Author Topic: கண்ணாடியிழை  (Read 3046 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கண்ணாடியிழை
« on: May 17, 2012, 02:46:04 AM »

கண்ணாடியிழை



கண்ணாடியிழை கொத்து

கண்ணாடியிழை (fibreglass) என்பது கண்ணாடியின் சிறு இழைகளால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள். இது பல பன்னுரு தயாரிப்புகளுக்கு வலுவூட்டும் பொருளாக பயன்படுகிறது; இதனால் வலுவூட்டப் பட்ட கலப்புரு பொருட்களை கண்ணாடியிழை வலுவூட்டு நெகிழி என்று (பிரபலமாக கண்ணாடியிழை என்று) கூறப்படுகிறது. கண்ணாடி தயாரிப்பாளர்கள் காலகாலமாக கண்ணாடியிழைகளை தயாரித்துவந்தாலும், நுண்ணிய இயந்திரங்கள் வந்த பின்னரே பெரிய அளவில் கண்ணாடியிழை தயாரிப்புகள் தயாரிக்கும் நிலை சாத்திய மாயிற்று. 1893 இல், எட்வர்ட் ட்ரும்மொந்து லிப்பி என்பவர் உலகத்தின் கொலம்பியர் எக்ஸ்பொசிசன் என்ற நிறுவனத்தில் பட்டிழைகளுடன் கண்ணாடியிழைகளை சேர்த்து ஒரு ஆடை தயாரித்தார். இந்த ஆடையை முதலில் உடுத்தியவர் பிரபல மேடை நடிகை சியார்சியா கெவான்.
 
இப்பொழுது பொதுவாக கண்ணாடியிழை என்று அழைக்கப்படும் பொருளை உண்மையில் 1938 ஆம் ஆண்டு ஓவென்சு கார்னிங்கில் உள்ள ரசல் கேம்சு சிலைடர் என்பவர் ஒரு காப்பு பொருளாக பயன்படுத்தினார். இது ஆங்கிலத்தில் பைபர்கிளாசு என்ற வணிகப் பெயரில் வர்த்தகத்தில் இருந்தது; இது பின்னர் வணிகக்குறியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சற்று இதே போலவே, ஆனால் மிக விலை உயர்ந்த தொழிநுட்பம் அது மிக வலிமையாகவும், எடை குறைவாகவும் உள்ள பயன்பாடுகளுக்கு தேவைப்படும் நிலையில் கார்பன் இழை பயன்படும்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கண்ணாடியிழை
« Reply #1 on: May 17, 2012, 02:47:02 AM »
இழை உருவாக்கம்
 
கண்ணாடியிழையானது சிறு கண்ணாடி நார்களை பல நுண்ணிய நாரிழைகளைக் கொண்டு நெய்யும் பொழுது உருவாகிறது. கண்ணாடியைக் காய்ச்சி சிறு நார்களாக ஆக்கும் தொழில்நுட்பத்தை மிலினியா என்று அழைத்தனர்; எனினும் ஆடை தயாரிப்பில் தற்போதுதான் கண்ணாடியிழை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு வரை, எல்லா கண்ணாடியிழைகளும் சிறு அளவுடைய நார்களாக உருவாக்கப்பட்டது. முதன்முதலில் வியாபார ரீதியாக கண்ணாடியிழை தயாரிப்பு 1936 ல் தொடங்கப்பட்டது. 1938 ல் ஓவென்ஸ்-இல்லினோயிஸ் கிளாஸ் கம்பெனி மற்றும் கார்னிங் கிளாஸ் வொர்க்ஸ் இணைந்து ஓவென்ஸ்-கார்னிங் பைபர் கிளாஸ் கார்ப்பொரேசன் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கினர். இந்த புதிய நிறுவனம் தொடர் நுண்ணிழை கண்ணாடியிழை என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. இன்றும் ஓவன்ஸ்-கார்னிங் கண்ணாடியிழை தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது

கண்ணாடியிழை வகைகளில் பெரும்பாலும் பயன்பத்துவது E-glass (alumino-borosilicate glass with less than 1 wt% alkali oxides, குறிப்பாக இழை வலுவூட்டு நெகிழிகளில் பயன்படும்), but als A-glass (alkali-lime glass with little or no boron oxide), E-CR-glass (alumino-lime silicate with less than 1 wt% alkali oxides, அதிக அமில எதிர்ப்பு தன்மை கொண்டவை ), C-glass (alkali-lime glass with high boron oxide content, used,e.g., for glass staple fibers), D-glass (borosilicate glass with high dielectric constant), R-glass (alumino silicate glass without MgO and CaO அதிக இயந்திர தேவைகளுக்கு பயன்படுபவை), and S-glass (alumino silicate glass CaO இல்லாமல் ஆனால் MgO சேர்த்தும் அதீத வலிமை உள்ளவை ).[
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கண்ணாடியிழை
« Reply #2 on: May 17, 2012, 02:48:39 AM »
வேதியியல்
 
கண்ணாடியிழைகளின் அடிப்படை என்னவென்றால் அது சிலிக்கா SiO2.இது தூய நிலையில் பன்னுருவாக இருக்கும் , (SiO2)n.இதற்கு உருகுதன்மைகள் கிடையாது ஆனால் மக்கும் நிலையில் இது மென்மையாக மாறும் .பெரும்பாலான மூலக்கூறுகள் தாராளமாகவே நகர்கின்றன .பின் கண்ணாடியை வேகமாக குளிரூட்டினால் , அவை சீரான அணுஅமைப்பை உருவாக்குவது இல்லை .
 
 தன்மைகள்
 
கண்ணாடியிழைகள் அதன் மேற்பரப்பிற்கும் எடைக்கும் உள்ள விகிதம் மிக அதிகமாக உள்ளதினால் பயன்படுத்தபடுகிறது .எப்படியானாலும் , இதன் மேற்பரப்பு அதிகரிப்பதினால் இது வேதியியல் தாக்கத்திற்கு உள்ளாகிறது .இது காற்றை அதற்குள் செல்வதை தடுப்பதினால் , கண்ணாடியிழை பொருட்களை 0.05 W/(m.K) வெப்ப கடத்துதிறன் கொண்ட நல்ல வெப்ப காப்பு பொருளாக இருக்கிறது.
 

கண்ணாடி வலுவூட்டு நெகிழி
 
கண்ணாடி வலுவூட்டு நெகிழி (க.வ.நெ) என்பது சிறு கன்னடியிழைகளால் வலுவூட்டப்பட்ட நெகிழிகளை உருவாக்குவதற்கான ஒரு கலப்புப் பொருள் ஆகும் .கிராபைட் வலுவூட்டு நெகிழிகளை போலவே , இந்த கலப்புப் பொருளும் அதன் பெயரை கொண்டே வலுவூட்டு இழைகள் (கண்ணாடியிழைகள்) என்று குறிப்பிடுவார்கள்

பயன்கள்
 
வழக்கமான கண்ணாடியிழைகளின் பயன்பாடுகள்: பாய்கள், வெப்ப காப்பு பொருள், மின்காப்பு பொருள், பல்வகை பொருள்களுக்கு வலுவூட்டுதல்; கூடாரக் கம்புகள், ஒலி உறுஞ்சி, வெப்ப எதிர்ப்பு புனைவுகள் , வலிமையான புனைவுகள், கம்புகள், வில் வகைகள், கூரைத்தகடுகள், தானுன்ந்து சட்டம் போன்றவற்றின் உட்பொருளாக இருத்தல். கண்ணாடியிழை தொட்டிகளையும் பாத்திரங்களையும் உருவாக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கண்ணாடியிழை
« Reply #3 on: May 17, 2012, 02:49:41 AM »
தானே தூய்மையாதல் கண்ணாடி

தானே தூய்மையாதல் கண்ணாடி (self-cleaning glass) என்பது, மழையின் போது தானே தூய்மையாகிக் கொள்ளும் வகையைச் சேர்ந்த கண்ணாடியைக் குறிக்கும். தற்காலத்தில் கட்டிடங்களின் பெருமளவு வெளிப்புறப் பரப்புக்கள் கண்ணாடிகளினால் ஆனவையாக இருப்பதால் தூசி முதலியன அடைந்து தூய்மை கெடுவதும், மழையின் போது மழை நீருடன் கலக்கும் இத் தூசிகள் கண்ணாடி வழியே வழிந்து செல்லும்போது அழகற்ற தன்மையைக் கொடுக்கும் வரிவரியான அடையாளங்கள் ஏற்படுவதும் கட்டட முகப்புக்களைப் பேணுவதை கடினமாக்குகின்றன. இது அதிக செலவில் கட்டிட முகப்புக்களை அடிக்கடி தூய்மைப்படுத்தும் தேவையை உருவாக்குகின்றது. இப்பின்னணியில் தானே தூய்மையாதல் கண்ணாடிகளின் உருவாக்கம் கண்ணாடியிடலில் ஒரு மைல்கல் எனலாம். கண்ணாடிகளை உற்பத்தி செய்யும் போதே அதன் மேற்பரப்பில் குறித்த வகைப் பூச்சுக்களைப் பூசுவதனால் இவ்வகைக் கண்ணாடிகள் உருவாக்கப்படுகின்றன
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கண்ணாடியிழை
« Reply #4 on: May 17, 2012, 02:51:12 AM »
பூச்சுக்கள்
 
