டிற்று என்னை
 நான் ஆணா, பெண்ணா
அறியாமலே என்மீதுதான்
எவ்வளவு அக்கறை?
காத்திருந்த பத்து மாதங்களும்
அயர்ச்சி கூட்டினும்
தளராது கையில் ஏந்திய நாளிலிருந்து
இன்றுவரை நெஞ்சில்தான் சுமக்கிறாய்
ஆனால் அம்மா உன் கட்டுப்பாடு
எனை எட்டி வைப்பதை நீ அறிவாயா?
தாய்மை மகத்தானது
ஏடுகளில் கண்டு படித்தபின்
உணர்கிறேன் உன்னை
 உன் தியாகமும்,அன்பும் புரியும்
           எனக்கு
நான் தாயாகி சேயை ஈன்றெடுக்கையில் ...
Title: vidhya
Post by: VidhYa on April 30, 2017, 01:31:15 PM
       அம்மா உன்னால் இவ்வுலகை  கண்டேன்


மண்ணை  தொடும் முன் விண்ணின்  அழகை  உணரவில்லை
அன்னையை  கண்ட பிறகுதான் உணர்தேன்
விண்ணே    தோற்று  போகும்  உன்  அழகில்   என்று
அன்னை     சொல்வார்   அழகின்  அம்சம்   நீ  என்று 
நான்  சொல்வேன்
அந்த அழகின் அழைப்பே நீ என்று
எறும்பு  கூட  கடிக்காமல்
என்னை பாதுகாத்தாய்
என்  வயது முதிர்ந்த போதும்
எமனே  உன்னை அழைத்திடுவானே
உன் வயது முதிர்ந்திடும் போது
என்னால்  எமனை  எதிர்க்க முடியாதே
அம்மா  கண்ணால்
 சிறு கண்ணீர் மட்டுமே  சிந்த முடியுமே அம்மா
படைத்தவன்  தெய்வம்  என்றால்
தன்  ஊனையும்  உயிரையும் உருக்கி
இன்னோர் உயிரைப் பெற்றெடுப்பவள்
அன்னை என்றோ அன்னையும்
தெய்வம் தானே ஒருவேளை
தெய்வமும் ஓர் அன்னை  தானோ ?

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 145
Post by: thamilan on April 30, 2017, 02:06:45 PM
உலகில் இறைவன் படைத்திட்ட
அழகோவியம் பெண்மை
அந்த பெண்மைக்கு மட்டுமே
இறைவன் அளித்திட்ட வரம்
தாய்மை………..

ஆயிரம் கோடி
அள்ளிக்கொடுத்தாலும்
ஆணினம் அடைய முடியா
அழகிய சிம்மாசனம்
 தாய்மை……….
 

உலகையே
படைத்தாலும்
பிரம்மனும் பெறமுடியா
பேரின்ப பெருவெள்ளம்
தாய்மை………..

வார்த்தைக்கும் வர்ணனைக்கும்
அகப்படாத உறவு தாய்மை

பெண்மையின்  பேற்றினில்
தாய்மையே பேரின்பம்


'பிரசவம்' பெண்ணுக்கு
எமனோடு ஒரு யுத்தம் !

பிரசவத்தில் அவள் உயிர்
மதில்மேல் பூனை !

மொத்தத்தில் பிரசவசம்
பெண்ணுக்கு ஒரு
மரண ஒத்திகை !


தன் அழகைப் பராமரிக்க
எடை கூடிடுமோ வயிறு வந்திடுமோ- என
உண்ணுவதைக் குறைத்து உடல் போடாது
பராமரிக்கும் பெண்மை
தேகம் முழுதும் பூரித்தபோது;
யான் எனதெண்ணிக் கொள்ளும்
மமதை அழிந்து இன்னொரு
உயிர் சுமக்கும் பெருமிதத்தில்
வீங்கிப்  பெருத்திட்ட
வயிற்றைத் தடவி
பெருமிதம் கொள்வாளே ……….
இளமை அழகை விட
தாய்மை அழகே தெய்வீகம்

