FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on October 08, 2017, 12:53:57 AM

Title: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2017
Post by: Forum on October 08, 2017, 12:53:57 AM
எதிர் வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது. ஆக்கமும்,கருத்துக்களும் நிறைந்த உங்களுடைய கவிதைகள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கவிதைகள் தீபாவளி திருநாள் பற்றிய  சொந்த கவிதைகளாக அமைந்திட வேண்டும்.
இந்த பகுதியில் முன்பதிவு செய்தல் கூடாது.

அதிகமான கவிதை பதிவுகள் வரும்பட்சத்தில்  குறிப்பிட்ட அளவு கவிதைகள் வந்ததும்  இங்கு குறிப்பிட்ட தினத்திற்கு முன்னதாக பதிவுகள் அனுமதி மூடப்படும் . எனவே தங்கள் கவிதைகளை  விரைவில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கவிதைகளை எதிர்வரும் 13 ஆம் தேதி   (வெள்ளிக்கிழமை  கிழமை) இந்திய நேரம் இரவு 12:00 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தீபாவளி திருநாளில் உங்கள் கவிதைகள் நண்பர்கள் இணையதள வானொலி வழியே ஒலிக்கட்டும். தீபாவளி திருநாளில் உள்ளம் மகிழட்டும். 
Title: Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2017
Post by: JeGaTisH on October 08, 2017, 03:55:08 AM
                                  தீபாவளி நல்வாழ்த்து


உங்கள் வாழ்க்கையில்  துன்பம் என்ற இருளை விளக்கி
இன்பம் என்ற ஒளியை ஏற்றுங்கள்.

விடியல்கள் தேடும் தீபாவளியை
வெடி போட்டு காட்டியவர் யாரோ....

வண்ண வண்ண பட்டாசுகள் வாங்கிவந்து
சின்ன சின்ன மனக்கசப்புகளை சிதறவிடுங்கள்.

நல்லவன் கேட்டவன் நண்பன் எதிரியென்று
கொண்டாடுவது அல்ல தீபாவளி.
தீயவனை திருத்தி விரோதியை நண்பனாகி
ஒற்றுமையாக கொண்டாடுவதே தீவாவளி.

திக்கெட்டும் தீபக்கோலங்கள்
திசையெங்கும் வான வேடிக்கைகள்
மனம் எங்கும் இன்ப தீபாவளி .

நமக்கு இத் தீபாவளியை பரிசளித்த கடவுளுக்கு
வாணவெடிகளினால் நன்றி கூறுகிறோம் .
இனிப்புகளை யான் உண்டு இன்புறாமல்
இல்லாதவருக்கு கொடுத்து உதவுவதே இத் தீபாவளி

வீடெங்கும் தீபங்கள்
அங்கும் இங்குமாய் சொந்தங்கள்
கையேந்திய மதப்பூக்கள்
மனமோ பூரிப்புடன் கொண்டாட
இந்நாள் இனிய நாள் தீபாவளி....


                                         FTC எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Title: Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2017
Post by: JeSiNa on October 08, 2017, 11:50:08 AM
தீபாவளி திருநாள் முக்கிய காரணம்..
கிருஷ்ணரின் வெற்றியும் ..
நரகாசுரனின் மரணமும்
தீயவனின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு ..

தீப ஒளி ஏற்றி திருநாளாக
கொண்டாடப்படுவது யாவரும்
அறிந்த  வரலாறு ...

நல்ல எண்ணங்களை மனதில் ஏற்று...
என் வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கிட..
இனிதே வாழ்க்கை ஒளிமயமாக
அமைந்திட ...
உற்ற உறவினர்களுடன்
உள்மனதில் வேரூன்றி இருக்கும்
கசப்புணர்வை ...
பட்டாசு வெடித்து  மனதில்
இன்பத்தை ஏற்படுத்துகிறார்கள் ..

