FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 21, 2021, 07:27:28 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 261
Post by: Forum on March 21, 2021, 07:27:28 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 261

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/261.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 261
Post by: JsB on March 22, 2021, 09:58:58 AM
என் காதலே...
காதல் தந்திட்ட பரிசே...
என் வாழ்க்கையின் அழியாக் கோலமும்
அழகான தருணமும் இதுவே...
யாரும் வரையப்படாத ஓவியத்தின்
வண்ணங்களாய் சிதறிக் கிடந்தேன் நான்...
இன்று உன் அழகிய ஓவியமாக...
என் அன்பு கணவரின் வருகையை...
நான் அமர்ந்திருக்கும் இந்த மனமேடையையே
அலங்கரித்துச் செல்கிறதே...


என்னை மனதார தாங்கியவன்
என் அன்புக் கணவனாக என்னருகில் வரும்போது
வாழ்க்கை இன்ப வரமே...
எனது முதல் குழந்தை நீயடா...
உன்னை என் இறுதி மூச்சி உள்ள வரையிலும் சுமப்பேனடா...


நீயும் நானும் கணவன் மனைவியாக ஆன
இந்த நாளும்...இந்த நேரமும்... இந்த நொடியும்...
நாம் நீண்ட நாள் கொண்ட ஆழமான
நம் காதலும் குடுத்து வைத்ததே...
உன் இதயத்தின் சொந்தக்காரியானவள் நானே...


என் ஆசைக் கனவை நினைவாக்கிய என்னுயிர் கணவருக்கு...
வாழ்க்கை முழுதும் அன்பு செலுத்த மீண்டும்
உனக்கு தாயாய் ஆகிறேனடா...
தோளுக்கு மேல் வளர்ந்த பின்னும்
என்னை மடியில் போட்டு தாலாட்டி...
குழந்தையைப் போல பார்த்துக் கொள்ளும் உறவு
நீ மட்டும் தானடா என் ராசா குட்டி...


எனக்கு இவ்வுலகில் எவ்வளவு சந்தோசம் கிடைத்தாலும்
நான் 24 ன்கு மணிநேரமும் வட்டமடித்து
தேடும் ஒரே சந்தோஷம்...
கணவனே...உன் அன்பு மட்டுமே...
அதை இன்று மொத்தமாய்...
எனக்கே கொடுத்து விட்டாய்...


என் ஆயுளுக்கும் பலப்பட வேண்டிய
இனிய உறவிற்கு மேலான உறவு என்னவென்று கேட்டால்
அதுவும் நீதானடா என் செல்லக்குட்டி...
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே கட்டப்பட்ட
நம் அழகிய காதல் பாலம்...
திருமணத்தில் இணைந்து நகரும் போது...
நினைவுகளும் இனித்திட்டதே நம் திருமண விழாவில்...


என் முகத்தில் விண்மீன்கள்
புன்னகையால் புதுக் கவிதைகள் பாடி அரங்கேற்றுதே...
பூங்காற்றும் தென்றலும் சேர்ந்து ஜோடியாய்
இசை சாரல் தூவிடுதே...
மஞ்சள் வேர் தனிலே...
பொன் தாலியும் என் கழுத்தின் முன் ஊஞ்சல்லாடுதே...
உன்னால் குங்குமமும் நெற்றியில் அழகாய் சிவந்திடுதே...
நாதம் இசைத்திட...கெட்டி மேளம் கொட்டிட...
கட்டுடா சீக்கிரம் உன் பாசக் கயிற்றை என் கழுத்தில்
எனதருமை கணவனே ...
ஐ லவ் யூ டா புருஷா...


என்றும் அன்புடன்,
காதலியாய் இருந்தவளே...
மணப்பெண் கோலத்தில்
உன் மனைவியாகிய...

