200 வாரங்கள் இசை தென்றல் நிகழ்ச்சியை கொண்டு சென்ற தொகுப்பாளர்கள், எடிட்டர்கள் ,பங்கேற்பாளர்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.
இன்னும் பல நூறு வாரங்கள் இசைத்தென்றல் நிகழ்ச்சி தொடர இசைத்தென்றல் டீமுக்கு வாழ்த்துகள்.
இந்த வாரம் நான் தேர்வு செய்த இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இந்த ஆண்டு வெளிவந்த "மாஸ்டர்" திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு பாடலையும் துள்ளலான முறையில் இசையமைத்து இந்த திரைப்படத்தை இசையால் வெற்றி பெற்ற திரைப்படமாக மாற்றி இருப்பார் இசையமைப்பாளர்
பாடல் வரிகள் குறைவாக அமைத்து , இசையை பிரதானமாக ஒலிக்க செய்து பட்டி தொட்டி எங்கும் கேட்போர் எல்லோரையும் நடனமாட செய்த துள்ளலான இசை கொண்ட " வாத்தி கமிங் "எனத் தொடங்கும் பாடலை இந்த முறை கேட்க விரும்புகிறேன்.
அனிருத் இசை ரசிகர்களுக்காக இந்த பாடலை ஒளிபரப்ப கேட்டுக்கொள்கிறேன்.