FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on March 03, 2018, 11:40:10 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 176
Post by: MysteRy on March 03, 2018, 11:40:10 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 176
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/176.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 176
Post by: thamilan on March 04, 2018, 11:55:09 AM
குழந்தையும் கடவுளும் ஒன்றென்பர்
அந்த கடவுள், எனது உனது எனது என
சண்டையிட்டு கடவுளுக்கு ஒப்பான
குழந்தைகளையும் கொன்றிடும் ஈனர்களே
கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும்
உங்கள் மனங்கள் கற்பாரையை விட
இருகிவிட்டதா என்ன

தொட்டால் கசங்கிடும் மலருக்கு ஒப்பான
மென்மையான குழந்தைகளை
தோட்டா கொண்டு சிதைத்திடும்
கொடூர மனம் கொண்ட கொலைகாரர்களே
மாக்கள் கூட செய்யத்தயங்கும்
செயலை செய்யும் மனிதர்கள் உங்களுக்கு
ஆறாம் அறிவு எதற்கு

அன்றோ குழந்தைகள்
வயிற்றில் இருக்கும் போது கேட்பதோ
தாயின் வளையல் ஒலிகள்
பிறந்ததும் கேட்பதோ
தாயின் தாலாட்டு
இன்றோ குழந்தைகள்
வயிற்றில் இருக்கும் போது கேட்பதோ
வெடிச் சத்தங்கள்
பிறந்ததும் கேட்பதோ
மரண ஓலங்களும் அழுகை ஒலிகளுமே
இதை கேட்டுக் கேட்டு வளரும்
குழந்தைகளின் மனதில்
மென்மை மறைந்து
மெல்ல  மெல்ல  வன்மமும் வெறுப்பும் குடிகொள்கிறது
குழந்தைகளை துப்பாக்கிகளையும்
ஏந்திட வைக்கிறது

 மதம் இனம் நாடு இயற்கைவளம்
இவற்றுக்காக சண்டையிடும் மனித
நீ அழிப்பது உனது மனித குலத்தையும்  இயற்கை வளங்களையும்
என்பதை சிந்திக்க மறப்பதும் ஏன்
உலகம் அழியும் அழியும் என
ஒப்பாரி வைத்திடும் மூளை கெட்ட மானிடா
அதை அழிப்பதே நீ தானே

அன்று இலங்கையிலும்
ஏதும் அறியாத ஒரு அப்பாவிப் பாலகன்
இன்று சிரியாவிலும்
பலப்பல பிஞ்சி குழந்தைகள்
கேட்பதற்கு தான் நாதியில்லை
கேட்கக் கூடிய வல்லரசுகளோ
தூண்டிவிடும் சக்திகளாக


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 176
Post by: MysteRy on March 04, 2018, 01:09:51 PM
உலகமே கேளுங்கள்
மனித நேயமே சிந்தியுங்கள்
எல்லாரும் உற்றுக் கேளுங்கள்
இது கவிதை அல்ல
மனதை மயக்கும் பாடலும் அல்ல
அது மரண ஓலங்கள்
உயிர் உடலை விட்டுப் போகும் அழுகை ஒலி
மனித குலத்தின் உயிர் துடிப்பு
அடங்கிடும் ஒலி

ஆதாம் ஏவாள்
வழிவந்தவர்கள் அல்லவா நாங்கள்
நாம் சகோதர சகோதரிகள் அல்லவா
பதில் சொல்லவேண்டியது நாமே
எதற்காக இந்த யுத்தங்கள்
எதற்காக இந்த இரத்த ஆறுகள்
ஏன் இந்த குழந்தைகளின் கதறல்கள்
எதை சாதிக்க எதை அடைந்திட

ஒன்றாய் இருந்த நாம்
சிறு சிறு துண்டுகளாக சிதறுண்டோம்
ஒன்றாய் இருந்த உலகம்
துண்டு துண்டுகளாக பிரிக்கப்பட்டது

