Author Topic: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)  (Read 14944 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #30 on: January 28, 2012, 10:52:22 PM »
26.மக்கள் திலகம் அவர்கள் சிவாஜி பற்றி சொன்ன தகவல்கள்




மக்கள் திலகத்தின் அரவனைப்பில் நடிகர் திலகம்

திறமைதான் முக்கியம் இதில் சிவாஜியின் நடிப்பு திறமையை சினிமா உலகத்தில் பாராட்டதவர்கள் இல்லை, நடிப்பில் அவர் பாணி எனக்கு வராது, என்னுடைய பாணி அவருக்கு வராது. எங்கள் இருவருடைய படங்களும் வெளியிலே வெளியிடும்போது தியேட்டர்களில் ரசிகர்கள் அந்த தியேட்டரை அலங்காரம் செய்வதும், ஆரவாரத்தோடு முதல்நாள் அன்று படத்தை பார்ப்பதும் முக்கியமான விஷயமாக இருக்குமே தவிர, மக்கள்திலகம், நடிகர் திலகம் என்று ரசிகர்களுக்குள் கூட போட்டி இருக்காது எங்கள் இருவருக்கும் தமிழ்நாடு எங்கும் ரசிகர் மன்றங்கள் அமைக்கப்பட்டது. அது படிப்படியாக வளர்ந்து வெளிநாடு எங்கும் எங்களுக்கு ரசிகர் மன்றங்கள் உண்டானது.
 
இது சினிமா, சிவாஜி 1953ல் தி.மு.கவிலிருந்து காங்கிரசில் இணைந்தார். நான் தி.மு.கவில் அண்ணா முன்னிலையில் இணைந்தவன். நாங்கள் இருவரும் தமிழ்நாடு அரசியலில் முக்கியஸ்தர்களாக இருந்தோம். அப்போ கூட எங்களுக்குள் போட்டி இல்லை, பொறாமை இல்லை, ஒருவருக்கு ஒருவர் தாக்கி பேசி கொண்டதும் இல்லை. சார், உங்களிடம் இதை நான் மிக சுருக்கமாக சொல்லி உள்ளேன் என்று சொன்னவுடன் அவர் சிரமத்துக்கு மன்னிக்கனும் சார் நீங்கள் எவ்வளவோ உயர்ந்த மனிதராக இருக்கிறீர்கள். உங்களுடைய நல்ல பண்பாட்டுக்கு உங்களை யாராலும் வெற்றி பெற முடியாது. வணக்கம் சொல்லி அவர் விடைபெறுகிறார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #31 on: January 28, 2012, 10:54:56 PM »
27.கலைவாணர் என்.எஸ்.கே.



திரு. என்.எஸ்.கே. அவர்களுடைய இரண்டாவது மனைவி டி.ஏ. மதுரம் அவர்கள் சென்னையில் என்.எஸ்.கே. மறைவுக்கு பிறகு ஒரு காலகட்டத்தில் மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு தன் மனைவி ஜானகி அம்மாள் வழியாக அப்ப அப்ப வேண்டிய உதவிகளை செய்து வந்தார் இறக்கும் வரையில்.
 
அடுத்து, எம்.கே. தியாகராஜ பாகவதர் மறைவுக்கு பிறகு திருச்சியில் உள்ள அவரது குடும்பத்திற்கு அவர்களுடைய வீட்டிற்கு சென்று உதவி செய்து உள்ளார்.
 
அடுத்து பி.யு. சின்னப்பா அவர்களுடைய குடும்பம் புதுக்கோட்டையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் புதுக்கோட்டைக்குச் சென்று உதவி செய்து உள்ளார். மக்கள்திலகம் அவர்கள் பொதுவாகவே பழைய நடிகர்களுக்கு, தனக்கு உதவி வேண்டும் என்று கேட்டால் உடனே, அவர்களுக்கு தகுந்தாற் போல் பல உதவி செய்வார். ஆனால், அவர்கள் குடி பழக்கம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது. இது போல கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் மறைந்த பிறகு அவரைப் போலவே நாகர்கோயிலை சேர்ந்தவர் சந்திரபாபு, இவர் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல நடிகரானவர், இவர் சொந்த குரலில் பாடி நடிப்பவர், சில படங்களில் மக்கள் திலகத்துடன் கூடசேர்ந்து நடித்து உள்ளார். இவர் பிரபலம் ஆனவர். ஆனால், இவரிடம் குடிபழக்கம் உண்டு. இதனால் உடல் நல குறைவு ஏற்பட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டார். இதை அறிந்த மக்கள் திலகம் அவர்கள் அவரை தன் வீட்டுக்கு அழைத்து பண உதவி செய்தார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #32 on: January 28, 2012, 10:56:28 PM »
28.கவிஞர் கண்ணதானுக்கு உதவி


இதை போல் பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒரு சமயத்தில் குடும்ப சூழ்நிலையில் மிகவும் சிரமப்பட்டார். யாரிடம் உதவிகேட்டால் கிடைக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அவருக்கு வேண்டிய ஒருவர் நம்ம மாதிரி ஆள்களுக்கு உதவி செய்ய கரங்கள் கொண்ட வள்ளல் ஒருவர் பரங்கிமலையில் இருக்கிறார். அவரிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள் அவர் உதவி செய்வார். இதை கேட்ட கண்ணதாசன் அவர்கள், அய்யய்யோ வேண்டவே, வேண்டாம் அவரை நான் மிகவும் ஏசி பேசியுள்ளேன். நான் அவரிடம் போகமாட்டேன் என்று அவர் சொல்ல, இவர் சொல்கிறார், மக்கள் திலகம் அவர்கள் பெரிய வள்ளல் குணம் படைத்தவர், மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் உள்ளவர் அவரை தவிர உங்களுக்கு வேறு ஆளும் இல்லை எனவே எதையும் யோசிக்காமல் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில்விழுவோம் என்ற எண்ணத்தோடு போய் பாருங்கள் என்று அவர் சொல்லி முடித்துவிட்டார்.
 
