Author Topic: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~  (Read 1543 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நெல்லிக்காய்



சத்துக்கள்: வைட்டமின் சி, செல்லுலோஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட் இதில் உள்ளன. 
பலன்கள்: ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. வாய் கசப்பைப் போக்கும். இதயம், நுரையீரலை வலுவூட்டும். இளமையைத் தக்கவைக்கும். முடிவளர்ச்சிக்கும், தோல் பளபளப்புக்கும், கண் பார்வை கூர்மைக்கும் நெல்லிக்காய் அருமருந்து. தினமும் ஒரு நெல்லிக்காயை, தேனில் ஊறவைத்துச் சாப்பிடுவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாம்பழம்



சத்துக்கள்: தாது உப்புக்கள், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், சர்க்கரை அதிக அளவு இருக்கின்றன. மாவுச் சத்து, வைட்டமின் சி ஓரளவும், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன.
பலன்கள்: மலச்சிக்கலைப் போக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. ரத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல பலத்தைக்கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள், உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் நாள் ஒன்றுக்கு 2 துண்டுகள் மட்டுமே சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பலாப்பழம்



சத்துக்கள்: சர்க்கரையின் அளவு அதிகம். ஓரளவு நார்ச் சத்தும், குறைந்த அளவில் புரதம், இரும்பு, கால்சியமும் இருக்கின்றன. 
பலன்கள்: மலச்சிக்கலைப் போக்கி, உடலுக்கு நல்ல தெம்பைக்கொடுக்கும். மாவுச் சத்து உடலுக்குத் தேவை என்பவர்கள், தினமும் மூன்று சுளைகள் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழைப்பழம்



சத்துக்கள்: சர்க்கரை, மாவுச் சத்து அதிகமாகவும், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், புரதம், நார்ச் சத்து மிகவும் குறைவாகவும் உள்ளன.
பலன்கள்: இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதிக எடை இருப்பவர்கள் தவிர்க்கவும். எடை குறைவாக இருப்பவர்கள், ஒரு வேளைக்கு ஒரு பழம் என்று தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும். மலச்சிக்கல், மூலநோயை விரட்டும். கண்பார்வை குறைய ஆரம்பித்தால், தினசரி செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்குக் கொடுத்துவந்தால் பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆரஞ்சுப்பழம்



சத்துக்கள்: வைட்டமின்- ஏ, சுண்ணாம்புச் சத்து அதிகமாகவும், வைட்டமின் சி, பி, பி2 ஓரளவும் உள்ளன.
பலன்கள்: நாள்பட்ட நோயால் பாதித்துத் தேறியவர்களுக்கு இது நல்ல டானிக்.
இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள், அரை டம்ளர் ஆரஞ்சுப் பழச் சாறுடன் சிறிது தேன் சேர்த்துச் சாப்பிடலாம். நன்றாகத் தூக்கம் வரும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கிருணிப்பழம்



சத்துக்கள்: நீர்ச் சத்து நிறைந்த பழம். சோடியம், பொட்டாசியம் அதிக அளவு இருக்கின்றன. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் சி ஓரளவு இருக்கின்றன. 
பலன்கள்: வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. சோர்வை நீக்கி சக்தியைக் கொடுக்கும்.  உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சாத்துக்குடி



சத்துக்கள்: வைட்டமின் சி, பொட்டாசியம் அதிகம் இருக்கின்றன. ஓரளவு சர்க்கரை, மாவுச் சத்து இருக்கின்றன. குறைந்த அளவில் இரும்பு, புரதம், பாஸ்பரஸ், கால்சியம் இருக்கின்றன. 
பலன்கள்: நோயாளிகள் மீண்டுவருவதற்கும், விளையாட்டு வீரர்கள் தசை வலுவடைவதற்கும் மிகவும் நல்லது. சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாதுளை



சத்துக்கள்: நார்ச் சத்து, நீர்ச் சத்து, மாவுச் சத்து இதில் மிகவும் அதிகம். ஓரளவு  வைட்டமின் சி, ஆக்சாலிக் ஆசிட், பொட்டாசியம், மக்னீசியம், கந்தகம் இருக்கின்றன.   
பலன்கள்: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நா வறட்சியைப் போக்கி, சோர்வை நீக்கும். கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வறட்டு இருமல் போகும். பித்தம் தொடர்பான பிரச்னை நீங்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால், குணம் பெறலாம். சிறுநீரக நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
திராட்சை



சத்துக்கள்: கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, சர்க்கரை இதில் மிக அதிகமாக உள்ளன. ஓரளவு நார்ச் சத்தும், வைட்டமின் பி1, பொட்டாஷியம், வைட்டமின் சி குறைந்த அளவே இருக்கின்றன. 
பலன்கள்: உடலுக்கு ஆற்றலை அளிக்கக்கூடியது. மாத்திரை, மருந்துகளை உட்கொள்பவர்கள், இதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அமிலத்தன்மை அதிகம் இருக்கிறது. அசிடிட்டி, வாயுப் பிரச்னை, நெஞ்செரிச்சல், அல்சர் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது. திராட்சையை, கொட்டையுடன் சாப்பிட நார்ச் சத்து உடலில் சேரும். நன்றாகப் பசி எடுக்காமல் வயிறு மந்தநிலையில் காணப்படுபவர்கள், கருப்புத் திராட்சை ஜூஸில் சிறிது சர்க்கரை சேர்த்து அருந்திவந்தால், நன்றாகப் பசி எடுக்கும், மந்தநிலை போகும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அன்னாசிப்பழம்



