Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 22/12/2013 (Dec 22nd )  (Read 746 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் - 22/12/2013 (Dec 22nd )



மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவு வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சா கம் பொங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்தை முடிக்கும் நாள்.


மிதுனம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். அழகு, இளமைக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை நாசூக்காக சுட்டிக் காட்டுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.


கன்னி: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர் களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து புது திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். சிறப்பான நாள்.


துலாம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறு வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


விருச்சிகம்:  குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிரச்னைகள் வெகுவாக குறையும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.



தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


மகரம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாய மும் உண்டாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியா பாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நன்மை கிட்டும் நாள்.


கும்பம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.


மீனம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். புது நட்பு மலரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.