கடவுளின் பெயரால் சண்டையிட்டோம்
சுயநலத்துக்காகவும் தற்பெருமைக்காகவும் சண்டையிட்டோம்   
நம் சகோதரர்களின் இரத்தத்தை
நாமே  ருசி பார்த்தோம்
எல்லைகளுக்காக சண்டையிட்டு
அங்கே மயானங்களை உருவாக்கினோம்

பச்சையாய் இருந்த மரயிலைகள்
மனித இரத்தம் பட்டு சிவப்பாய் மாறின
இரத்தத்ததை உறிஞ்சிய மரங்களோ
சிவப்பு நிறத்தில் பழங்களை தந்தன
எல்லா மலர்களுமே
சிவப்பு ரோஜாக்களானது
மனித உயிர்களைப் போலவே
கட்டிடங்களும் இடிந்து  வீழ்ந்தன  இவற்றுடன்
மனிதநேயமும் மண்ணில் சாய்ந்தன

இறந்த  மனித உடல்களுக்கிடையே
இந்த மனித குவியலுளுக்கிடையே
கையில் துப்பாக்கியுடனும்
கழுத்தில் வெடிகுண்டு மாலையுமாய்
எதை  சாதித்தது விட்டதாய்
இந்த ஆனந்தம்
தன் மனித குலத்தை
தானே அழிப்பதில்
இத்தனை ஆனந்தமும் பெருமிதமும்
வீணே எதற்கு
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 176
Post by: AnoTH on March 04, 2018, 04:17:12 PM
வகுப்பறைகளை மறுப்பவர்கள்
வடுவறைகளை பெருக்கிவந்தார் 
வரை படங்களை நாடி வந்தோர்
பல கிணறுகளை எழுப்ப  வந்தார்.

கருவறையில் பிறந்த செல்வம்
கல்லறையில் மாழும்  துயரம்
வரையறை ஏதுமின்றி
அம் மண்ணில் வீழும் மனித நேயம்

துப்பாக்கித்  தோட்டாக்கள்
துளைக்குமிந்த  நிமிடம்
துப்பில்லா மானிடரால்
துடிக்கும் அவள்  இதயம்

ஒற்றைப் பார்வையோடு
மண்ணில் மாண்டிடினும்
ஒரு கோடி ஆண்டுகள் ஆகினும்
இக்கதை மறந்திடும்

பொழியும் குண்டொன்றில்
சிதறட்டும் இவள் நம்பிக்கை
பாயும் தோட்டாவும்
துளைக்கும் இவள் தன்னம்பிக்கை

பலர் ஏவிய ஏவு கணைகள்
தகர்க்கும் இவள் கனவுகளை
சர்வாதிகார வர்க்கத்தால்
இனி எங்கும் அழியும் நாளைய தலைமுறை

மனித நேயம் உனக்குள்ளும் இருந்தால்
சிந்திப்பாயா ஒரு முறை ?
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 176
Post by: NiYa on March 04, 2018, 10:52:42 PM
எனது நாட்டிலே நான் அகதியானேன்
அகதி மட்டுமா இப்போதும் அநாதையும் கூட
துப்பாக்கி என்றால் என்ன என்று
அறியாத என் நெற்றியில் துப்பாக்கி முனை

பால் குடி மறவாத நான்
அம்மா மடியை தேடினேன்
அம்மாவோடு முழு குடும்பமும்
தீக்கிரையானது என் கண்முன்னே

நடை பழகாத என் கால்கள்
பேச தெரியாத என் வாய்
இதை பார்த்துமா என் நெற்றியில்
இவர்கள் துப்பாக்கி வைத்தார்கள்

உலகமே அறியாத நான் செய்த
பாவம் தான் என்ன ?
சுவாசிப்பது என்ன வாயு என்று
தெரியாத என்மேல் விஷவாயு குண்டுகள்

எதற்காக இத்தனை கொலைகள்
மதத்துக்காக மனிதன் இல்லை
மனிதனுகதான் மதங்கள்
இது ஏன் இவர்களுக்கு புரியவில்லை

யார் யாரோ தன் லாபத்துக்காக
என்னைபோல் குழந்தைகளை
கொன்று அதன் மேல் நாற்காலி
போட்டு அமர்வது தான் உங்கள் அரசியலா?

