Author Topic: அங்கூர் வாட்  (Read 4087 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அங்கூர் வாட்
« on: February 24, 2012, 04:31:54 AM »
அங்கூர் வாட்


அங்கூர் வாட் கோயில், கம்போடியா


அங்கூர் வாட் என்பது, அங்கூர், கம்போடியாவிலுள்ள ஒரு இந்துக் கோயில் தொகுதியாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் கட்டப்பட்டது.வாட் என்பது கோயில் என்பதைக் குறிக்கும் கெமர் மொழிச் சொல்

ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் மத்தியிலுள்ள ஐந்து கோயில்களைச் சூழவுள்ளன. மேற்கிலிருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தினூடாக முதலாவது வெளி மண்டபத்தை அணுகலாம்.
 
முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச் சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களினதும் சுவர்களில் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த terrace இன் மீது அமைந்து ஒன்றுடனொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
 
மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு "நூலகங்கள்" அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன.
 
அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன.
 
கம்போடியாவைக் குறிக்கும் சின்னமாக விளங்கும் இக்கோவிலின் படம் அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம் பெற்றுள்ளது


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அங்கூர் வாட்
« Reply #1 on: February 24, 2012, 04:43:19 AM »
அங்கோர் வாட்
இந்தியக் கலை மரபின் உச்சம்


1.
பார்ப்பதை உணர்ந்து தன்னுள் வைத்துக்கொள்வது வேறு. அதைச் சொல்லால் வடிப்பது வேறு. பார்க்கும் போது உள்ளம் உணர்வதன் பரிமாணங்களும் சுவைகளும் தேட்டங்களும் அளவு சார்ந்தவை அல்ல. அவை அடங்காத ஊழிப் பெரு வெள்ளம் போன்றவை. வார்த்தைகளில் வரும்போது, நுரையிழந்து, திறன் குறைந்து ஒரு சிற்றோடையின் தன்மையைப் பெற்றுவிடுகின்றன. சிற்றோடைகளுக்கும் சில அழகுகள் இருக்கின்றன என்னும் நம்பிக்கையில்தான் இந்தப் பயணக் கட்டுரையை எழுதுகிறேன்.

தமிழனுக்கு என்றுமே அவனுடைய கோவில்களைப் பற்றிய ஒரு பெருமை உண்டு.

தஞ்சை, ஸ்ரீரங்கம், தாராசுரம், மாமல்லபுரம், சிதம்பரம், மதுரை, நெல்லை போன்ற இடங்களுக்கு ஒப்பான அல்லது அவற்றை விஞ்சிய கலைப் படைப்புகள் இந்துக் கலை மரபைப் பொறுத்த வரையில் எங்குமே கிடையாது என்னும் அந்தப் பெருமை நியாயமானதென நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். அது அறியாமையால் வந்தது என்பதை அங்கோர் கோவில்கள் ஒரே நாளில் புரிய வைத்துவிட்டன. அங்கு நான் செலவிட்ட மற்ற நாள்கள் மனிதனின் முயற்சியும் கலை நோக்கும் எல்லாவற்றிக்கும் மேலாக இறைவன் இருக்க இடம் கட்டுவதும் எந்த எல்லைகளைத் தொட முடியும் என்பதை அளவிட முடியுமா என்று சோதிக்கச் செலவிடப்பட்டன. அவை அளக்க முடியாதவையென அறிய எனக்கு நான்கு நாள்கள் தேவைப்பட்டன.

அங்கோர் கோவில்கள் எங்கே இருக்கின்றன?

இது இந்தியர்களில் பலருக்குத் தெரியாது என்பது இந்திய மக்கள் இந்தியக் கலாச்சாரத்தின் மீது வைத்திருக்கும் மதிப்பின் ஓர் அளவீடு. நான் அங்கோர் கோவில்களில் செலவிட்ட நாள்களில் (அந்த நாள்களில் ஆயிரக் கணக்கானவர் அந்தக் கோவில்களைப் பார்க்க வந்திருப்பார்கள்) ஓர் இந்தியனைக்கூட அங்குச் சந்திக்கவில்லை. இந்தப் பக்கம் வருபவர்கள் அனைவரும் பாங்காக் நகரின் மஸாஜ் போன்ற சமாச்சாரங்களில் நேரத்தைச் செலவிட்டுத் திரும்பி விடுகிறார்கள். அங்கோர் வாட் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் வெள்ளை, மஞ்சள் தோல்காரர்கள். கடைசி நாள் அன்று அருவி ஒன்றின் மீது இருக்கும் சிற்பங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது, நால்வரைச் சந்தித்தேன். அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பது பெருமையாக இருந்தது.

அங்கோர் கோவில்கள் கம்போடிய நாட்டில் இருக்கின்றன. சியாம் ரீப் (ஷிவீமீனீ ஸிமீணீஜீ) சயாம், (தாய்லாந்தின் புராதனப் பெயர்) நாட்டை வென்றது என்னும் நகரத்தின் அருகாமையில் இந்தக் கோவில்கள் இருக்கின்றன. சியாம் ரீப் நகருக்குப் பாங்காக் நகரிலிருந்து விமானம் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். இந்தப் பகுதியில் விமானப் போக்குவரத்து நடத்துவது பாங்காக் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் தனி உரிமையில் இருப்பதால் கட்டணம் மிக அதிகம். 30 நிமிடப் பயணத்திற்குப் போக வர 15,000 ரூபாய் வாங்குகிறார்கள். சாலை வழியாகச் சென்றால் 10 மணி நேரமாகும். கம்போடியாப் பகுதியில் பாதை மிகவும் மோசம் என்கிறார்கள். பல்லாவரம் நகராட்சிச் சாலைகளைவிட மோசமாக இருக்க முடியாது என்று நான் சொன்னதை என் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. மோசமாக வைத்துக்கொள்வதற்காகக் கம்போடிய அரசாங்கத்திற்குப் பாங்காக் ஏர்வேய்ஸ் பணம் தருவதாகச் சொல்கிறார்கள்.

