Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 102  (Read 3194 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 102
இந்த களத்தின்இந்த  நிழல் படம்  POIGAI அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 10:12:21 PM by MysteRy »

!! DJ HussaiN !!

  • Guest
               !!! அனைவருக்கும் வணக்கம் !!!
        !! இது எனது நான்காவது கிறுக்கல் !!

                                    !!   தண்ணீர்  !!

!! உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ !!
!! அதே போன்று தான் தண்ணீரும் முக்கியம் !!

!! ஒரு மனிதன் சாபிடாமல் கூட உயிர் வாழ்ந்திட முடியும் !!
!! ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது !!

!! மனிதனுக்கு மட்டுமல்ல தண்ணீர் அவசியம் !!
!! விலங்குகளுக்கும்  வாழ தண்ணீர் தான் முக்கியம் !!

!! செடி ,கொடி , மரம் , இயற்கை தாவரம்
   அனைத்துக்கும் உயிரினத்திற்க்கும்  தண்ணீர் முக்கியம் !!

!! உலகம் என்று எடுத்துக்கொண்டலே தண்ணீர் இல்லாமல்
   இவ்வுலகே இல்லை !!

!! தண்ணீரை சிக்கனமாய் பயன் படுத்துங்கள் !!

!! இன்று நமக்கு கிடைக்கும் தண்ணீரை பயன் படுத்த தெரியாமல்
   வீணடிக்கின்றோம் !!

!! இந்த தண்ணீர் கிடைக்காமல் பல உயிர்கள் மற்றும் மனிதர்கள்
   இறக்கின்றன !!

!! தயவு செய்து தண்ணீரை வீணடிக்காமல் பயன்படுத்தவும் !!
« Last Edit: May 16, 2016, 10:36:54 AM by !! DJ HussaiN !! »

Offline JEE

மனிதன் உயிர்வாழ நீர் தேவை.
உடலின் எடை,க்கு  நீர் தேவை.

உடலின் களைப்புக்கு நீர் தேவை.
வெயிலின் தாக்கத்துக்கு நீர் தேவை

தினமும் காலையில் எழுந்தவுடன்
வெறும் வயிற்றுக்கு நீர் தேவை.

இரத்தம் அதிகம் வெளியேறியதனால்
அதிக களைப்புக்கு நீர் தேவை.


குழாயடியில் படுத்து குழாயை பிடித்து
தண்ணீர் அருந்த துடிக்கும்.
நிலை கண்டு என் நெஞ்சில்
ஓர் துடிப்பு மடமடமடவென அடக்கிறதே.....

POIGAI  அங்கு இவ்வையோ?
POIGAI ஆற்றுத் தண்ணீர்  இவ்வையோ?
பாக்கெட் தண்ணீர் அருகில் இவ்வையோ?
அய்யோ அம்மா என்று கதறினானோ ? அம்மா
தண்ணீர் பாட்டல்அருகில் இவ்வையோ?..............

POIGAIயே நீர் அருந்த துடிக்கும்
இக்காட்சி என் கண்முன் கொடுத்து
என் கண்ணில் நீர் வர வைத்ததேனோ?...........

என் கண் முன் கண்ட இக்காட்சிக்கு
கற்பனை அதிகம் வர  வர அதனால்
கண்ணில் நீர் தானாய் வருகிறதே ...........
அதனுக்கு உரு கொடுக்க இயலவில்லை

நான்கண்ட கற்பனையை
கற்பனை செய்து பார்
உரு தானாய் வரும் ்உன் கண்ணிலும்..........


தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடு
தண்ணீர் ஒரு வரப்பிரசாதம்

நீரின்றி அமையாது உடல்

சிக்கனமாக செலவழிக்க
விழிப்புணர்வு தேவை......

வளரும் தலைமுறைக்கு நீர் தேவை
வளரும் தலைமுறைக்கு  விழிப்புணர்வு தேவை ..............
« Last Edit: May 16, 2016, 08:59:05 PM by JEE »
with kind regard,

G'vakumar.