புரண்டு படுத்தால் பிள்ளை நோகுமோ...
படியேறினால்  பிஞ்சுக்கு வலிக்குமோ - என
கணப்பொழுதும் தன் கருவை நினைத்திடும்
கருணை உள்ளம் தாய்மை
தாய்மைக்கு தலை வணங்குவோம்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 145
Post by: VipurThi on April 30, 2017, 03:03:29 PM
கருவுக்குள் உருவாய் என்னை
சுமக்கும் அன்னையே
என் சர்வமும் நீயல்லவோ
என் உயிர் கூட உனதல்லவோ

பத்து மாதமே என் வாழ்வின்
பொற்காலமாய் நான் எண்ணியே
உனக்களிக்கும் துன்பங்களை
எல்லாம் இன்பங்களாக்கி
எனக்காய் பொறுத்திடும்
என் தாய் எனும் தேவதையே

உன் குரலின்றி என் உணர்வில்லையே
உன் கதையின்றி என் தூக்கமில்லையே
உன் உணவின்றி என் பசியில்லையே
இன்றோ நீயின்றி நானில்லையே

என் வளர்ச்சியோ உன் கையில்
நிழற்படமாய்
என் அசைவுகளோ உன் பூரிப்பின்
காரணமாய்
இத்தனைக்கும் என்ன தவம்
நான் செய்தேனோ
உன் கருவறையில் கருவாகிடவே

என் வரவை எதிர்பாத்து தாயாய்
நீ காத்திருக்க
உந்தன் சேயாய் நானும் வருவேனே
நீ தந்த உயிர் கொண்டு என்
உலகமாகிய உன்னை காணவே


                              **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 145
Post by: SweeTie on April 30, 2017, 11:48:26 PM
என்  பெண்மைக்கு  என்ன விலை?
தாய்மை கொடுத்த நிறைவு
பத்து மாதம்  கருவறையில்
பகல் இரவு தெரியாமல்
ஒட்டி உறவாடி   என் உடலின்
ஓர்  அங்கம்  என் பிள்ளை. 

நான் பாடும் வேளைதனில்
அவன் சேர்ந்தே பாடுகிறான்
துன்பத்தில் அழும்  நிமிடம்
கண் கலங்காதே  தாயே
நான்  இருப்பேன்  ஆறுதலாய்
தைரியம் ஊட்டுகிறான்.

என்னுடலில் சிறு அறையில்
தொப்புள்கொடி உறவில்
இரவு பகல் தெரியாமல்
ஓடையில்  ஒரு சிறுமீன் போல்
நீந்தும்  என்  சேய்   - அவனை
இரத்தத்தால் அமுதூட்டி
கண்மணிபோல்   காத்திடுவேன் .

மடியில்  தூளி கட்டி 
சீராட்டி   வளர்த்திடுவேன் 
கனவுகளை  நனவாக்க
குலக்கொடி தழைத்தோங்க
நான் சுமக்கும் பொக்கிஷத்தை
மகராசனாய்  வாழவைப்பேன் 

மகனே  உன் பேரும்  புகழும்
பாரெங்கும்   ஒலிக்க வேண்டும்
நீ ஆல் போல் தழைத்து 
அறுகு போல் வேரூன்றி  வாழும்கால் 
உன் நிழலில்  நான் வாழும் காலங்கள்
குழந்தையாய்  வாழவேண்டும்.
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 145
Post by: DeepaLi on May 01, 2017, 01:21:16 AM
உலகில் எவ்வளவு தேடி அலைந்தாலும்..
மீண்டும் அமர முடியாத ஒரு சொர்கம்..
 "தாயின் கருவறை"
உன் இதய துடிப்பு என்னை மயக்கிய முதல் ஓசை..
உன் தாய்மை வலி எனக்கும் தெரியும்..
அதனால் நானும் அழுதேன் பிறக்கையில்..

என்னை இந்த உலகிற்கு தர தன்னை இழந்தது..
தினம் தினம் ஊணின்றி உறக்கம் இன்றி..
தானே உயிராகி.. இருள் சூழ்ந்த என்னை வெளி உலகம் காண..
நீ கொண்ட வலியால் ஐயோ அம்மா என்றாயே..
நீ என்னை கண்ட அக்கணம்..
நீ கண்ட வலிகள் நிறைவேற்று போனதோ..
உன் முகத்தில் புன்னகை மட்டும் தவழ்ந்ததே..