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலவிதமான யோசனைக்குப் பிறகு ஒரு நாள் மக்கள் திலகம் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலமைகளை சொன்னார். அதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் சரி, உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார். இதை கேட்ட கவிஞருக்கு ஒன்றும் புரியாமல் சற்று நேரம் திகைத்து போய் மவுனமாக இருந்துவிட்டார். ஏன் யோசிக்கிறீங்க என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கேட்க அவர் ரொம்பவும் தாழந்த குரலில் எனக்கு தற்போது இவ்வளவு பணம் இருந்தால் என் சிரமங்களை ஓரளவுக்கு முடித்துகொள்வேன் மன்னிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார். இதை கேட்ட மக்கள் திலகம் அவர்கள் எதையும் யோசிக்காமல் சரி நீங்க போங்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் அரை குறை மனதோடு வீட்டிற்கு சென்று விட்டார். அடுத்த நாள் மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய மேனேஜர் குஞ்சப்பன் என்பவரை அழைத்து இந்த பணத்தை கண்ணதாசன் அவர்களிடம் நேரில் கொடுத்து விட்டு வாருங்கள் என்று சொல்ல அதன்படி அவரும் பணத்துடன் கண்ணதாசன் அவர்களை சந்தித்து பையில் இருந்து ஒரு பணம் பொட்டலத்தை எடுத்து இதை சின்னவர் உங்களிடத்தில் கொடுத்து வரசொன்னார் என்று பணத்தை கொடுக்க அவர் திகைத்து போய் அந்த பணம் பொட்டலத்தை அதே இடத்தில் பிரித்து பார்க்கிறார். பார்த்த உடனே, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று யோசித்த வண்ணத்தில் பணத்தை பெற்று கொண்டு குஞ்சப்பன் அவர்களுக்கு நன்றியை சொல்லி அனுப்பி விட்டு உடனடியாக மக்கள் திலகம் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அங்கு சென்று, மக்கள் திலகம் அவர்களைப் பார்த்து இரு கரங்களையும் பிடித்து கண்ணில் வைத்து கொண்டு தேம்பி ஆழ ஆரம்பித்துவிட்டார். தான் கேட்ட தொகையைவிட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளதை சொல்லி கொண்டே நான் இவ்வளவு தொகை தான் கேட்டேன். ஆனால் நீங்கள் மேற்கொண்டு அதிகமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளீர்களே நானும் என் குடும்பமும் என்றென்றும் கடமை பட்டவர்களாக இருப்போம் நீங்கள் எப்போதும், எந்த குறையும் இல்லாமல் இது போன்ற விஷயத்தில் வள்ளலாக வாழ வேண்டும் என்று கடவுளை வணங்குகிறேன் என்று சொன்னார்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #33 on: January 28, 2012, 10:57:29 PM »
29.எம்.ஆர். ராதாவைப் பற்றிய விவரம்



மக்கள் திலகம் அவர்களிடம் உள்ள மனித நேயமும் வள்ளல் குணமும் இவை இரண்டையும் புத்தக வடிவில் எழுதுவது என்றால் ஒரு புத்தகம் போதாது. ஒன்று, இரண்டு, மூன்று என்று பலபாகங்களாக எழுத வேண்டும். மக்கள் திகலம் எம்.ஜி.ஆர். அவர்கள் 1967, 12ம் தேதி அன்று 2.30 மணிக்கு பிற்பகல் “எம்.ஜி.ஆர் தோட்டம்” ராமாபுரம் மக்கள் திலகம் அவர்கள் வீட்டில் அவரை நேரில் பார்த்து பேச வேண்டும் என்று நேரம் கேட்டு வந்த, நடிகர் எம்.ஆர். ராதா அவர்களுடன் ஒரு படதயாரிப்பாளருடன் வந்தார்கள். பேசிக்கொண்டு இருக்கும் போது சற்று விவாதம் ஏற்பட்டு கோபம் கொண்ட, எம்.ஆர். ராதா தீடீர் என்று துப்பாக்கி எடுத்து சுட்டுவிட்டார். இது இந்த விஷயத்தின் சுருக்கம். துப்பாக்கி சூடு காது ஓரம் கழுத்தில் தர்மம் தலையை காத்தது போல் அந்த துப்பாக்கி குண்டு கழுத்தில் பாய்ந்த குண்டு சக்தி இழந்து பாதியுடன் நின்றுவிட்டது. உடனே தானும் சுட்டுக் கொண்டார் எம்.ஆர். ராதா. இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். துப்பாக்கி குண்டோ டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட மக்கள் திலகம் அவர்கள். அதிர்ஷ்ட வசமாக கழுத்தில் இருந்த குண்டை அகற்றி நல்ல முறையில் வைத்தியம் செய்து மருத்துவர்கள் காப்பாற்றி விட்டார்கள். உணர்வு தெளிந்தவுடனேயே மக்கள் திலகம் அவர்கள். அண்ணன் ராதா அவர்களின் நிலைமை என்னாயிற்று என்று தன் படுக்கை அருக்கில் உள்ளவர்களிடம் கேட்டார்.
 
அது சமயம் அங்கு அவருக்கு துணைக்கு இருந்த அவர்கள் எல்லா விஷயத்தையும் சொன்னார்கள். இதை கேட்ட மக்கள் திலகம் அதிர்ச்சி அடைந்து போய் அங்கு உள்ள முக்கியஸ்தர்களையும், டாக்டர்களையும் அழைத்து ராதா அண்ணன் அவர்களுக்கு நல்ல முறையில் வைத்தியம் செய்ய வேண்டும் என்று பணிவோடு கேட்டுகொண்டார். அந்த சமயம் தமிழ்நாட்டில் பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஒரு பிரபல சினிமா நடிகராகவும், தி.மு.க. வில் கட்சியில் ஒரு உறுப்பினராக சென்றார். அவர் வைத்தியம் முடிந்து வீட்டிற்கு வரும்போது பரங்கிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. ஆக வருகிறார். அதே நேரத்தில் எம்.ஆர். ராதா அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை துப்பாக்கியால் சுட்ட குற்றத்திற்காக ஜெயிலுக்கு சென்றார். ஜெயிலிலிருந்து விடுதலை ஆகி வரும்போது மக்கள் திலகம் அவர்கள் தமிழ்நாட்டிற்கு முதல் அமைச்சராக ஆகிவிட்டார். இந்த காலகட்டத்தில் எம்.ஆர். ராதா அவர்கள் நாடகங்களிலும், சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் ராதா அவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. வேதனையால் வெந்து கொண்டு இருக்கும் ராதா அவர்கள், அவர் குடும்பத்தில் உள்ள ஒரு முக்கியமான நபரிடம் மக்கள் திலகம் அவர்களிடம் உதவிகேட்டு அனுப்புகிறார். உதவி என்றால் பணம் அல்ல மீண்டும் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கும்படி பட முதலாளிகளிடம் சொன்னால் போதும் இந்த தகவலை அவருக்கு வேண்டியர் மக்கள் திலகத்திடம் நேரில் சந்தித்து சொல்கிறார்.
 
இதை கேட்ட மக்கள் திலகம் வந்தவரிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு அவரிடம் பேச தொடங்கினார். அய்யா ராதா அண்ணே ஒரு பெரிய கொலை குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்த பிறகு விடுதலையாகி வந்து உள்ள செய்தி இந்தியா முழுவதும் நன்கு தெரிந்த விஷயமே, அவர் கொலை குற்றவாளி. நான், மேலும் ஒரு முதலமைச்சராக இருக்கிறேன். இந்த சூழ்நிலையில் நான் எப்படி உதவி செய்ய முடியும், உதவி செய்யலாமா? இதை மற்ற அரசியல்வாதிகளும், பொது மக்களும் நான் ராதா அண்ணனுக்கு உதவி செய்தால் என்ன நினைப்பார்கள். நான் அவருக்கு மேற்கொண்டு எந்த உதவியும் செய்ய முடியாத சூழ்நிலை என்று சொல்லி அண்ணனுக்கு என் மீது வருத்தம் இருக்கக்கூடாது என்று சொல்லிவிடுங்கள் என்றார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #34 on: January 28, 2012, 10:59:20 PM »
30.மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் பிரமுகர்களுக்கு சொல்லும் அறிவுரைகள்