கம்போடியாவிற்குச் செல்வதற்கு முன்கூட்டியே விசா வாங்கத் தேவையில்லை. 20 அமெரிக்க டாலர்கள் கொடுத்தால் சியாம் ரீப் விமான நிலையத்திலேயே விசா கிடைக்கிறது.

நான் தங்கிய விடுதி மிக அழகானது. நண்பர் பூமிகுமார், (ப்னாம் பென் நகரில் ஓர் அரசுசாரா நிறுவனம் நடத்தும் மருத்துமனையில் டாக்டராகப் பணிபுரிபவர்; கிருஷ்ணம்மாள்-ஜெகந்நாதன் தம்பதிகளின் புதல்வர்) முன்பே அந்த விடுதியில் எனக்காகப் பதிவுசெய்திருந்தார். கம்போடியாவில், குறிப்பாகப் பயணிகள் செல்லும் இடங்களில் புழங்குவது அமெரிக்க டாலர்கள்தான். கம்போடிய நாணயத்தின் பெயர் ரியெல். ஒரு டாலருக்கு 4200 ரியெல்கள். விடுதி வாடகை ஒரு நாளைக்குச் சுமார் 80,000 ரியல்கள் அல்லது 20 டாலர்கள்



கம்போடிய மக்களின் சமீபகாலத்திய வரலாறு துயரம் மிகுந்தது. இடைவிடாத போர்களால் நிலை குலைந்துபோன நாடு அது. அந்த நாட்டின் மக்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை. சீனர்களும் வியட்நாமியரும் தாய்லாந்தியரும் பிரெஞ்சுக்காரர்களும் தங்களைத் தொடர்ந்து சுரண்டியதாக அவர்கள் நினைக்கிறார்கள். போல் போட்டின் மரண ஆட்சிக்குப் பல லட்சக்கணக்கானோரைக் காவுகொடுத்த நாடு அது. மண்டை ஓடுகளின் குவியல்களை நினைவுச் சின்னமாக வைத்திருக்கும் நாடு கம்போடியாதான். இன்றும் கண்ணிவெடிகளால் இறப்போரின் பட்டியல் நீள்கிறது. மிக ஏழ்மையான நாடு அது. ப்னாம் பென், சியாம் ரீப் போன்ற நகரங்களைத் தவிர மற்ற இடங்களில் மின்சாரம் இல்லை. ஆனாலும் மக்கள் சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள். தங்கள் சுற்றுச் சூழலைத் தூய்மையாக வைக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். வறுமைக்கும் அழுக்கிற்கும் குப்பைக்கும் இருக்கிற இணைபிரியாத் தொடர்பினை தினமும் பொய்யாக்கிக்கொண்டிருப்பவர்கள் கம்போடிய மக்கள்.

சியாம் ரீப் நகரத்தில் நான்கு நாள்களும் எங்களுடனிருந்து எல்லா இடங்களுக்கும் கூட்டிச் சென்றவர் துன் என்ற கார் டிரைவர். அதிர்ந்து பேசாதவர். ஆங்கிலத்தைப் பிரெஞ்சுச் சாயலுடன் பேசுபவர். அவரது தந்தை பள்ளி ஆசிரியர். போல் போட்டால் கொல்லப்பட்டவர். தந்தை கொல்லப்பட்டபோதுதுன் கைக்குழந்தை. அவரது மனைவி ஒரு சிறிய உணவுக் கடை நடத்துகிறார்.




                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அங்கூர் வாட்
« Reply #2 on: February 24, 2012, 04:44:22 AM »
2
கம்போடிய அல்லது க்மெர் மொழிக்கு எந்த இலக்கியப் பாரம்பரியமும் தத்துவ மரபும் கிடையாது. அம்மொழியில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க புத்தகம் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், சுமார் 1200 வருடங்களுக்கு முன்னால் அவர்கள் கோவில்களைக் கட்டத் தொடங்கினார்கள். மகா விஷ்ணுவிற்கும் மகேசுவரருக்கும் புத்தபிரானுக்கும் சுமார் 500 வருடங்கள் செலவிட்டுக் கட்டிய பிரமாண்டமான கோவில்கள் பிற்காலத்தில் கலைச்சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இருந்துவரும் ஸ்தபதிகள் மரபைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இன்று கம்போடியாவில் அந்தக் கலைப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர் யாரும் இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.

19ஆம் நூற்றாண்டில் இந்தக் கோவில்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. கம்போடிய மக்கள் தங்கள் கலைச் சொத்துகளை மறக்கவேயில்லை. அவர்களைக் கேட்டால் தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் போன்ற நாடுகளின் ஊற்றுக்கண் தங்கள் நாட்டில்தான் இருக்கிறது என்கிறார்கள். அதற்கான ஆதாரங்களாகத் தங்கள் நாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான கோவில்களைக் காட்டுகிறார்கள். தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் இந்தப் பிராந்தியத்தில் இருக்கின்றன. காரில் சென்றால் இரண்டு மணி நேரத்தில் கடந்துவிடலாம்.

