Author Topic: ~ நோய்கள் தீர்க்கும் காய்கள், கனிகள்! ~  (Read 1544 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வெந்தயக்கீரை



சத்துக்கள்: கால்சியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகமாக உள்ளன. ஆக்சாலிக் அமிலம், இரும்பு, நார்ச் சத்து, தாது உப்புக்கள் ஓரளவு இருக்கின்றன.
பலன்கள்: அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. வாய்ப்புண்ணைச் சரியாக்கும். மாதவிடாய்க் கோளாறு நீங்கும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தாராளமாகச் சேர்க்கலாம். குளிர்ச்சியைத் தரக்கூடியது. கீரையுடன் வெங்காயம், தக்காளி, பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டுசெய்து சாப்பிட, உடல்சூடு தணியும். சப்பாத்தியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முருங்கைக்கீரை



சத்துக்கள்: கால்சியம், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி அதிக அளவும்,  ஓரளவு தாது உப்புக்களும் இருக்கின்றன.
பலன்கள்: கண்கள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும். சிறுநீரைப் பெருக்கும். மூலநோய் சரியாகும். மலச்சிக்கலைப் போக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகள் உறுதியாகும். தேங்காய் சேர்த்துப் பொரியலாகவும் சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அரைக்கீரை



சத்துக்கள்: கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச் சத்து இதில் அதிகம். ஓரளவு பீட்டாகரோட்டின், நார்ச் சத்து இருக்கின்றன. மிகக் குறைந்த அளவு புரதம், கலோரி இருக்கின்றன.
பலன்கள்: ரத்தசோகை வராமல் தடுக்கும். ரத்தவிருத்தியடையும். வாத நோய், வாய்வு, உடல்வலிப் பிரச்னை தீரும். சுக்கு, பூண்டு, பெருங்காயம் சேர்த்துப் பொரியல், கீரைக் கடைசலாகச் சாப்பிட்டு வர, நரம்புத்தளர்ச்சி, பலவீனம், சோர்வு நீங்கி உடல் வலுப்பெறும். எல்லோருக்கும் ஏற்றது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பொன்னாங் கண்ணிக்கீரை



சத்துக்கள்: கால்சியம், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், ரிபோஃப்ளேவின் சத்துக்கள் அதிகமாகவும், வைட்டமின் ஏ, பி, சி, இரும்பு, தாது உப்புக்கள், புரதம், கலோரி ஓரளவும் இருக்கின்றன.
பலன்கள்: கண்களுக்கு மிகவும் நல்லது. உடல் பருமனைக் குறைக்கும். இதனுடன் பூண்டு, தக்காளி, சிறிதளவு பருப்பு சேர்த்துக் கூட்டுசெய்து சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மணத்தக்காளிக்கீரை



சத்துக்கள்: ஓரளவு புரதம், இரும்பு, நார்ச் சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸும் இருக்கின்றன.
பலன்கள்: வாய்ப்புண், வாய் துர்நாற்றம், வயிற்றுப் புண், குடல் புண்ணைக் குணப்படுத்தும். சளி, ஆஸ்துமா தொல்லை நீங்கும். களைப்பு நீங்கும். தூக்கமின்றித் தவிப்பவர்களுக்கு நல்ல மருந்து. குடல் ரணம் சரியாகும். வாரம் ஒரு முறை பொரியல் செய்து சாப்பிட்டு வர, கல்லீரல் வீக்கம் போகும். இதன் காயை மோரில் ஊறவைத்து வற்றலாகக் காயவைத்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கறிவேப்பிலை



சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச் சத்து இதில் உள்ளன. 
பலன்கள்:  அஜீரணக் கோளாறு, மந்தம், பேதி, பசியின்மை, உடல்சூட்டைத் தணிக்கும். வாய்க் கசப்பு நீங்கும். ரத்தசோகை இருப்பவர்கள் தினமும் சாப்பிடலாம்.  நல்ல முடி வளர்ச்சியைக் கொடுக்கும். பச்சையாகத் தண்ணீர்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வர, வயிற்றுவலி சரியாகும். கறிவேப்பிலையுடன் உப்பு, சீரகம், சுக்கு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து சூடான சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொத்தமல்லி



