Author Topic: உயிர்களைக் காப்பாற்றும் மின் இருதய உறை  (Read 326 times)

Offline Little Heart

இன்றைய காலத்தில் மனித உடலில் பொருத்திக் கொள்ளும் தன்மையுடைய பலவகையான மின்பொருள்கள் பலரால் கண்டு பிடிக்கப்படுகின்றன. ஆனால், 2013ம் ஆண்டு அறிவியல் துறையில் “Smithsonian American Ingenuity Award” என்கின்ற உயரிய விருதை வென்ற ஜோன் ரோஜர் கண்டுபிடித்த மின் இருதய உறைக்கு ஈடாகாது என்றே சொல்ல வேண்டும். அது ஏன் தெரியுமா? இவ்வுறையில் பல விதமான உணரிகள் இணைக்கப் பட்டுள்ள காரணத்தால், இதை உபயோகிப்பவர்களின் இருதயத்தில் சிறு கோளாறு நிகழ்ந்தால் கூட, அதை மிக எளிதாகக் கண்டுபிடித்து விட முடியும். உதாரணத்திற்கு ஒருவரின் இருதயத்தில் ஒரு பாதிப்பு ஏற்படும் அடுத்த நொடியே அந்த மின் இருதய உறை, அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு ஓர் செய்தியை அனுப்பி விடும். அந்தச் செய்தியைப் பெற்ற மருத்துவ மனை உடனடியாக ஓர் வைத்தியரை அவ்விடத்திற்கு அனுப்பிவிட்டு நோயாளியை குணப்படுத்த வாய்ப்புகள் உண்டு. இந்த கண்டுப்பிடிப்பின் மிகச் சிறந்த நன்மை என்னவென்றால், இருதயத்தில் நிகழும் கோளாறுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய முடிவதால், இருதய நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிக அளவில் குறைக்கலாம் என்பது தான்.