இந்தக் கோவில்களுக்கு ஊற்றுக்கண் இந்தியக் கலாச்சாரம் என்பதில் ஐயமுமில்லை. பல்லவர்கள் சாயல் இந்தக் கட்டடங்களுக்கு இருப்பதாக வல்லுநர்கள் சிலர் கருதுகிறார்கள். ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிரம்ம வர்மனில் தொடங்கிப் பதினான்காம் நூற்றாண்டில் ஜயவர்மன் பரமேஸ்வரன்வரை எல்லா அரசர்களின் பெயர்களும் வர்மன் என்றுதான் முடிகின்றன. கோவில் கல்வெட்டுகள் சமஸ்கிருதத்திலும் க்மெர் மொழியிலும் இருக்கின்றன. ஆனால், கோவில்களைக் கட்டியவர்களோ சிற்பக் கலைஞர்களோ நமது நாட்டிலிருந்து சென்றவர்கள் அல்ல. அவர்கள் கம்போடியர்களாகத்தான் இருப்பர் என்பது சிற்பங்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

இந்தக் கோவில்களில் செங்கல், மணற்கல் (sணீஸீபீ stஷீஸீமீ), செம்புரைக்கல் (றீணீtமீக்ஷீவீtமீ) போன்றவற்றோடு மரமும் பயன்படுத்தப்பட்டது. தீட்டப்பட்டிருந்த வண்ணங்களும் மரச் சுவடுகளும் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே அழிந்துபோயின.

இந்தக் கோவில்களில் முக்கியமானவை பல என்றாலும் நான்கு கோவில்களைப் பற்றி நான் இந்தப் பத்தியில் பேச இருக்கிறேன். அவை:

1. அங்கோர் வாட் (கிஸீரீளீஷீக்ஷீ கீணீt ) - கோவில் நகரம் (வாட் என்றால் கோவில் என்று பொருள். இந்தப் பெயரைத் தென்கிழக்கு ஆசிய நகரங்கள் எல்லாவற்றிலும் கேட்கலாம்).

2. பேயான் (ஜிலீமீ ஙிணீஹ்ஷீஸீ) - பொருள் தெரியவில்லை (முகம்?)

3. தா ப்ரோம் (ஜிணீ றிக்ஷீஷீலீனீ) - மூதாதைப் பிரம்மன்.

4. பண்டே ஸ்ராய் (ஙிணீஸீtமீணீஹ் ஷிக்ஷீமீவீ) - பெண்களின் கோட்டை.


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அங்கூர் வாட்
« Reply #3 on: February 24, 2012, 04:47:03 AM »

3
சியாம் ரீப் நகரத்தில் ஏற்ற இறக்கங்கள் கிடையாது. தண்ணீரைத் தரையில் விட்டால் விட்ட இடத்திலேயே தேங்கி நிற்கும் என்ற பிரமையைக் கொடுக்கும் சமவெளியில் அது இருக்கிறது. அங்கோர் வாட்டைக் கார் நெருங்கும்போது, மரங்களின் அடர்த்தி அதிகரிக்கின்றது. முதலில் நம்மை அசரவைப்பது 200 மீட்டர்கள் அகலமுள்ள அகழி. தெளிவான தண்ணீர் கரைகளைத் தொட்டு நிற்கிறது. இந்த அகழிக்குப் பின்னால் அங்கோர் கோவில் இருக்கிறது. 200 ஹெக்டேர் பரப்பளவு. நமது ஸ்ரீரங்கம் கோவிலைப் போல மூன்று கோவில்களை உள்ளே அடைத்தாலும் 50 ஏக்கர் நிலம் மிச்சம் இருக்கும். தமிழ்க் கோவில்களின் பிரமாண்டத்தையும் அழகையும் அதைச் சுற்றிவளைத்து நெருக்கும் கடைத்தெருக்கள் குறைப்படுத்திவிடுகின்றன. தமிழன் பெருவெளியைக் கண்டாலே அதை அடைக்க வேண்டும் என்ற வெறிகொள்கிறான். கோவில்கள் பிழைத்த காரணம் அவை புனிதங்களாகக் கருதப் படுவதால்தான். இந்தக் குறைபாடு அங்கோர் வாட்டில் இல்லை. அதனாலேயே அங்குச் செல்லும்போதே வேறோர் உலகத்திற்குச் செல்கிறோம் என்னும் உணர்வு நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.

அங்கோர் வாட் இரண்டாம் சூர்யவர்மனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நமது சோழப் பேரரசு உச்சக்கட்டத்தில் இருந்த காலம் இது. முதல் இரு குலோத்துங்கர்கள் ஆண்ட காலங்களை ஒட்டியது சூரியவர்மன் காலம். தமிழ் அரசர்களைப் போலவே அந்த அரசர்களும் விடாது போர் புரிந்தனர். வென்றால் வெற்றியைக் கொண்டாட அவர்களுக்குத் தெரிந்த வழி கோவில் கட்டுவதுதான். சியாம் ரீப்பை, சுற்றியே நூற்றுக்கணக்கான கோவில்கள் இருப்பதால் அவர்கள் பல போர்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

அங்கோர் வாட் மேரு மலையின் குறியீடு என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள். அகழி மேரு மலையைச் சுற்றியிருக்கும் பெருங்கடலைக் குறிக்கும் என்றால், கோவிலின் மூன்று அடுக்குகள் மேருவைத் தாங்கும் நீர், நிலம், காற்று ஆகிய தளங்கள். மத்திய கோபுரத்தைச் சுற்றி இருக்கும் ஏழு வளையங்கள், மேரு மலையைச் சுற்றியிருக்கும் ஏழு மலைத் தொடர்கள்.

கோவில் கட்டப்பட்டபோது விஷ்ணு கோவிலாக இருந்தது. 14ஆம் நூற்றாண்டில் பௌத்தக் கோவிலாக (தேராவாதம்) மாறி, இன்றளவும் பௌத்தக் கோவிலாகத்தான் இருக்கிறது. கம்போடியாவில் இன்று இந்துக்களே இல்லை. ஆனால், விஷ்ணுவிற்கு மாலையிட்டு வழிபடுகிறார்கள்.

