FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on July 30, 2017, 02:04:27 AM

Title: FTC ஆறாம் ஆண்டு நிறைவு சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Forum on July 30, 2017, 02:04:27 AM
நண்பர்கள் கவனத்திற்கு ...

நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் ஆறாம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் உங்களின் கற்பனை திறமைய வெளிப்படுத்தும்  பொருட்டு  கவிதை மழைகளை  பொழியலாம் ...
 கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் .. எதிர்வரும் ஆகஸ்ட்  2 ஆம்  தேதிக்கு  முன்பாக  உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் ..பதிவு செய்யப்பட்டகவிதைகள் ஆறாம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியின்பொழுது நண்பர்கள் இணையதள வானொலி ஊடாக உங்களை வந்தடையும்.
 
Title: Re: FTC ஆறாம் ஆண்டு நிறைவு சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: பவித்ரா on July 30, 2017, 06:08:10 AM
எங்கள் ftc ஆறாம் ஆண்டு அடி 
எடுத்து வைக்கிறதா!
பெற்று எடுத்த பிள்ளை
வளர்வதை கண்டு வியக்கும்
பெற்றோராய் எங்கள்
பாவனையாளர்கள்   ...!

காண்பவர் பார்வையில்
நீ பலவிதம் வந்தோம்
கதைத்தோம் சென்றோம்
என்பவருக்கு  நீ பொழுது போக்கு ...!

என்னுள் கொட்டி கிடக்கும்
எழுத்து திறமையை
அனைவர் பார்வைக்கும்
விருந்தளிக்கும் பொழுது
நீ ஒரு கண்காட்சி அரங்கம் ...!

பொதுமன்றத்தில்
எனக்கு தேவையானதை நான்
ரசித்து லயிக்கும் பொழுது
நீ ஒரு நூலகம் ...!

காண கிடைக்காத
பாடல்களை கூட இங்கு
நமது இணைய பாடல் 
தொகுப்பில் காண்கையில்
நீ ஒரு பொக்கிஷம்...!

வேளை முடித்து களைத்து
வீடு திரும்பினாலும் ஆர்வமாய்
உன்னை காண வருபவர்களுக்கு
நீ ஒரு  செல்லமகள் ...!

மனம் வெதும்பி வருவோருக்கு
உன்னுள் ஒலிக்கும் இதம்
சேர்க்கும் பாடல்களால்
மனம் தெளிவுரூம்பொழுது
நீ ஒரு அன்னை ..!

புதிய நல்ல நட்புகளையும்
அவ்வப்பொழுது புதிய
விஷயங்களை உன்னில் கற்கையில்
நீ ஒரு நல்ல சமூகம் ..!

நக்கல் நையாண்டி
கேலி கிண்டல்
பிறர் மனம் கருதாமல்
வம்பளப்போர் பார்வைக்கு
நீ ஒரு மதில் சுவர் ..!

எல்லோர் பார்வையிலும்
நீ எப்படியோ ?
எனக்கு மட்டும்
எப்பவும் நீ போதிமரம்  ..!


எழுத்து பிழைகளோ குறைகளோ இருப்பின் forum pvtயில் தெரிய படுத்துங்கள் நண்பர்களே .!
Title: Re: FTC ஆறாம் ஆண்டு நிறைவு சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: ரித்திகா on August 01, 2017, 03:21:03 PM
மாத பிதா குரு தெய்வம்
நால்வர்க்கிடையில்
நட்பை மறந்ததேனோ  ...

நட்பின்றி செல்லும் பயணம் ...
பயனற்றதே ...
முகமறிந்து உண்டான நட்பு
அது நீடிக்க வில்லை ...

முகமறியா குணமறியா
இந்த FTC யின் நட்பு 2  வருடம் ...
முற்றின்றி தொடர்கிறது ..
நெஞ்சம் நெகிழ்கிறது ...

புது முகங்கள்
புது குணங்கள் ..
நட்பாக உறவாக
நல்லுள்ளங்கள் கொண்டு இணைந்து ...

நட்பால் அகமும் முகமும்
மலர்ந்து ..
கள்ளம் கபடமில்ல
சிரிப்பொலியில் கலந்து ...