ஒரு நாள் மக்கள் திலகம் அவர்கள் மாம்பலம் ஆபிசில் மந்திரிசபை அமைத்ததைப்பற்றி பேசியபோது 1980ல் நடந்த எம்.பி. தேர்தலில் (அ.இ.அ.தி.மு.க) நம்ம கட்சி படுதோல்வி அடைந்தது. அதனால், மந்திரிசபையை கலைத்தார்கள். அது சமயம் நாம் மனம் தளராமல் அடுத்து நடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் ஆட்சியில் மக்கள் அமர்த்தினார்கள். ஆக எல்லாம் நம் கையில் இல்லை மக்கள் கையில் தான் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து கொண்டு இருந்தால் போதாது மக்கள் மனதில் குடிபோக வேண்டும். அவர்கள் நாம் எப்போதும் சந்தித்து கொண்டே இருக்கணும். இந்த கட்சிக்கு நீங்கள் எல்லாம் எப்படி என்னை தலைவராக தேர்ந்து எடுத்துள்ளீர்களோ அதே போல் தான் நம்மை மந்திரிகளாக இருக்க ஆட்சி நடத்த மக்கள் தேர்ந்து எடுத்து உள்ளார்கள். நான் சினிமாவில் புகழ் அடைந்தேன் என்றால் அது மக்களால்தான். நான் அப்பவே மக்களுக்கு நண்பன் ஆகிவிட்டேன் அதனால்தான்.
 
நான் இப்போ ஒரு பெரிய அளவில் வளர்ந்து உள்ள அரசியல் கட்சிக்கு தலைவனாகவும் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் இருக்க முடிந்தது. அதனாலே நாம் எல்லாம் மக்கள் மனதில் இருக்கனும். இது முக்கியமாக மற்ற மந்திரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும் மக்கள் திலகம் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #35 on: January 28, 2012, 11:00:52 PM »
31.1975-ல் மக்கள் திலகத்துக்கு வந்த சோதனை காலம்


இப்படிப்பட்ட பாரிவள்ளல் மனதிநேய சிகரத்திற்கு ஒரு சமயம் 1975ல் ஒரு சோதனை ஏற்பட்டது. அதாவது (அப்போது தி.மு.க அரசு) வருமானவரி பாக்கி இவ்வளவு ரூபாய் இருக்கிறது. அதை இவ்வளவு மாசத்திற்குள் கட்ட வேண்டும் என்று மக்கள் திலகம் அவர்களுக்கு வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இதை அறிந்த மக்கள் திலகம் மிகவும் மனம் நொந்து போனார். கடவுளை நினைத்து நான், யாருக்கும் எந்த வித துரோகமும் செய்ததில்லை யாரிடமும் நான் கடன் வாங்கியதும் இல்லை இப்படிப்பட்ட நான் அரசாங்கத்திடம் கடன்காரனாகிவிட்டேனே? இதை பற்றி மிகவும் தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தார். பிறகு, இதை பற்றி யாரிடமும் பேசாமல் அவரே ஒரு முடிவுக்கு வந்தார். நஷ்டத்தில் இயங்கி கொண்டு இருக்கும் “சத்யா ஸ்டுடியோ”வை விற்று. இந்த அரசு கடனை கட்டிவிடலாம். நாம் சம்பாதித்து வாங்கிய சொத்துதானே, மேலும் இது நமக்கு லாபரமாக இல்லை. அதோடு சில மாதங்களாக ஸ்டுடியோவில் வேலை செய்பவர்களுக்கும் மற்றும் கரண்டுக்கு, டெலிபோனுக்கு நிலத்துவரி, கட்டிடவரி இப்படி எவ்வளவு நாளைக்குத்தான் நாம் நடித்து வாங்கும் சம்பளத்தை இந்த ஸ்டுடியோக்களுக்கு செலவு செய்ய முடியும். எனவே இதைவிற்றுவிடலாம் என்ற முடிவோடு தன்னுடைய உற்ற நண்பர் ஒருவரை வரவழைத்து அவரிடம் இந்த விஷயத்தை மிக உருக்கமாக சொன்னார். இதை கேட்ட அவருக்கு உடம்பே புல்லரித்துவிட்டது. அவர் சிறிது நேரத்திற்கு பிறகு சார் இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு உங்களை பொருத்தவரையில் சரிதான். ஆனால், இப்போது உள்ள உங்களுடைய மதிப்புக்கு இது சரிவராது. அரசியல்வாதிகளும், பொதுமக்களும் இந்த விஷயத்தை பற்றி என்ன நினைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீங்க நீங்க சினிமாவிலும், அரசியலிலும் கொடி கட்டி பறக்கிறீங்க இந்த நேரத்தில் யாரோ ஒரு வருமான வரி அதிகாரி உங்களுக்கு வரிபாக்கி இருக்கு அதை, உடனே கட்டவேண்டும் என்று ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டார் என்பதற்காக நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுப்பது சரி இல்லை. தயவு செய்து எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடுங்கள் பிறகு அதை பற்றி பேசுவோம்.
 
இந்த விஷயத்தைப் நினைத்து கவலைபடாதீர்கள் என்று சொல்லிவிட்டு, அந்த பெரிய மனிதர் போய்விட்டார். பிறகு, அவர் வருமானவரி அதிகாரிகளை சந்தித்து எப்படி இவ்வளவு பெரிய தொகை பாக்கி ஏற்பட்டது. உங்களுடைய கணக்கு விவரம், முழுமையாக விபரம் எழுதிகொடுங்க ஏன் இவ்வளவு நாள் கழித்து உங்களுக்கு பாக்கி இருக்கிறது? என்று இப்போ எழுதி உள்ளீர்கள். இதற்கு சரியான பதில் எழுத்து வழியாக அனுப்புங்கள் என்று அவர் சென்னை வருமானவரி உயர் அதிகாரிகளிடம் பேசிய பிறகு, அவர் மீண்டும் மக்கள் திலகத்திடம், சார், இது விஷயமாக சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசி விட்டேன். அதாவது நியாயப்படி ஏன் இவ்வளவு காலதாமதம்? இவ்வளவு ஒரு பெரிய தொகையை கட்ட வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளீர்கள் அது தவறு. மீண்டும் கணக்கு பார்த்து சரியான பதிலை அனுப்பும்படி சொல்லிவிட்டு வந்து, உள்ளேன். தயவு செய்து நீங்கள் ஸ்டூடியோவை விற்கனும் என்று நினைக்காதீர்கள். கடன் உங்களை விட இன்னும் பெரிய கோடீஸ்வரர் என்று சொல்பவருக்கு கூட இருக்கும். நீங்கள் கடன்காரனாக வாழ கூடாது என்று நினைப்பதில் தவறு இல்லை. இதை கேட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் குறுக்கிட்டு சார், இப்போ இது வெறும் கட்டுகதைதான் என்று நாம் எப்படி சொல்ல முடியும் சார், என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு கடன்காரன் என்ற, சொல்லை கேட்ககூடாது. இதுதான் என்னுடைய லட்சியம், அடுத்து சார் இந்த ஸ்டூடியோவில் இருந்து எந்த வித லாபமும் இல்லை. சமீபகாலமாக ஸ்டூடியோ தொழிலாளர்களுக்கம் கரண்டுக்கும், போனுக்கும் நான் என் கையில் இருந்து கொடுத்து வருகிறேன். இப்படி இருந்தால் எப்படி சார் எல்லாவற்றையும் என்னுடைய நடிப்புத் தொழிலில் இருந்துதானே சார் சமாளிக்கனும் சினிமாவைத் தவிர, வேறு எனக்கு என்ன தொழில் இருக்குது. என் உடல் உழைப்பை தவிர, இந்த விஷயம் மக்கள் திலகம் அவர்களுக்கு ஒரு பெரிய சிந்தனையை உருவாகியது. அது தான் 1976ல் “சத்யா ஸ்டூடியோ”வை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கே சொந்தமாக (லீசுக்கு) வாடகைக்கு கொடுத்து சிரமத்தை தீர்த்துக்கொள்ளனும் அல்லது விற்றவிடனும். பிறகு, ஒரு மாதத்தில் எப்படியோ அந்த பெரிய மனிதர் உதவியால் அரசாங்க கடனை தீர்த்தாச்சு. இனிமேல் நாம் மாதாமாதம் கையில் இருந்து ஸ்டூடியோ தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது பிரச்சனை என்று நினைத்த மக்கள் திலகம் அவர்கள் சத்தியா ஸ்டூடியோவை அங்கு வேலை செய்யும் சக தொழிலாளர்களையும் அழைத்து ஒரு குறிப்பிட்ட வருசத்துக்கு குறைந்த வாடகைக்கு எழுதி கொடுத்துவிட்டு ஒரு பெரிய சிக்கலில் இருந்து தப்பினார் வள்ளல்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #36 on: January 28, 2012, 11:02:01 PM »
32.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடைய முதல் திருமணம்



வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களுடைய முதல் திருமணம் நடந்த நாள் புதன்கிழமை அவருடைய முதல் மனைவி பெயர் “தங்கமணி” என்பதாகும். இவர் பிரசவத்திற்காக ஊருக்கு போனது புதன்கிழமை இவர் வள்ளலையும், உலகத்தையும் விட்டு பிரிந்து சென்றதும் புதன்கிழமை இதை அடிக்கடி சொல்வார். வள்ளல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த நாள் செவ்வாய்கிழமை காலை 11.35 மணிக்கு அவருக்கு திருமணம் நடந்தது புதன்கிழமை காலை 10.15க்கு இதை விட முக்கியம் வள்ளல் பிறந்த வருடம் 17.1.1917 ஜனவரி காலை 11.55க்கு பிறந்தவர் அதே செவ்வாய் கிழமை இரவு மரணம் அடைந்தார்.
 
எப்போதுமே வெள்ளிக்கிழமை அவர் அசைவம் சாப்பிடமாட்டார். அதே போல், அவருடைய பொன்மேனியை பூமியில் வெள்ளிக்கிழமை புதைத்தார்கள். அவருடைய புகழையும் தர்மத்தையும், மனித நேயத்தையும் நாடெங்கும் விதைத்து உள்ளார்கள். மக்கள் திலகம் அவர்கள் வருடத்தில் முதல்மாதம் செவ்வாய்கிழமை பிறந்தார். அதேபோல் வருடத்தில் கடைசிமாதம் செவ்வாய்கிழமை இரவு மறைந்துள்ளார். இந்த கடைசி டிசம்பர் மாதத்தில் காலம் சென்ற இந்திய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய முழு உருவச்சிலை தமிழக அரசின் சார்பில் சென்னையில் உருவாக்கிய பிரமாண்டமான விழா கோலத்தில், அப்போது உள்ள இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தலைமையில் சிலை திறப்பு விழா நடந்தது. இதுவே மக்கள் திலகம் அவர்கள் கலந்து கொண்ட கடைசி விழா ஆகும். விழா நடந்த தேதி 22.12.87 மாலை விழா முடிந்தது. வள்ளல் மறைந்தது 23.12.1987 இரவு. 24.12.1987 காலை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ கட்டிட பல்கலைக்கழகம் திறப்பு விழா அது நடைபெறவில்லை. பிறகு இந்த கட்டிடத்தை 1990ல் அப்போதைய தமிழக முதல் அமைச்சராக இருந்த கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்கள் தலைமையில் மிக எளிமையான முறையில் திறப்பு விழா நடந்தது.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #37 on: January 28, 2012, 11:03:44 PM »
33.ஆங்கிலோ போலீஸ் அதிகாரியை பார்த்து ஆச்சர்யப்பட்டார் மக்கள் திலகம்.



இது ஒரு மலரும் நினைவாக இருந்தது.
 
மக்கள் திலகம் தமிழக முதல் அமைச்சர் ஆக அவையில் 1977 ஆண்டில் அரச சபையில் கோட்டையில் ஆட்சியில் அமரும் முதல்நாளன்று, தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரியாக (ஐ.ஜி) யாக இருந்தவர் ஒரு ஆங்கிலேயர் பார்ப்பதற்கு நல்ல உயரமாக வாட்ட சாட்டமாக இருப்பார். அவர் பெயர் டிரைசி முதல் நாள் அன்று கோட்டையில் இம்மாதிரி உயர் அதிகாரிகளை சந்திக்கும்போது, கோட்டையில் தமிழ்நாடு போலீஸ் உயர் அதிகாரி அப்படி அறிமுகப்படுத்தும்போது, மக்கள் திகலம் அவர்கள் அவருக்கு கை கொடுத்து அந்த அதிகாரி முதல் அமைச்சருக்கு தரும் மரியாதையை பெற்று கொள்ளும் போது சற்று நேரம் அவர் கையை பிடித்தமுதல் அமைச்சர் அவர்கள் அவரையே சற்று நேரம் உற்று பார்த்தார். பிறகு, அந்த அதிகாரி தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையைப் பற்றியும், ஆங்காங்கே நடக்கும் அசம்பாவிதம் நடக்கும் இடங்களைப் பற்றியும், முதல் அமைச்சர் அவர்களே நேரில் சந்தித்து முக்கிய சம்பவங்களை பற்றி பேசுவார். இந்த மாதிரி விஷயங்கள் பேசுவதற்காக சென்னை தி.நகரில் அமைந்து உள்ள முதல் அமைச்சர் அலுவலகம் (மாம்பலம் ஆபீஸ்) இது இப்போது “எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்”. இந்த கட்டிடத்திற்கு, அந்த போலீஸ் அதிகாரி முதல் அமைச்சர் அவர்களை பார்க்க வரும்போதெல்லாம் இவரை வரவேற்று முதல் அமைச்சர் அமர்ந்து இருக்கும் மேல் மாடிக்கு அழைத்து செல்லும் போது அவரை பார்த்த உடனே வணக்கம் சார் என்று சொல்வேன். ஏன் என்றால் அவர் ஆங்கிலேயர் அவருக்கு அந்த வார்த்தை சொல்ல வராது. இதே மாதிரி முதல் அமைச்சர் அறைக்குள் சென்றவுடனே முதல் அமைச்சர் மக்கள் திலகம் இவரை பார்த்தவுடனே வணக்கம் வாங்க உட்காருங்க.
 