இறைக்கு இணையாகி.. வானுக்கு நீராகி..
அன்பிற்கு இலக்கணமாய் நின்று..
பத்து மாதம் வலி தாங்கி..
மறு பிறவி கையில் ஏந்தி..
உயிரை ஈன்றெடுக்கும் சுமை தாங்கியாய் நின்றவளே..

இருட்டறையில் இருந்த என்னை..
வெளிச்சம் என்னும் தோற்றத்துக்கு..
கொண்டு வந்த உயிராய் இருக்கும் உறவே..

அன்பு என்ற தலைப்பில் கேட்டதும் அம்மா என்றேன்..
இதுவே கேட்டது அம்மாவாக இருந்தால்..
இன்னும் சிறியதாய் "நீ" என்று சொல்லி இருப்பேன்..

ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை..
இனி ஒரு ஜென்மம் இருந்தால்..
அதில் உன்னை மகளாக்கும்..
பாக்கியம் எனக்கு வேண்டும்...



Deepali :)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 145
Post by: ReeNa on May 01, 2017, 02:51:16 AM
பத்து மாதங்கள்  என்னை  சுமந்தவளே
பத்து மாதமும் கருவினிலே உறங்கும் எனைபற்றி
ஆகாயத்தில்  கனவு  கோட்டைகளை எழுப்பி 
ஒவ்வொன்றாய் இரகசியமாய்  என்னிடம் பகிர்ந்தவளே

தீமை  ஒன்றும்  தீண்டிடாமல்   என்னை  காக்கும்  அன்பு
தன் ஜீவனைப் பாராமல்  என்னை  நேசிக்கும்  மேலான  அன்பு
தவம்  எடுத்தே  தினமும்  என்  வருகைக்காக  காத்திருக்கும் அன்பு   
அன்பின்  சிகரமான  என்  அன்னையின்  அன்பு.

உன்னுடன் நீ வர்ணித்த பூமியில் வாழவேண்டும் 
உன்  மடி மெத்தையில்  நான் கொஞ்சி செல்லமாய்  தவழ்ந்திடனும்     
கருவில்  மட்டும்  சுமக்காமல் இதயத்திலும் என்னைச்  சுமந்தவளே
மறு பிறவி  எடுத்தாலும்  உன்  குழந்தையாய் பிறத்தல் வேண்டும்

உன் கருவறையில்   நான்  கருத்தரித்த  நேரத்திலே
சிரித்தாய் இரசித்தாய்  ஊரெல்லாம்  கூட்டினாய்
மெல்லிய கீதங்கள்  பாடியே  என்னை  உறங்க  வைத்தாய்
என்  எதிர்காலத்தின்  திரைப்பட   சுருளை உன்  இதயத்தில்   
ஒளித்தே மகிழ்ந்தாய்  நானும் மகிழ

இந்த  இருளில்   என்னோடு  இருந்தவளே
உன்  உயிரை  கொடுத்தே  என்னை  காத்தவளே
உன்  முகத்தை     பார்க்கத்தான்  ஆசை
உன்னுடன் சேர்ந்து பாடத்தான் ஆசை
எப்போது என்னை மீண்டும் சுமப்பாய் அம்மா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 145
Post by: ChuMMa on May 02, 2017, 12:01:41 PM

மருத்துவர் சொன்னதும்
ஆனந்தம் சூடி கொண்டேன்
என் கணவரிடம் சொல்ல
வெட்கம் சூடி கொண்டேன்
சொன்னேன் அவரிடம்
நான் தாய்மை அடைந்தேன் என

என் காதலை சொன்ன
நேரம் போல் ஆனந்தம் அடைந்தார்


தொடங்கியது எங்கள் பிள்ளைகளுக்கான
எங்கள் தேடல்
பெயர் தேர்வு முதல் குழந்தையை சேர்க்கும்
பள்ளி தேர்வு வரை  ஆயிற்று

குழந்தையை மார்பில் போட்டு
தாலாட்ட கற்று கொண்டேன் நூறு பாடல்

அக்கறையாய் மருத்துவரிடம் கூட்டி  சென்றார்
மாதமொருமுரை. குழந்தையின்  இதய துடிப்பு
கேட்டேன்

