Author Topic: ‌சிவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் வகைக‌ள்  (Read 745 times)

Offline kanmani

சிவரா‌‌த்‌தி‌ரி‌யி‌ல் மாத ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று‌ம், மகா ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று‌ம் கூற‌ப்படு‌கிறது. மாதா மாத‌ம் வருவது‌ மாத ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று‌ம், மா‌சி மாத‌த்‌தி‌ல் வருவது மகா ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று‌ம் அ‌றிவோ‌ம்.

‌மிக ஆழமாக‌ப் பா‌ர்‌த்தா‌ல் அ‌திலு‌ம் 4 ‌பி‌ரிவுக‌ள் உ‌ள்ளன.

உத்தமோத்தம சிவராத்திரி

உத்தம சிவராத்திரி

மத்திம சிவராத்திரி

அதம சிவராத்திரி

webdunia photo   WD
சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது இத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.

(ஒரு நாழிகை என்பது, 24 நிமிடங்கள்)

கு‌றி‌ப்பு - இரவில் 15 நாழிகை அளவு சதுர்தசி திதி வந்து, மறு நாளிரவு 15 நாழிகை அளவு (சதுர்தசி) இருந்தால், முந்தைய நாளிரவே சிவராத்திரியாகக் கொள்ள வேண்டும்.