இந்த வார்த்தையை முதல் அமைச்சர் அவர்கள் சொல்லுவார். இதை கவனித்த அந்த போலீஸ் அதிகாரி சற்று நேரத்தில் இந்த வணக்கத்துக்குரிய உட்காருங்கள் என்ற சொல்லை சற்று நேரம் மெளனமாக நின்று விட்டு பிறகு உட்காருவார். அவர் முதல்அமைச்சர் அவர்களிடம் என்ன பேச வேண்டுமோ, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசுவார் முழுமையாக அவருக்கு தமிழ் பேச தெரியாது. அப்படி இருந்தும் மக்கள் திலகம் அவர்களுக்கு அவர் மீது தனி ஒரு பிரியம் உண்டு. காரணம் மக்கள் திலகம் அவர்கள் 1935-ம் ஆண்டு “சதிலீலாவதி” என்ற சினிமா படத்தில் முதன்முதலில் நடிக்கும் போது போலீஸ் அதிகாரியாக நடித்தவர் மக்கள் திலகம். அந்த படத்தின் இயக்குநர் ஒரு ஆங்கிலேயர் அவர் பெயர் எல்லீஸ்டங்கன். மேலும், அது ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். இதையும் அவர் பல வருடங்கள் கழித்து பல போராட்டங்களை சந்தித்து தான் வந்து ஒரு முதல்அமைச்சராக அமர்ந்த அன்று தன் கட்டுப்பாட்டில் உள்ள மிக பொறுப்பில் உள்ள போலீஸ் இலாகா, அந்த போலீஸ் இலாகாவில் இருக்கும் ஒரு உயர் அதிகாரியான (ஐ.ஜி) ஒரு ஆங்கிலேயர்? இதை நினைத்து ஆனந்த பூரிப்பு அடைந்தார். ஆனால், அவர் ஒரு சில மாதங்களில் வயது கட்டுப்பாட்டின்படி ஓய்வு பெற்றுவிட்டார்.
 
சிறப்பு குறிப்பு:
 
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் படமான “சதிலீலாவதி” 1935 நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஒரு ஆங்கிலேயர் பிறகு 42 ஆண்டுகள் கழித்த பிறகு, தமிழக முதல் அமைச்சர் ஆனபிறகு, தன் இலாகாவான போலீஸ் இலாகாவின் போலீஸ் அதிகாரி I.G. அவர்கள் ஒரு ஆங்கிலேயர் ஆவார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #38 on: January 28, 2012, 11:04:50 PM »
34.திருமணப் பத்திரிகை அடிக்காமல் திருமணம் செய்து கொண்டவர் மக்கள் திலகம்




மக்கள் திலகம் அவர்கள் திருமணங்கள் விஷயங்களில் வித்தியாசமானவராக நடந்து கொள்வார். ஆரம்பத்தில் தான் சினிமா காலத்தில் நடித்து கொண்டு முன்னேற்றம் அடையும் சமயங்களில் படபிடிப்பு நிலையத்தில் (ஸ்டூடியோ) பணியாற்றுபவர்களும் இவருடன் நடிக்கும் சக நடிகர்களும் அவர்களுக்கோ அல்லது அவர்கள் குடும்பத்துக்கோ திருமணம் நடந்தால் படமுதலாளி, இயக்குனர், மற்றும் இது போன்ற முக்கியஸ்தர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்கும் போது எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் பத்திரிகை கொடுக்க தவறுவது இல்லை. இந்த மாதிரி கால கட்டத்தில் தனக்கு கொடுத்த பத்திரிக்கையை நன்கு படித்துவிட்டு, அதற்கு தகுந்த மாதிரி இவருடைய வசதிக்கு ஏற்ப பணம் கொடுப்பார். ஆனால் திருமணத்திற்கு போகமாட்டார். இதனுடைய முக்கிய தத்துவம் என்னவாக இருக்கும். சரி இவருக்கு முதல் திருமணம் கேரளாவில் நடக்கும் பொழுது இவர் அப்போது சினிமாவில் நடித்து கொண்டு இருந்தார். திடீர் என்று அவருடைய தாயாரும், அண்ணனும் திருமணத்திற்கு முடிவு செய்துவிட்டதால் இவருடைய திருமணமும் இதே போல் கேரளாவில் நடிந்தது. அடுத்த இரண்டாவது திருமணம் அதுவும் கேரளாவில் எளிமையான முறையில் நடந்தது. மூன்றாவது திருமணம் சென்னையில் இதே போல் எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்து கொண்டார். ஒரு மனிதனுக்கு திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது போல் ஒரு விஷயம் அவருடைய வாழ்நாளில் முதல் முதலாக நடந்த திருமண விழாவை காண்கிறார். திருமணம் என்பது ரகசியமாக ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் நடப்பது ஒரு காதல் திருமணமாகும். அதுவும் இந்த காலத்தில் மாறிவிட்டது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் சூழ வருகை தந்து நடக்கும் திருமண விழாவாகும். ஆனால் இது மக்கள் திலகம் அவருடைய வாழ்க்கையில் ஒன்று இரண்டு, மூன்று என்று திருமணம் அவருக்கு நடந்தது. ஆனால், அது மேலே குறிப்பிட்டது போல் நடைபெறவில்லை. பத்திரிகை அடிக்கவில்லை. பலரை சந்தித்து அழைக்கவும் இல்லை. இது அவருக்கு அவருடைய வரலாற்றில் முக்கிய விஷயமாகும்.
 
பிறகு, சினிமா துறையில் பிரபலம் அடைந்து இதே போல் அரசியலிலும் பிரபலம் அடைந்தபோது பலர் மக்கள் திலகம் தலைமையில்தான் திருமணம் நடத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் திலகம் அவர்களிடம் சொல்லி அனுமதி பெறுவதற்காக பல நாட்கள் அவர்கள் அலைவதும் உண்டு. இந்த மாதிரி எந்த விஷயத்திலும் ஒதுங்கி இருக்காமல் கலந்து கொள்வதுதான் சரியாகும் இது உன்னுடைய பெயருக்கும் புகழக்கும் மிக உயர்ந்ததாக இருக்கும். இந்த விஷயத்தை ஒரு முக்கியமானவர் மக்கள் திலகம் அவர்களிடம் சொன்னார்கள். அதன்படி மக்கள் திலகம் அவர்களும் இதை பற்றி யோசித்து பார்க்கும் போது நமக்கு இப்படி நடக்கவில்லையே அப்படி என்கிற எண்ணம் மனதில் இருக்காமல், இன்னும்நாம் உயர வேண்டிய நாட்கள் இருக்கிறது. இந்த மாதிரி முடிவுக்கு பிறகு தன் பெயரை பத்திரிகையில் இட்டு தன்முன்னிலையில் திருமணம் நடத்துபவர்கள் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நன்கு அறிந்த பிறகு, தான் சம்மதத்தை கொடுப்பார். இதில் எப்படிபட்டவர்களாக இருக்கனும் என்ற ஒரு முறை உண்டு மக்கள் திலகம் அவர்களிடம் இதில் விதி முறைகள் என்ன,
 1. திருமண குடும்பத்தார் வசதியில் நடுநிலை குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
 2. காதல் திருமணமாக இருக்கக்கூடாது.
 3. கோயிலில் திருமணம் நடத்தகூடாது.
 4. திருமண மண்டபத்தில் ஐயர்களை வைத்து ஓம பூஜை நடத்த கூடாது.
 இப்படிபட்ட திருமணங்களுக்கு தவறாமல் சென்று முன்நின்று நடத்தி வைப்பார். அது சமயம் மணமகனுக்கும், மணமகளுக்கும் தனி தனியாக பணம் கொடுத்து வாழ்த்துவார். அடுத்து சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, மிக ஆடம்பரமான முறையில் அதிக பணம் செலவழித்து திருமணம் நடத்துவார்கள் எப்படியாவது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்த திருமணத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு பலமுறை அவரே நேரில் சந்தித்து அழைப்பவர்களுடைய திருமணத்திற்கு வேறு வழி இல்லாமல் சென்று மணமக்களை வாழ்த்தி வருவார்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #39 on: January 28, 2012, 11:06:02 PM »
35.வள்ளல் இரங்கல் விஷயத்திற்கு செல்லும் முறை


