Author Topic: வெற்றி பெற்ற மனிதரெல்லாம் .........  (Read 1142 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் .........


" புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனமிருக்கு மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த நேரத்திலே வந்ததெல்லாம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரைப் பார்த்து அழைப்பாள் "


காலத்தை வென்ற கவிஞ்சர் கண்ணதாசனின் இந்த அருமையான பாடலில் எத்தனை வாழ்க்கையின் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு தனியார் தொலைக்காட்ச்சியில் ஒரு சாது அல்லது சாமியார் சொல்வதை பார்த்தேன் : " வெற்றி அடைந்தவர்களால் தான் வெற்றி பற்றி பேச முடியும், வெற்றி அடையாதவர் அதை பற்றி எப்படி பேச முடியும் " என்று கூறிக்கொண்டிருந்தார்.

எனக்கு ஒரு கேள்வி தோன்றியது ஒரு வெற்றி அல்லது தோல்வி என்பதை எந்த அளவு கோள் வைத்து நிர்ணயம் செய்கிறார்கள் என்று.

அப்போதுதான் கவிஞ்சரின் இந்த பாடல் நினைவிற்கு வந்தது.

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் வெற்றியடைய அவர்கள் இழந்தவைகளைப் பற்றி கேட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் ஒரு வெற்றி எத்தனை இழப்புகளும் வேதனைகளும் உள்வாங்கியுள்ளது என்று, அப்படியானால் அவர்கள் பெற்ற வெற்றியை மட்டும் எப்படி கொண்டாடி களிக்க அவர்களால் முடியும்? எப்படி அவர்களை " ஒரு வெற்றியாளர் " என்று சொல்லிவிட முடியும்?
மேல் பார்வைக்கு வெற்றியாளராய் தோற்றமளிக்கும் அவர்/அவள் உள்மனதில் இழப்புக்களின் பட்டியல், அதன் கனம், வெளிப்படையான வெற்றியை முழுமனதுடன் அனுபவிக்க விடுமானால், அல்லது ஏற்றுக்கொள்ள முடியுமானால், "வெற்றி" என்று பெயர் சொல்லுதல் சரியாகுமோ !!!!!

{ எத்தனை கோடி மனிதர்கள் தோல்வியுடன் வாழ்க்கையில் நிம்மதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்}, அல்லது மனிதனாய் பிறக்கும் எல்லோருமே வெற்றி அல்லது தோல்விகளை பெறுவதற்காகவே படைக்கப்படுகிறார்களா என்ன ?

பொருளாதாரத்தை மேன்மைப்படுத்தி கொள்ளுதல் மட்டுமே வாழ்க்கையில் முன்னேறியதாக யார் அளவு கோள் நிர்ணயம் செய்கிறார்கள்?

அப்படி மேம்படுத்தி கொள்ளாதவர் யாவரும் வாழ்க்கையில் தோற்றவர்களா?

பொருளாதாரம் (materialistic ) ஒன்று மட்டுமே ஒரு மனிதனை நிர்ணயிக்கும் அளவு கோள் என்றால், உலகத்தில் ஒட்டு மொத்த ஜனத் தொகையில் ஒரு சதவிகிதம் மனிதர்கள் தான் வெற்றி பெற்றவர்கள, அவர்கள் மட்டும் தான் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள? வாழதகுதி பெற்றவர்கள?

அப்படி வெற்றி அடைந்தவர்கள் மட்டுமே வெற்றி பற்றி பேச தகுதி உள்ளவர்கள் என்றால், எஞ்சிய அனைவரும் பிறந்ததே வீணா?

ஒரு முக்கிய மனிதர் என்று கருதப்படும் அவர் பேசிய பேச்சுகள் எந்தவிதத்திலும் என்னால் ஏற்று கொள்ள முடியாத ஒன்று, misguide செய்வது போல பேச்சு இருக்கவே கூடாது, அல்லது அந்த சமயத்தில் அங்கு வருகை தந்திருக்கும் முக்கிய மனிதர்களை திருப்தி படுத்தும் நோக்கத்தில் அவர் அப்படி பேசினாரா என்று தெரியவில்லை.

தோல்விகளை வாழ்க்கையின் இறுதிவரைக்கும் கண்ட ஒருவரால் தான் வெற்றியின் இலக்கு பற்றி சரியாக சொல்ல முடியும், அவரால் தான் எப்படியெல்லாம் முயன்றால் தோல்விகளை தவிர்க்க முடியும் என்றும் சொல்ல முடியும்,

99% தோல்வி கண்டவர்கள், பல காரணங்களால் தோல்விகளை சந்திக்க நேருவதும், பல சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும் தவிர்க்க முடியாமல் எற்ப்படுவதே தோல்விகளுக்கான காரணங்களாக உள்ளது, பல சமயங்களில் எதனால் தோல்வி ஏற்ப்பட்டது என்பதே அறிந்து கொள்ள இயலாமலும் போய் விடுகிறது, இப்படி இருக்க, வெற்றி கண்டவரால் தான் வெற்றியடையும் வழியை பற்றி எடுத்து கூறும் தகுதி உள்ளது என்பது, முன்சிந்தனையற்ற பேச்சு.

தோல்வி கண்டவர்களை இழிவு படுத்தும் பேச்சு.