Author Topic: வெள்ளிரிக்காய் சாம்பார்  (Read 593 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
தேவையான பொருட்கள்


   

  • வெள்ளிரிக்காய் – 1
  • துவரம் பருப்பு – 1/2 கப்
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பில்லை – 4 இலை
  • மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
  • கொத்தமல்லி – கடைசியில் தூவ
  • எண்ணெய் – 1 தே.கரண்டி
  • கடுகு – தாளிக்க
செய்முறை


   

  • முதலில் துவரம் பருப்பினை பிரஸ்ர் குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.
  • வெள்ளிரிக்காயினை தோல் நீக்கி பொடிதாக வெட்டி கொள்ளவும். (விதைகள் இருந்தால் நீக்கிவிடவும்).
  • வெங்காயம் , தக்காளி மற்றும் கொத்தமல்லியை வெட்டி வைக்கவும்.பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.
  • ---------------------------------------
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெங்காயம், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • அதன் பின் தக்காளி, பச்சை மிளகாயினை போட்டு 3 நிமிடம் வதக்கி வெள்ளிரிக்காயினை போட்டு நன்றாக வதக்கவும்.
  • மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவிடவும்.
  • பிறகு வேகவைத்துள்ள துவரம் பருப்பினை சேர்த்து மேலும் 5 நிமிடம் வேகவிட்டு கடைசியில் கொத்தமல்லி தூவவும்.
  • இப்பொழுது சுவையான வெள்ளிரிக்காய் தால் ரெடி.
  • இதனை சாதம், சாப்பத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
  • குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இத்துடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
  • [/color][/size]


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்