Author Topic: ~ சீனப்புத்தாண்டு. சைனீஸ் லூனார் நியூ இயர்.. ~  (Read 590 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218408
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சீனப்புத்தாண்டு. சைனீஸ் லூனார் நியூ இயர்..




பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் சீனப்புத்தாண்டு வரும். அவர்கள் சந்திர நாட்க்காட்டியைப் பயன்படுத்துவதால் சந்திரப்புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகிறது. சீனர்களின் பண்டிகைகளில் புத்தாண்டே மிகவும் கோலகலமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

அன்று அவர்கள் குடும்பத்தினர் அனைவரும்
அமர்ந்து "ரீ யூனியன் டின்னர்" "பெரு விருந்து "என்று விதவிதமான பாரம்பரிய உணவுகள், பழங்கள் ஆகியவற்றை உண்ணுவார்கள். அதை கடந்த ஆண்டின் இரவு என அழைக்கிறார்கள். சீனர்கள் அதிஷ்டத்தைப் பெரிதும் நம்புகிறவர்கள். இந்த புத்தாண்டுக்காலத்தில் ஆரஞ்சு, மற்றும் சிகப்பு நிறத்தில் உள்ள கவர்களில் பணம், இனிப்பு வகைகளை ஒருவொருக்கொருவர்
அன்பளித்துக்கொள்கின்றனர்.

இப்புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறுகிறது. புத்தாண்டுக்கு முதல் நாள் பெருவிருந்து, அதிகாலையிலே எழுந்து விடுவர். இப்படி எழுவதை சௌ சூய் எங்கின்றனர்.இதனால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. புத்தாண்டு அன்று புதிய ஆடை அணிந்து கடவுளர்க்கும் நன்றியும், புத்தாண்டு சிறக்கவும் வழிபடுகின்றனர். இன்று வீட்டில் இருக்கும் துடைப்பம், முறம், குப்பைத்தொட்டி ஆகியவற்றை மறைத்து வைத்துவிடுகின்றனர். நல்ல வார்த்தைகளையே பேசுகின்றனர். ஐந்தாம் நாள் செல்வக்கடவுளை வணங்குகிறார்கள்.அன்று பிரர் வீட்டுக்குச் போவதைத் தவிர்த்து விடுகிறார்கள்.இதனால் குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் இருந்து செல்வக்கடவுளை வரவேற்கிறார்கள். தங்கள் பாரம்பரிய நம்பிக்கைகளைக்கடைபிடித்து மிகவும் சிறப்பாக சீனர்கள் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

சீன ஆண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. 12 விலங்குகள் கொண்டதில் இந்த வருடம் பாம்புஆண்டு ஆகும். பாம்பு சீன சோதிடத்தின் ஆறாவது குறி ஆகும். 1929, 1941, 1953, 1965, 1977, 1989, 2001, 2013, 2025, 2037 ஆகிய வருடங்கள் பாம்பு வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் அமைதியும், சிக்கனமும், சாகச குனமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

சீனர்கள் ஏன் 12 விலங்குகளின் பெயர்களை ஆண்டின் பெயராகச் சூட்டினர்?

அவர்களுடைய புராணத்தின்படி புத்தர் பூமியைவிட்டுப் பிரியும் வேளையில் எல்லா விலங்குகளையும் சந்திக்க அழைத்தாராம். ஆனால், வந்தது என்னவோ இந்தப் 12 விலங்குகள்தானாம். அதனால், அந்த விலங்குகளுக்கு நன்றிக்கடன் பாராட்டும் வகையில் அவை வந்து சேர்ந்த நேரப்படி வரிசைப்படுத்தி ஒவ்வொரு ஆண்டுக்கும் பெயர் சூட்டப்பட்டதாக ஒரு தொன்மம் உண்டு.
ஒன்று கூடி மகிழ்ந்திருக்கத்தான் விழாக்களும், பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன.
நமது நம்பிக்கைகளும் அதில் இணைந்து கொள்ள அது மறக்க இயலாத மகிழ்வைத்தரக்கூடிய
திருனாளாக அமைந்து விடுகிறது. இந்த பாம்பு வருடம் நமக்கும் வாழ்வின் நெளிவு சுளிவுகளைக் கற்றுத்தருவதோடு, மகிழ்ச்சியையும்
தரட்டும்.

Offline RAMji


Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218408
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/