எண்ணற்ற சந்தோசங்களில் ..
இனிப்பு வகைகள் ..
புதிய திரைப்படங்கள்..
வானில் வண்ணமயம் தோன்ற
பட்டாசுகளை வெடித்து மகிழுங்கள்.
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Title: Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2017
Post by: VipurThi on October 08, 2017, 08:59:37 PM
காரிருள் சூழ்ந்த இரவு
வெண்முகில் உலாவும் வானம்
வண்ண வண்ண வான வேடிக்கைகைகள்
பார்க்கும் இடமெல்லாம் தீபங்கள்

வீடு முழுவதும் உறவுகள்
குறைவில்லா உரையாடல்கள்
குதூகல உச்சத்தில் மழலைகள்
மனதில் சஞ்சலங்கள் இல்லா சந்தோஷங்கள்

வகை வகையாய் பலகாரங்கள்
அடுக்கடுக்காய் முறுக்குகள்
நாவினை தட்டியெழுப்பும் அறுசுவைகள்
உண்ண உண்ண திகட்டாத அனுபவங்கள்

பண்டிகையில் மகத்தான நாள் இதுவே
இருள் நீக்கி ஒளி கொடுக்கும் தீபாவளியே
மனதில் திடம் கொண்டு
நம்பியவர்களின் வாழ்வில் என்றும்
குறை ஒதுக்கி நிறை கொடுக்குமே


FTC நண்பர்கள் அனைவர்க்கும் இதயம் கனிந்த
தீபாவளி நாள் வாழ்த்துக்கள்
                                           

                                                **விபு**
Title: Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2017
Post by: KaBaLi on October 09, 2017, 12:11:04 PM
புது கால்சட்டையில் சந்தனம் தடவி
பைகெட்டுக்குள் பலகாரத்துடன்
ஓடி ஓடி  வெடித்த சீனி வெடிகள்


குருவி வெடிகளும் லட்சுமி வெடிகளும்
சத்தம் குறைந்த பின் ஆட்டோ பாம்களையும்
வெடித்து அனுகுண்டுகளையும்
போட்டு-அடுத்த வீட்டு தாத்தா விரட்டி வர
கொண்டாடும் தீபாவளி அல்லாமல்

பற்ற வைத்தால் வெடித்துக் கரியாகும்
பட்டாசுக்கு செலவிடும் பணத்தை
பசியுற்ற மக்களுக்கு பிரித்தளித்து
ஏழையின் சிரிப்பில் காண்பதே ஏற்றமிகு தீபாவளி !

நாம் எப்படி சந்தோசமா கொண்டாடப்போகிறமோ
அதே போல் இல்லாதவர்களும்  மண நிறைவாய்
கொண்டாடி ஒரு புது ஒளியேற்றிய தீபாவளியை
மாற்ற வழிவகுப்போம்

உறவுகளுக்குள் மனக்கசப்பு உண்டெனில்
நல்ல நாளில் நாடிப்போய்
விரிசலால் பிரிவு வருமுன்பே
உறவை புதுப்பிப்பதே உன்னத தீபாவளி !

தொலைக்காட்சியின் உத்தியால் ஈர்க்கப்பட்டு
விழியில் விளக்கெண்ணெய் விட்டவாறு
விலைமதிப்பில்லா நேரத்தை தொலைக்காமல்
வீட்டாருடன் உறவாடுவதே உல்லாச தீபாவளி !

வாழ்த்துக்களை வார்த்தைகளால் பரிமாறி
வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர
வருகின்ற தீபஒளி திருநாளில்
தீயன கழித்து நல்லன கூட்டுவதே உண்மையில் தீபாவளி .....!!!

FTC  நண்பர்கள் தோழிகள் அனைவருக்கும்  தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !
Title: Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2017
Post by: joker on October 09, 2017, 12:11:38 PM
தீபஒளித்திருநாள்  வருகிறது

பிள்ளையின் கட்டளை வந்தாயிற்று
வேலைக்கு சென்று மாலை  வீடு திரும்பும் போது
வாங்கிவரவேண்டும் உடன் பட்டாசு

தன் உடல் முழுவதும் மருந்து கலந்தாலும்
தோல் நிறம் மாறினாலும் , தன் சந்ததி உரு குலைந்தாலும்
தனக்கு தெரிந்த தொழில் என செய்யும் அவனக்காகவேனும்
வாங்க வேண்டும்
பட்டாசு ...

