Author Topic: பற்று அட்டை  (Read 4354 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பற்று அட்டை
« Reply #15 on: March 17, 2012, 04:39:05 AM »
சவூதி அரேபியா
 
சவூதி அரேபியாவில் அனைத்து பற்று அட்டை நடவடிக்கைகளும், அந்த நாட்டில் உள்ள ஒரே மின்னணு பணம் செலுத்து அமைப்பான சவூதி பேமெண்ட்ஸ் நெட்வொர்க் (SPAN) என்பதன் மூலமே செலுத்தப்படுகின்றன. இந்த வலைப்பின்னலுடன் முழுதுமாக இணக்கம் கொண்ட அட்டைகளை அனைத்து வங்கிகளும் வழங்க வேண்டும் என்று சவூதி அரேபியன் மானிட்டரி ஏஜன்சி கோருகிறது. இது நாடெங்கிலும் உள்ள அனைத்து விற்பனை முனைமைகளையும் ஒரு மையச் செலுத்து விசை வழி இணைக்கிறது. இது, அட்டை வழங்குனர், உள்ளூர் வங்கி, விசா, ஏமெக்ஸ் அல்லது மாஸ்டர்கார்ட் ஆகியவற்றிற்கு நிதிசார் நடவடிக்கைகளைத் தொடர்புறுத்துகிறது.
 
பற்று அட்டைகளுக்கு மட்டும் அல்லாது ஏடிஎம் மற்றும் கடன் அட்டை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இது பயனாகிறது.
 
சிங்கப்பூர்


சிங்கப்பூரின் பற்று சேவைகளை, அந்நாட்டின் முதன்மை வங்கிகளான டிபிஎஸ், கெப்பல் பாங்க், ஓசிபிசி, ஓயூபி, பீஓஎஸ்பி, டாட் லீ பாங்க் மற்றும் யூஓபி ஆகியவற்றால், 1985ஆம் ஆண்டு மையப்படுத்திய ஒரு மின்னணு வழி செலுத்து முறைமைக்காக தொடங்கிய நெட்வொர்க் ஃபார் எலெக்டிரானிக் டிரான்ஸ்ஃபர்ஸ் (Network for Electronic Transfers (NETS)) என்னும் வலைப்பின்னல் மேலாண்மை செய்கிறது.பற்று அட்டைகளைப் பயன்படுத்தி நீங்கள் பொருட்களை வாங்குகையில் அது நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து அதற்கான பணத்தைக் கழித்து விடும்.
 
ஐக்கிய இராச்சியம்
 
ஐக்கிய இராச்சியத்தில் பற்று அட்டைகள் (ஒரு ஒருங்கிணைந்த எஃப்ட்போஸ் அமைப்பாக) சில்லறை வர்த்தகச் சந்தையில் நிலைபெற்று, கற்கள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டமைந்த இயற்பொருள் உருக்கொண்ட கடைகளில் (bricks and mortar) மட்டும் அல்லாது மற்றும் இணையக் கடைகளிலும் ஏற்கப்படுகின்றன எஃப்ட்போஸ் என்னும் சொல்லினை (அல்லது விசாவைக் குறிக்கையில் சுவிட்ச் என்பதை) பொதுமக்கள் பரவலாகப் பயன்படுத்துவதில்லை. பற்று என்னும் சொல்லே பயன்படுகிறது. வர்த்தகச் சுற்றில் உள்ள அட்டைகளில், மாஸ்டிரோ (முன்னர் சுவிட்ச் எனப்பட்டது), சோலோ, விசா டெபிட் (முன்னார் விசா டெல்ட்டா எனப்பட்டது) மற்றும் விசா எலெக்டிரான் ஆகியவை அடங்கும். ஐக்கிய இராச்சியத்தில் எஃப்ட்போஸ் நடவடிக்கைகளுக்காக வங்கிகள் வாடிக்கையாளருக்குக் கட்டணம் விதிப்பதில்லை. ஆனால், சில சில்லறை வணிகர்கள், குறிப்பாக சிறு தொகை கொண்ட நடவடிக்கைகளில், கொஞ்சம் பணம் பார்த்து விடுவது என்பது நிகழத்தான் செய்கிறது. வர்த்தகச் சுற்றில் உள்ள பற்று அட்டைகள் அனைத்தையும், ஐக்கிய இராச்சியம் சில்லு மற்றும் குறியீட்டு எண் முறைமைக்கு மாற்றி விட்டது. (மாற்றுத் திறன் கொண்ட சிலருக்கு வழங்கப்பட்ட சில்லு மற்றும் கையெழுத்து அட்டைகள் இதற்கு விதிவிலக்கு.) ஈஎம்வி பொதுத்தர நிலையின்படி, நடவடிக்கையின் பாதுகாப்பினை அதிகரிக்க இவ்வாறு செய்யப்பட்டது. இருப்பினும், இணையம்சார் நடவடிக்கைகளுக்கு குறியீட்டு எண் தேவைப்படுவதில்லை.
 
