Author Topic: வெற்றிக்கு வழி  (Read 1174 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வெற்றிக்கு வழி
« on: December 14, 2011, 04:10:30 AM »
வெற்றிக்கு வழி


தெளிவான நீரிலே முகம் காண முடியும், மனம் சுத்தமாக இருந்தால், தெளிவு கிடைக்கும், குழந்தையை போல மனமிருந்தால் கடவுளை காண முடியும்,

மனதில் வேண்டாத அழுக்கை நிரப்புவதனால் தெளிவு கிடைக்காது, தெளிவு இல்லையென்றால் ஒரு காரியத்திலும் சரியான முடிவெடுக்க முடியாது, சரியான முடிவெடுத்து காரியங்களை செய்யாவிட்டால் முடிவு தோல்வியாகத்தான் இருக்கும்,

குழம்பிய சேற்றில் மீன் பிடிக்க முடியாமல் போவது உண்மைதானே.

குறிக்கோள் இல்லா வாழ்க்கை துடுப்பு இல்லா ஓடம், ஆனால் குறிக்கோள் என்ன என்பதும் அதிக முக்கியம் அல்லவா, குறிக்கோள் என்பது தனிப்பட்ட ஒருவரின் சக்த்திக்கும் திறமைக்கும் சாதிக்கும் வரையறைகளுக்கும் உட்ப்பட்டவை.

ஒரு குறிக்கோளை வாழ்க்கையில் உருவாக்கி கொண்டு, அதற்க்காக அதனை நோக்கி முன்னேறுவது அவசியமாக இருக்கிறது, முன்னேறும் பாதையில் நாம் எதிர்நோக்கும் ஏற்ற தாழ்வுகள் நம்மை முயற்ச்சியில் சலித்துவிடாமல் இருக்க மனவுறுதியும் நேர்மையும் உழைப்பும் அவசியம் தேவைப்படும்,

தோல்விகளே இல்லாத குறிக்கோள் ஆக்கபூர்வமான மேம்பட்ட அனுபவங்களை கொடுக்காது, தோல்விகள் தான் பெரும்பாலும் வரும் காலங்களில் நாம் எப்படி உறுதியுடனும் சரியாகவும் செயல்பட வேண்டும் என்பதை செயல் வழியாக நமக்கு கற்ப்பிக்கும் பாடமாவும் அமைகிறது.

ஒரு வெற்றியின் முழுமையை நாம் அனுபவிக்க பல தோல்விகளை கண்டே ஆக வேண்டும், கடின உழைப்பின்றி கிடைக்கும் எந்த ஆதாயமும் சரியான நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கவே முடியாது.

நேர்மையான உழைப்பிற்கு கிடைக்கும் மதிப்பும் மன நிம்மதியும் வாழ்வில் வேறெதற்கும் ஈடு இணையற்றது. தோல்வி நம்மை சோர்ந்துபோக வைக்கும், என்றாலும் தோல்விகள் தான் பல இணையற்ற பாடங்களை இலவசமாக நமக்கு அள்ளி தரும், இப்படிப்பட்ட பாடங்களை நாம் எந்த புத்தகம் மூலமாகவும் கற்றிருக்க இயலாது என்பது நம்மால் பிற்காலத்தில் நிச்சயம் உணர முடியும்.

தெளிவான மனம், தூய்மையான மனம், அதன் மூலதனமாக நாம் மேற்க்கொள்ளும் பல முயற்சிகள், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் ஆதாயம் இவையே வெற்றிக்கு வழி, அப்படி கிடைக்கும் வெற்றியை மட்டுமே நம்மால் முழுமையாக அனுபவிக்க முடியும்.