சத்துக்கள்:  இரும்பு, வைட்டமின் சி, புரதம், சுண்ணாம்புச் சத்து, தாது உப்புக்கள், நார்ச் சத்து, மாவுச் சத்து, ஆக்சாலிக் அமிலம் மற்றும் உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் இதில் உள்ளன.
பலன்கள்:  அஜீரணத்தைப் போக்கும்.  வயிறு உப்புசம், வயிற்றுப் பொருமல், பித்த வாந்தி சரியாகும்.  வயிற்றில் ரணம் இருந்தால், இஞ்சி, புதினா, புளி, உப்பு சேர்த்து அரைத்துத் துவையலாகச் செய்து சாப்பிடலாம்.  கொத்தமல்லித் தண்ணீரில், கண்கள், சருமத்தைக் கழுவலாம். தினமும் ஒரு பிடி கொத்தமல்லியை மென்று வர, உடலில் புது ரத்தம் ஊறும்.  எல்லோருக்கும் ஏற்றது. 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தமிழ் நாடு இயற்கை மருத்துவச் சங்கத்தின் கமிட்டி உறுப்பினரான இயற்கைப் பிரியன் ரத்தின சக்திவேல் எந்த நோய்க்கு என்ன காய்கறி, பழங்களைச் சேர்க்கலாம் என்று  விளக்குகிறார்.

உடல் பருமன்
முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக் காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப், மிதமான அளவு மா, பலா, வாழை, பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி.

சர்க்கரை நோய்
தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, சின்ன வெங்காயம். சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி.

வயிற்று  குடல் புண்
மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு.

மாதவிடாய்க் கோளாறுகள்
வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.

ஆஸ்துமா
கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை.

ஆஸ்டியோபொராசிஸ்ஸ்
பாலக் கீரை, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, சீதாப்பழம்.

ரத்தசோகை
பூசணி, பீட்ரூட், அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், நெல்லிக்காய், கீரை வகைகள், பேரீச்சம்பழம்.

மலச்சிக்கல்
பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா. 

சிறுநீரகக் கல்
புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள்.

மூலம்
பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய்.

ஹெர்னியா:
முட்டைக்கோஸ், முருங்கை, கொத்தமல்லி, கேரட், நெல்லிக்காய், அன்னாசி, பப்பாளி, திராட்சை, மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள். 

நரம்புக் கோளாறுகள்:
கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


எப்படிச் சாப்பிட வேண்டும்?

காய்கறிகள்

தோலை கொஞ்சமாக சீவ வேண்டும்.

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிவிட்டு, பிறகு கழுவுவது கூடாது.  இதனால், அதில் உள்ள பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்கள் வெளியேறிவிடும். நறுக்குவதற்கு முன்பு நன்றாகக் கழுவிவிட வேண்டும். 

 தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் காய்கறிகளைப் போட்டு அடுப்பை 'சிம்’மில் வைத்து மூடிபோட்டு சில நொடிகள் வேகவிட்டு, பிறகு அணைத்துவிட வேண்டும்.
மூடியைப்போட்டுவைத்திருந்தால், அந்தச் சூட்டிலேயே வெந்துவிடும்.  மூடாமல் வேகவிடும்போது சத்துக்கள் ஆவியாக வெளியேறிவிடும்.



வேகவைத்தால், சிறிது நிறம் மாறத்தான் செய்யும்.  காய்கறிகளில் நிறம் மாறக் கூடாது என்று ஆப்பச் சோடா கலப்பது, வயிற்றைப் பாதிக்கும்.

பச்சைக் காய்கறிகளை குக்கரில்வைத்து வேகவைப்பது தவறு. கிழங்கு வகைகளை மட்டும் குக்கரில்வைத்து வேகவைக்கலாம். 