மனைவியின் புத்தாடை கனவுகள்
வேண்டுகோளும் வந்தாயிற்று
விடுமுறை நாளில் கடைகளில் ஏறி
இறங்க வேண்டும் அவளுடன்
வருடத்தில் வேறு எதுவும் கேட்காமல் இருக்கும்
மனைவிக்காகவேனும் வாங்க வேண்டும்
புத்தாடை

வீட்டில் சர்க்கரை நோயுடன்
பெற்றோர் இருந்தாலும் ,
நமக்கு இனிப்பு பிடிக்கவில்லையென்றாலும்
பக்கத்துக்கு வீட்டுக்கு கொடுக்கவேணும் செய்யவேண்டும்
இனிப்பு பலகாரம்

ஊக்கதொகை தரும் முறை நடைமுறையில் இல்லையேல்
அணைந்து தான் போயிருக்கும்
என் போன்ற நடுத்தர மக்களின்
தீபஒளி

அசுரனை அழித்து மக்களின் வாழ்க்கையில்
ஓளியேற்றிய கடவுள்- 
இருளில் இருக்கும்
என் வாழ்க்கையிலும் ஒளியேற்றுவார்  என்ற
நம்பிக்கையில் ஏற்றவேண்டும் வீட்டில்
"தீபஒளி"

"இருள் நீங்கி எல்லார் வாழ்க்கையிலும்
ஒளி பிறக்க கொண்டாடுவோம் தீபாவளி "

FTC நண்பர்கள் அனைவர்க்கும் என் இதயம் கனிந்த
தீபாவளி நாள் வாழ்த்துக்கள்

****ஜோக்கர் ****


Title: Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2017
Post by: பவித்ரா on October 10, 2017, 01:20:30 AM
கிருஷ்ணன் வந்தாலும் சரி
முருகனே வந்தாலும் சரி
சம்மதமே எனக்கு
திரும்பிய  திசை எங்கும்
கம்சனும் அசுரனுமே
வதம் செய்ய வா ...!

விடியலில் துவங்கி
அஸ்தமனம் ஆனதையும்
குடும்பத்தையும் மறந்து
செயலற்ற ஆறறிவோடு
புரளும் மிருகத்தை
வதம் செய்ய வா ..!

கண்ணில் காண்பதெல்லாம்
கை வர  பேராசையில்
கன்னக்கோல் வைக்கும்
கயவர்களை
வதம் செய்ய வா ....!

பொது நலம் கருதா
அரசு ஊழியத்தில் ஊழலும்
செய்யும் நாட்டின்
சாபக்கேடு(களை)எடுக்க
வதம் செய்ய வா ...!

ருசி கூட்டும் உப்பிற்கே
வரிக்கட்ட மறுத்த பாட்டன்
தேசத்தில் பசியாற்றும்
அன்னத்திற்கு வரிக்கட்ட
வைத்த அசுரனை
வதம் செய்ய வா ...!

காய்ந்த வயரோடு படியேற
எட்டாதே செவிக்கு கல்வி
உணவோடு எழுத்தறிவித்தவன்
தெய்வமானான் செல்வம்
இருந்தாலே சிறப்பான கல்வியென
கொக்கரிக்கும் கோமாளியை
வதம் செய்ய வா ...!

இயற்கையை அழித்து
மணலை விற்று
நீர் வரத்தை குறைத்து
புதிதாய் நோய் தொற்று
வஞ்சகம் செய்பவரை
வதம் செய்ய வா ...!

