Author Topic: உப்பைப் பயன்படுத்தித் தற்கொலை செய்த சீன பிரபுக்கள்  (Read 324 times)

Offline Little Heart

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது தான் நமது பழமொழி. ஆனால் முற்கால சீன பிரபுக்கள் இந்த உப்பினைத் தற்கொலைக்கு பயன்படுத்தியுள்ளனர் என்றால் நம்புவீர்களா? நம்பித் தான் ஆகவேண்டும், அது உண்மை தான்! ஒரு கிலோ உடல் எடைக்கு, ஒரு கிராம் உப்பு என்ற வகையில் எடுத்துக்கொள்வது கூட, ஒருவனை இறப்பதற்கானப் படுக்கையில் தள்ளிவிடும் அபாயம் வாய்ந்தது. இந்த முறையைப் பயன்படுத்தித் தான் சீன நாட்டு பிரபுக்கள் சடங்குகள் சம்பந்தமான தற்கொலைகளைச் செய்துள்ளனர். அதாவது ஒரு பவுண்ட் அளவுள்ள உப்பு, நமது உயிரினைப் பறிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.

அப்படியென்றால் உணவில் உப்பே சேர்க்காமல் இருந்துவிடுவோம், என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். உப்பின் அளவு உடலில் குறைந்தாலும் பிரச்சனை தான். உப்புச்சத்தினை குறைப்பதற்காக ஒரு சிலர் தண்ணீர் அதிகம் குடிப்பதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் அந்தத் தண்ணீர், உடலிலுள்ள உப்புக்களை வெளியேற்றிவிடும். இப்படி உப்பின் அளவு குறையும்போது ‘ஹைபோநெட்ரீமியா’ என்ற அபாயகரமான நோய் வரவும் வாய்ப்புள்ளது.

எனவே, உப்பை அளவாகப் பயன்படுத்தினால், நமது உடல் நலத்திற்குப் பாதிப்பே கிடையாது.