மக்கள் திலகம் அவர்கள் தனக்கு வேண்டியவர்கள் சினிமா துறையாக இருந்தாலும் சரி, அரசியல் துறை, அரசாங்க துறையாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் காலத்தில் இவருக்கு அந்த விஷயம் தெரிந்தால், உடனே அங்கு சென்று அவர்களை பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் சொல்லி அவர்களுக்கு ஏதேனும் பணம் உதவி தேவைப்படுமானால் அதை உடனே செய்வார். அடுத்து இரங்கல், இறந்து போனவர் எப்படிபட்டவர், சினிமாவா, அரசியலா, அரசாங்க அதிகாரிகளா என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் அந்த செய்தி தனக்கு கிடைத்த உடனே அங்கு சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லி சற்று நேரம் மவுனமாக இருந்துவிட்டு வருவார்.
 
இது சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைக்காமல் தவறாமல் அந்த காரியத்துக்கு சென்று வருவார். இதே போல் தன்னுடன் மிக நெருங்கி பழகிய தன்னிடம் பணிபுரிந்த தொழிலாளர்கள். பட முதலாளிகள், டைரக்டர்கள் அரசியல்தலைவர்கள், எம்.எல்.ஏ. எம்.பி மந்திரிகள் போன்றவர்களுக்கு இறுதி சடங்கு மயானத்திற்கு சென்று இறுதி சடங்கு முடியும் வரையில் இருந்து வருவார். இது ஒரு தலையாய கடமையாக வைத்து இருந்தார்.

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #40 on: January 28, 2012, 11:07:05 PM »
37.தமிழ்நாட்டில் முதன் முறையாக சத்துணவு கொடுத்த நாயகன்



மக்கள் திலகம் அவர்கள் கும்பகோணத்தில் படிக்கின்ற காலகட்டத்தில், அன்றைய காலம் ஆங்கிலேயர் காலம், பள்ளிக்கூடத்தில் படிக்கிற ஏழைபிள்ளைகளுக்கு அன்றைய காலத்தில் உள்ள படிப்பு ஏட்டு சுவடி, பிறகு சிலைட்டு, மூன்றாவது புத்தங்கள் அப்படி இருக்கிற காலகட்டத்தில் கூட அரசாங்க செலவில் இவைகளை வாங்கி கொடுக்கமாட்டார்கள். பெற்றோர்கள் தான் சொந்த செலவில் வாங்கி கொடுக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் குடிதண்ணீர் பானையை கூட பிள்ளைகள் சொந்த காசில் தான் வாங்க வேண்டும். படிக்கின்ற நேரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கூட இருக்காது. அந்த காலகட்டத்தை நினைத்து? மக்கள் திலகம் அவர்கள் தான் முதல் அமைச்சர் ஆன பிறகு இனிமேல் முன்போல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்ததை போல பள்ளி பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டில் எங்கும் நடக்கக்கூடாது! ஏற்கனவே காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக தமிழ்நாட்டில் இருக்கம் போது கிராமம் தோறும்பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். பிறகு, அரசு பள்ளிக்கூடத்தில் படிக்கம்பிள்ளைகளுக்கு பள்ளி கூட நாட்களில் மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். அதைவிட மிக சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஏழை குழந்தைகளுக்கும் சத்துணவு போட வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தினார்.
 
சில மாதங்களில் இந்த குழந்தைகளுக்கு பள்ளிக்கூட நாட்கள் மட்டும் தான் உணவு கொடுக்கப்படுகிறது என்பதை அறிந்த முதல் அமைச்சர் அவர்கள் ஒருநாள் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து இப்படி கொடுக்கிறீர்கள் எல்லா நாட்களிலும் மதிய சாப்பாடு கொடுக்கவேண்டும் என்ற கேள்வியை கேட்கும்போது அன்றைக்கு கல்வி உயர் அதிகாரி திரு. வெங்கட சுப்பிரமணி அவர்களும், வருவாய் துறை அமைச்சரும், நீதி துறை அமைச்சரும் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து முதல் அமைச்சர் அவர்களிடம் பேசும் போது வாரம் 7 நாட்களும் மதிய சத்துணவு போட்டால் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்ற விளக்கத்தை கூறுகிறார்கள். இதற்கு முதல்வர் அவர்களுடைய பதில் அய்யா இந்த லீவு நாட்கள் என்பது பொதுவாக எல்லோருக்கும் உள்ளதுதான். அந்த லீவு நாட்களில் நாம் சாப்பிடாமல் இருப்பது இல்லை. எந்த செலவுகளையும் குறைத்து கொள்வதும் இல்லை. அரசாங்கத்தின் சாப்பில் சில விழாக்கள் கூட இந்த லீவு நாட்களில்தான் நாம் நடத்தி வருகிறோம். ஆனால் வயிற்றுக்கு பசிக்கு உணவு என்பது எல்லா நாட்களிலும் எல்லோருக்கும் தேவைபட கூடிய ஒரு விஷயம். அதனால், தமிழ் நாடு முழுவதும் ஏழை குழந்தைகளுக்கு மதியத்தில் சத்துணவு சாப்பாடு கொடுக்க வேண்டும் தயவு செய்து அரசாங்கத்தில் இதை விட ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டு இந்த சத்துணவு நல்ல முறையில் தமிழ்நாடெங்கும் செயல்படுத்த வேண்டும். நான் இன்றைக்கு முதல் அமைச்சராக இருந்து கொண்டு ஏழை மக்கள் உடைய குறைகளை அறியாமல் நடந்து கொள்பவன் அல்ல. உங்களை போன்ற மற்ற அதிகாரிகளும் அமைச்சர்களும் எனக்கு உறுதுணையாக இருந்து செயல்படவேண்டும். இப்படி மக்கள் திலகம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்ற ஒரு முக்கியமான விஷயம் இது.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #41 on: January 28, 2012, 11:08:07 PM »
39.இளைய மகனுக்கு ஜோசியம் பார்த்த சத்திய தாய் மக்கள் திலகம் சொன்னவை