ஐக்கிய இராச்சியத்தில், 1980ஆம் ஆண்டுகளின் இடைப்பகுதியில் வங்கிகள் பற்று அட்டைகளை வழங்கத் துவங்கின. விற்பனை முனைமையில் பயன்படும் காசோலைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே இது துவக்கப்பட்டது. காரணம், காசோலைகளைச் செயல்முறைப்படுத்துவது வங்கிகளுக்கு அதிகச் செலவை விளைப்பதாகும். இதனை முதலில் பார்க்கிளேஸ் என்னும் வங்கியே பார்கிளேஸ் கனெக்ட் என்னும் அட்டை கொண்டு செயல்படுத்தியது. பிற நாடுகள் அனைத்திலும் உள்ளதைப் போல, ஐக்கிய இராச்சியத்திலும், கடன் அட்டைகளை ஏற்க வணிகர்கள் செலுத்தும் கட்டணமானது நடவடிக்கைத் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதமாகும்.[26] இது வட்டியற்ற கடன் கால அளவினை வாடிக்கையாளர்கள் பெற உதவுகிறது. மேலும், வெகுமதிப் புள்ளிகள், இலவச விமானப் பயணம் மற்றும் பணம் திரும்பப் பெறுதல் ஆகிய ஊக்கத் திட்டங்களுக்கும் நிதிவசதி அளிப்பதாக உள்ளது. பற்று அட்டைகள் பொதுவாக இத்தகைய பண்புக்குறிகளைக் கொண்டிருப்பதில்லை. இதனால், இவற்றை ஏற்க வணிகர்கள் செலுத்தும் கட்டணம், அதைச் சார்ந்த நடவடிக்கையின் தொகை எவ்வளவாக இருப்பினும், குறைவாகவே உள்ளது.[26] இதன் பொருளாவது, மிகச் சிறிய விற்பனைகளுக்கு ஒரு வணிகர் பற்று அட்டையை விட கடன் அட்டையை ஏற்பது மலிவானது என்பதேயாகும். பற்று அட்டைகள் (விலை வேறுபாடு) ஆணை 1990 என்பதன் மூலமாக, பணம் செலுத்தும் முறைமையைப் பொறுத்து வெவ்வேறு அளவு கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் உரிமையை வணிகர்கள் வென்றாலும், ஐக்கிய இராச்சியத்தில் கடன் அட்டையை விட பற்று அட்டைக்கு குறைவான கட்டணம் விதிக்கும் வணிகர்கள் மிகக் குறைவே. இதற்குக் குறிப்பான விதிவிலக்குகள் மலிவு விமானப் பயண நிறுவனங்கள், பயண முகவர்கள் மற்றும் ஐகேஈஏ ஆகியவையே.[27] ஐக்கிய இராச்சியத்தில் பற்று அட்டைகள், ஐக்கிய இராச்சியம் வழங்கும் கடன் அட்டைகள் கொண்டுள்ள சில சாதகங்கள் அற்றே உள்ளன. (வெகுமதிப் புள்ளிகள், இலவச விமானப்பயணம், ரொக்கம் திரும்பப் பெறுதல் போன்ற) இலவச ஊக்கத் திட்டங்கள், நுகர்வோர் கடன் சட்டம் 1974 என்பதன் 75ஆம் பிரிவின் கீழ், தவறும் வணிகருக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஐக்கிய இராச்சியத்தில் கடன் அட்டைகளை ஏற்கும் நிறுவனங்கள் அனைத்தும் பற்று அட்டைகளையும் (அவை எப்போதும் சோலோ மற்றும் விசா எல்க்டிரான் என்பதாக இல்லாவிடினும்) ஏற்கின்றன. ஆயினும், சிறுபான்மையான வணிகர்கள், செலவு தொடர்பான காரணங்களுக்காக, கடன் அட்டையை ஏற்காது, பற்று அட்டைகளையே ஏற்கின்றனர்.
 
