Author Topic: ~ பெற்றோரின் மெடிக்ளைம்... பிள்ளைகள் கவனத்துக்கு... ~  (Read 327 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பெற்றோரின் மெடிக்ளைம்...
பிள்ளைகள் கவனத்துக்கு...




தன் அப்பாவுக்கு சீனியர் சிட்டிசன் மெடிக்ளைம் பாலிசி எடுத்திருந்தார் கோயம்புத்தூரைச் சேர்ந்த செந்தில். மூன்று வருடங்கள் ஒழுங்காகப் பிரீமியம் கட்டிவந்தார். அப்பாவுக்குத் திடீர் என்று லேசாக நெஞ்சு வலிக்கவே, 'நம்மிடம்தான் மெடிக்ளைம் பாலிஸி இருக்கிறதே’ என்றதைரியத்தில் மருத்துவமனையில் சேர்த்தார்.

மருத்துவமனை நிர்வாகமும் உடனடியாகப் பணம் எதுவும் கட்டச் சொல்லாமல், சில நாட்கள் சிகிச்சை அளித்தது. கடைசியில், 'பில் தொகையில் பாதிதான் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தரும். மீதியை நீங்கள்தான் கொடுக்க வேண்டும்’ என்று கூறி, இன்ஷூரன்ஸ் நிறுவனம் பிடித்தம் செய்து கொடுத்த வரிகளுக்கும் சேர்த்து வசூலித்துவிட்டது மருத்துவமனை நிர்வாகம்.
ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காமின் இன்ஷூரன்ஸ் ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரனிடம், மூத்த குடிமக்களுக்கு மெடிக்ளைம் பாலிஸி எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பாலிஸி புதுப்பித்தலில் நிகழக்கூடிய தவறுகள் பற்றிக் கேட்டோம்.

'பல நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு மெடிக்ளைம் பாலிசிகளை வழங்குகின்றன. இதில் சில நிறுவனங்கள், மருத்துவப் பரிசோதனை கட்டாயம் என்கின்றன. இதனால், ஏற்கனவே உள்ள நோய்களுக்கு க்ளைம் கிடைப்பதில் சிக்கல் இருக்கும். மேலும், அதிகபட்சம் சுமார் 5 லட்சம் ரூபாய் வரைதான் கவரேஜ் கிடைக்கும். பிரீமியமும் அதிகம். அதிலும் சிகிச்சைக்கு ஆன செலவில் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை மட்டுமே இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அளிக்கும். மீதியை பாலிஸிதாரர்தான் கொடுக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது என்றால், அதில் 50 ஆயிரம் ரூபாயை பாலிஸிதாரர் செலுத்த வேண்டியிருக்கும். இந்த சதவிகிதம் என்பது 15 முதல் 50 சதவிகிதம் வரை இருக்கும். மூத்த குடிமக்களுக்கு அதிக ரிஸ்க் என்பதால், இந்தத் தொகையைச் செலுத்தச் சொல்கிறார்கள். எனவே, மூத்த குடிமக்களுக்கான இன்ஷ§ரன்ஸ் எடுக்கும்போது, கூடுதல் கவனம் தேவை.



மூத்த குடிமக்களுக்குப் பெரும்பாலும் அவர்களின் பிள்ளைகள்தான் பாலிஸி எடுக்கிறார்கள். இவர்கள் பாலிஸியைப் புதுப்பிக்கும் தேதியை மறந்துவிடுவதும் உண்டு. எனவே பாலிஸியைப் புதுப்பிக்கும் தேதியைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்' என்றார்.
இதையே பாலிஸியா வெச்சுக்கங்க!

குரூப் பாலிசி எடுக்கலாம்

மூத்த குடிமக்களின் பிள்ளைகள் வேலைபார்க்கும் நிறுவனங்களில் குரூப் இன்ஷூரன்ஸ் இருந்தால், அதில் அவர்களின் பெயரைச் சேர்த்துக்கொள்வது நல்லது. குரூப் இன்ஷூரன்ஸில் பெரும்பாலும் காத்திருப்புக் காலம் இருக்காது. அதேபோல, ஏற்கனவே உள்ள நோய்களுக்குச் சிகிச்சை பெறுவதிலும் பெரிய சிக்கல் இருக்காது. சிகிச்சை எடுக்கும்போது குறிப்பிட்ட சதவிகிதத் தொகை செலுத்த வேண்டிய சிக்கல் இருக்காது.