அகழியைக் கடந்து கோவிலின் வெளிச்சுற்றில் காலடி வைக்கும்போது, இலேசான இருள் சூழ்கிறது. நம்மையறியாமல் பேரண்டத்தில் நம் பாதம் படும் உணர்வு ஏற்படுகிறது. சுற்றிலும் அடுக்கிச் சீரமைக்கப்பட்ட, நமக்கு மட்டுமே கேட்கும்படி உறுமும் கற்கள். வெளியே வந்துவிடலாம் என்றால் நம்மை ஈர்த்துப் பிடிக்கும் அப்சரஸ்கள் இரண்டாயிரத்திற்கும் மேல் சுவர்களில் சாய்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியத் தொல்லியலாளர்கள் இந்த அழகிகளைச் சுத்தம் செய்யப் புறப்பட்டுப் பலரைச் சிதைத்துவிட்டதாகப் பேச்சு.

விஷ்ணு கர்ப்பக்கிருஹத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வெளிச்சுற்றில் இருக்கிறார். எட்டுக் கைகள்கொண்ட விஷ்ணு. விரிந்து படர்ந்த மூக்கும் மேல் நோக்கி வளையத் துடிக்கும் இதழ்களும் கொண்ட கம்போடியப் பேரழகர்.

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்

அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துக்

கோள்முதலைத் துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்

தாள் முதலே நங்கட்குச் சார்வு

என்று பேயாழ்வார் பாடிய அட்ட புயகரத்தான். கோள்முதலைத் துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தையும் மற்றைய ஆயுதங்களையும் இவரது கைகளில் காணோம்





வெளிச்சுற்றின் வாசலில் இருந்து அங்கோர் கோவிலைப் பார்ப்பது சொல்லொண்ணா அனுபவம். இங்கிருந்து கோவில்வரை கிட்டத்தட்ட அரைக் கிலோ மீட்டருக்கு நேரான பாதை. பாதையின் இரு மருங்கிலும் சிறிது இடைவெளிவிட்டு நாகங்களின் தலைகள். பாதையின் முடிவில் படிகள் மத்தியக் கோபுரத்திற்கு அழைத்துச் செல்கின்றன. மூன்று தட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். மூன்றாம் தட்டில் கோபுரங்கள் வான் முட்ட நிற்கின்றன. ஐந்து கோபுரங்கள். மேருவின் ஐந்து சிகரங்களை நினைவுறுத்துபவை. மத்தியில் இருக்கும் மகா கோபுரத்தின் தளத்திற்குச் செல்லவும் படிகள் இருக்கின்றன. படிகள் என்பதைவிட அவற்றைக் கல்லால் செய்த ஏணி என்று சொல்ல வேண்டும். அவ்வளவு செங்குத்தான படிகள். இந்தப் படிகளில் ஏறிச் சென்றால் வரும் சுற்றின் நடுவிலிருந்துதான் விஷ்ணு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

அங்கோர் வாட்டின் பேரதிசயம் இந்தக் கோபுரங்கள் அல்ல.

அமெரிக்க மூதாட்டி ஒருவர் தான் இறந்ததும் தனது சாம்பல் அங்கோர் வாட்டில் தூவப்பட வேண்டும் என்று விருப்பப்பட்டிருக்கிறார். அவ்வாறே சாம்பல் தூவப்பட்டிருக்கிறது. இவ்வாறு இந்த இடத்திற்கு வந்தவரை மீண்டும் மீண்டும் வரத் தூண்டுவது மூன்றாம் சுற்றிலிருக்கும் புடைப்புச் சிற்பங்கள்தாம். இவை 600 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் கொண்ட சிற்பங்கள். இந்தச் சிற்பங்களை வடித்தது மட்டும் அல்ல, வடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததே ஒரு பேரதிசயம்.

இந்தச் சுற்றின் மேற்குப் பகுதியில் குருக்ஷேத்திரப் போர் செதுக்கப்பட்டிருக்கிறது. சிற்பத்தின் இரு பக்கங்களிலிருந்தும் வீரர்கள் சீராக, வாத்தியங்கள் முழங்க அணிவகுத்து வருகிறார்கள். தலைவர்கள் தேர்களிலும் யானைகளிலும் வருகிறார்கள். நடுப்பகுதியை நெருங்க நெருங்கப் போரின் உக்கிரம் முற்றுகிறது. ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்கிறார்கள். பீஷ்ம பிதாமகரைப் பார்க்கிறோம்-அம்புப்படுக்கையில். குடுமி வைத்தத் துரோணர் அம்பு பூட்டிய வில்லோடு காட்சி அளிக்கிறார். கர்ணன் தனது தேர்ச்சக்கரத்தைத் தூக்க முயல்கிறான். அர்ஜுனன் அவன் மீது அம்பு எய்கிறான். அவனது தேரோட்டி நான்கு கரங்கள்கொண்ட கண்ணன்.

கிழக்குச் சுற்றில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தையும் கவர்ந்த ஒரு புராணக் கதை செதுக்கப்பட்டிருக்கிறது. சமுத்திரத்தைக் கடைந்து அமுதம் எடுத்ததைச் சொல்லும் அந்தப் பாகவதப் புராணக் கதை. இந்த நாடுகளில் பல இடங்களில் பல வடிவங்களில் தரப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பாங்காக் நகரின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இந்தக் கதை மிக அழகிய, வண்ணமயமான சிலைகளின் (மரம் என்றுதான் நினைக்கிறேன்) மூலம் சொல்லப்படுவதைப் பார்க்கலாம். இங்குக் கல்லில் சொல்லப்படுகிறது. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் மேற்பார்வையில் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். 50 மீட்டர் நீளம் கொண்ட இந்தச் சிற்பத்தின் மையக் கோட்டை வாசுகி ஆக்கிரமித்துக்கொள்கிறது. விஷம் கக்கும் தலைப் பக்கம் அசுரர்கள். வால் பக்கம் தேவர்கள். கடல்வண்ணனே ஆமையாகி மத்திற்கு அடித்தளமாக இருக்கிறான். கடலில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் அங்கும் இங்குமாக அல்லாடுகின்றன. சில துண்டாக்கப்படுகின்றன. அசுரர்களின் பக்கபலமாக ராவணேசுவரன் தனது பத்துத் தலைகளோடு நிற்கிறான். அனுமன் தேவர்களுக்குத் துணை செய்கிறான். இது கம்போடிய இடைச் செருகல்





