FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on February 19, 2018, 11:37:55 AM

Title: ~ அலுவலகம் போன ஆண்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.., ( Paadithathil Pidithitu ) ~
Post by: MysteRy on February 19, 2018, 11:37:55 AM
அலுவலகம் போன ஆண்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை..,

(http://friendstamilmp3.com/newfiles/2018/GENERAL/MDK.jpg)

எரியாத அடுப்பு அவலம்..,
எரிந்து விழும் மாமியார் அவலம்..,

♥காலையுணவு சமைத்த களைப்பு..,
கழுவாத பாத்திரங்களின் பிடித்திருக்கும் கருப்பு..,

♥சிறியவன் சிறுநீர் கழித்து சேர்த்த துணி மூட்டை
பெரியவனை பள்ளி அனுப்ப நாங்கள் படும் பாட்டை..,

♥அலுவலகம் போன ஆண்கள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை..!

♥ஆண்கள் கொஞ்சம் கேளுங்கள் நீங்கள்..,

♥சமைத்தல் சாதாரணமில்லை
அது சதா ரணமானது..,

♥துவைத்தல் இலகுவானதில்லை
அது இடுப்புடைப்பது..,

♥சுத்தப்படுத்தல் சுலபமானதில்லை
அது அபலமானது..,

♥நீங்கள் அலுவலகத்தில்
என்ன செய்கிறீர்கள்
அது எங்களுக்கு தெரியாது..!
நாங்கள் அழுவாத குறையாய்
என்ன செய்யவில்லை
அது உங்களுக்குப் புரியாது..!

♥இல்லத்து அரசிகள் என்பதை மாற்றி
இடைவெளியில்லாமல்
இல்லத்தையே எப்போதும் உரசிகளென்று
எங்களுக்கு பெயர் மாற்றுங்கள்..!

♥நீங்கள் பொழுது விடிந்தால்
அலுவலகத்தில்..!
நாங்கள் பொழுது விடிந்தால்
அல்லோல கல்லோலத்தில்..!

♥இது எங்கள் கடமைதானென்று
செய்கின்றோம்..!
அது நீங்கள் கட்டாயமென்று
சொல்கின்றீர்கள்..!

♥வாழ்ந்த வீட்டில் கீழே வீழ்ந்ததை கூட
குனிந்து எடுக்க மாட்டோம்..!
வந்த வீட்டில் குனிந்த முதுகு நிமிர்ந்து
ஓய்வாக இருக்க மாட்டோம்..!

♥பரவாயில்லை
கடமைகளை செய்கின்றோம் நாங்கள்..,

♥அலைச்சல் உளைச்சல் கஷ்டம் கடினம்
நிறுத்தம் இல்லாத
உடல் உள வருத்தம் காரணமாக..,

♥சில நேரம்
கறிக்கு காரம் கூடிவிடும் கதறாதீர்கள்..,
சாயம் இல்லாத தேநீரை சாய்த்துவிடாதீர்கள்..,
குழைந்து விடும் சோற்றால்
குதர்க்கமாக ஏசாதீர்கள்..,
கழுவாத பிள்ளையின் துணி கண்டு
கண்டபடி கத்தாதீர்கள்..,
காய வைக்காத உங்கள் கால்சட்டைக்காக
எங்கள் மனதை
கோபத்தில் தேய வைக்காதீர்கள்..,
குழந்தை தவறி கீழே விழுந்தால்
உன்னாலேதானென்று
அத்தனைப் பொறுப்பையும்
எங்களுக்கேத் திணிக்காதீர்கள்..,
அந்தியாகி குளிக்காதே என்று
அங்கலாய்ப்பு செய்யாதீர்கள்..,
முதலில்

♥வெங்காயத்தை நறுக்கித் தாங்கள்.
அரிசியில் நெல் இருந்தால்
அதையும் கொஞ்சம் பொறுக்கித்தாங்கள்.

♥நகைச்சுவை சொல்லி சிரிக்க வையுங்கள்.
அழகான பூக்களை கிள்ளி
கூந்தலில் பறித்து வையுங்கள்.

♥பாசம் அன்பு காதல் சந்தோசமென
நாங்கள் எதிர்பார்ப்பதை
எங்களுக்கு தாருங்கள்..!

♥♥வேலையை செய்துவிட்டு மட்டும்
வேலைக்கு போய்விடாதீர்கள்..!
Title: Re: ~ அலுவலகம் போன ஆண்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.., ( Paadithathil Pidithitu ) ~
Post by: joker on February 19, 2018, 01:11:26 PM
அலுவலகம் போன ஆண்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அறிந்தவர் போல் நடிக்க வாய்ப்புண்டோ  :D