Offline thamilan

மூன்றில் ஒரு பங்கு
நீரால் சூழ்ந்தது உலகம் இருந்தும்
தவித்த வாய்க்கு தண்ணீர் இன்றி
தவிப்பவர்கள் பல்லாயிரம் பேர்கள்

வானம் பார்த்த பூமியாய்
வறண்டு கிடக்கும் விளைநிலங்கள்
தண்ணீரை பார்க்காமல்
விளையாட்டுமைதானமான ஏரிகள் 

காற்று நீர் உணவு -  இவை
மூன்றாலுமே இயங்குவது மனித இயந்திரம்
இதில் ஒன்று இல்லை என்றாலும்
மனிதன் மரித்துவிடுவான்
உணவு அது நாமே தேடிக்கொள்வது
காற்றும் நீரும் இயற்கை அன்னை
நமக்களித்த வரப்பிரசாதங்கள்

அருவி ஆறுகள் நதிகள் என
பலவழிகளில் தண்ணீரை 
நமக்கு தருகிறது இயற்கை
ஆனாலும் தண்ணீருக்கு பஞ்சம்

நதிகளை சொந்தம் கொண்டாடி
தடைகளை இடும் மாநில அரசுகள்
தட்டிக் கேட்க திராணி அற்ற மத்திய அரசு

தண்ணீருக்குத் தான் பஞ்சம்
நம் நாட்டில்
கண்ணீருக்கு என்றும் பஞ்சமே இல்லை
தண்ணீர் சேமிப்பு தொட்டில்கள் எல்லாம்
நிரம்பி வழிகின்றன ஏழைகளின் கண்ணீர்

நமது தாத்தாகள் தண்ணீரை பார்த்தது
ஓடும் ஆறுகளில்
நம் தந்தையர் தண்ணீரை பார்த்தது
ஊற்றெடுக்கும் கிணற்றிலே
நாம் தண்ணீரை பார்ப்பது
கண்ணீர் விடும் குழாய்களிலே
நம் குழந்தைகள் தண்ணீரை பார்ப்பது
அடைக்கப்பட்ட பாட்டில்களிலே
அவர்கள் குழந்தைகள் தண்ணீரை பார்ப்பது
கானல் நீரிலே
 
சிறுதுளி பெருவெள்ளம்
ஒவ்வொரு துளி நீரும்
தாகம் தீர்க்கும் அற்புத மருந்து
நீரை வீண்விரையம் செய்வதை தவிர்ப்போம் 
நீரை சேமிப்போம்

« Last Edit: May 16, 2016, 10:11:01 PM by thamilan »

Offline MyNa

நதிக்கரையும்  ஏரிகரையும் வத்திப் போச்சு..
வளமா  செழிப்பா இருந்த பூமி  வறண்டு போச்சு..
தண்ணீரும் கண்ணீரும் இங்க விலைக்குப் போச்சு..
ஒரு வாய் தண்ணிக்கு கையேந்துற காலம் வந்தாச்சு..

தண்ணிய  புடுச்சு பாட்டிலில் அடச்சு வச்சாச்சு..
அதையும் விலை போட்டு விற்க ஆரம்பிச்சாச்சு..
சேத்து வச்ச காசு தண்ணிக்கே  சரியா போச்சு..
அப்பகூட மனுசன் மனசு ஈரமில்லாத  கல்லாதான் போச்சு..

நம்ம தாத்தா பாட்டி ஆற்றிலயும்
குளத்திலயும்  பார்த்தது கதையா போச்சு..
குழாய் பாத்து நாம நேரம் எல்லாம் வீணாய் தான் போச்சு..
பாட்டிலிலே  அடைக்கும் தண்ணி வியாபாரமா போச்சு..
இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சந்ததிக்கு குடிநீர்
குழாய் ,கிணறு ,ஊற்றை படத்தில்  காட்ட நேரம் வந்தாச்சு..

காச தண்ணீராய் செலவழிச்ச சொல்லும் போச்சு..
இப்போ தண்ணிக்கு காச இறைக்கின்ற காலமாச்சு..
காசோ தண்ணியோ .. ரெண்டையும்
சேமிச்சா நாளைய பொழுது நல்ல பொழுது..