கண்ணன் பாணாசுரனோடு போர் புரிவது, சூர்யவர்மனின் பவனி, நரகத்தில் நமக்குக் கிடைக்கும் தண்டனைகள் போன்றவை இந்தச் சுற்றின் மற்ற பகுதிகளில் வடிக்கப்பட்டிருந்தாலும், என்னை மிகவும் கவர்ந்த சிற்பங்கள் ராம, ராவண யுத்தத்தைச் சித்தரிப்பவைதான். இந்தச் சிற்பங்களில் ராமன், தாவிப் பாயும் அனுமன் தோளில் ஒரு கையில் வில்லும் ஒரு கையில் அம்பும் வைத்துக்கொண்டு, அடுத்த கணம் அவனே ராவணன்மீது பாய்ந்துவிடுவான் போன்ற அவசரம் இந்தச் சிற்பத்தில் தெரிகிறது. ராவணன் பேய்த்தேர் ஏறிப் போர் புரிகிறான். ராவணனின் பத்துத் தலைகள் நமது ஊர் சிலைகளில் இருப்பதுபோலப் பக்க வாட்டில் இல்லை. அவை மூன்று அடுக்குகளில் 5:4:1 என்று பகுக்கப்பட்டு இருக்கின்றன என நினைக்கிறேன். நமக்குத் தெரிவது ஏழு தலைகள்தான். ஆகப் பெரிய மூன்று தலைகள் முதல் அடுக்கில். மத்தியில் மூன்று. மகுடத்தில் ஒன்று. ராமனும் ராவணனும் ஒரு புறம் போர் புரிந்தாலும் நம்மைக் கவருவது குரங்குகள்தாம். அவை அசுரர்களுடன் பல உத்திகளில் போர் புரிகின்றன. ஒரு குரங்கு சிங்க முகம்கொண்ட அசுரனின் வாலைக் கடித்துத் துண்டாக்க முயல்கிறது. அங்கதன் ஒரு யானையின் தந்தங்களைப் பற்றி அதைச் சுழற்றி அடிக்கிறான். நீலன் இரண்டு சிங்கங்கள் பூட்டிய தேர்களைச் சமாளிக்கிறான்.

போர் புரிந்தால்தான் வெற்றியை அடைய முடியும் என்பது இந்தச் சுற்றுக்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருக்கிறது. மரணம் இங்கு ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லை. ஆனால், மரணத்தால் கவியும் சோகத்தை ஒரு சிற்பி உட்கோபுரச் சுவர் ஒன்றில் வடித்திருக்கிறான். வாலியின் உடலை வைத்துக்கொண்டு மற்ற குரங்குகள் சோகம் காப்பதுபோல வடிக்கப்பட்ட இந்தச் சிற்பம் ஈடு இணையற்ற ஒரு கலைப் படைப்பு
.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அங்கூர் வாட்
« Reply #4 on: February 24, 2012, 04:48:47 AM »
4
அங்கோர் தோம்-பெரு நகரம்-அங்கோர் வாட்டிலிருந்து சிறிது தொலைவில்தான் இருக்கிறது. இதற்குள் குறைந்தது 20 ஸ்ரீரங்கம் கோவில்களை அடைக்கலாம். நடக்க நடக்க முடிவடையாத பாதைகள் கொண்ட இந்த நகரம் கம்போடியாவின் மிகப் புகழ்பெற்ற ஏழாம் ஜெயவர்மனால் (1181-1220) நிர்மாணிக்கப்பட்டது. இந்த வர்மன் நமது ராஜராஜச் சோழனுக்கு ஈடானவன். சயாம் சம்பா (வியட்னாம்) நாடுகளுடன் போர் புரிந்து அவர்களை வெற்றி கண்டவன்.

உலகிலேயே மிகப் புதிரான கோவில் இவன் கட்டியதுதான்.

பேயான் என அழைக்கப்படும் இந்தக் கோவிலுக்குள் நுழைந்தால் நம்மை வரவேற்பது பிரமாண்டமான முகக் கோபுரங்கள். இரண்டு முகங்களிலிருந்து பல முகங்கள் கொண்ட கோபுர அடுக்குகளால் அமைக்கப்பட்டிருந்தது இந்தக் கோவில். ஐம்பதிற்கும் மேற்பட்ட முகக் கோபுரங்கள் இருந்தன என்று சொல்கிறார்கள். இன்று சுமார் நாற்பது கோபுரங்கள் எஞ்சியிருக்கின்றன.

இந்த முகங்கள் யாரைக் குறிக்கின்றன?




ஜெயவர்மன் வணங்கிய லோகேஸ்வர போதிசத்துவரைக் குறிக்கின்றன என்பதில் வல்லுநர்களுக்கிடையே வேறுபாடு இல்லை. ஆனால், இந்த முகங்கள் ஜெயவர்மனையும் குறிக்கின்றன என்று பலர் கருதுகிறார்கள். அவனது விரிந்து பரவியிருந்த புகழையும் அவனிடமிருந்து சிதறிய சக்தியையும் இந்த முகங்கள் குறிக்கின்றன என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தக் கோவிலிற்குள் முதன்முறையாக நுழைபவர்கள் ஒரு சமன்பாடோ டு இருக்க முடியாது. இந்த முகங்கள் நாம் எங்குச் சென்றாலும் நம்மைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. முகங்களில் படிந்திருக்கும் முறுவல்கள் நீ நாளை மறைந்துவிடுவாய். நாங்கள் அழியாதவர்கள் என்று கூறுகின்றனவோ என்னும் சந்தேகம் நம்மில் எழுகிறது.