Jerusha JSB
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 261
Post by: thamilan on March 23, 2021, 01:55:08 PM
பெண்ணே
திருமணம் என்பது ஒரு அடிமை சாசனம்
தாலி உனக்கு மாட்டப்படும்
அடிமை விலங்கு

திருமண நாளின் போது
அடிமை சாசனத்தில்
நீயே கையொப்பம் இட்டாய்
பரஸ்பர ஒப்பந்தத்துடன்
சாசனம் நடைமுறைக்கு வந்தது

முதலில் பூ தொடுக்கும் பணி
உன்னிடம் ஒப்படைக்கப்பட்டது
பிறகு காய் கறி நறுக்கினாய்
துணி துவைப்பது  மாவு பிசைவது போன்ற
இதர வேலைகளும் உன்னிடம்
ஒப்படைக்கப்பட்டன

ஒவ்வொரு இரவின் போதும்
கணவன் பசியாற்றும் உணவானாய் நீ
உன் கணவனின் கால் பிடித்து விடுவதும்
கட்டாய கடமையாக்கப்பட்டது

அனைவரும் தூங்கியபின்
உனக்கு நீயே
மருதாணி இட்டுக்கொண்டாய்
மறுநாள் காலை
சிவந்திருக்கும் உனது பாதம் கண்டு
மாமியாரின் கண்கள் சிவக்கும்
அதன் பின்
உன்வேலைப்பளு அதிகரிக்கும்

வீடு பெருகினாய்
தண்ணீர் குடம் சுமந்தாய்
சாதம் வடித்தாய்

பிறகு நீ கர்ப்பமுற்றாய்
உடல் சோர்வால்
அடிக்கடி படுத்துக்கொண்டாய்
அடிமைகளுக்கு ஓய்வெடுக்க அனுமதியில்லை
உனக்கு அடிக்கடி நினைவுற்றப்பட்டது

பிறகென்ன
பிள்ளைகளை பெற்றாய்
பாலூட்டினாய் சோரூற்றினாய்
பள்ளிக்கு அனுப்பினாய்
பாடம் சொல்லிக்கொடுத்தாய்

திருமணம்
சில பெண்கள் விரும்பியும்
பல பெண்கள் விரும்பாமலும் ஏற்றுக்கொள்ளும்
ஆயுள் தண்டனை
சில பெண்கள் விரும்பி அனுபவிப்பதும் உண்டு
பல பெண்கள் விரும்பாவிட்டாலும்
அனுபவிக்க வேண்டும் என்பது
காலத்தின் கட்டாயம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 261
Post by: TiNu on March 24, 2021, 07:24:19 PM


திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்க படுகிறதாம்...
யாருக்கு இந்த கூற்று?... அறிவார் யாரும் உளரோ?
இரு மனங்களை காரணம் காட்டி... இரு குடும்பங்கள் 
இறுக்கமான சூழலில் இணைவது  திருமணமா?

பெண்ணின் சின்ன சிறு பாதம் எடுத்து வைத்த
முதல் அடி.. அவள் வீட்டின் முற்றமே ... அம்மனை மறந்து...
ஏதுமாரியாத ஏதோ ஒரு புது வீடு புகுவது சுவர்க்கமா?..
இதன் பெயர் தான் மகிழ்வான திருமணமா?

பெற்றோர் முகம் விலக்கி... அன்னாரின் கொஞ்சல்கள் மறந்து..
நேற்றுவரை.. உரிமையோடு சண்டையிட்ட உடன்பிறப்பை...
இன்று, யாரோ.. ஓர் உறவுக்காரர்களாய்.. நினைத்து பிரிவது முறையா?
இது தான் ஓர் பெண்ணின் நிறைவான மணக்கோலமா?

பெண்ணின் வாழ்வு... உயிர்களின் பசி தீர்க்கும் நெற்பயிரா?
நாற்றங்காலில் விதைத்து..  சில்லென பக்குவமாய் வளர்த்து...
அப்பயிர் நன்கு வளர்ந்த பின்.. பண்பட்ட பாத்தியில் பதித்து..
அறுவடை செய்து..   தலைமுறைகளை தாங்கி பிடிப்பதுதான் திருமணமா?

பெற்றவரை பிரிந்து...  பிறந்த மனைத்துறந்து..   
உடன் பிறந்தாரை அந்நியமாக்கி... திருமணத்தின்
விழைவால் உண்டான... பொருளாதார சுமை தாங்கும் குடும்பம்
விழிகள் பிதுங்கி நிற்க ... நிகழும் கல்யாணம் ஸ்வர்க்கமா?