எழுதிய நானோ இப்போ
தண்ணீரில் தொடங்கி கண்ணீரில் முடிக்கிறேன்..
« Last Edit: May 17, 2016, 08:10:22 PM by MyNa »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 704
  • Total likes: 2382
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear


கங்கை யமுனை கோதாவரி என
பலப்பல ஆறுகள் ஓடும்
வளம்கண்ட நாடு நம் நாடு
ஆனால் குழாய்களை திறந்தால்
தண்ணீருக்குப் பதில் காற்று வரும் - இல்லையோ
ஏழைகளின் கண்ணீர்
தண்ணீர் துளிகளாக வரும்

ஏரிகள் இருந்த இடத்தில் எல்லாம்
அடுக்கு மாடி கட்டிடங்கள்
ஆறுகளுக்கெல்லாம்  தடை உத்தரவு
கடலிலும் ஏக்கர் கணக்கில் மணல் நிரப்பி
துறைமுக நகரங்கள்
தண்ணீருக்கு தட்டுப்பாடு வரத்தானே செய்யும்
 
நீராடையில்லாத பாறைகள்
பாசியறியாத படித்துறைகள்
ஆறில்லாத ஆற்றுப்பாலங்கள்
நீரில்லாத மணல் பாளங்கள்
வெற்றுக் கண் வாராவதிகள்
ஊறும் கிணறும்
உறைந்து காய்ந்து கிடக்க
வண்ண மயமானது எங்கள்
வாழ்வு மட்டும்
பச்சை மஞ்சள் நீலம் என
குடங்கள் தூக்கி
லாரியின் பின்னே
ஓடியபடி.




பதிப்புரிமை
BreeZe
« Last Edit: May 17, 2016, 11:42:16 AM by BreeZe »
Palm Springs commercial photography

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தண்ணீரில் வாழ்க்கையும் இருக்கிறது
மரணன்மும் இருக்கிறது
அது இல்லாமல் வாழ்வு இல்லை
அது கூடினால் மரணத்தின் எல்லை

ஆழ்கடலில் வசித்தாலும் மீன்களுக்கு
அளவோடு தான் தண்ணீர் அருந்த முடியும்
அதிகம் ஆசைபடும் மனிதனுக்கும்
அளவோடு தான் தண்ணீர் அருந்த முடியும்

தண்ணீர் மழையாக வரும்போது
மனதை மகிழ்விக்கிறது
அதே தண்ணீர் வெள்ளமாக வரும்பொது
மரணத்தை வருவிக்கிறது   

அருவியில் குளிப்பவனுக்கு
 தண்ணீரின் அருமை தெரியாது
பாலைவனத்தில் பயணம் செய்பவனுக்கு தான் 
தண்ணீரின் அருமை தெரியும்

தண்ணீருக்கு பதிலாக பன்னீரில் குளிக்கும்
பணக்காரர்களும் உண்டு
குடிக்க ஒரு சொட்டு தண்ணீருக்காக
கண்ணீர் வடிக்கும் ஏழைகளும் உண்டு

தண்ணீரே வாழ்க்கை
தண்ணீரே மரணமும் கூட

Offline பொய்கை

  • Full Member
  • *
  • Posts: 108
  • Total likes: 792
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாகாவராயினும் நாகாக்க...
[highlight-text]தண்ணீர் ! தண்ணீர் !

ஊருக்கு நடுவால
பொதுவான ஒரு கிணறு ..
சின்ன குடம் கொண்டு
அன்ன நடை பயின்று ..
வாலி இழுத்து இறைச்ச ..என் மாந்தர்
கை சோர்ந்து போனதேனோ ?

பத்து அடி குழி வெட்டி
பாவி மக்கா நாம கண்ட
தண்ணீர் இப்போ
பாதாளம் போனதேனோ ?

மேல்நிலை தொட்டியெல்லாம்
ஊருகொன்று  கட்டிவைத்து
மாலை நேரத்தில மறக்காம
வந்த தண்ணீர்  மாசக் கணக்காக
மாயமாய் போனதேனோ ?
 