எனக்கு ஷெல்லியின் ஓஸிமாண்டியாஸ் நினைவிற்கு வந்தது.

'என் பெயர் ஓஸிமாண்டியாஸ், அரசர்களின் அரசன்.

வலுமிக்கவர்களே, என் படைப்புகளைப் பாருங்கள்.

(நம்மால் இவ்வாறு படைக்க முடியாதென்று) வருந்துங்கள்.'

ஜெயவர்மனின் படைப்புகளைப் போன்று மற்றொரு படைப்பு வருவதென்பது நடக்கவே நடக்காது. ஆனால், ஓஸிமாண்டியாஸ் படைத்தவற்றைக் காலம் கொண்டு போய்விட்டது. ஜெயவர்மனின் படைப்புகள் காலத்தோடு விடாது போர் புரிந்துகொண்டிருக்கின்றன. காலம் உள்ளவரை நாமும் இருப்போம் என்னும் உறுதியோடு அவை முறுவல் செய்துகொண்டிருக்கின்றன.

காலத்தோடும் இயற்கையோடும் விடாது போர் புரிந்துகொண்டிருக்கும் மற்றொரு கோவில் தா ப்ரோம்- மூதாதைப் பிரமன். இது புத்த பிக்ஷுக்களின் பள்ளியாகவும் செயல்பட்டது எனக் கூறுகிறார்கள். இன்று ராட்சத மரங்கள் கோவிலுள் நுழைய முயல்கின்றன. பல மண்டபங்களையும் சுற்றுகளையும் அவை இறுக்கி நெரித்துக்கொண்டிருக்கின்றன. Silk cotton (இலவம்) strangling fig(நெரிக்கும் அத்தி) மரங்கள் கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளாக இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கின்றன. இதனால் இந்தக் கோவிலில் மரம் கட்டடத்திலிருந்து வருகிறதா அல்லது கட்டடம் மரத்திலிருந்து பிறந்ததா என அறியமுடியாதபடி ஒரு மாயை நிலவுகிறது. வேர்களையே மாலைகளாகக்கொண்ட இந்தக் கோவில் உலகெங்கிலும் தேடினாலும் கிடைக்காத ஒன்று.




                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அங்கூர் வாட்
« Reply #5 on: February 24, 2012, 04:51:23 AM »

5

பிரமாண்டங்களுக்குத்தான் இந்த இடம் பேர் பெற்றது என்று நாம் தவறாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காவோ என்னவோ நுணுக்கமான வேலைப்பாடு செய்த நகைகள்போல மிளிரும் சில சிறிய கோவில்கள் கம்போடியாவில் இருக்கின்றன. இவற்றில் மிகப் புகழ்பெற்றது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பண்டே ஸ்ராய்- பெண்களின் கோட்டை என்னும் பெயருடைய கோவில். இந்தக் கோவில் நமது பார்த்தசாரதி கோவில் சுற்றளவுதான் இருக்கும். அதைவிடக் குறைவாகக்கூட இருக்கலாம். ஆனால், இந்தக் கோவிலில் பல மணிநேரம் செலவிட்டாலும் அதன் அழகு முழுவதையும் நம்மால் அளவிட முடியாது. நான் சென்ற அன்று மெலிதாகத் தூறிக்கொண்டிருந்தது. சிற்பங்கள் நனைந்து தண்ணீரில் ஜொலித்தன. திசை பிளந்து அண்டம் கீறச் சிரித்த செங்கட் சீயம் இரணியனின் நெஞ்சைப் பிளப்பதின் உக்கிரத்தை (இங்கு வயிற்றைக் கிழிப்பதில்லை) இந்தச் சிறிய சிற்பத்தில் அதை வடித்த கலைஞன் கொண்டு வந்துவிட்டான். உமா சகித மகேசுவரை இரண்டு இடங்களில் சந்தித்தேன். ஓரிடத்தில் அமைதியாகத் தோடுடைய செவியனாக விடைமீது உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பார்வதி (இவரது தலையைக் காணோம்) சிவபிரானது இடக்கையை இறுக்கமாகப் பிடித்து அருகே அமர்ந்திருக்கிறார். மற்றொரு மகேசுவரர் உமையின் ஆலிங்கனத்திற்கு அடிமையானவர். இந்தச் சிற்பத்தில் உமை ஈசனை நெஞ்சாரத் தழுவிக்கொண்டிருக்கிறார், பயத்தில். காரணம் அவர்கள் காலடியில் கிடக்கிறது. ராவணேசுவரன் அவர்கள் இருப்பிடமான கைலாய மலையைத் தூக்க முயன்றுகொண்டிருக்கிறான். முன் சொன்னதுபோல மூன்றடுக்குத் தலை கொண்ட ராவணன். சிவபிரான் தனது வலது கால் கட்டை விரலால் மலையை அழுத்துவதால் விழிகள் பிதுங்க மேலே பார்க்கிறான். இந்த நடப்பையும் அனுமன் பார்த்துக்கொண்டிருக்கிறான். முனிவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ராவணனைச் சுற்றிப் பல மிருகங்கள்-உண்மையானவை, கலைஞனின் கற்பனையில் பிறந்தவை- அங்குமிங்கும் சிதறி ஓடுகின்றன.