பத்து மாதம் கடந்தது வெளியுலகு வந்து
தன்தந்தையை காணும் ஆவலில்  -எட்டி  உதைத்தான்
என் வயிற்றில்

ஆனந்த வலியில் மருத்துவமனை சென்றேன்
அருகில் அன்பாய் என் கை  கோர்த்து என் தலை கோதி
என் கணவர்

பிரசவ அறையில் நான் துடிக்க -
வெளியில் நின்று என் கணவர் துடிக்க

சொர்க்கமும் நரகமும் ஒரு சேர
அனுபவித்தோமே  ..

ஆண் பிள்ளை என்றாலும் பெண் பிள்ளை
என்றாலும் கள்ளி பாலுக்கு இடம் இல்லை
என்றிருந்தோம்

கடைசியில் கள்ளி பால் எங்களுக்கு தந்து
சென்றாயே பிரசவ அறையை சவ அறையாக்கி

கணவனிடம் என் சொல்வேனோ ?

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 145
Post by: SarithaN on May 03, 2017, 03:16:52 PM
தாயாகி விட்டாய் பாவம் அம்மா நீ


உன் கருவறையில் நானிருக்கையில்
எனக்கு ஆபத்தான விசங்களெல்லாம்
மசக்கை எனும் போர்கொண்டு வருத்தும்

உன்னுள்ளே நான்வர இளைமைதொலைந்து
கட்டழகு கொடுமெனும் உண்மையறிந்தும்
எத்தனை பாசம் என்மேல் உன்னைவிட

உன்னுள்ளே நான் வளர பயமும் பக்தியும்
உணவிலும் கடவுள்மேலும் உனக்கதிகம்
ஒறுத்தாய் பிடித்ததெல்லாம் எனக்காய்

உன்கருவறையில் நான் மிதப்பது புனிதநீரில்
எந்த கோவில் கற்பகிரகத்துள்ளும் இல்லை இந்த
ஆசிநீர் ஆனால் உலகிலெவரும் உணர்வதில்லை

நான் சொர்க்கத்தில் வாழ்கின்றேன் இப்போது
உலகமாம் நரகத்துக்கு வரும் புனித வாசலில்
குறுக்கே உறங்குகின்றேன் போர்மாற இயவில்லை

தாய்மையை சுகமாய் தர உழைக்கின்றேன் கருவில்
முடியவில்லை உள்ளேயே அழுகின்றேன் வலியால்
குறுக்கே சிக்கிவிட்டேன் வழிமுன்னே தடம்மாறி

வெளியே வரும் நாளிகை நெருங்குகிறது ஆனந்தத்தில் நீ
பயமும் துயரமும் கொண்டு நான் உள்ளே வேண்டுகின்றேன்
என்னால் நீ பெறும் தாய்மை சுகமாய் கிட்டட்டும் உனக்கென்று 

வேண்டுதல் பலிக்கவே இல்லை அறுவைச் சிகிச்சைதான்
தாயாகி விட்டாய் பாவம் அம்மா நீ
என்னைச் சுமந்ததனால் தானே துயரம்
எத்தனை நூறு தையலம்மா வயிற்றில்

எத்தனை தோலடுக்குகள் பாதுகாப்பாய் எனக்கு
கடவுளின் விந்தையிவை இரக்கத்தோடு
அத்தனையும் கிழித்தார்கள் சம்மதித்தாய் எனக்காய்
மீண்டும் வலிக்குமே தைத்திட எப்படித் தாங்கினாய் தாயே

உலகுக்கு உயிர் வரும் புனித பாதையை
உலக மொழிகள் அனைத்திலுமே இகழ்வர்
அந்த வழியே வெளிவர கொடுத்து வைக்கவில்லை எனக்கு
அதனாலல்லோ உனக்கும் இந்தனை கொடும்துயர் அம்மா

அறிந்தும் அறியாமலும் நானும் புனிதமதை இழிவென
இகழ்ந்துரைத்தேன் ஓர் காலமதில் வருந்துகின்றேன்
வேண்டுகின்றேன் மன்னிப்பும் பொறுத்திடுக பெண்குலமே



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே