FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on July 09, 2017, 11:36:43 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 153
Post by: MysteRy on July 09, 2017, 11:36:43 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 153
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Enigma (Mirage)  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/153.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 153
Post by: SunRisE on July 09, 2017, 02:44:13 PM
என் முதல் தோழி
அரை கால் சட்டையில்
அஜந்தா ஓவியம்

மழலை சிரிப்பின் நாயகி
அன்பில் ஓர் அவ்வை
அவள் காட்டும் நேசத்திற்கு
நான் அடிமை

மழை காலம் வந்தால்
கணமாய் நிறைந்து
மடைகளில் தரிகெட்டு ஓடும்
மழை நீரில்
நானும் அவளும்
அவள் ஒற்றை கச்சையில்
அயிரை மீன் பிடித்து
மீண்டும் வாய்க்காலில்
விடும் போது
ஆப்பிள் கண்ணங்கள்
அழகில் பல்லாங்குழி
வந்துபோகும்
அழகை ரசிக்க
மீண்டும்  மீன் பிடிக்க தோன்றும்

குட்டை பாவாடை
காற்றில் தவழ
அன்னாந்து பார்த்து
அரை கூவலிட்டு
அவன் பட்டம்
தலை கவிழ வேன்டும்
என எனது கரம் பற்றி
அவள் விரல்களில்
நடனமாடும் நூலில்
அடுத்தவர் பட்டம்
அறுபடும்

காகித கப்பலில்
அவளும் நானும்
பிள்ளைகள் பெற்று
பேரன் பேத்திகளும்
கப்பலில் பயணமாவர்

அவள் தந்தைக்கு
இடமாற்றமான போது
என்னை மறந்து விடாதே
இது என் ஞாபகமாக
இருக்கட்டும்
என நீ தந்த
சங்கு  சக்கரம்
நுரை ஊது குழல்
என்னிடம் உன்டு
அவை இன்னும்
உனை காணாமல்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 153
Post by: NiYa on July 09, 2017, 02:59:16 PM
பட்டம் பூச்சியாய் சிறகடித்து
பறந்த நாட்கள் அவை
புள்ளி மான் கூட தோற்றுவிடும்
எங்கள் குதூகல துள்ளலில்

மறக்க முடியாத அந்த
பொன்னான நினைவுகள்
வீதியோரமாய் விடுமுறை நாள்
தேடியே விளையாடி மகிழ்ந்ததை

ஆடி காற்றில் ஆனந்தமாய்
காற்றாடி விட்ட நினைவுகள்
அம்மா அதட்டலையும் மீறி
நாம் விடும் அந்த சவர்கார குமிழிகள்

காலை மாலை முற்றத்தில்
கோலி அடித்து மகிழ்ந்ததை
என்னையும் என் அண்ணனையும்
தாக்கிய அந்த மூன்று சக்கரவண்டி

இன்று போல் அன்று மழைக்கு
நாங்கள் காத்திருந்ததில்லை
சீரான மழை வீழ்ச்சியில்
நனைந்தது நிலம் மட்டும் அல்ல நாமும் தான்

மழையில் எம் வீட்டு முற்றம்
ஆறாய் கிடக்க காகித கப்பல்கள்
விட்ட நினைவுகள்

கழற்றி  போட்ட சைக்கிள்
டயரும் வளையமும் எங்கள்
கால்கள் சென்ற இடங்கள்
எல்லாமே கூடவே பயணிக்கும்

அத்தனை சந்தோஷங்களையும் இன்று
அடியோடு இழந்துவிட்டோம்
போர் என்ற புயலில் சிக்கி
சிதறி போயிருக்கிறோம்

ஏதேதோ நாடுகளில்
தெரியாத மொழி பேசி
அறியாத மனிதர்கள் இடையே
உயிர் அற்ற நடை பிணங்களாக
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
கூட்டாஞ்சோறு உண்ட காலம் போய்
கூடி இணையத்தில் பேசி மகிழ்கின்றோம் நாம்  

எங்கள் பசுமை எல்லாம் பாலையாய் மாறியதேனோ





(அந்நிய நாட்டில் நினைவுகளோடு வாழும் என் உறவுகளுக்கு இக்கவி சமர்ப்பணம் )
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 153
Post by: VipurThi on July 09, 2017, 10:02:35 PM
கை தட்டி குதூகலிக்கும் மழலை பருவம்
மறந்திட முடியா வாழ்க்கையின் சிகரம்
நவீன உலகில் இயந்திரமாய் நாம் சுழல
மறந்து போனதே கடந்த காலம்

மழலைகளாய் துள்ளி திரிந்த
நாட்களோ என் முன்னே நிழல்படமாய்
மறுபடியும் இதோ விரிகின்றதே
கண்ணில் காட்சி திரையாய்

அன்னையின் காலட்டலில்  தூங்கிய பருவம்
தந்தையின் தோள் மேலேறி சுத்திய பருவம்
தம்பியின் கண் அறியாமல் மிட்டாய் ஒளித்து வைத்த பருவம்
தோழியிடம் பேனைக்காய் சண்டை போட்ட பருவம்

மழையிலே கப்பல் செய்து விட்ட பருவம்
செய்த கப்பல் மேல் கல்லை போட்டு சிரித்த ஒரு பருவம்
மீனை பிடிக்க துரத்திய அழகிய பருவம்
துரத்தி பிடித்த மீனோ கையில் குத்த அழுத பருவம்

ஆள் இல்லா சாலையில் சைக்கிள் ஓட்டிய பருவம்
இடறி விழுந்து நொண்டிய போது சைக்கிளை திட்டிய பருவம்
பட்டம் விட குஷியாய் பாடித்திரிந்த பருவம்
சிக்கிய பட்டமதை மீட்க குரங்கு குட்டியாய் மாறிய பருவம்

சவர்கார குமிழில் பலூன் செய்த பருவம்
செய்த பலூனோ நொடியில் பறக்க  பிரமித்த பருவம்
சட்டி பானையில் மண்ணை கொட்டி சமைத்த பருவம்
கொட்டி வைத்த மண்ணை அள்ளி வீடு கட்டிய பருவம்

இருபது வருடங்கள் நகர்ந்த வாழ்வில்
சுகமான நினைவுகள்
மீண்டும் பிறந்து வாழ தூண்டும்
மனித வாழ்வின் அழியா பொக்கிஷங்கள்


"மீண்டுமொரு பிறவி உண்டெனில்
என்றும் குழந்தையாய் மாறிட வேண்டுமே"

                                                     
                                                  **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 153
Post by: DeepaLi on July 10, 2017, 04:13:09 AM
சின்னஞ்சிறு வயதில் வீட்டை விட்டு பள்ளிக்கு செல்ல...
மனமில்லாமல் அழுது புரண்ட தருணம்..

நண்பர்களுடன் அன்பாக அனைத்தையும்...
பகிர்ந்து உண்ட தருணம்...

கடற்கரை மணலில் மண் வீடு கட்டி...
மகிழ்ச்சி கொண்ட நாட்கள்...

கோலி குண்டு விளையாடி அதை...
நண்பனிடம் பகிர்ந்து கொண்ட நாட்கள்...

டயரை எடுத்து அதை உருட்டிய படியே...
ஊர்கோலம் சென்ற நினைவுகள்...

காற்றோடு காற்றாக மாறி கையிலே வண்ண பட்டம் ஏந்தி...
அதே பட்டம் போல் பறக்க வேண்டும் என்று ஏங்கிய நாட்கள்...

முதன் முதலில்  பயணித்த...
அந்த அழகிய சைக்கிள் இன்றும்...
என் அறையின் ஓவியமாய் இருக்கிறது...

அன்று உன் பெயரும் என் பெயரும்..
சேர்த்து எழுதி நாம் விட்ட காகித கப்பல்...

இன்றும் என் வாழ்வில் அழகான...
நினைவுகளாய் ஓடிக் கொண்டிருக்கிறது...

நண்பர்களுடன் மரம் மரமாக ஏறி..
திருட்டு மாங்காய் பறித்து சுவைத்த நாட்களையும்...

இது தான் காதல் என்று தெரியாமல்...
முதல் காதலாய் அமைந்த...
அந்த நாட்களை மீண்டும் திரும்பி பார்க்கிறேன்...

நாம் வாழ்வில் மீண்டும் வராத காலமாய்...
இறந்த காலம் இருப்பதனால் அந்த நாட்களே...

என் வாழ்வின் இறுதி நாட்களாய் அமைந்த வேண்டும்...
என்றும் கள்ளம் கபடம் இல்லாத குழந்தையாக மாறிட வேண்டும்...
என்ற அழகான கனவுகளுடன்...

Deepali


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 153
Post by: thamilan on July 10, 2017, 09:51:21 AM
சிறகில்லா பட்டம் பூச்சிகள்
குழந்தைகள்
பூமியில் பூத்த அழகிய மலர்கள்
குழந்தைகள்
பூமியில் மின்னும் விண்மீன்கள்
குழந்தைகள்
கண்ணீரில் நனைத்து கிழியாத
அந்த சிரிப்புகள்
கவலைத் தீயில் கருகாத
அந்த பூக்கோலங்கள்
குழந்தைகள்


குழந்தையும் தெய்வமும்
ஒன்றென்பர்
இல்லையென்பேன் நான்
குழந்தைகள் தெய்வத்தை போல
மனிதனை சோதிப்பதில்லை

ஓம் என்ற ஓங்கார ஒலி அதுவே
உலகின் ஆதாரம் அந்த
ஓம் என்ற ஒலியை
உள்ளடக்கிய உன்னதமான சொல் அம்மா
அம்மா எனும் அற்புத பாக்கியத்தை
பெண்ணுக்கு வழங்குவது குழந்தை

குழந்தையின் அழுகையை
மிட்டாய் கொடுத்து நிறுத்திவிடுகிறோம்
குழந்தையின் சிரிப்பை
காலம் அதுவாகவே நிறுத்திவிடுகிறது

படிப்பால் தலைநிமிர்ந்த
குழந்தைகளை விட
புத்தகப்பையை சுமந்து கூன் விழுந்த
குழந்தைகளே அதிகம்

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது
குழந்தைகள் உலகம்
அவர்களை விமர்சனம் செய்யும் தகுதி
நம் ஒருவருக்கும் இல்லை
என்பதே உண்மை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 153
Post by: ரித்திகா on July 11, 2017, 09:20:24 AM
காலங்கள் ஓட ..
பருவங்கள் மாற ..
வாழ்க்கைச் சக்கரமாகச் சுழல ..
நினைவுகள் மட்டும்
பின்னோக்கி செல்லும் ..

நீலம் போர்த்திய வானம் ..
சுட்டிடும் சூரியன் ...
தேகத்தைத் தழுவிச்
செல்லும் தென்றல் ...
சட்டென தூறிடும் மாரி..

இயற்கையின் அழகில்
அழகாய் இணைந்து ...
அழகுக்கு அழகுச் சேர்த்துக்
கொண்டாடிடும்
மழலை பருவம் ...

பிஞ்சுப்  பாதங்கள்
மணலில் புதையப் புதைய 
அச்சுப் பதிய ஓடியது ..
மணல்கள்  சரியச் சரிய
கோட்டைக் கட்டியது ...

அடுத்த நொடி அலைகள்
அடித்துச் செல்ல கண்களில்
கண்ணீர் முட்ட நின்று கடலைத்
தீட்டித் தீர்த்தது ...
இன்று நினைக்கையில்
உதட்டின் ஓரம் புன்னகை அரும்பும் ..

வானிலை மாறுகையில்
தூறிடும் மழையில்
ஆடிய நடனத்தை மிஞ்சிட
எவரும் உண்டோ ..?
தேங்கிய மழை நீரில்
விட்ட காகிதக் கப்பலைத்
தடுத்திடத்தான் எவருக்கும் துணிச்சல்
உண்டோ ..?

ஆண் பெண் என்ற
வேற்றுமையில்லா  மனம் ..
அதில் தெரியவில்லை இனம் ..
பச்சிளம் வயதில் கொண்ட குணம் ..
என்றும் மனதில் இல்லை கனம் ..

தோழன்  கைகோர்த்து ஓடியது ..
தோழியின் தோல் சாய்ந்துக்
கதைப்  பேசியது ..
சின்ன சின்ன சீண்டல்கள் தூண்டல்கள் ..
குட்டி முட்டைக் கண்களில்
திருட்டு முழிகள்..

செய்த தவறுக்கும் செய்யாத்
தவறுக்கும் - அன்னைத் துரத்த
வீட்டைச் சுற்றி வளைத்து ஓடி
வாங்கிய அடிகள் மிதிகள் பேச்சுக்கள் ..
சிலசமயங்களில் அடியிலிருந்து தப்பிக்க
ஒளிந்துக்கொண்ட அரிசிப்பேட்டி ..

வாங்கிய அடிகளின் பலனாய்
உடலில் தழும்புகள் மிச்சமிருக்க ..
அவையனைத்தும் வாழ்க்கைச்
சரித்திரமாக மாறியது ...

நான் வென்றேன் .. நீ தோற்றாய்
என  போட்டியிட்ட சண்டைகள் ..
சம்மந்தமில்லா வாக்குவாதங்கள் ..
தேவையில்லா கண்ணீர் துளிகள்  ..
காரணமில்லா சிரிப்பொலிகள் ..
எல்லையற்ற குறும்புகள் ..

கண்ணாம்பூச்சி ஆட்டம்
ஆடி தோழனைக்
கண்டுக்கொண்டேன்..
சந்தோஷத்தில் துளிக் குதித்து
வீடு திரும்பினோம் ..

அன்றைய ஆட்டம்
முடிந்தது ...
அதுவே இறுதியாட்டமானது ..
வருடமும் கடந்தது  ..
கண்ணாம்பூச்சி மட்டும்
என்னை தொடர்ந்தது ...

இன்னும் தேடுகிறேன் ..
யாரையும் காணவில்லை ...
என்னை தேடுகிறேன் ..
முற்றிலும் காணவில்லை ..
பின்னோக்கி பார்த்தால்
உடன் யாருமில்லை ..

காலப்போக்கில் வாழ்க்கைப்
பயணத்தை நோக்கி
அவரவர் பயணம் ..
இழந்த மழலைப் பருவம் ..
கனவிலாவது மீண்டும்
கிடைக்குமா தெரியவில்லை ..

கடந்தக் கால நினைவுகள் ..
எண்ணங்களில் மோதிச்செல்லும்
அலைகள் ...
என்றும் மறக்க இயலா
நிகழ்வுகள் ..
மீண்டும் கிடைக்கா
பொக்கிஷங்கள் ...

நன்றி ...
ரித்திகா ...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 153
Post by: SwarNa on July 11, 2017, 11:28:09 PM

அண்ணனின் கைப்பிடித்து தெருவில் இறங்கி
விளையாடியதும்
அண்ணனின் பாதசுவடுகளை
அடியொற்றி சுற்றியதும்
பட்டமும்,பறவையும் ஒன்றாய்
கண்ணில் பட
கண்கள் கூசிட
அண்ணாந்து பார்த்து வியந்திட 

அண்ணா! அண்ணா!
என்றழைத்த குரலில்
திரும்பிய அண்ணனும்
என்னவென கண்களால் வினவ
கேட்ட ஆயிரம் கேள்விகளில் துவண்டு
தலையில் தட்டிட
ஓவென அழுதபடி
அம்மாவின் மடி தஞ்சம் அடைந்ததும்

அதிக எண்ணமிருந்த கோலிகளை கைகளால்
அளவளாவி மகிழ்ந்திட்ட தருணமும் நிழலாடிற்று    

மூன்று சக்கர சைக்கிளை எனக்கு
கற்றுதருவதாய் சொன்ன அண்ணனை
ஆவேன  பார்த்த நாட்கள் அவை

குமிழிகள் பார்க்கும் ஆசையில்
 சோப்புக்கட்டிகளை ஊறவைக்க
அடிக்காமல் விளையாடிய தாயும்
சொர்க்கம்

வீட்டு  முற்றத்தில் தேங்கிய மழைநீரில்
இறங்கி விளையாட ஆசைபட்டு அழுத
குட்டிப்பாப்பாவிற்காக
காகிதக்கப்பல் மிதக்கவிட்ட
தந்தையும்,தனையனும்
அன்பு வெள்ளத்தில் நனையவைத்ததை
யாரறிவார்
 
வளர்ந்திட்ட நானும்
வாடித்தான் போகிறேன்
மீண்டும் அந்த நாட்கள்
வந்திடாதாவென ?

என்  இந்நினைவுகள்
வருங்காலத்தில்
என் கணவர்,குழந்தைகளுடன் விளையாடுகையில்
என் கடந்தகாலத்தை
காலம் கடந்தும் முன்னிறுத்தும்

கடந்தகால நினைவுகள்
நிகழ்கால ஏக்கங்கள்
வருங்கால எதிர்பார்ப்புடன்
......
முற்றிற்று
ஆசைகளல்ல  இக்கவிதை   ....