FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Tejasvi on November 01, 2020, 03:04:34 PM

Title: இதிகாசங்கள் சொல்லும் வாழ்வியல்
Post by: Tejasvi on November 01, 2020, 03:04:34 PM

மகாபாரதம் குறுங்கதை :- குருகுலத்தில் ஒரு நாள் பாண்டவர் மற்றும் கௌரவர்களின்  குருவான துரோணாச்சார்யர், துரியோதனன் மற்றும் தர்மராஜனையும் அழைத்து ஒரு செயலை செய்யச் சொன்னார். ஊரை சுற்றி வந்து இந்த உலகில் எத்தனை  நல்லவர் மற்றும் கேட்டவர் இருக்கிறார்கள் என்று எனக்கு சொல்லவேண்டும் என்று கூறினார்.அவர்களும் ஊரை சுற்றி ஆச்சார்யாரிடம் வந்தனர், அப்போது துரியன் சொன்னான் எனக்கு எல்லோரும் கெட்டவராக தெரிகிறார்கள். ஒரு நல்லவரும் தென்படவில்லை.. தர்மராஜனோ எனக்கு எல்லோரும் நல்லவராகத்தான் தெரிந்தார்கள் ஒரு கெட்டவரும் தெரியவில்லை என்று கூறினார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் உலகத்தை நாம் என்ன கண்னோட்டதில் பார்க்கிறோமோ அப்படிதான்  நமக்கு தெரியும். நல்ல விதத்தில் பார்க்கிறதும் கெட்டவிதத்தில் பார்க்கிறதும். நீங்கள் சொல்லுங்கள் உங்கள் கண்களுக்கும் யார் எவ்வாறு தெரிகிறார்கள்? துரியன் அல்லது தர்மரா ?