 ஐக்கிய அமெரிக்க நாடுகள்
 
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் எஃப்ட்போஸ் அனைத்து இடங்களிலும் பற்று என்றே எளிமையாக விளிக்கப்படுகிறது. ஏடிஎம் வலைப்பின்னலை இயக்கும் வங்கி-இடை வலைப்பின்னலே பீஓஸ் வலைப்பின்னலையும் இயக்குகிறது. பல்ஸ், நைஸ், மாக், டைம், ஷாஜம், ஸ்டார், போன்ற பெரும்பான்மையான வங்கி -இடை வலைப்பின்னல்கள் பகுதி சார்ந்து ஒன்றின் மேல் ஒன்று கவியாத வண்ணம் உள்ளன. இருப்பினும், அவை ஒன்றின் அட்டைகளை மற்றொன்று ஏற்பதற்கான ஒப்பந்தங்களையும் கொண்டுள்ளன. இதன் பொருள் ஒரு வலைப்பின்னல் வழங்கும் அட்டையானது, ஏடிஎம்/ பீஓஎச் அட்டைகளை ஏற்கும் எந்த இடத்திலும் செயல்படும் என்பதேயாகும். உதாரணமாக, ஒரு நைஸ் அட்டை பல்ஸ் பிஓஎஸ் முனைமை அல்லது ஏடிஎம்மிலும் இதைப் போன்றே நிலை மாறாகவும் செயல்படும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் பற்று அட்டைகள் பலவும் விசா அல்லது மாஸ்டர்கார்ட் முத்திரையுடனேயே வழங்கப்படுகின்றன. இது கையெழுத்து-அடிப்படையிலான வலைப்பின்னல்களில் இதன் பயன்பாட்டினை அனுமதிக்கிறது.
 
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அட்டை தொலைந்து போதல் அல்லது திருடு போதல் ஆகிய நிகழ்வுகளில் அதன் உரிமையாளரின் கடப்பாடானது 50 யூஎஸ் டாலர்கள் வரையில் அமையும். அட்டை இவ்வாறு தொலைந்து அல்லது திருடு போனதை இரு வேலை நாட்களுக்குள் அட்டையை வழங்கிய வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.[28]
 
நேரடிக் கணினி அல்லாத கொள்முதல்களுக்கு வணிகர்கள் மீது விதிக்கப்படும் கட்டணம் மற்றும் நேரடிக் கணினி முறைமையிலான கொள்முதல்கள் மற்றும் காகிதக் காசோலைகள் ஆகியவற்றை வணிகர்கள் செய்முறைப்படுத்துகையில் அவை கட்டணம் அற்று இருப்பது ஆகியவற்றின் விளைவாக ஐக்கிய அமெரிக்க மாநில வணிகர்கள் விசா, மாஸ்டர்கார்ட் போன்று பற்று அட்டை செய்முறைப்படுத்துபவர்கள் சிலர் மீது வழக்குத் தொடுக்கத் தூண்டுதலானது. 2003ஆம் ஆண்டு, விசா மற்றும் மாஸ்டர்கார்ட் ஆகியவை பில்லியன் கணக்கில் டாலர்களை அளித்து இந்த வழக்குகளுக்குத் தீர்வு காண ஒப்புக்கொண்டன.[சான்று தேவை]
 
வாடிக்கையாளர்/ வணிகர் ஆகியோருக்கு கட்டணம் இன்றி இருப்பதனால், சில நுகர்வோர் "கடன்" நடவடிக்கைகளை மேற்கொள்வதையே விரும்புகின்றனர். மேலும், ஐக்கிய அமெரிக்க நாடுகளில் சில பற்று அட்டைகள் "கடன்" நடவடிக்கைகளுக்கு வெகுமதிப் புள்ளிகளை அளிக்கின்றன. (எ.கா: வாஷிங்டன் மியூச்சுவலின் "வாமூலா"[29] மற்றும் எஸ் அண்ட் டி வங்கியின் "விரும்பத்தக்க பற்று வெகுமதி அட்டை".[30] இருப்பினும், வணிகர்களுக்கு "கடன்" சார் நடவடிக்கைகளை செய்முறைப்படுத்துவதில் செலவுகள் அதிகம் இருப்பதனால், குறியீட்டு எண்ணை ஏற்கும் முனைமைகளில் பலவும் இவ்வாறான கடன்சார் நடவடிக்கைகளின் அணுக்கத்தைக் கடினமாக்கியுள்ளன. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வால்-மார்ட்டில் நீங்கள் ஒரு பற்று அட்டையைத் தேய்த்தால், அது உடனடியாக நேரடிக் கணினி முறைமையிலான பற்றிற்காக ஒரு குறியீட்டு எண் திரையைக் காட்டும். நேரடிக் கணினி முறைமை அல்லாத பற்று நடவடிக்கையை மேற்கொள்ள நீங்கள் "ரத்து செய்" என்னும் பொத்தானை அழுத்தி அத்திரையிலிருந்து விலகி பிறகு, அடுத்த திரையில் "கடன்" என்னும் பொத்தானை அழுத்த வேண்டும்.
 
பற்று அட்டைகளைப் பயன்படுத்துவதில் மற்றொரு பிரச்சினை, தாமாகவே காசோலைன் நிரப்பிக் கொள்ளும் நிலையங்களில் அவற்றைப் பயன்படுத்துவதாகும். தங்களது பற்று அட்டைகளில் எரிபொருளை வாங்க வாடிக்கையாளர்கள் விரும்பலாம். ஆயினும், அந்த நிலையத்தில் உள்ள கணினி அந்த வாடிக்கையாளர் கொள்முதல் செய்ய விரும்பும் எரிபொருளின் அளவை அறிந்திராது. எரிபொருள் குழாயை இயக்குவிக்க, வாடிக்கையாளர் தங்களது அட்டையை ஒரு அட்டை படிப்பானில் அளிக்க வேண்டும் (மேற்காணும் முறைகளைப் பார்க்கவும்). மேலும், ஒரு குறியீட்டு எண்ணையும் இட வேண்டியிருக்கலாம். அப்போதுதான், விற்பனை நடவடிக்கை முழுமை அடையவில்லை எனினும், குழாய் எரிபொருளை வெளியிடத் துவங்கும். எத்தனை எரிபொருள் விற்கப்படும் என்பதை கணினி அறிந்திருப்பதில்லை. வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் எத்தனை அளவு நிதி விஞ்சியிருக்கிறது என்பதும் அதற்குத் தெரியாது. உருமாதிரியான ஒரு விற்பனை நடவடிக்கையில், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை விட அதிகம் செலவழிக்கையில் (பற்று மூலமாகவோ அல்லது கடனாகவோ), அது "விற்பனை வேண்டாம்" என்னும் எச்சரிக்கையை வணிகருக்கு விடுப்பதில் விளையும். இதன் காரணமாக, அந்த விற்பனை நிகழாது போகும். தாமாகவே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் நிலையங்களில், எரிபொருளானது, வங்கியானது விற்பனையின் இறுதி விலையை அறிவதற்கு முன்னரே, வாடிக்கையாளரின் கிடங்கில் சேர்ந்து விடுகிறது. இந்தப் பிரச்சினைக்குப் பல தீர்வுகள் உள்ளன. உதாரணமாக, ஒரு வங்கிக் கணக்கில் பத்து டாலருக்கும் குறைவான தொகையே இருக்கையில், முன்னரே அங்கீகாரம் பெறும் ஒரு டாலர் மதிப்பிற்கான நடவடிக்கையை மறுப்பது மற்றும் குறிப்பிட்ட தொகைகளுக்கான நடவடிக்கைகளை அனுமதிப்பது ஆகியவையாகும். ஆயினும், விற்பனை நிகழ்விற்கு முன்பாகவே பொருளை வாடிக்கையாளரிடம் சேர்ப்பிப்பது என்னும் முறையானது, பற்று அட்டை அமைப்பின் பிரச்சினைகளைப் பெருக்குவதாகவே உள்ளது. சில நேரங்களில், கடன்சார் நடவடிக்கைகளில் தரகு அதிகம் இருப்பதால், இவற்றில் எரிபொருள் நிலையம் உண்மையில் நட்டம் அடைவதாகவே விளையலாம். 1980ஆம் ஆண்டுகளில், நிலையத்தில் பணம் செலுத்தும் முறைமை துவங்கிய பிறகு பல எரிபொருள் நிலையங்கள் ரொக்கமாகப் பணம் செலுத்துவதற்குத் தள்ளுபடியை அறிவிக்கத் துவங்கின. ஆயினும், அது அவற்றின் ரொக்கம் சார்ந்த விற்பனைகளை அதிகரிக்காது போனதால், பெரும்பான்மையானவை அத்தகைய தள்ளுபடிகளை நிறுத்தி விட்டன.[சான்று தேவை]
 
2009-07-08: ஐக்கிய அமெரிக்க நாடுகளில் விசாவிற்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்கள்.
 
