Author Topic: பொருமை வேண்டும்........  (Read 1037 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பொருமை வேண்டும்........
« on: December 13, 2011, 10:37:13 PM »
பொருமை வேண்டும்........

ஒரு 23 வயது வாலிபர் வேலை சுமை தாங்காமல் மன அழுத்தத்தால் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தின் மீதிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார், என்றும் அவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார் என்றும் செய்தி தாளில் படித்தேன், அத்துடன் புதுதில்லியிலும் ஒரு டீ காப்பீ ஷாப் நடத்தி வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி, அதைப்பற்றி எழுதியவர் மிகவும் வருத்தமுடன் எழுதியுள்ளார் அதற்க்கு காரணம், அவரது கடையில் டீ குடிப்பதற்க்காக சென்றவர் என்ற முறையில்,

அவர் எழுதி இருந்த அதே கண்ணோட்டத்தில் சற்று வித்தியாசமாக இங்கு எழுத நினைத்தேன்:

" நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ "

இளைய சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக குறை சொல்ல மாட்டேன், ஆனால் நான் கண்ட சில குறைகளை எடுத்து சொல்லுவதால் நல்லது நடக்கும் என்று நம்பியே சொல்லுகிறேன், எடுக்கும் எந்த முயற்சிக்கும் நிச்சயம் முன் யோசனை அவசியம் என்று நான் நம்புகிறேன், பல பேர் இப்படி சொல்லுகிறார்கள், அதாவது " இந்த காலத்து இளைஞ்சர்கள் மிகவும் தெளிவானவர்கள் அவர்கள் எதையும் தெளிவுடன் சிந்தித்து செயல் படுகின்றனர் " என்று.

அப்படி சிந்தித்து தான் செயல்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த மாதிரியான சோகங்களும் நிறைய விவாகரத்து வழக்குகளும் நமக்கு வேறு ஒன்றையும் புரிய வைக்கிறது, எதையும் அனுசரித்து போகும் மனப்பான்மை குறைவாக இருக்கிறது என்பதும், எடுக்கின்ற முடிவில் எவ்வளவு உறுதியுடன் செயல்படுகிறார்களோ அதே உறுதியுடன் வாழ்க்கையை அமைத்து கொள்வதிலும் தெளிவு இல்லை என்பதை தான் நிறைய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது,

ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு போவதற்கு முன் நிறைய பேர்களிடம் ஒரு முறைக்கு இருமுறை கேட்டு நிதானித்து பின்னர் செயலில் இறங்க வேண்டும்,

" இதை நான் யாரிடம் போய் கேட்பேன், எப்படி கேட்பேன், கேட்டால் என்ன நினைத்து கொள்வார்களோ" என்றெல்லாம் மனதை குழப்பிக் கொண்டு தானாகவே ஒரு முடிவுக்கு போய் விடுவது இன்றைய இளைஞ்சர்களிடம் காணப்படும் நிலை, அவசர முடிவுகள் எடுப்பதும் கூட நிறைய பேரிடம் காணப்படும் ஒரு நிலையாக உள்ளது, சம வயதும் சம அனுபவமும் உள்ளவர்களிடம் மட்டுமே சகஜமாக தன் சுக துக்கங்களை எடுத்து பேசி முடிவு எடுப்பது என்பது அத்தனை சரியான அணுகுமுறை ஆகாது, காரணம், சம வயதில் உள்ளவர்க்கு அனுபவம் குறைவாகவே இருக்கும், தவறான வழிகாட்டியாகத்தான் அவர் அமைவார் என்பதில் சந்தேகமே இல்லை, ஒரு தாய் தகப்பன் போன்ற வயது உள்ளவர்கள் அல்லது கல்லூரி ஆசிரியர், ( வாலிபர் அல்லாதவர்கள் ) மன நல மருத்துவர்கள், counselors ( கட்ச்சிகாரர்களை சொல்லவில்லை ) போன்றவர்களிடம் சென்று எந்த வித பாதிப்பு ஆனாலும் விசாரித்து தெரிந்து கொண்டு பின்னர் முடிவு எடுத்து, அதன்படி நடத்தல் மிகவும் சிறந்த முறை.

எந்த பிரச்சினைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு, அதை அணுகும் விதத்தில் யாரிடம் அணுகுகிறோம் என்பதும் கூட மிகவும் முக்கியம், பின்னர் தீர்வை கண்டு கொண்டு சிறிது சிறிதாக தான் சிக்கியுள்ள மோசமான சூழ்நிலையிலிருந்து வெளியே வர முடியும், உடனே instant coffee tea மாதிரி உடனடியாக பிரச்சினை தீர வேண்டும் என்று நினைப்பது மடமை.