இந்தச் சிற்பத்தில் இருக்கும் கலவரம் ராமன் வாலி வதம் செய்வதைக் காட்டும் சிற்பத்தில் இல்லை. ஒரு அறுவை சிகிச்சைபோல வதம் நடக்க இருப்பதை அது காட்டுகிறது. வாலியும் சுக்ரீவனும் உக்கிரமாகச் சண்டையிடுவதை வலப்புறத்திலிருந்து மூன்று குரங்குகளும் (அச்சத்தில் கலங்கிப்போனவர்கள்) மேலிருந்து இரண்டு தேவர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இடப்புறத்தில் ராமன் வில்லைப் பூட்டி அம்பை விடும் நிலையில் இருக்கிறான். இலக்குவன் கீழே உட்கார்ந்து ராமனுக்கு வாலி யார் என்பதைக் காட்டுகிறான். மற்றொரு கை அம்புக் கூட்டைப் பிடித்துக்கொண்டிருக்கிறது.




இந்தக் கோவிலுக்கு மற்றொரு புகழ் உண்டு. இந்தக் கோவில் கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே (1914இல்) இதனுடைய மதிப்பு கலைத் திருடர்களுக்குத் தெரிந்துவிட்டது. பல அரிய சிற்பங்கள் இந்தக் கோவிலிலிருந்து சூறையாடப்பட்டன. இந்தத் திருடர்களில் முக்கியமான திருடரின் பெயர் - ஆந்த்ரே மால்ரோ. பின்னால் பிரெஞ்சு அரசாங்கத்தில் கலாச்சார மந்திரியாக இருந்தவர். Man's Estate மற்றும் Anti-Memoirs போன்ற புத்தகங்களை எழுதிப் புகழ்பெற்றவர்.

அங்கோர் சிற்பங்களை வடித்தவர்கள் இதிகாசம், புராணங்களோடு நின்றுவிடவில்லை. பல இடங்களில் குறிப்பாக அங்கோர் தாம் கோவில்களில் அன்றாட வாழ்க்கையையும் சிற்பங்களில் வடித்திருக்கிறார்கள். இத்தாலி மறுமலர்ச்சிக் காலத்தில் பல கலைஞர்களைப் பெற்றதுபோலக் கம்போடியாவும் இந்தக் கோவில்கள் கட்டப்பட்ட காலத்தில் பல உயரிய கலைஞர்களைப் பெற்றிருக்கிறது. அவர்களின் பெயர்கள்தாம் தெரியவில்லை.


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அங்கூர் வாட்
« Reply #6 on: February 24, 2012, 04:52:39 AM »
6

அங்கோர் கோவில்களைப் பற்றிய ஓர் அருமையான நூலை எழுதிய மாரிஸ் க்ளைஸ் என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் தன்னுடைய A Guide to Angkor Monuments என்னும் புத்தகத்தில் 13ஆம் நூற்றாண்டில் அங்கோர் சென்று வந்த சீன யாத்திரிகன் கூறியிருப்பதைப் பதிவுசெய்கிறார்:

இந்த வரிகளுக்கு மொழிபெயர்ப்புத் தேவையில்லை. அங்கோர் அரசர்கள் நடந்துகொண்டவிதம் மற்றைய அரசர்கள் போலத்தான் என்பதை இந்த வரிகள் தெளிவாக்குகின்றன. அதே சீன யாத்திரீகர் அரண்மனையில் வேலை பார்த்த பெண்கள் இரண்டாயிரத்திற்கும் மேல் என்று கூறுகிறார். அரண்மனைக்குள் அவர்கள் மட்டுந்தான் நுழையலாம். கோவிலில் பொது மக்கள் வழிபட முடியாது. இந்தக் கோவில்கள் அரசர்களுக்காக, அவர்களது பெயர்களை அமரத்துவம் அடையச் செய்வதற்காகக் கட்டப்பட்டவை. வெளிப் பிரகாரங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. புடைச் சிற்பங்களைக் காலங்காலமாகப் பொதுமக்கள் பார்த்துவந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க ஆறுதலாக இருக்கிறது.

அரசர்கள் இந்து மதத்தையும் பௌத்தத்தையும் மாறிமாறி ஆதரித்துவந்தாலும் இரண்டு மதங்களுக்கு இடையே புகைச்சல் இல்லாமல் இருந்ததில்லை. சில சிலை உடைப்புகள் நடந்ததற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

பல நூற்றாண்டுகளாகப் பேணப்பட்டுவந்த இக்கலை மரபு எப்படி மறைந்துபோனது?



இந்தக் கேள்விக்கு இன்றுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. ஏழாம் ஜெயவர்மனுக்குப் பிறகு கம்போடியா அயல் தேசங்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. மக்கள் தளர்வடைந்துபோனதால், கலைத் திறனை இழந்தனர் எனச் சிலர் கருதுகிறார்கள். ஐந்நூறு ஆண்டுகள் விடாமல் போர் புரிந்து போர்களுக்கு இடையே கோவில்கள் கட்டிக்கொண்டி ருந்தால் தளர்ச்சி நிச்சயம் வரும்.

சமீபத்தில் வானிலிருந்து நாஸா எடுத்த புகைப் படங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அங்கோர் அழிந்தது, அந்த நகரம் கட்டுக்கடங்காமல் பெருகியதாலேயே என்கிறார்கள். புராதன அங்கோர் நகரம் 3000 சதுரக் கிலோமீட்டர் பரப்பில் இன்றைய லாஸ் ஏஞ்சல்ஸ் அளவு இருந்ததாம். குடிக்கத் தண்ணீர் இல்லாதது, காடுகள் அழிக்கப்பட்டது மற்றும் விளை நிலங்கள் ஊட்டச்சத்துகளை இழந்தது இவையே அங்கோர் நகரம் அழியக் காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள். நகருக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காக ஒரே ஒரு கால்வாய் இருந்ததாம். அந்தக் கால்வாய் உடைபட்டதும் அதைச் செப்பனிட முடியாமல் நகரத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டதாம்

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அங்கூர் வாட்
« Reply #7 on: February 24, 2012, 04:53:30 AM »
7