கைக்கோர்த்து...
வெற்றிகரமாக அடி
எடுத்து வைக்கின்றோம் ..
நம் FTC யின் ஆறாம் ஆண்டில் ...
நினைக்கையில் பூரிக்கிறேன் ...

தலையின்றி வாலில்லை
வாலின்றி தலைக்கு
உயிரில்லை ...

ஆணிவேராக  வழிகாட்டி 
நிற்கும் தலைமைத்துவம் தனை
எண்ணி பெருமிதம்
கொள்கிறேன் ..

சலிப்பின்றி விதிமுறைகள்
பின்பற்றி நன்முறையில்
நட்பின் மறு உருமாக திகழும்
உறவுகளை எண்ணி மனம்
மகிழ்கிறேன் ...

நட்பில் இணைந்து
உறவாக  நினைத்து  ..
அகமதில் நிறைத்து ..
குடும்பமெனும் செடியில் ..

துளிர்க்கும் மொட்டில்
நானும் ஒரு மொட்டாய் பூத்து..
வாடா மலராய் மலர்ந்து ...
உதிராமல் உயிர்ப்பித்திருந்திட
இறைவனவனைப் பிராத்திக்கிறேன் ...!!!

இனிய பிறந்தநாள்  வாழ்த்துக்கள் ~ !! FTC !! ~
Title: Re: FTC ஆறாம் ஆண்டு நிறைவு சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: joker on August 01, 2017, 06:04:56 PM
முதல் நாள்
தயக்கத்துடன் தான் எட்டி பார்த்தேன் எனினும்
ஈர்த்து விட்டது என்னை தன் வளையத்தினுள்

பொழுது போகாமல் தான் உள்  நுழைந்தேன்
அன்று
பொழுது விடிந்தால் வர தோன்றுகிறது இங்கு
இன்று

புதியவன் என்ற எண்ணம் யார் மனதிலும்
இருப்பதாய் நான் அறியவில்லை
நட்பாய் இருக்க பல காலம் பழகிய அனுபவம்
தேவையுமில்லை

ஆறு வருடம் ஆணிவேராய் கால் பதித்த
நாட்கள் எத்தனை நட்புக்கள் , காதல்கள்
மோதல்கள் , துக்கங்கள், சங்கடங்கள்
சந்தோஷங்கள் கடந்திருக்கும்

ஒவ்வொரு விழாவிற்கும் விழா எடுத்து
கொண்டாடிய தருணங்கள்

பிறந்த நாளில் பிறந்தவரை பற்றிய
நட்புக்களின் குரல்களில் அவர்களின்
எண்ணங்கள்

பட்டிமன்றம் , விவாதங்கள் போட்டிகள்
எத்தனை எத்தனை நிகழிச்சிகள்

விளம்பரம் இல்லாமல் விரும்பியவர்கள்
பங்குபெற நடக்கிறது ....

ஆறுவருடம் ஆகாயம் எட்டும் பண்பலை
 ஆனந்தமே
எல்லைகள் இல்லா இணையம்
இணைந்திருப்போம் அறுநூறு ஆண்டுகள்
ஆனாலும்

FTC வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துவோமே !!!


*********ஜோக்கர் ஜோக்கர் ஜோக்கர் ******


Title: Re: FTC ஆறாம் ஆண்டு நிறைவு சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: VipurThi on August 01, 2017, 11:27:08 PM
ஆறு வயது குழந்தையின்
அதிசயமான வளர்ச்சியல்லவோ இது

எட்டி வைத்த அடிகளில்
முட்டி முளைத்த தடைகள் எல்லாம்
வெட்டி வீழ்த்தி முன்வந்தாயே
உன் வெற்றி விழாவை பறை
சாற்றும் நாள் அல்லவோ இன்று

உள்ளம் அதில் உறங்கிய
நட்புகளை உயிர்பித்தாயே
உணர்வுகளில் ஒளிந்து கொண்ட
திறமைகளுக்கு களம் அமைத்தாயே
வாய்ப்புகளை வாரா வாரம்
வழங்கி கொண்டு வருகிறாயே
உன் சேவைகளை எங்கள் வாழ்க்கையின்
தேவையாக மாற்றினாயே

இன்னும் ஓராண்டு முடியவில்லை
உன்னுடனான எந்தன் பயணம்
ஆனால் தொடர வேண்டி நிற்கின்றேன்
வாழ் நாள் முழுதும் இந்த பயணம்