காதல் என்பதும் காமம் என்பதும் மாயை, இதில் சிக்கி தவிப்பதும் அதிலிருந்தும் அந்த எண்ணங்களில் இருந்தும் மீள முடியாமல் திணறுவதும் இயற்க்கை, ஆனால் வாழ்க்கை அங்கேயே அத்துடன் முடிந்து போய் விடுவது கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். நினைத்தது போல வாழ இயலவில்லை என்பதால் வாழ்க்கையை சூன்ய மாக்கி கொள்ள கூடாது. வாழ்க்கையை இன்பமானதாக அமைத்து கொள்வது நமது கையில் தானே உள்ளது ? குடிசையில் வாழ்ந்தால் கூட மன ரம்மியமாய் வாழ கற்று கொள்ளவேண்டும்.

" கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா "


யதார்த்தங்களை தான் கவிஜர் கண்ணதாசனின் பாடல்கள் எப்பொழுதும் சொல்லியது, காரணம் அவர் தமது வாழ்வில் அத்தனை அனுபவங்களை கண்டவர், தற்காலத்து பாடல்களில் மிக குறைவாகவே வாழ்க்கையின் யதார்த்தங்கள் சொல்லப்படுகின்றன, சினிமா படங்கள் கூட வாழ்வின் ஆதாரங்களை பற்றியதாக இருப்பதில்லை, பொழுது போக்கிற்காகவாவது இருக்கிறனவா என்றால் அதுவும் கூட இல்லை.

வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது தான், ஆனால் ஒவ்வொரு பள்ளத்திலிருந்தும் மேலே போகும் அந்த சமயங்கள் மிகவும் வேதனையும் குழப்பங்களும் நிறைந்தவை தான், அதற்காக போகாமல் அப்படியே நின்றுவிடுவது எவ்விதத்திலும் சரியில்லையே,

கையில் ஒரு வாள் இல்லையென்றால் கூட பரவாயில்லை கையில் ஒரு உறுதியான கோலாவது இருந்தேயாக வேண்டும், இங்கே நான் கோல் என்று சொல்லுவதன் பொருள் விவேகம், பொறுமை, முன்யோசனை, நல்லோரின் புத்திமதி போன்றவை.

நீ போராடி கொண்டிருக்கும் வாழ்க்கையில் மிகவும் கொடிய மிருகங்களும் வலு சர்பங்களும் பெரிய பாறைகளும், காட்டாற்று வெள்ளங்களும் புயல் பெரும் மழை, ஏன் சுனாமியும் பூகம்பகளும் எரி மலைகளை கூட சந்தித்தே ஆகவேண்டும் அது தானே வாழ்க்கை, இவைகளை எப்படி சமாளிப்பது எப்படி தாண்டி வெளியே வருவது, அதற்குத் தானே அறிவுரை, பொறுமை, நிதானம், இன்னும் என்னென்ன உன்னால் உபயோகிக்க முடியுமோ அதில் தானே உன் சாமர்த்தியம் அடங்கியுள்ளது?

" நீ குழந்தையாய் இருந்த போது குழந்தையை போல பேசினாய், குழந்தைக் குரிய உணவுகளை சாப்பிட்டாய், குழந்தையை போல நடந்தாய், வளர்ச்சியடையும் போது காலத்தின் மாற்றங்களின் தன்மையும் நாம் சந்திக்கும் மனிதர்களும் பிரச்சினைகளும் சூழ்நிலைகளும் மாறி கொண்டே இருக்கும், இப்போது வாழ்க்கையின் மிக முக்கிய கால கட்டத்தில் இருக்கிறாய், போராட்டங்கள் நிறைந்துதான் இருக்கும், துவளாதே,

" பத்து வருஷம் சுகமா வாழ்ந்தவனும் இல்ல, பத்து வருஷம் கஷ்டப்பட்டவனும் இல்ல " இப்படி ஒரு பழமொழி சொல்லுவாங்க, இதற்க்கு என்ன அர்த்தம், வாழ்க்கையில் சுகம் துக்கம் இரண்டும் உண்டு, துக்கம் வரும்போது துவண்டு விடாதே, பொறுமை காத்திடு, விடா முயற்சி செய், நீ நினைக்கும் அளவுக்கு பெரிய கோடிகளில் புரளவில்லை என்றாலும், முயற்சிக்கு தக்க பலன் நிச்சயம் கிடைத்தே தீரும் நம்பு, உறுதியுடன் உழை, பொறுமை காத்திரு.

உன்னுடைய குறிக்கோள் ( target ) எப்படி அமைத்துகொள்கிறாய் என்பதில் மிகவும் கவனமாக இரு, குறிக்கோள் சூரியனை தொடுவதாக இருந்தாலும் தவறில்லை, Aim the star and shoot the tree என்று சொல்வது போல, ஒரு மரத்தை மட்டுமே சுட முடிந்தால், முழு திருப்பதி படு, திருப்த்தி அடைவதால் இன்னும் மேலான குறிகோள்களை அடைய முடியாமல் போய் விடுமோ என்று குழம்பாதே, குழப்பம் இல்லாத சிந்தனை மிக முக்கியம்.

நல்லோர் சொல் கேள்.

" முயற்சி திருவினையாக்கும், முயற்ச்சியின்ன்மை இன்மை புகுத்திவிடும்
".