பெரிய பானையில கழுத்து
வரை தண்ணி ஊற்றி பொன்னி
அரிசி போட்டு பொங்கிய காலம்
இப்போ தண்ணி இல்லா
உணவுக்கு தானாக போய் விழுந்து
விக்கிதான் சாவதேனோ ?

ஆழ் குழாய் போட்டதாலே
நிலத்தடி நீர் வற்றி போக
கடல் நீரும் உள்ளே வந்து
நிலமெல்லாம் உவர்கிறதே
மனம்மெல்லாம் வியர்கிறதே!

நீரின்று அமையாது உலகு
என்று சொன்ன வள்ளுவரும்
தாகத்தால் நா வறண்டு
தான் உரைத்தாரோ ?

கொட்டும் மழை நீரை
சொட்டும் வீணக்காமல்
வெட்டுவோம் ஏரி,
குளங்களை மீண்டும்..

எதிர்கால சந்ததிக்கு
தண்ணீரை
கொடுத்து செல்வோம்!

கண்ணீரை
எடுத்து செல்வோம் !
[/highlight-text]
« Last Edit: May 18, 2016, 01:14:39 AM by பொய்கை »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
  !! A Drop Of Water... !! :)
 
  a drop of water,so sweet
      as tears of happiness, a drop of honey
  brings joy to the mind...
     a drop of water,so bitter
  as tears of agony,a heart breaking cry
     brings pain to the mind....
  a drop of water, so harmful,
     in the form of a flood, a harmful storm,
        brings fear to the mind...
    a drop of water , so precious,
  for a plant to survive,water in desert
     brings comfort to the mind...
  a drop of water ,so beautiful
    as dew drop, a single pearl,
  brings expression to the mind...
 
     LOVE THE WATER...!!!
         SAVE THE WATER...!!! :)
     

Offline KuYiL

ஒரு தாகத்தின் தாக்கம்

 நான்கு சக்கர வாகனம்  பணக்கார வாழ்வின்  அங்க அடையாளம் !
அடுத்த பரிமாண வளர்ச்சியில் மனிதனுக்கு ஆறாம் விரலாய்    கைபேசி ஆனது !

மேல் நாட்டு மோகம்,  நுனி நாக்கு ஆங்கிலம்
அரைகுறை ஆடைகள் என் நாகரீக அடையளங்கள்! 
தோற்றம் , எற்றம்  இரண்டும்  பணத்தின்  இரு முகங்கள் !

 மாற்றங்கள் மட்டுமே மாறாத வாழ்வில்
 "இளமைக்கு " இலக்கணம்  அரை வேக்காட்டு  உணவு !

 எல்லாம் இருந்தும் ஏனோ எதுவும் இல்லை !
 எதை தேடி நான் என்னை தொலைத்தேன் !

 என்னுள் எழுந்த கேள்வி    " தாகமாய் " நின்றது !

 இலவசமாய் இயற்கை தந்த நீரை ....நான்
 இருபது ரூபாய்க்கு வாங்கும் போது எழுந்தது   என்  “ தாக்கம்! “
           
 கரைகாண காட்டாறாய் கட்டுஅவிழ்ந்த வான் அமுதம்
 வரியோடு சேர்ந்து விற்பனை சந்தையில் வியாபார பொருள் !
 
  நீந்தி விளையாடிய நீர் தடாகங்கள் கட்டிட காடுகளாய் ..
  தனி ஒருவன் பண பசியில் பறி போயின ஏரிகளும் குளங்களும் !
     
  நிலத்தடி நீர் வற்றி போனால் நிற்பதெங்கே நாம்?

  நிலவில்  “ நீர்  “ இல்லையென்பதால் தானோ !
  செவ்வாய் கிரகம் நோக்கி செல்கிறோம் ..!...


அங்கேயும் பிளாட்டுகளாய் பிரித்து பாட்டிலில் அடைப்பையோ !
         
       இன்னும் ஓர் உலகப்போர் உண்டாயின்
       அது நிச்சயம் நடக்கும் நீரின் பேராலே!