மக்கள்திலகம் அவர்கள் பேசும்போது மனிதனுடைய தலை எழுத்தை பற்றி அது எப்படி எந்த எந்த காலகட்டத்தில் எந்த அளவுக்கு என்ன என்ன நடக்கும் கணக்கு போட்டு சொல்லுபவர்களுக்கு தான் ஜோசியர் என்று சொல்லப்படுகிறது இந்த மாதிரி ஜோசியங்களை தன்னுடைய மகன்கள் பலன் எப்படி இருக்கின்றது வரும் காலம், அவன்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அந்த தாய் தெரிந்து கொள்வதில் மிக ஆர்வம் உள்ளவர். இந்த மாதிரியான காலகட்டத்தில் தன்னுடைய இளைய மகன் ராமச்சந்திரனுக்கு ஒரு பிரகாசான காலகட்டத்தில் தன்னுடைய இளைய மகன் ராமச்சந்திரனுக்கு ஒரு பரிகாசமான வாழ்க்கை ஏற்படும். மக்கள் திலகத்தின் ஜாதக பலன் எழுதப்பட்டு இருந்தது. ஜாதகம், ஜோசியம், சாமி கும்பிடுவது அந்த சாமிக்கு சிறப்பு பூஜை செய்து விரதம் இருப்பது. இப்படி எந்த விசயத்தில் ஒரு காலத்தில் ராமச்சந்திரனுக்கும் உண்டு. பிறகு, அவனுடைய வாழ்க்கையில் தாங்கி கொள்ள முடியாத சில சோதனை ஏற்பட்டது. அது தான்முதல் மனைவி தங்கமணி இறந்தது. அடுத்து இரண்டாவது மனைவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு படுக்கையில் நோயாளியாகியது. ஆனால், மக்கள் திலகத்திற்கு ஒரு பெரிய மனதிடத்தையும் நம்பிக்கையும்தான் எப்படியும் தான் வெற்றியை எட்டி பிடிக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு செயல்பட்டார்.
 
1958ல் அவருடைய சொந்த நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கும் போது கால் உடைந்தது. இதைவிட ஒரு விசயம் மக்கள் திலகம் கூட ஒரு படத்தில் நடித்து கொண்டு இருந்த ஒரு பிரபல நடிகை கதாநாயகி நான் உங்களை உண்மையாகவே காதலிக்கிறேன். என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டது. அப்பதான் தன்னுடைய கிரகத்தைபற்றி ராமச்சந்திரன் அவர்கள் நினைக்கிறார். காடாறு மாதம் நாடாறு மாதம் என்பது போல என் வாழ்க்கையில் எவ்வளவோ சம்பவங்களை சந்தித்து நீந்தி கரை ஏறி சற்று நிம்மதியாக இருக்கிறேன். நான் உண்டு என் தொழில் உண்டு என்று இருக்கிறேன். எனக்கு மீண்டும் சோதனையா என்று நினைத்தார் மக்கள் திலகம் அவர்கள். ஆரம்பத்தில் இருந்து கடவுளிடம் எனக்கு புகழை மட்டும் கொடு வேறு எதுவும் வேண்டாம் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தார்.
 
தாயையும் தந்தையும் தெய்வமாய் நினைப்பவர் தந்தை தன்னுடைய மூன்றாவது வயதிலேயே இறந்துவிட்டார். அதன் பிறகு தந்தைக்கு தந்தையாகவும், தாய்க்கு தாயாகவும் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில் என்னையும் என் அண்ணனையும் வளர்த்து வந்த என் தாய் சொல்லை தட்டாமல் மதித்து வந்தோம். எங்களுடைய ஒவ்வொரு வளர்ச்சிகளையும் கண்டு எங்கள் தாய் பெருமை படுவார். தந்தைக்கும், தாய்க்கும் செய்யும் கடமைகளை எங்கள் தாய்க்கு தவறாமல் செய்து வந்தோம். இதோடு எங்களுக்கு குருவாக இருந்தவர்களை வணங்காமல் இருப்பதும் இல்லை. அவர்களுக்கு ஏதாவது நன்றி கடன் செய்ய வேண்டும் என்று நினைக்காமல் இருப்பது இல்லை
.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #42 on: January 28, 2012, 11:09:01 PM »
41.சோதனைகளை சாதனை ஆக்கியவர்



1958ல் அவருடைய சொந்தநாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது கால் உடைந்தது. அது சமயம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமா படங்களில் இனிமேல் நடிக்க முடியாது என்று பேசப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும் போது, மக்கள் திலகம் அவர்கள் கடவுளே இது என்ன சோதனை என்று நினைத்துக்கொண்டார். கடவுளின் ஆசிர்வாதத்தால் மேலும், புகழை அடைந்தார்.
 
1967ல் எம்.ஆர். ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காலத்தில் கடவுளே நான் பிழைப்பேனா மீண்டும் எனக்கு சோதனையா என்று நினைத்தார். கடவுள் முன்னை விட மேலும் நீ புகழ் அடைவாய் என்று சொன்னது போல் எம்.எல்.ஏ.வாக வெளியே வந்தார். 1984ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கொண்டு இருக்கும்போது, மறுபடியும் கடவுளை நினைக்கிறார். கவலைபடாதே உன் ஆயுள் வரை நீ முதல்அமைச்சராக இருந்து மக்களுக்காக சேவை செய்வாய் என்று கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.
 
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்
 
மக்கள் திலகம் அவர்களுக்கு ஏற்பட்ட பெரும் சோதனைகள் முதல் மனைவி தங்கமணி திருமணம் ஆகி ஓரே வருடத்தில் இறந்து போனது. அடுத்து இரண்டாவது திருமணம் சதானந்தவதியை திருமணம் செய்து இரண்டாவது வருடத்தில் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு மக்கள் திலகத்துடன் சேர்ந்து வாழமுடியாமல் போனது. 1957ல் மூன்றாவது முறை திருமணம் செய்து கொள்ள ஏற்பட்ட நிபந்தனை. 1959ல் தன் தாய் இறந்துபோனது. அதேவருடம் தன்னுடைய சொந்த நாடகத்தில் நடித்து கொண்டு இருக்கையில் கால் உடைந்தது. 1967ல் துப்பாக்கியால் சுடப்பட்டது. 1969ல் தன்னுடைய அரசியல் ஆசான் அறிஞர் அண்ணா இறந்தது. 1972ல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறியது. 1973ல் தன்னுடைய சொந்த கட்சி சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரை நிறுத்த ஏற்பட்ட சூழ்நிலை, 1977ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சந்தித்தது. 1980ல் தமிழ்நாட்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. தன்னுடைய அரசாட்சியை கலைத்தது. அதே 1980ல் மீண்டும் தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தலை சந்தித்து தர்மயுத்தத்தில் இறங்கியது. 1984ல் தனக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியத்திற்காக அமெரிக்கா சென்றது.

 
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #43 on: January 28, 2012, 11:10:06 PM »
42.மக்கள் திலகம் நிறுவனத்தில் ஆர்.எம்.வீ.


ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்து கொண்டு இருக்கும் போது, நாம் இந்த மாதிரி சொந்தத்தில் நாடகங்கள் நடத்தனும். பிறகு, சினிமாவில் நடித்து கொண்டு இருக்கும் போது, நாம் சொந்தத்தில் படம் எடுக்கனும். சொந்தத்தில் வீடு கட்டணும், சொந்தமாக ஒரு ஸ்டுடியோ வாங்கனும் என்றெல்லாம் நினைத்தார். அவர் நினைத்தது எல்லாம் நடந்தது. இதில் முதலில் 1953ல் சொந்த நாடக கம்பெனி “எம்.ஜி.ஆர் நாடக மன்றம்”, ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அதே 1953ல் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. இந்த இரண்டு ஸ்தாபனத்திற்கம் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களை நிர்வாக பொருப்பாளராக நியமித்தார். ஆர்.எம்.வீ. அவர்கள் இந்த ஸ்தாபனத்தில் 1953ல் இருந்து முழுப்பொறுப்புடன் நிர்வாகித்து கவனித்து வந்தார். மக்கள் திலகம் அவர்கள் ஆர்.எம்.வீ அவர்களிடம் சிலமுக்கியமான விஷயங்களை கலந்து பேசுவதில் தவறுவதில்லை. ஆர்.எம்.வீ. அவர்கள் கம்பெனி வரவு செலவுகளை மிக திறமையுடன் கவனித்து மக்கள் திலகம் மனதில் இடம்பிடித்தார். ஆர்.எம்.வீ. அவர்கள் சுமார் 10 ஆண்டுகாலம், “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்” நிறுவனத்தில் பொறுப்பாளராக இருந்தார். இவருக்கு சம்பளம் 500 ரூபாய். சில சமயங்களில் மக்கள் திலகம் அவர்களிடமும் திரு. சக்கரபாணி அவர்களிடம் கணக்கு கேட்பார். இந்த கணக்கு விஷயத்தில் ஆர்.எம்.வீ. அவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டார். இவர் நாடகம், சினிமா, அரசியலில் மிகவும் அனுபவமுள்ளவர். இவர் ஒரு சமயம் மக்கள் திலகம் அவர்களிடம் 1963ல் நான் சொந்தத்தில் ஒரு படம் எடுக்கனும் அதில் நீங்களே நடிக்கனும். அந்த படத்திற்கு எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளனுமென்று வேண்டிக்கொண்டார். இதைகேட்ட மக்கள் திலகம் அவர்கள் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.
 
பயந்து பயந்து கேட்ட ஆர்.எம்.வீ. அவர்களுக்கு, உடனே சம்மதம் கிடைத்ததை நினைத்து அளவற்ற ஆனந்தப்பட்டு அவருக்கு வேண்டியர்களிடமெல்லாம் இந்த விஷயத்தை சொல்லி ஒரு மாதத்தில் “சத்யா மூவிஸ்” என்ற பெயரில் சினிமா பட கம்பெனி தயாராகிவிட்டது. இந்த அலுவலகத்தை திறந்து வைக்க மக்கள் திலகத்தை அழைத்தார். அதன்படி அலுவலகத்தில் 1963ல் விளக்கு ஏற்றி வைத்து முதல் படத்திற்கு பூஜையும் நடந்தது. படத்தின் பெயர் “தெய்வத்தாய்”, நியாயம், சத்தியம், கடமை இவைகளை கொள்கை உள்ள ஆர்.எம்.வீ. அவர்களுக்கு இந்த படம் ஒரு சவாலாக இருந்தது. தமிழ் சினிமா துறையில் ஆர்.எம்.வீ. அவர்கள் முழுக்க முழுக்க மக்கள் திலகம் அவர்களுடைய கொள்கையை பின்பற்றுபவர். நல்லவர், இவரை நம்பி இந்த படத்தை தயாரிக்கிறேன். இது நிச்சயமாக எனக்கு வெற்றியையும், நல்ல முன்னேற்றமும் கிடைக்கும் என்று மனதிடத்துடன் அந்த படத்தை “சத்யா மூவிஸ்” தயாரித்தது. ஆர்.எம்.வீ. வெளியிட்டார். அந்த படம் 100 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. தொடர்ந்து மேலும் ஐந்து வெற்றி படங்களை தயாரித்தார். ஆனாலும் தொடர்ந்து மக்கள் திலகம் அவர்களிடமே பொறுப்பில் இருந்தார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ம. கோ. இராமச்சந்திரன் (MGR)
« Reply #44 on: January 28, 2012, 11:11:57 PM »
43.மக்கள் திலகத்துக்கும் நடிகர் திலகத்துக்கும் போட்டி

1950க்கு மேல் தமிழ் சினிமா துறையில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் போட்டி போட்டுகொண்டு நடித்தார்கள். இதே போல் ஒரு காலத்தில் எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு. சின்னப்பாவும் சினிமாத்துறையை ஒரு கலக்கு கலக்கினார்கள். இவர்களுக்கு பிறகு, மக்கள் திலகமும், நடிகர் திலகமும் இந்த இரு திலகமும் சேர்ந்து 1954ல் “கூண்டுகிளி” என்ற படத்தில் நடித்தார்கள். அந்த படம் வெளிவந்த பிறகு இரு திலகங்களுடைய ரசிகர்கள் திருப்தி அடையவில்லை. படமும் சரியாக ஓடவில்லை (100 நாள் ஓடவில்லை) அதில் இருந்து இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை. ஒரு தாயின் கையால் உணவு உண்ட இவர்கள் 1954க்கு பிறகு, மக்கள் திலகம் அவர்கள் அண்ணாவுடைய அன்பையும், நடிகர் திலகம் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவர்களாக இருந்தார்கள். சினிமாவில் இந்த இருவருக்கும் பெரும் அளவில் மதிப்பு இருந்தது. ரசிகர்களும் மிக அதிக அளவில் உருவானார்கள். தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை இப்படி உலக நாடுகளிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டது.
 
இதே போல் அரசியலில் உயர்ந்து நின்றார்கள். இருவருமே தனது இல்லங்களுக்கு தாய் பெயரை சூட்டினார்கள். இவர்கள் இருவருக்கும் ராசியில் சற்று வேறுபாடு இருந்தது. ஆனால், ரசிகர்கள் ஒற்றுமை இல்லாமல் வளர்ந்து வந்தார்கள். சினிமாவில் இந்த ஒரு திலகங்களுக்கும் திரைக்கதைபடி முடிவில் இறக்கும்படி எம்.ஜி.ஆர். “மதுரை வீரன்” படத்தில் மாறுகால் மாறுகை வெட்டப்பட்டது. கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு தூக்குமேடை அமைந்து இருந்தது. இதை எப்படி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று வினவும் போது, படத்தின் கதை அம்சம் இவர்களுடைய நடிப்பு இதுதான் ரசிகர்களுக்கு முக்கியம். கடைசி காட்சியில் தியேட்டருக்குள் இருப்பது இல்லை. எப்படியோ அந்த இரு படமும் மிக அதிக நாள் ஓடி மிக மிக அதிகமான வசூலை கொடுத்தது. இப்படி இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்து வந்தார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் இடை இடையே சிறு சிறு சறுக்ககல்கள் ஏற்பட்டாலும், புகழ்கள் உயர்ந்து கொண்டே வந்தது. உலகம் அறிந்த இவர்கள் அண்ணன் முந்தியும், தம்பி பிந்தியும் இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டார்கள். அவர்களின் புகழ்கள் மட்டும் மறையவில்லை இவர்கள் இருவரும் திரைஉலகுக்கு இரண்டு தூண்களாக இருந்தார்கள்.