சத்துக்கள்:  நார்ச் சத்தும் சர்க்கரையின் அளவும் அதிகம் இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம் மிகக் குறைந்த அளவும் இரும்பு, வைட்டமின் சி மிதமான அளவும் இருக்கின்றன.
பலன்கள்: உடலுக்கு சக்தியை உடனடியாகக் கொடுக்கும். மலச்சிக்கல் வராது. ஜீரண சக்தி அதிகரிக்கும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் மிதமான அளவு எடுத்துக்கொள்ளலாம். உயிர்ச் சத்து அதிக அளவில் இருப்பதால், உடலில் ரத்தத்தை விருத்திசெய்து, உடலுக்குப் பலத்தைத் தரும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் இருந்தால், குணமாகும். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொய்யாப்பழம்



சத்துக்கள்: நார்ச் சத்து, வைட்டமின் சி அதிகம் உள்ளன. புரதம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம் மிகக் குறைந்த அளவும் ஓரளவு பொட்டாஷியம், சோடியம், மக்னீசியம் மற்றும் சர்க்கரையும் இருக்கின்றன. 
பலன்கள்: பாலூட்டும் தாய்மார்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மிகக்குறைந்த அளவில் துண்டுகளாக நறுக்கிச் சாப்பிடுவது நல்லது. நெல்லிக்காய் சாப்பிட முடியாதவர்கள் இதைச் செங்காயாகச் சாப்பிடலாம். வளரும் குழந்தைகளுக்கு எலும்புகளை உறுதியாக்கி, பலத்தைக் கொடுக்கும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். சொறி, சிரங்கு, ரத்தசோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வர, சீக்கிரத்திலேயே குணமாகும். 


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பப்பாளி



சத்துக்கள்:  சர்க்கரை பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் நார்ச் சத்து அதிகம் இருக்கின்றன. 
பலன்கள்: மலச்சிக்கல் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கண், தோல் என ஒட்டுமொத்த உடலையும் பாதுகாக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் நிறைய எடுத்துக்கொள்ளலாம். சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பால் அருந்த வேண்டும். இதனால், உடலில் பீட்டாகரோட்டின் சத்து முழுவதும் கிரகிக்கப்படும். சர்க்கரை நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம். பப்பாளிப்பழத்தை, குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கப்படுத்துவதன் மூலம், உடல் மற்றும் எலும்பு நன்கு வளர்ச்சியடையும். பல் உறுதிப்படும். நரம்புத்தளர்ச்சி இருப்பவர்கள், பழத்தில் தேன் கலந்து சாப்பிட்டு வர, குணமாகும். கல்லீரல் வீக்கம் குறையும். சருமம் பொலிவுற்று, இளமையைத் தக்கவைக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சப்போட்டா



சத்துக்கள்: மாவுச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மிக அதிகம். ஓரளவு இரும்பு, பீட்டா கரோட்டினும் மிகக் குறைந்த அளவு கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், யூரிக் ஆசிட் சத்துக்கள் இதில் இருக்கின்றன.
பலன்கள்: ரத்த ஓட்டத்துக்கு மிகவும் நல்லது. சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் ஓரளவு தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புதினா



சத்துக்கள்: பீட்டாகரோட்டின், ரிபோஃப்ளேவின், ஃபோலிக் அமிலம், சுண்ணாம்புச் சத்து, கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் இதில் நிறைந்துள்ளன. ஓரளவு மக்னீசியம், தாமிரம், துத்தநாகம், மாங்கனீஷ், குரோமியம் இருக்கின்றன. 
பலன்கள்: செரிமானத்துக்கு நல்லது. கர்ப்பிணிகளின் மசக்கை வாந்தியைத் தடுக்கும். விக்கல் நீங்கும். மலச்சிக்கலைப் போக்கும். மாதவிடாய்க் கோளாறு சரியாகும். பசியைத் தூண்டும். எல்லோருக்கும் ஏற்றது. துவையலாகச் செய்து சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாலக்கீரை



சத்துக்கள்: ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, ஆக்சாலிக் அமிலம், யூரிக் அமிலம் அதிக அளவு இருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து குறைந்த அளவு உள்ளன. தையமின், ரிபோஃப்ளேவின், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின் இதில் ஓரளவு இருக்கின்றன.
பலன்கள்: தலைவலி சரியாகும். மூளை வளர்ச்சிக்கு உதவும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். வேகவைத்து வாரம் ஒரு முறை சப்பாத்தியுடன் சாப்பிடலாம். சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.