   
  நீரின் வலிமை தெரிந்தவனுக்கு , தாகத்தின் பெருமை புரியும்

  புழுதி காட்டில் வெயிலோடு விளையாடிய நான்
  மண் கரை பட்ட என் சட்டையோடு ...
  மண்ணின் வாசனையும் சேர்ந்தது மழை துளியில் !
 
  என் கருப்புக்கு கரை போட்ட வியர்வை துளி
  செவ்வானத்தையும் மீறிய செம்மண் சுவாசம்!

  எந்திரத்தின் ஆட்சி இல்லா சுதந்திர வீடு
  குயில்களும், கிளியும் மட்டுமே இங்கே ரிங் டோன்கள்

 ஜனனத்தின் ஜதியில், சப்த நாடியும்   நீ.ர்
 மரணத்தின் வாசலில் இறுதியாய் புசிக்க படுவதும் நீர்

 மண்ணில் விழுந்தால் மரம் !
 மலையில் விழுந்தால் நதி !
 கடலில் விழுந்தால் முத்து !
 
 இவை எல்லாம் கூரை இல்லா பள்ளியில்
 வான் கூரை பற்றி படித்த ஞாபகம்!

 என்றோ ! குளிர் சாதன  பெட்டியில் புதைந்து போன..
 என் தாகம்  இன்று…………..

" தாகம்" தணிக்கும் இச்சிறுவன் என்
  வாழ்வின் மிக பெரிய “தாக்கம்!  “

இனி வரும் எதிர் காலம் சேமிக்க போவது பணத்தை அல்ல
சிறு துளி பெரு வெள்ளமாய் உயிர் காக்கும் நீர் தான் ...
             
வெள்ளாமை இனி பசுமை புரட்சிக்கு மட்டும் அல்ல
நீர் வெள்ளத்தை ஆளும் ...தண்ணீர் புரட்சிக்கும் தான்   !
         
இனி வரும் காலம் சேமிப்பை தண்ணீர் தொட்டியில் தொடங்கட்டும் !
 

என்றும் அன்புடன்
உங்கள் குயில்.........
           


                 

 
               






       
           
           
           

           
       
         
         
         








       
           
           
           

           
       
         
         
         





           
                 

 
               






       
           
           
           

           
       
         
         
         





















Offline Mohamed Azam

எத்தனையோ இன்னல்களுடன்
தடைகளை தாண்டி தாவி வரும்
நீரை யாரும் மதிப்பதுமில்லை  ...
 ஏழைகளின் ஆரோக்கியத்தை
யாரும் பொருட்படுத்துவதுமில்லை ....

 
பணத்தை வாரி வாரி வீண் விரயம்
செய்யும் மனிதர்களுக்கு
காடுகளில் அழகான  அருவிகளாய்
வழிந்தோடிவரும்  நீரின் அருமை புரிவதில்லை ..

ஏழை மகனின் தாகத்தை தீர்க்க வரும்
இந்த நீருக்கு இருக்கும் கருணை கூட
ஆறறிவு கொண்ட மனிதனின் பார்வைக்கு
தெரிவதில்லை ஏனோ !...

எனக்கும் அது புரியவில்லை
நீர் இல்லை என்றால் எத்தனையோ
துன்பங்களை  சந்திக்க நேரிடும்...

 மனிதனிடத்தில் இருக்கும் பணத்தைக்கொண்டு
நீரை போத்தல்களில் வாங்கி
 பாதைகளில்  பரிகாசமாய் வீணாக்கி
விளையாடிக் கொண்டிருக்கும்
பணத்திமிரு பிடிச்ச மனிதனின்
பார்வைக்கு தாகத்தின் அருமை தெரியாது ...

நீரின்றி தவிக்கும் ஏழைகளின்
கண்ணீரை துடைக்க தத்தி தாவி வரும்
நீரைத்தான் நாம் பொருட்படுத்துவதில்லை
இது தான் இன்றைய நிலை ...

எல்லோரிடத்திலும் இந்த
பொறுப்பில்லாத மெத்தனத்தை
காண என் கண்களில்
உள்ள கண்ணீர் துளி கூட 
வெளிவர மறுக்கிறது ...
« Last Edit: May 20, 2016, 04:04:10 AM by Mohamed Azam »