இன்னும் நான் உயிருடன் இருப்பது
எதனை நிமிடக்களோ தெரியவில்லை
இவர்கள் பரிதாபப்பட்டு என்னை கொல்லாமல்
விட்டாலும் அனாதையாக அகதியாக
வாழ்வதுதான் இனி என் வாழ்க்கையா?
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 176
Post by: Mr.BeaN on March 05, 2018, 01:27:44 PM
ஆயுதம் ஏந்தும் கரங்களிலே..
அடைக்கலம் தேடிடும் உலகிதுவே!
வலியவன் கொண்ட அகந்தையினால்..
வலிகள் நிறைத்திடும் உலகிதுவே!

பூவினை பறிக்க கோடறியா..?
பூமியில் போர்கள்தான் சரியா..?
தீதும் நன்றும் எதுவென அறியா..?
குழந்தையை கொல்லுதே சிரியா..

யார் பெரிதென்ற போட்டியினால்..
நரகத்தை படைப்பதுதான் விதியா..?
அடங்கப் போகும் வாழ்வினிலே..
அடக்க நினைப்பவனின் சதியா..?
பூவினை காட்டிலும் மென்மை கொண்ட..
மழலையை கொல்வதுதான் நீதியா..?

அகிலத்தில் உயிருக்கு இல்லை இணை!
என்பதை என்றும் மனதில் நினை!
விலைமதிப்பில்லா உயிர்கள்தனை!
அன்பை கொண்டுஎன்றும் அணை!!!

போட்டிகள் இல்லா மனிதம் படைப்போம்....
போர்கள் இல்லா புதுயுகம் படைப்போம்....!!!
வேண்டுகோளுடன்.. பீன்...

[/color][/size][/font]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 176
Post by: VipurThi on March 05, 2018, 09:24:24 PM
கருவறையில் அமைதியாக
உறங்கியவர்கள்
கண்ணீர் பெருக்கிலே இன்று
கரைகிறார்கள்

தாய்ப்பாலுக்காய் தாயை
தேடும் மழலைகள்
தாயே இனி இல்லை என்று
இன்னும் அறியா  நிலைமைகள்

பிஞ்சு உள்ளங்களின் மேல்
நஞ்சை அள்ளித்தெளித்துடும் மரணங்கள்
நெஞ்சை உலுக்கிடும் கொடூரங்கள்
நினைப்பவர்கள் மனதிலே
மறக்க முடியாத அவலங்கள்

சாதனை படிகளிலே ஏறவேண்டியவர்கள்
கல்லறை குழியிலே இறங்குகிறார்கள்
வன்முறை எனும் உக்கிரத்தில்
இவர்களின் வாழ்க்கையோ
சாவின் உச்சத்தில்

உயிரற்ற ஆயுதங்களை சுமக்கும்
உயிருள்ள மிருகங்களே
இன வெறி மத வெறி இன்று
இவர்களை கொள்ளலாம்
ஆனால் நாளை உன் சந்ததியை
விட்டுவைக்குமா என்றால்.....


உன்னுள் இருக்கும் ஒருவனை
மேலே ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்
மனித நேயம் மடியாமல் நீ பார்த்தால்
உன் சந்ததி மடியாமல் அவன் காப்பான்


                                            **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 176
Post by: சாக்ரடீஸ் on March 06, 2018, 01:08:55 AM
இந்த குழந்தையின்
பதற்றம்
பயம்
கண்ணீருக்கு  காரணம்
போர்குற்றமா ??
இல்லை
மனிதஉரிமை மீறலா ??
இல்லை
அரசியலா ??
இல்லை
இனப்படுகொலையை ??

பால் வடியும் முகத்தில்
ரத்தம் வழிகின்றது
கலைப்பில் உறங்க
வேண்டிய பிஞ்சிகள்
இன்று கல்லறையில்
உயிர் பிரிந்து
உறங்கிக்கொண்டு இருக்கின்றது
கொடுமையிலும் கொடுமை

என்  மனம்  முழுவதும்
துக்கம்
என் செவிகளில் முழுவதும்
குழந்தையின் ஆழுகுரல்
என் கண்ணால் முழுவதும்
பெற்றோர்களின் கதறல்கள்
உதவி செய்ய வழி
எதுவும் இல்லாமல்
இங்கு நான் ...