விசாவிற்கான வணிகர்களின் ஒப்பந்தம் (The Merchants Agreement for Visa) (பக்கம் 9 அல்லது 14/141 பிடிஎஃப் வடிவில்) இவ்வாறு கூறுகிறது:
 
உங்களது ஏற்புடைமைப் பிரிவில் செல்லுமை கொண்ட விசா அட்டைகளை, கொள்முதலின் டாலர் தொகை எவ்வளவாக இருப்பினும், எப்போதும் ஏற்றுக் கொள்ளவும். விசா அட்டையை ஏற்பதற்காகக் குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச தொகைக்காக கட்டணம் விதிப்பது விசா விதிமுறைகளின் மீறலாகும்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: பற்று அட்டை
« Reply #16 on: March 17, 2012, 04:40:05 AM »
எஃப்எஸ்ஏ, ஹெச்ஆர்ஏ மற்றும் ஹெச்எஸ்ஏ பற்று அட்டைகள்
 
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் எஃப்எஸ்ஏ பற்று அட்டைகள் மருத்துவச் செலவினை மட்டுமே அனுமதிப்பவையாகும். சில வங்கிகள் தமது எஃப்எஸ்ஏ, எம்எஸ்ஏ மற்றும் ஹெச்எஸ்ஏ ஆகியவற்றிலிருந்து பணம் எடுப்பதை அனுமதிக்கின்றன. இவை விசா அல்லது மாஸ்டர்கார்ட் ஆகியவற்றின் முத்திரையைக் கொண்டுள்ளன. இருப்பினும், பற்று மற்றும் கடன் அட்டைகளை ஏற்கும் அனைத்து வணிக நிலையங்களிலும் இவை ஏற்கப்படுவதில்லை. எஃப்எஸ்ஏ பற்று அட்டையை ஏற்பவர் மட்டுமே இதனை ஏற்கின்றனர். தகுதி பெறாத அட்டைகளுக்கு விற்பனையை வரம்பிட, விற்பனை முனைமையில் வணிகர் மற்றும் பொருள் குறியீடுகள் இடப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குறிப்பிட்ட தேதியிட்ட சில சட்டங்களின்படி இது அவசியமாகும்). இதன் காரணமாகப் பின்னால் தொடர்வதான சோதனை மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றினால், வரிவிலக்குகளுக்கு ஆதாரம் அளிக்க இத்தகைய அறிக்கைகளைப் பயன்படுத்தலாம். தகுதியுள்ள கொள்முதல் ஒன்று நிராகரிக்கப்படும் நிகழ்வில், வேறொரு பணம் செலுத்தும் முறைமையைப் பயன்படுத்த வேண்டும் (அதாவது வேறொரு வங்கிக் கணக்கிற்கான காசோலையைப் பயன்படுத்திப் பின்னர் பணத்தைத் திரும்பப் பெற மனுச் செய்ய வேண்டும்). ஆனால், தகுதியற்றவை ஏற்கப்படும் நிகழ்வுகளே அதிகம். இவற்றிலுள்ள முரண் பின்னர் தணிக்கையில் வெளிப்படுகையில் தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கையில், வாடிக்கையாளரே இன்னமும் பொறுப்பாகிறார். ஐக்கிய மாநில நாடுகளின் பற்று அட்டை வணிகத்தில் ஒரு சிறிய, ஆனால் வளர்ந்து வரும் பகுதி நெகிழ்வுடைய செலவுக் கணாக்குகளான எஃப்எஸ்ஏ, ஆரோக்கியச் செலவுத் திரும்பப் பெறும் கணக்குகள் மற்றும் ஆரோக்கிய சேமிப்பீடுகள் போன்ற வரி ஆதரவுற்றவற்றிற்கு அணுக்கம் கொண்டிருப்பதை ஈடுபடுத்துகிறது. இத்தகைய பற்று அட்டைகளில் பலவும் மருத்துவச் செலவீனங்களானவையே. இருப்பினும், இவற்றில் சில ஆதரவில் இருப்போர் மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவற்றிற்காகவும் கிடைக்கப் பெறுகின்றன.
 