தானே தூய்மையாகும் தன்மையைக் கொடுப்பதற்காகப் பயன்படுத்தும் பூச்சுக்களை இரண்டு வகைகளுள் அடக்கலாம்.
 1.நீர்தள்ளு பூச்சுக்கள்
 2.நீர்கவர் பூச்சுக்கள்
 
 நீர்தள்ளு பூச்சுக்கள்
 
இவ்வகைப் பூச்சுக்கள் அவற்றின் பெயருக்கு ஏற்ப நீரைத் தமது மேற்பரப்பில் ஒட்டவிடாது தள்ளுகின்றன. இதனால் மழையின்போது மழை நீரும் அதனுடன் கலக்கும் தூசியும் கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு காய்ந்துவிடாமல் வழிந்தோடிவிடுகின்றன. எனினும் பெரும்பாலான இவ்வகைப் பூச்சுக்கள் கண்ணாடிகளுக்குப் போதிய அளவு நீர்தள்ளும் தன்மையைக் கொடுப்பதில்லை. இதனால் தூசியுடன் கலக்கும் நீர் முற்றாகவே வழிந்துவிடாமல் கண்ணாடி மேற்பரப்பில் காய்ந்துவிடுவதற்கான சாத்தியங்கள் ஏற்படுகின்றன. ஆனால், இப்பூச்சுக்கள் கண்ணாடிகளுக்கு இலகுவாகத் தூய்மையாக்கத்தக்க தன்மையைக் கொடுக்கின்றன.
 
நீர்கவர் பூச்சுக்கள்
 
இவ்வகைப் பூச்சுக்கள் கண்ணாடிகள் தூய்மையாவதற்கு முதல் வகையிலும் வேறான முறையொன்றைப் பயன்படுத்துகின்றன. இவ்வகையின் பெயர் குறித்துக் காட்டுவதுபோல் நீர் மூலக்கூறுகளைக் கவர்வதன் மூலம் கண்ணாடியில் விழும் நீர் கண்ணாடியில் பரவிச் செல்ல உதவுகின்றன. தூசி கலந்த நீர் கண்ணாடி முழுவதும் சீராகப் பரவாமல் குறித்த வழிகளில் வழிந்தோடுவதாலேயே காயும்போது அழுக்குக் கோடுகள் உருவாகின்றன. இவ்வகைப் பூச்சுக்கள் நீரைச் சீராகப் பரவச் செய்வதால் கண்ணாடி மேற்பரப்பில் உருவாகும் மெல்லிய நீர்ப்படலம் அழுக்கு அடையாளங்களை உருவாக்காமல் விரைவில் காய்ந்து விடுகிறது. நீர்கவர் பூச்சுக்கள் முதல்வகைப் பூச்சுக்களிலும் கூடிய நிலையான தன்மை கொண்டவை. எனினும் மழை நீருடன் கலந்திருக்கும் உலோக அயனிகள் இவற்றின் செயல்திறனைப் படிப்படியாகக் குறைத்துவிடுவது இப்பூச்சுக்களின் ஒரு குறைபாடு ஆகும்


குறைபாடுகள்
 
இவ்வகைக் கண்ணாடிகளின் தூய்மையாதல் தன்மை மழையில் தங்கியிருப்பதால். அடிக்கடி மழை பெய்யக்கூடிய பகுதிகளில் மட்டுமே இவை முறையாகப் பயன்படக்கூடும். மிக அரிதாக மழை பெறும் மையக் கிழக்குப் போன்ற பகுதிகளில் இக்கண்ணாடிகளினால் அதிக பயன் விளையும் சாத்தியம் இல்லை. எனினும் கண்ணாடி உற்பத்தியாளர்கள் இவ்வகைக் கண்ணாடிகளை மையக் கிழக்கு நாடுகளிலும் விற்பனை செய்கின்றனர்