தன்னம்பிக்கை தரும்
தந்தையை காணவில்லை
தாய்ப்பால் தரும்
தாயை காணவில்லை
கண்ணீரில் மிதக்கும்
குழந்தைகள்  அங்கு   பல
இந்த நிலை மாறுவது
எப்போது ??

தன் முதுகில்
புத்தக சுமையை
சுமக்க வேண்டிய பிஞ்சுகளை
மார்பில் துப்பாக்கி குண்டுகளை
சுமக்க செய்தாய்
நியாமா ??
தூய காற்றை
சுவாசிக்க வேண்டிய பிஞ்சுகளை
ரத்த வாடை
நிறைந்திருக்கும் காற்றை
சுவாசிக்க செய்தாய்
நியாமா ??
பிஞ்சு குழந்தை 
முகத்தில்
சிரிப்பை
சிதற செய்தாய்
நியாமா ??

மனிதநேயம் இல்லாதவனே
நீ மனிதன்தானா
இல்லை மிருகமா??
எத்தனை அழுகுரல்
எத்தனை கதறல்
இவை அனைத்தும் கேட்டு
உன்மனம் மாறவில்லையா ??

அன்று தமிழ் ஈழம்
இன்று சிரியா
ஒரு தமிழனாய்
யாம் அறிவோம்
உங்கள் கண்ணீரில்
புதைந்து இருக்கும் வலியை
உங்கள் கண்ணீரை
துடைக்க  கரம்
வேகம் கொண்டு எழுகிறது
ஆனால்
உதவ முடியாமல்
துடிக்கின்றது இதயம் ...
இருப்பினும்
இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்
மனிதநேயம் இல்லாத
இந்த மிருகங்களை
நரகத்தில் சேர்த்துவிடு
என்று வேண்டிக்கொள்கிறோம் ...

இதுவே
நாம் எழுதும் இறுதி
அஞ்சலியாக இருக்கட்டும் ..
சிரியாவில்
சிரிப்பு மழை பெய்யட்டும்
சந்தோசம் பூக்களாய்
மலரட்டும்
இனி எழுத்துக்களில்
வேண்டாம்
சிந்தனையிலும்
செயலிலும்
மனிதநேயத்தை வளர்ப்போம் ....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 176
Post by: JeGaTisH on March 06, 2018, 04:12:55 AM
மனித நேயம் இல்லாத மனிதக்கூட்டமே
நீ அழிப்பது உன் வருங்காலத்தை என்பதை அறிவாயா.

சிறு பிஞ்சு குழந்தை அழும் ஓசை
உன் காதுகளுக்கு கேட்கவில்லையா

அடி முடி அறியாத அந்த பிஞ்சின் முகம் பார்த்தால்
உன் நெஞ்சில் ஓர் உணர்வு வரவில்லையா.

இறக்க குணம் இல்லாமல் நீ படுகொலை செய்கிறாய்
இறக்க குணம் இருந்தும் அப்பாவி மக்கள் இறக்கின்றனர்

இறக்க குணம் இல்லாமல் சில மிருககூட்டம் வாழ்கின்றன
அவை வாழ
சில இறக்க குணம் படைத்த மனிதர்கள் இறக்கின்றார்கள்.

வாழக்கை வாழத்தான் எல்லோருக்கும் ஆசை
அதில் நீ நான் என்ற பிரிவினைகள் எதற்க்காக..

அறிவியலில் உயர்வது முக்கியம் அல்ல
உன் அறிவையும் உயர்த்த வேண்டும்.

விழுகின்ற வெடிகளுக்கும் தெரிக்கின்ற செல்களுக்கும்
சிறு குழந்தை என பாரபட்சம்பாக்குமா என்ன

சிறு குழந்தை கை ஏந்துகிறது
வாழ்க்கையை வாழ விடுங்கள் என்று
வாழாதே இறந்து போ என்று சொல்ல நீ யார்

மனித நேயத்தோடு வாழ பழகு
மற்றவர்களை அழித்து வாழாதே!!!