புலம்பி புலம்பியே
சகித்து வாழ பழகிவிட்டோம்
திரும்பிய பக்கமெல்லாம்
அசுரர்கள் தீர்வு காண
வதம் செய்ய வா -பின்பு
கொண்டாடுவோம் 
தித்திக்கும் தீபாவளி ....!
Title: Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2017
Post by: AnoTH on October 10, 2017, 01:20:24 PM
(https://s1.postimg.org/1oi5hoblsv/giphy.gif)

விண்ணைப்பிளக்கும் பட்டாசு சப்தம்
மண்ணை உலுப்பும்  அதிர்வின் அச்சம்
அன்னை ஊட்டும் இனிப்பின் மிச்சம்
என்னை ஆக்கும் சுவையின் உச்சம்..............

தன்னை மறக்கும் தரணியில் நாமும்
அன்பைப் பகிரிலா நேர்ந்த வாழ்வும்
திண்ணை மீது தொடர்ந்த உறவும்
மண்ணை விட்டு நகர்ந்த துயரம்............

காலம் கடந்த தருணத்தில் நாமும்
கோலம் போட ஏது நாளும் ?
பாலம் அமைத்த FTC மடியில் நானும்
தாளம் போட்டு வாழும் என்  நாவும்............

சோகம் மறக்க ஏற்ற தளம்
யோகம் பிறக்க நாடும் களம்
வேகம் குறைந்தும் ஓடும் உளம்
தாகம் தணிக்க நேர்ந்த இணையத்தளம்.............

நண்பரை பிரிந்து விழா காணும் நிலையினில்
அன்பரை பெற்று பெருவிழா கொண்டாடும் நிகழ்ச்சியில்
தீபா அரசியல் பேசும் சமூகத்தின் வலி
தீபாவளி அன்று மாறிடுமோ இனி.........................




உறவுகளை கடந்து உணர்வுகளோடு
வாழும் அன்பர்களுக்கு இக் கவி சமர்ப்பணம்

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
Title: Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2017
Post by: BlazinG BeautY on October 13, 2017, 11:59:44 AM
தீப ஒளித்திருநாளாம்
இது தீமை ஒழியும் நன்னாளாம்...!

புத்தாடை உடுத்தி...!
பட்டாசு வெடித்து...!
பலகாரம் சுவைத்து...!
அனைவரும் கூடி மகிழ்ந்து
அகம் குளிர்ந்து
மத்தாப்புபோல உள்ளம் ஒளிரும்
ஒருநாளாம்...!

ஆலம் விழுதுபோல
குடும்பத்தை காக்கும் அன்னையும்...
ஆணிவேராய் அனைத்தையும் தாங்கும் தந்தையும்...
யாம் பெற்ற மழலை மனம் மகிழ
தனக்கென்று எதுவும் வாங்காது கடன்பட்டாவது
குழந்தைகளின் குதூகலத்திற்கு
செலவிடும் பாசநாளாம்...!

உற்றாரும் உறவினரும்
அண்ணன் தம்பியாய் பழகிய
அண்டை வீட்டாரும்
குழந்தைகளும் முதியவர்களும்
மனமுவந்து வாழ்த்துகூறி
வானைத்தொடும் வானவேடிக்கை காணவும்....

புதுத்தம்பதியர் வாழ்வு தன்னில்
தலதீபாவளி என்று தமிழர் பண்பாடு கொண்டு
அன்பாய் அழகாய் வாழ்ந்திடவே
வந்த பொன்னாளாம்...!

இதுபோல் இதுபோல்
எந்நாளும்இருந்திடவே...
ஏக்கம் வந்து நெஞ்சை தட்டிடவே..
அடுத்தவருட தீப ஒளிநாளுக்கு
காத்திருக்கும் நாளாம்

அதுவே எங்கள் தீப ஒளித்திருநாளாம்
தீமை ஒழியும் நன்னாளாம்...!



Title: Re: தீபாவளி சிறப்பு கவிதைகள் 2017
Post by: Maran on October 13, 2017, 05:57:53 PM
(https://i.imgur.com/OxFWKSO.png)