Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 13/04/2014 (April 13th)  (Read 723 times)

Offline kanmani



மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளி வட் டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத் தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் சாதிக்கும் நாள்.


ரிஷபம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிரார்த்தனையை நிறைவேற்றுவீர் கள். புதியவர்கள் நண்பர் களாவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.


மிதுனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உழைப்பால் உயரும் நாள்.


கடகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர் களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.


சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அழகு, இளமை கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. புதிய அத்தி யாயம் தொடங்கும் நாள்.


கன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலை களையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன்,மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். கோபத் தால் இழப்புகள் ஏற்படும். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


துலாம்: எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளை களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பழைய கடன், பகையை நினைத்து கலங்கு வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


விருச்சிகம்: சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்னை களையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியா பாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். மதிப்புக் கூடும் நாள்.


தனுசு: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதை யில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத் தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். தடைகள் உடைபடும் நாள்.


கும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவை யற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தினர் சிலர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


மீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகை களை அறிவிப்பீர்கள். திறமைகள் வெளிப் படும் நாள்.