Author Topic: மரணம் - வாழ்க்கையின் விளக்கம்  (Read 755 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மரணம் - வாழ்க்கையின் விளக்கம்

"ஒரு கல்யாண வீட்டிற்கு போவதை விட ஒரு சாவு வீட்டிற்க்கு போ" என்பது பெரியோர் வாக்கு, அதேப்போல

"சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" என்று சுடுகாட்டை அல்லது ஒரு கல்லறையை பற்றிய பாடலை கேட்க்கும் போது பல யதார்த்தம் விளங்குவது உண்மை.

ஒரு மனிதனின் இறப்பு அவன் வாழ்ந்த நாட்களின் அருமை பெருமைகளை விளக்கும் ஒரு அமைதி விளக்கம் மட்டுமில்லாது, அவன் மீது நாம் கொண்டிருந்த அன்பின் கனத்தை நமக்கே தெரியாமல் நம் மூளையில் பதிவு செய்யப்பட்ட பல ஷணங்களை பல இன்ப துன்பங்களை நமக்கே நினைவு படுத்தும் ஒரு அறிய சந்தர்ப்பம்,

மனிதனின் இறப்பில் தான் பலரின் ஞானக்கண் திறக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும், வாழ்வின் ரகசியங்களை எடுத்துரைக்கும் ஒரு பாடமாக அமையும்,

ஒரு மனிதனுக்கு வாழ கொடுக்கப்பட்ட காலத்தின் அருமைகள் என்ன என்பது விளங்கும், வாழ கொடுக்கப்படும் அந்த கால கட்டத்தில் அவன் செய்து வைத்து போன பலவற்றை காணும் போது நாம் என்ன செய்யவேண்டும் என்றும் என்ன செய்ய தவறியுள்ளோம் என்பதும், என்ன செய்ய கூடாது என்றும் பலவித நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.

" மரணம் " என்பது எல்லார்க்கும் அதனதன் காலத்தில் தீர்மானிக்க பட்ட படி நடக்கபோவது தான் என்றாலும் மனிதனுக்கு மரணத்தை பற்றிய நினைவு மறக்கப்பட்டு உள்ளதால் தான் பல சுக போகங்களில் பல துஷ்ட செயல்களில் மனம் போன போக்கில் நடக்கும் அலட்சிய போக்கினை கூட கொடுக்கிறது.

பலரும் நினைப்பது " இன்னும் அதிக வருடங்கள் வாழப்போகிறோம், வயதானப்பின் யாரையும் சாராமல் வாழ நிறைய பணத்தை சேர்த்து வைத்து கொள்ள வேண்டும், அல்லது இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது வயதான பின் "கடவுளை" பற்றி சிந்தித்து கொள்ளலாம்" இப்படி பல்வேறு காரியங்களுக்கு தாங்கள் வாழ போகும் காலம் இன்னும் நிறைய உள்ளதால் பிறகு பார்த்து கொள்ளலாம் என்ற மனபோக்கை உருவாக்கி கொள்வது, முற்றிலும் தவறான போக்கு.

மரணம் என்பது யாருக்கு எப்போது வரும் என்பதற்கு ஒரு உத்திரவாதமும் கிடையாது, " பிறகு பார்த்து கொள்ளலாம் " என்ற மன போக்கு சரியானதல்ல, " இன்றே நான் இறந்தாலும் சரி நான் அன்றன்றைக்கு செய்ய வேண்டிய என் கடமைகளை செய்து முடித்து இருக்கிறேன்," என்று வாழ்தலே சிறந்தது, ஏன் என்றால் இறந்தபின் நம் "ஆன்மா" இதை செய்யாமல் விட்டு விட்டோமே, அதை செய்யாமல் விட்டு விட்டோமே என்று தவிக்கும் நிலை எற்ப்படுவதற்கு நாமே காரணமாகி விட கூடாது.


என்னதான் சடங்குகளை காரியங்களை பூஜைகளை செய்தாலும் அறை குறை காரியங்களை செய்துவிட்டு மரணம் நேருமாயின் " ஆன்மா " கிடந்தது வேதனைப்படும், நம்மை சார்ந்து வாழுபவர்களும் நிம்மதியாக வாழ முடியாது.

வாழும்போது ஒவ்வொரு நாளும் அதனதன் கடைமையை முழு மனதுடன் ஒழுங்காக செய்வதன் மூலம் மட்டுமே ( கடவுளை வணங்குதலும் கடைமை தான் ) மரணத்திலும் நிம்மதி அடைய முடியும்.