சடங்குகள் சம்பிரதாயம் எல்லாமே.. மேல் மட்ட மேதாவிகள்   
அவர்களுக்காக அவர்கள் உருவாக்கிய சாஸ்திரங்கள்....
இரு குடும்பங்கள் கலந்து பேசி.. நிறைவாக மகிழ்வோடு..
கூடி இணைவதே... பூலோக ஸ்வர்க்கம் ஆகும்....

திருமணங்கள் என்றுமே போலி கௌரவத்திலோ..
பொய்யான புன்னகையிலோ.. மலர வேண்டாமே..
புத்தம் புதிதாய் பூக்கும் புது உறவுகள்.. என்றுமே..
கனிவான அன்பு பெருகிட.  மனித நேயத்துடனும்
இரு மனங்கள் இணையட்டுமே... திருமண பந்தத்தில்..


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 261
Post by: SweeTie on March 25, 2021, 10:15:17 PM

சொந்தங்கள் சூழ  புரோகிதர் வேதங்கள்  ஓத
வாத்தியங்கள்   முழங்க    ....யாரோ  ஒருவர்
கொட்டு மேளம்  கொட்டு மேளம் 
என சத்தமிட

மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபகே
சஞ்சீவ சரதா சதம்

அந்த மஞ்சள்  கயிறு
அவன் கைகளில்   நடுங்கிநிற்க
அவன் தயக்கம்தான் என்ன ?
புரியாமல் தவிக்கும்  பெண்ணவள்.

கண்களில்  காதல்  சொரிய 
உவகையில்  உள்ளம்   பூரிக்க 
தலை குனிய வேண்டிய  பெண்
தலை நிமிர்ந்து   பார்ப்பதேனோ? 

காதலித்த பெண்ணை  கதறவிட்டு
 இன்னொருத்தி கழுத்தில் தாலி  கட்டுவதா?
நிலைகுலைந்து  தவிக்கிறது   அவனுள்ளம்
மனச்சாட்சி அவனை குத்திக் கிழிக்கிறது

செய்வதறியாது   கலங்கி நிற்கும்
சொந்த  பந் தங்கள்
விக்கித்து  நிற்கும்  புரோகிராதர்
நடக்குமா திருமணம்?
ஏங்கும்  பெண்மனம் 

மஞ்சள் கயிறு  தூக்கு கயிராகிடுமோ
வஞ்சியவள்  மனதில்  ஆயிரம் குழப்பம் \
ஆடி  போனால்   ஆவணி   என்று கொள்ள 
அருகதை   இழந்துவிட்டவள்   

யாருக்கு யார்   என்பது  விதி போட்ட கணக்கு
போலியான ஒரு திருமணத்தில்   
கைச்சாத்திட  கட்டாயமாகிறது 
மற்றவர்  திருப்திக்கு   இரு இதயங்கள்
திருப்பலியாகின்றன.   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 261
Post by: Hari on March 26, 2021, 01:24:35 AM
வண்ண மலர்கள் நறுமணம் வீச
உற்றார் உறவினர் புடை சூழ
நடப்பது திருமணம்..
மங்கள வாத்தியங்கள் முழங்க
ஒற்றை மஞ்சள் கயிற்றில்
இணையுது நம் இரு மனம்..

மூன்று முடிச்சுப்  போட்டு
உன்னை வாழ்நாள் முழுவதும்
காதல் என்னும் சிறையில் தள்ள முற்பட்டேன்..
ஆனால் ஒற்றை நொடியில் கவிதை பேசும்
உன் கண்களில் மயங்கி
செய்வது அறியாமல் உறைந்து போனேனடி..

பல நாட்களாக நான் கண்ட கனவுககளை  சுமந்து
எனது அன்பு தேவதையுடன் இணையும் தருணம்.இது .
வாழ்க்கை எண்ணும்  வார்த்தைக்கு
 அர்த்தங்கள் கொடுக்கும் அழகிய திருமணம்..

உன் கழுத்தைஅலங்கரிக்கும் 
தங்க நகைகளை உன்  தந்தையிடம் 
வரதட்சணை யாக வாங்க மனம் இல்லை..
ஆனாலும் என்னால்   மறுக்க முடியவில்லை
 உன்னையே வரதட்ச்சனையாக  கொடுத்தவரல்லவா ??..