உன் கதை எனும் ஒரு கிளையில்
உருவாகிய ஓர் விழுதாய் நான்
என் கவிதை கொண்டு உன்
ஆறாவது ஆண்டு நிறைவில்
வேர் கொண்ட பெரும்
விருட்சமாய் நீ வளர்ந்து கொண்டே
இருக்க வாழ்த்தி விடை பெறுகிறேன்


                                    **விபு**
Title: Re: FTC ஆறாம் ஆண்டு நிறைவு சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: AnoTH on August 03, 2017, 02:22:43 PM
நான் கடந்து வந்த நாட்கள்
பல நினைவுகளை சுமந்து நிற்கையில்,
நிழலுடன் நான் பேசி நிஜங்களை
தொலைத்து நின்றேன்.


வலிகள் சுமந்த வாழ்வில்
தோல்விகள் நிறைந்த போது,
தொலைந்து போன நிமிடங்கள்
உணர்த்தும் என் கதையை நீ கேளு .


பாலைவனமாய் கிடந்த வாழ்வில்
சோலைவனமாய் பால் வார்த்து,
உறங்கிக் கிடந்த என் கனவுகளை
விளிக்கச் செய்த இணையில்லா தளம்........

அதில் வீற்றிருக்கும் இளைஞர் களம்
அவர்தம்  அன்பெனும் மழையில்
நனைந்தது  எனது உளம்.
அதுவே எனது FTC இணையத்தளம்...........


இணையில்லா பல உறவுகள் இங்கு
இவர்போல் இருப்பார்கள் எங்கு ?
இதயங்கள் பேசும் அரட்டை அரங்கம்
அவர்தம் அரங்கில் அமர்ந்தது   நான் பெற்ற இன்பம்..........


ஓய்ந்து கிடந்த நொடிகள் துடித்து எழுந்தனவோ?
ஓய்வின்றி உழைத்த கைகள் எழுத முயன்றனவோ?
ஓவியமாய் இருந்த எனது  வாழ்வும் உயிரானதுவோ?


தென்றலாய் தீண்டிச்சென்ற என் மண் வாசனை
இன்று  அதன் நினைவுடன் எந்தன்  யோசனை.
இத்தருணத்தை மாற்றி அமைக்க உருவானதே
இங்கு இசைத் தென்றல் செய்த சாதனை.................


கம்பீரமாய் 6 வருடங்கள்
காவியமாய் தொடரும் உன் புகழ்
கண்டங்கள் கடந்தும் நிலைக்கும் உன் நிழல்
அதுவே FTC  எனும்  மக்கள் குரல்........... 

Title: Re: FTC ஆறாம் ஆண்டு நிறைவு சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Dong லீ on August 04, 2017, 12:00:18 AM
இன்பமாய் இயங்கும்
இந்த இணையம்
சொர்க்கமாய் திகழும்
எந்தன் மறு உலகம்

இணையமே எந்தன் இதயமே
இது ஆறாம்  ஆண்டு
நீ எங்கள் இதயத்தை ஆண்டு

தனிமையில் தவிக்கும் மனங்களை
தாயாகி மகிழ்விக்கும் எங்கள் உலகமே
தடைகள் கோடி வரினும்
தகர்த்து ஓடு நீயும்

முகம் தெரியா நபர்கள்
அகம் தெரிந்த நண்பர்களாய்
ஒரே குடும்பமாய்
உந்தன் கண்காணிப்பில்
ஆண்டாண்டு காலம்
அடைப்பட்டோம் உன் வீட்டில்

ஓடவும் இல்லை ஒழியவும் இல்லை

சிலரின் வெளியேற்றுங்கள்
பலரின் புது வரவுகள்
இங்ஙனம் வெற்றிகளை
உரித்தாக்கும் நீ
மென்மேலும் வளர
செய்யவேண்டியது ஒன்றுதான்

"மூஞ்சியும் முகரையும் " என
ஏக வசனங்களை
காயத்ரி மந்திரம் போல்
சீராக பேசுபவர்களையும்

பொய் பித்தலாட்டம் செய்யும்
போலி ஜூலிகளையும்
புறம் பேசும் நமீதாக்களையும்
கோல் மூட்டும் ஸ்நேகங்களையும்
தூண்டிவிடும் சக்திக்களையும்