 தினமும் 2 அல்லது 3 வகைக் காய்கறிகளை, சாதம் அளவுக்குச் சேர்த்துக்கொள்ள வேண்டும். சாலடாகவும் சாப்பிடலாம். அதாவது ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கிராம் அளவுக்கு காய்கறிகள் தேவை.   

'கேரட்டைப் பச்சையாகச் சாப்பிடக் கூடாது.  அதில் கண்ணுக்குத் தெரியாத பூச்சி, புழுக்கள் இருக்கிறது.  அப்படி சாப்பிட்டால், வைட்டமின் பி12 குறைபாடு வரும். இதனால், நரம்புத்தளர்ச்சி, ரத்தசோகை வரும்’ என்று தற்போதைய உணவு ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது. பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பழங்கள்:



 சிவப்பு ஆப்பிள், மாதுளை, தக்காளி, வெங்காயம், தர்ப்பூசணி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பீட்ரூட் போன்றவை, சிவப்பு நிறக் காய்கறிப் பழங்கள். வாழை, பலா, மாம்பழம் போன்றவை, மஞ்சள் நிறப் பழங்கள், பேரிக்காய், கொய்யாப்பழம், சாத்துக்குடி இவை, பச்சை நிறப் பழங்கள். சப்போட்டா, விளாம்பழம், திராட்சை, நாவல்பழம் போன்றவை இதர நிறப் பழங்கள். இப்படி நிறங்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு பழத்திலும் சத்துக்கள் வித்தியாசப்படுகின்றன. 

 உணவு சாப்பிட்டவுடன் பழங்களைச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட 2 மணி நேரத்துக்குப் பிறகு சாப்பிடுவது நல்லது.

 ஒரே மாதிரியான பழங்களைச் சாப்பிடாமல், தினமும் மூன்று நிறப் பழங்களைச் சாப்பிடுவதன் மூலம், உடலுக்குத் தேவையான சரிவிகித சத்தைப் பெற முடியும்.

 வெவ்வேறு நிறப் பழங்கள் சாப்பிடமுடியாமல் போனால், இனிப்பு, புளிப்பு என இரண்டு வகைப் பழங்களைச் சாப்பிடலாம்.  வயிற்றில் கேன்சர் வராது. 

ரொம்பவும் காயையும், அதிகம் பழுத்ததையும் தவிர்க்கவும்.  கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருக்கும்.

 நாக்கில் அமிலம் சுரக்கும்போது, பழங்களைக் கடித்து மென்று சாப்பிட்டால்,  ஜீரணிக்க நல்ல சக்தி கிடைக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கீரைகள்



 கீரை வாங்கியதும் பிரித்து, பெரிய பக்கெட்டில் போட்டு நன்றாகச் சுத்தம் செய்து பூச்சி, மண்களை அகற்ற வேண்டும். 
 
கீரையைச் சுத்தமாகக் கழுவிய பிறகு, நறுக்கிவிட்டுத் திரும்பவும் கழுவத் தேவை இல்லை. இதனால் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின், தாது உப்புக்கள் போய்விடும். 

 ஒரு பாத்திரத்தில் தண்ணீர்வைத்துக் கொதித்ததும், அதில் நறுக்கிய கீரையைப் போட்டு வேகவிடுங்கள்.

 மஞ்சள்தூள், உப்பு போட்டு வேகும்போது மூடிபோட்டு அடுப்பை 'சிம்’மில் வைக்க வேண்டும்.  அரைவேக்காடு பரவாயில்லை.  மழைக் காலத்தில் மட்டும் நன்றாக வேகவைக்க வேண்டும்.

 ஆறியதும், எலுமிச்சைச் சாறு பிழிந்துவிட வேண்டும். அப்போதுதான் கீரையில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் கிரகிக்கும்.  ஒட்டுமொத்தச் சத்துக்களும் உடலில் சேரும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


வீட்டிலேயே வளர்க்கலாம்!

