Author Topic: தமிழ் அறிவு விளையாட்டு  (Read 25816 times)

Offline சிநேகிதன்

இப்பகுதியில் இடம் பெரும் பதிவுகள் யாவும் தமிழ் எழுத்துக்களிலேயே இருத்தல் வேண்டும்.

தமிழ் பாரம்பரியம் ,கலாச்சாரம், வரலாறு இவை யாவும் தொழில்நுட்ப உலகில் அழிந்து வருகிறது . தமிழை  பற்றியும் , தமிழர் பற்றியும் தகவல்களை நினைவூட்டும் வகையில் இப்பகுதியில் கேள்விகள் அமைய வேண்டும்.

இந்த பகுதியில் தமிழர் சார்ந்த ,தமிழ் வரலாறு சார்ந்த ,தமிழ் இலக்கணம் சார்ந்த   கேள்விகள் மட்டுமே இருத்தல் வேண்டும்.

ஒருவர் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டு  முடித்தபின் மற்றவர் கேள்விகளை தொடருவது இப்பகுதி அழகுபெற உதவும்.



குறிப்பு : இப்பகுதியை நேர்த்தியாகவும் அழகுறவும் வைக்க உதவுவது தமிழர்கள் நம் கடமை.
« Last Edit: January 28, 2013, 04:09:14 PM by சிநேகிதன் »

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #1 on: January 28, 2013, 04:10:01 PM »
முதலில் இப்பகுதியின் முழு அம்சமும் அனைவரும் உணர நான் முதலாவதாக கேள்விகளை தொடர்ச்சியாக கேட்கிறேன்.கேள்விகளை   சிவப்பு வர்ண எழுத்துக்களில் அமைய செய்வது நலம்.

ஐம்பெரும் காப்பியங்கள் எனப்படுவன யாவை?
« Last Edit: January 28, 2013, 04:16:33 PM by சிநேகிதன் »

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #2 on: January 28, 2013, 10:03:49 PM »
தமிழில் உள்ள காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் என்றும், ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் கூறுவர். ஐம்பெரும் காப்பியங்கள் என்றால், சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி,குண்டலகேசி போன்றவை அடங்கும். ஐஞ்சிறு காப்பியங்கள்,என்றால், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம், உதயணகுமாரா காவியம் ஆகும்.
« Last Edit: January 28, 2013, 10:47:49 PM by Varun »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #3 on: January 28, 2013, 11:44:58 PM »
பதினென் கீழ்கணக்கு நூல்கள் என்பன யாவை ? ( நூல் பெயர்களை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது )

Offline Bommi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #4 on: January 29, 2013, 01:00:54 AM »
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ,பதினென் கீழ்கணக்கு நீதி நூல்கள்,

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #5 on: January 29, 2013, 01:22:08 AM »
பொம்மி ,பதினென் கீழ்கணக்கு நூல்கள்  என்ற தொகுப்பில் அடங்கியுள்ள நூல்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.
« Last Edit: January 29, 2013, 04:16:32 AM by சிநேகிதன் »

Offline Bommi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #6 on: January 29, 2013, 01:49:34 AM »
இன்னா நற்பது, இனியவை நற்பது, கண்ணார்பது, கலவளி ந்ற்பது, அரிமதி தென்ன்னகம்,

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #7 on: January 29, 2013, 04:15:19 AM »
தாங்கள் சொன்ன பதிலில் 5 நூல்களின் பெயர்களே உள்ளன. 18 நூல்கள் இருக்க வேண்டும். முயன்று பாருங்கள் பொம்மி.

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #8 on: January 29, 2013, 01:12:56 PM »
பதினென்கீழ்கணக்கு நூல்கள்

1.       திருக்குறள்
2.       நாலடியார்
3.       நான்மணிக்கடிகை
4.       இனியவை நாற்பது
5.       இன்னா நாற்பது
6.       கார் நாற்பது
7.       களவழி நாற்பது
8.       திணைமொழி ஐம்பது
9.       திணை மாலை நூற்றைம்பது
10.    ஐந்திணை ஐம்பது
11.    ஐந்திணை எழுபது
12.    திரிகடுகம்
13.    ஆசாரக்கோவை
14.    பழமொழி நானூறு
15.    சிறுபஞ்ச மூலம்
16.    முதுமொழி காஞ்சி
17.    ஏலாதி
18.    இன்னிலை
கைந்நிலை

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #9 on: January 29, 2013, 01:16:27 PM »
எட்டுத்தொகை நூல்களின்  பெயர்களை குறிப்பிடுக . ( 8 நூல்கள் மொத்தம் )

Offline Global Angel

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #10 on: January 29, 2013, 01:34:08 PM »
       
1.நற்றிணை
        2.குறுந்தொகை
        3.ஐங்குறுநூறு
        4.கலித்தொகை
        5.அகநானூறு
        6.பதிற்றுப்பத்து
        7.புறநானூறு
        8.பரிபாடல்
                    

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #11 on: January 29, 2013, 02:07:40 PM »
மயில்  குளிரில் நடுங்குவதாக கருதி அதற்கு  போர்வை அணிவித்த தமிழ் மன்னன் யார் ?
« Last Edit: January 29, 2013, 02:09:18 PM by சிநேகிதன் »

Offline Bommi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #12 on: January 29, 2013, 02:12:41 PM »
பேகன்

Offline சிநேகிதன்

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #13 on: January 29, 2013, 04:01:34 PM »
திருவள்ளுவர் ஆண்டு என்பது என்ன ?

Offline Bommi

Re: தமிழ் அறிவு விளையாட்டு
« Reply #14 on: January 29, 2013, 05:26:08 PM »
திருக்குறள் இயற்றப்பட்டு ஏறக்குறைய இரண்டாயிரம் (2000) ஆண்டுகள் என்றும் இது கிறிஸ்தவ சகாப்தத்தின் முன் பகுதியை சேர்ந்தது எனவும் கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகளாரின் ஆராய்ச்சியின் விளைவாய் தமிழர் ஆண்டு நாட்காட்டி முறைக்கு திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்தப்படுகிறது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டாகிய கிறிஸ்துவிற்கு பின் தொடங்கும் ஆண்டில் இருந்து முப்பத்தொன்று (31) ஆண்டுகள் முன்னாக சேர்க்க வேண்டும்