 மரணம் இல்லாமல் வாழ்நாள் முழுவதும்
உன்னுடன்  கூடவே  வாழ ஆசை
இந்த உலகத்தில்  அல்ல,   உந்தன் அன்பான இதயத்தில் .
நீ வெட்கப்படுகையில்  உன் கழுத்தில் இருக்கும்
மாலையின் மலர்கள் கூட தலை அசைக்கிறதடி
மணமேடையில் நீ என் விரல் பிடித்து
சுற்றி வர   நம்  வாழ்க்கை  தொடங்குமடி .

இனிமையான ஏதிர்கால கனவுகளை சுமந்து
இருவரும் கை கோர்த்து வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
அளவில்லா காதலுடன் புதிய அத்தியாயம் தொடங்குவோம்  வா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 261
Post by: JeGaTisH on March 26, 2021, 10:03:18 PM
இருமனம் இணைந்தபின்
திருமணம் தேவையா?
தாலியும்   மாலையும்
சம்பிரதாயங்களும் 
மற்றவர்   மனங்களை
ஏமாற்றும்   வேலையா

காதல்  என்பது 
கனவு மாளிகை  தெரிந்தும்
மனங்களால்  ஒன்றாகி
மாசில்லா  காதலால்
கட்டுண்டோம் 
வெற்றியின்  உச்சியில்
நாம்  இன்று

உன் கண்களில்
என்னை காண்கிறேன்
காலமெல்லாம்   இணைந்திருக்க
பொன்தாலி  தேவையில்லை
என் தங்கமே  நீ போதுமடி
வாழ்வெல்லாம்   உன்
சிரிப்போன்றே போதும் 
என் கண்மணியே !

நீ  நான் கட்டும் 
தாலியை  சுமந்து நிற்க
உன்னை நான் காலமும்
சுமப்பேனடி
நம் காதல்   என்றும் வாழும்
கல்லறை சென்றாலும்
மாறாது  என் செல்லமே! 



அன்புடன் உங்கள் ரோஸ்  மில்க்  தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 261
Post by: kanmani on March 26, 2021, 11:06:31 PM
ஆயிரம்   காலத்து  பயிராக ..
சொர்க்கத்தில்   நிச்சயிக்கப்படும்  திருநாளாக ..
ஆண்டவன்  போட்ட  முடிச்சாக ...
இப்படி  எத்தனை எத்தனை .. இந்த  திருமணத்திற்கு 
காரண  காரியங்கள்  சேர்க்கின்றனர் ..

இதில்  பெண்ணாக  பிறந்தவளுக்குத் தான் 
எத்தனை  எத்தனை  கட்டுப்பாடுகள் ?..
அங்கே  போகாதே  இங்கே  நிற்காதே ..
அப்படி  உட்காராதே  இப்படி  உடை  உடுத்ததே ...
ஆண்களிடம்  பேசாதே  அந்நியரிடம்  பழகாதே ..
இப்படி  பொத்தி  பொத்தி  வளர்த்த  மகளை ...

திடீரென  ஒருவனை  கணவனாக
ஏற்றுக்கொள்  என்றால்
அவள்  என்ன   இயந்திரமா  ?

கனவும்  கற்பனையும்  மனதும்  நிறைந்த
உயிர் அல்லவா  அவள் ?...

மங்கள ஓசை  முழங்க...  நாதஸ்வரம்  ஒலிக்க....
மாங்கல்யம்  வெறும்  உயிரில்லா அணிகலன்களானதே... 
இருமனமும்  மனதால்  இணைந்து 
இதயம்   கனிந்து
காதலாகத் ..துணையாக ... தம்பதியராக ...
இதுவல்லவா    திரு -மணம் ...
இணைந்த  இரு  மனங்களின்  முகவரி  என்பதே 
திரு -மணம்

சாதி  சனம்  பார்த்து 
சொத்து  சொகுசு  பார்த்து
கைபிடித்துக்கொடுப்பது  திருமணம்  என்றால்
வக்கீலை  பார்த்து ..
வாய்தா  பார்த்து ..
செல்லவேண்டியதுதான் 

திருமண  பந்தத்தில் ......