இன்று உடல் ஆரோக்கியத்துக்கென, அதிக விலைகொடுத்துக் காய்கறிகளை வாங்க வேண்டி இருக்கிறது.  இதனைத் தவிர்க்க, வீட்டின் வாசல், கொல்லைப்புறம், மொட்டை மாடி, ஜன்னல் பகுதி என சின்ன இடத்தில்கூட, கத்திரிக்காய், வெண்டைக்காய், புதினா, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி போன்ற அன்றாடத் தேவைக்கான சில காய்கறிகளை வளர்க்கலாம். செடிகள் உரமிட்டு வளர்க்கும்முறை, பராமரிக்கும் விதம், மானிய விலையில் தேவையான பொருட்கள், தரமான விதைகள் என அனைத்தையும் வழங்குகிறது தோட்டக்கலைத் துறை அலுவலகம்.  மேலும்,  அரசு விதைப் பண்ணைகளிலும், வேளாண்மைத் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும், ஆராய்ச்சி மையங்களிலும் இவற்றை வாங்கலாம்.


மணத்தக்காளிக் கீரை:

இந்தக் கீரைக்கு நன்றாக வெயில் தேவை.  சூரிய ஒளி படும் இடத்தில் வளர்க்கலாம்.  இதை வளர்க்க செம்மண்ணும் மணலும் கலந்து, கொஞ்சம் சாண உரமும் கலந்து மண் தொட்டி, தகர டப்பாக்கள், பிளாஸ்டிக் வாளிகளில் வளர்க்கலாம். இந்தச் செடிகள் ஓர் அடி உயரம் வளர்ந்ததும் பிடுங்கி உணவுக்காக எடுத்துப் பயன்படுத்தலாம்.




தக்காளி:

தக்காளிப் பழத்தின் விதையை, தண்ணீர்விட்டு எடுத்து மண் அல்லது சாம்பலுடன் சேர்த்துக் கலந்து காயவைத்தால், தக்காளிச்செடி விதை தயார். செம்மண் நிரம்பிய தொட்டியில் மண்ணை லேசாகக் கிளறிவிட்டு விதைகளைத் தூவி மண் காய்ந்துபோகாத அளவுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். தொட்டியின் அருகில் ஒரு சிறிய கம்பை நட்டு வைத்துவிட வேண்டும். காய் காய்க்கும்போது, இந்தக் கம்புடன் செடியைக்கட்டிவிட வேண்டும். இது வளர்ந்து  40 வது நாளில் தக்காளிகளைப் பறிக்கலாம்.




பச்சை மிளகாய்:

ஒரு தொட்டியில் செம்மண்ணைப் போட்டுக் கிளறிவிட்டு, காய்ந்த மிளகாய் விதைகளைத் தூவி தண்ணீர் ஊற்றவும். சாணத்தை உரமாக இதன் மேல் போட்டு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விதையாக இருக்கும்போது நீர் ஊற்ற வேண்டும். 30 நாட்களில் மிளகாய்ச் செடி வளர்ந்துவிடும். 50 நாட்களில் மிளகாய் வளர்ந்து பறித்துக் கொள்ளலாம்.



கறிவேப்பிலை:

தொட்டியில் வண்டல் மண்ணைப் போட்டு, கறிவேப்பிலைச் செடியை ஒரு அடி ஆழமாக நட்டு, மாட்டுச் சாணம், மண் கலந்துவிட வேண்டும். நட்டதும், மூன்றாம் நாள் ஒரு முறையும் பின்பு வாரம் ஒரு முறையும் தண்ணீர் ஊற்றலாம். 40 நாட்களில் பறித்துச் சமையலுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிடும்.  தினமும் இதைப் பறித்துப் பயன்படுத்தலாம்.
இதேபோல் புதினா, கொத்தமல்லி, கற்றாழை, சிறுகீரை இவற்றை வீட்டிலேயே வளர்ப்பதன் மூலம், ஃப்ரெஷ் கீரை, காய்கறிகள் செலவில்லாமல் கிடைத்துவிடும்.