அங்கோர் அரண்மனையில் வேலை பார்த்த பெண்கள் மேல் நெற்றியில் குங்குமம் போன்ற ஏதோ ஒன்றை இட்டுக்கொள்வார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால், தற்காலக் கம்போடியப் பெண்களும் ஆண்களும் குங்குமத்தை அதிசயமாகப் பார்க்கிறார்கள். என் மனைவி நெற்றியில் இரத்தம் எனக் கவலைப்பட்டு உதவ வந்த இரு கம்போடிய இளைஞர்களிடம் அது இரத்தம் அல்ல என்று சொல்லியனுப்ப வேண்டி வந்தது. கம்போடியப் பெண்கள் புடவை, வளையல், தாலி, காதுத் தோடு போன்றவற்றைத் தொட்டுத் தொட்டு மகிழ்கிறார்கள். பொட்டு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. தொலைக் காட்சியில் இந்திப் படங்களைத் தவறாமல் பார்க்கிறார்கள்.

சியாம் ரீப்பில் பேரம் பேசுவது மிக எளிது. ஓர் இளநீர் ஒரு டாலர் என்று சொல்பவரிடம் இரண்டு விரல்களைக் காட்டினாலே ஒரு டாலருக்கு இரண்டு இளநீர்கள் தருகிறார்கள். மூன்று விரல்களைக் காட்டினால் மூன்று தருகிறார்கள். நாம் கேட்கும் விலை அவர்களுக்கு ஒத்துவரவில்லை என்றால் ஒரு புன்னகை செய்துவிட்டு விலகிப்போய்விடுகிறார்கள். ஆங்கிலம் பேசுவது அழகாக இருக்கிறது. பிரெஞ்சு கலந்த ஆங்கிலம். இலக்கணம் கலக்காத ஆங்கிலம். எல்லாமே அவர்களுக்கு நிகழ்காலந்தான். உதாரணத்திற்கு என் கார் டிரைவர் தன் தந்தை இறந்ததைச் சொன்னவிதம்; Pol Pot kill my father. Father die. I am baby. S எழுத்தை விழுங்குவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். Has என்பது Hap ஆகிவிடுகிறது.

கம்போடியா ஏழை நாடு. இன்றும் பல ஆயிரம் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். பலர் இறக்கவும் செய்கிறார்கள். பீட் ரைக்னர் என்னும் சுவிஸ் டாக்டர் ஒருவர் குழந்தைகளுக்காக மருத்துவ மனைகள் ப்னாம் பென், சியாம் ரீப் போன்ற இடங்களில் கட்டியிருக்கிறார். சிகிச்சை முற்றிலும் இலவசம். மானுடம் வெல்லலாம் என்னும் நம்பிக்கையைத் தரும் மிகச் சிலருள் இவரும் ஒருவர்.

சைவ உணவுக்காரர்களுக்குக் கம்போடியா துர்ச்சொப்பனங்களை வரவழைக்கும். வறுத்த சிலந்தி, உலர்ந்த சுவர்க்கோழி போன்ற அரிய உண்ணும் பொருள்கள் கிடைக்கும் இடம் அது. நானும் என் மனைவியும் இந்திய உணவு விடுதி ஏதாவது இருக்காதா எனத் தேடி அலைந்து ஒன்றைக் கண்டுபிடித்தோம். பெயர்தான் மஸாஜ் பார்லர் பெயர் மாதிரி இருந்தது. 'காமசூத்ரா' என்பது அதன் பெயர். என் மனைவிக்கு அங்குச் சாப்பிட முதலில் பயமாக இருந்தது. சாப்பாடு சாத்வீகம். மேனேஜர் அதைவிடச் சாத்வீகமானவர். பெயர் கார்த்திகேயன். திண்டிவனம் பக்கம் என்றார். கம்போடியப் பெண் ஒருத்தியை மணந்து அங்கேயே தங்கிவிட்டார். தமிழர்கள் வருவார்களா எனக் கேட்டேன். மாதத்திற்கு இரண்டு, மூன்று பேர்கள் வருவார்கள் என்றார். கூடவே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து என்பதையும் சேர்த்துக்கொண்டார்.

இரவு 'காமசூத்ரா'விற்கு அருகில் உள்ள பிரெஞ்சு உணவு விடுதியில் சாப்பிட்டோ ம். நான் பார்த்ததிலேயே அழகான கம்போடியப் பெண் ஒருத்தி உணவைக் கொண்டுவந்தாள். எனது மனைவியும் அவளும் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். மெதுவாகச் சம்பளம் எவ்வளவு கிடைக்கிறது என்று கேட்டேன். ஒரு நாளைக்கு ஒரு டாலர் 50 சென்ட் என்றாள். பன்னிரெண்டு மணிநேர வேலைக்குச் சுமார் அறுபது ரூபாய். இரவு எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வீட்டிற்கு நடந்துதான் செல்கிறாள். பயமாக இல்லையா என்று கேட்டேன். புன்னகைத்தாள். இதோ இவன் துணைக்கு வருவான் என்றாள். பக்கத்தில் அவள்கூட வேலை செய்யும் ஒரு இளைஞன். அவன் சிரித்தான். சிலைகளில் சிரிக்கும் ஜெயவர்மன்.

அவள் அப்சரஸ்.

கம்போடியக் கலைச் சின்னங்களைக் கம்போடியக் கலைஞர்கள்தான் படைத்திருக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையை எழுதத் துணை செய்த நூல்கள்

1. A Guide to Cambodian Monuments - Maurice Glaize

2. Ancient Angkor - Michael Freeman & Claude Jacques

3. Lonely Planets Guide to Cambodia




நிழல் படங்களை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்

« Last Edit: February 24, 2012, 04:56:58 AM by Global Angel »