பரணியாய் வேடிக்கை பார்க்காமல்

"நீங்க சட் அப்  பண்ணுங்க" என்று சொல்லி
ஓவியமாய் நேர்மையாய் இருப்பதுதான்

இவண் ஓவியா போர்ப்படை -FTC கிளை
 




Title: Re: FTC ஆறாம் ஆண்டு நிறைவு சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: thamilan on August 06, 2017, 06:44:53 AM
இன்னொரு வயதில்
காலடி வைக்கும்
நண்பர்கள் இணையதளமே
நீ பிறந்ததால்
நாங்கள் பிறவி எடுத்தோம்
நீ பிறந்ததால்
எங்கள் பிறப்பும் பயனுள்ளதானது


முகம் தெரியாவிட்டாலும்
நல்அகம் காட்டும் நண்பர்கள்
இன்சொல் பேசி 
இன்புற வைக்கும் நண்பிகள்
வஞ்சகம் இல்லாமல்
வாய் விட்டு சிரிக்கப் பேசிடும்
விகடகவிகள்
நண்பர்கள் தமிழ் இணையதளம்
ஒரு குடும்பம் என்பதா .......

என் எண்ண ஓட்டங்களுக்கு
உயிர் கொடுத்து - என்னை
கவிஞன் ஆக்கிய .......
தூங்கி கிடந்த என்னை
தூசுதட்டி
சிந்தனையாளனாக்கிய .....
சாப்பிட மட்டுமே தெரிந்த என்னை
சமையல்காரனாக்கிய .....
இரும்பாக இருந்த என்னை
குறும்பாகவும் பேசி
சிரிக்கவும் சொல்லித்தந்த ........
வாதங்கள் பண்ணியே
பழக்கப்பட்ட என்னை
வாதிடவும் சொல்லித்தந்த .....
சோக ராகங்கள்  மட்டுமே
கேட்டுப் பழகிய எனக்கு
இன்னிசை நாதங்களை
அள்ளித் தந்த
நண்பர்கள் தமிழ் இணையதளத்தை
பல்கலைக்கழகம் என்பதா

தமிழ்  இணையதளங்கள்
பல இருக்க
இணையில்லா தலமாக நீ
இணையதளங்களில்
மகாராணி நீ
உன்னை தூக்கிச் சுமக்கும்
சேவர்களாக நாம்


நண்பர்கள் தமிழ் இணையதளம்
எனும் ஆலமரமே
உன் கிளைகள் எங்கும்
விரிந்து படரட்டும்
உன் வேர்கள்
இன்னும் ஆழமாக
தமிழ் நெஞ்சங்களில் பரவட்டும்
உன்னைத் தாங்கும் விழுதுகளாக
என்றும் நாம் இருப்போம் 
Title: Re: FTC ஆறாம் ஆண்டு நிறைவு சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: BreeZe on August 07, 2017, 07:27:05 AM

பிறந்து தவழ்ந்து
தட்டுத் தடுமாறி எழுந்து
நடை பயின்று
இன்று கம்பீரமாக
7வது  அகவையில் காலடி வைக்கும்
எங்கள் நண்பர்கள் தமிழ் இணையத்தளமே
நீ வளர வளர
உன்னால் நாங்களும் வளர்ந்தோம்
உன்னுடன் சேர்ந்து எங்கள்
அறிவும் வளர்ந்தது
உன்னால் நல்ல நட்புகளும் கிடைத்தன

பூ விரல்களால்
என் இதயத்தில்
பூக்கோலம் இட்டவனே
உனக்காக தொடுக்கிறேன்
பாமாலை இன்று

ஆயிரம் இணையதளங்கள்
அதில் நீ
இணையிலா தளம்
FTC எனும் ஆலமரமே
உன்னில் இளைப்பாறும்
வழிப்போக்கன் நான்
FTC எனும்  சரணாலயமே
உன்னிடம் சரணடைத்த
மயில் நான்
FTC எனும் இசைக்கடலே
உன் இசை மழையில் நனைந்திடும்
ரசிகை நான்

இன்னும் பல்லாண்டு நீ
வாழ வேண்டும் வளர வேண்டும்
தமிழ் இருக்கும் வரை
தமிழர்கள் நெஞ்சில்
நீ இருக்க வேண்டும்

Copyright
BreeZe