Author Topic: ~ குழந்தைகளை தாக்கும் மழைக்கால நோய்களுக்கான இயற்கை முறையில் முதலுதவிகள் : - ~  (Read 267 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
குழந்தைகளை தாக்கும் மழைக்கால நோய்களுக்கான இயற்கை முறையில் முதலுதவிகள் : -




* வயிற்று போக்கு ஏற்பட்டால், உடலின் நீர் வற்றி விடாமல் இருக்க இளநீர் அல்லது எலுமிச்சை சாறுடன், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து அருந்தலாம்.

* குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கினால் உண்டாகும் நீரிழப்பை ஈடுகட்ட, தண்ணீர் கொடுக்க வேண்டும். உதடு மற்றும் நாக்கு வறண்டு போகாமல் இருக்க, பஞ்சில் நீரை தொட்டு, தேய்க்கலாம்.

* வயிற்றுப்போக்கு நிற்க தொடங்கியதும், படிப்படியாக, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆப்பிள், சூப், பருப்பு சாதம் போன்ற உணவுகளை சாப்பிட தொடங்கலாம்.

* வயிற்றுப் போக்கில் இருந்து முழுமையாக விடுபடும் வரை, பால், காபி மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* கண்கள் குழிந்து காணப்படுதல், வெளிறிய தோல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், குளிர்வது போன்ற உணர்வு மற்றும் எவ்வித உணவோ, தண்ணீரோ சாப்பிடாமல் இருந்தால், உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும்.

* கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள், படுக்கையை சுற்றிலும், கொசுவலை கட்டுவதோடு, ஜன்னல்களிலும் வலை பொருத்தலாம்.

* கொசு உற்பத்திக்கான காரணிகளை தவிர்க்க வேண்டும். அதாவது, ஏர் கூலர்களில் தண்ணீர் தேங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

* தோட்டம், குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* கொசுக்கள் அதிகளவில் காணப் பட்டால், வாசனையற்ற கொசுவர்த்திகள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம். சிலருக்கு இந்த வாசனைகள், “அலர்ஜி’யை ஏற்படுத்தி விடும்.

* “டெங்கு’ காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், பகல் நேரத்திலும், மலேரியாவை பரப்பும் கொசுக்கள் மாலை நேரத்திலும் கடிக்கும். எனவே, அனைத்து வேளைகளிலும், கொசு கடிப்பதில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள்.

* உடலை எப்போதும், சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளை குளிப்பது நல்லது.

* பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கும் சோப்புகளை பயன்படுத்தலாம்.

* பூஞ்சை தொற்றை தடுக்கும் பவுடர்களை, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை, தொடை, மார்பின் கீழ்பகுதி மற்றும் கால் ஆகிய பகுதிகளில் போடலாம்.

உங்கள் துறுதுறு குழந்தைகளை மழைக்கால நோயிலிருந்து காத்திடுங்கள்.