பாரம்பரியமாக, எஃப்எஸ்ஏ (இவ்வகையான கணக்கீடுகளில் மிகவும் பழைமையானது), செலவினை ஏற்று அதற்கான பணம் செலுத்திய பிறகே திரும்ப அளிக்கப்பட்டு வந்தன. பெரும்பாலும் இது, பணியாளரின் ஊதியத்திலிருந்து பணம் கழிக்கப்பட்ட பிறகே நிகழ்வதாக உள்ளது. (எஃப்எஸ்ஏ என்பவை பொதுவாக ஊதியக் கழிப்பினால் நிதியுதவி அளிக்கப்படுபவை) இவ்வாறு மருத்துவ எஃப்எஸ்ஏ மற்றும் ஹெச்ஆர்ஏ ஆகியவை ஒரே தோற்றுவாயிலிருந்து இருமுறை பெறப்படுவதைத் தவிர்க்க, உள்ளார்ந்த வருமானச் சேவை (Internal Revenue Service (IRS)) அனுமதிக்கும் ஒரே வழி துல்லியமான மற்றும் தணிக்கைக்குட்பட்ட வருமான வரிச் சான்றிதழைத் தாக்கல் செய்வதே. பற்று அட்டையின் மீது உள்ள, "மருத்துவப் பயன்பாடுகளுக்கு மட்டுமே" எனக் கூறும் அறிக்கையானது பல காரணங்களினால் செல்லுமையற்றதாகிறது: (1) வாடிக்கையாளருக்கு உரித்தான வருமான வரிச் சலுகைகளுக்கு மொத்த கொள்முதலுமே தகுதியாகுமா என்பதை வணிகரோ அல்லது வழங்குகிற வங்கியோ நிர்ணயிக்க வழி ஏதுமில்லை; (2) இதை விரைவில் அறிய வாடிக்கையாளருக்கும் வழி ஏதுமில்லை; பெரும்பாலும், அவசியமான மற்றும் வசதிக்கான பொருட்கள் கலந்தே வாங்கப்படுகின்றன; ஆகவே அவர் தவறுகள் செய்வது எளிதானதே; (3) வாடிக்கையாளருக்கும் அட்டை வழங்கும் வங்கிக்கும் இடையிலான பிற ஒப்பந்தங்கள், பணம் செலுத்துதலை நடைமுறைப்படுத்துவதற்கு இடையில் வரலாம். இதனால், அதிகக் குழப்பங்கள் நேரிடலாம். (எடுத்துக் காட்டாக, தகுதியற்ற ஒரு பொருளை வாங்கியதற்காக ஒரு வாடிக்கையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அது அந்தக் கணக்கில் அவரது சேமிப்பின் மீதான சாத்தியமான சாதகங்களைக் குறைத்து விடும்). ஆகவே, தகுதியுற்ற பொருட்களைக் கொள்முதல் செய்ய மட்டுமே அட்டையைப் பயன்படுத்துவது என்பது வாடிக்கையாளருக்கு வசதியாக இருக்கலாம்; ஆனால், அந்த அட்டை எவ்வாறு உண்மையிலேயே பயன்படுத்தப்படலாம் என்பதனோடு அதற்குத் தொடர்பிருக்காது. எடுத்துக் காட்டாக, அங்கீகாரம் பெற்ற மருந்துக் கடை அல்ல என்பதனால் வங்கி ஒரு நடவடிக்கையை நிராகரித்து விட்டால், அட்டையின் உடைமையாளருக்கு அது தீங்கும் குழப்பமும் விளைவிப்பதாக அமையும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில், அனைத்து மருத்துவச் சேவைகளும் அல்லது வழங்கீடு செய்யும் கடைகளும் மிகச் சரியான தகவல்களை அளிப்பதாகக் கூற இயலாது. அதனால், ஒரு எஃப்எஸ்ஏ பற்று அட்டை வழங்குனர் ஒவ்வொரு நடவடிக்கையுமே ஏற்கலாம். அது நிராகரிக்கப்படுமாயின் அல்லது ஆவணம் தேவையான அளவு விதிமுறைகளின்பாற்படவில்லை எனில், அட்டையின் உடைமையாளர்கள் தாமே கைப்பட படிவங்களை அனுப்பலாம்.