Author Topic: கீச்சுகள்  (Read 772 times)

Offline Anu

கீச்சுகள்
« on: July 13, 2012, 02:40:01 PM »
தள்ளிப்போடுவதின் (அற்ப) சுகம் வேறெதிலும் இல்லை #சோம்பேறித் தனத்த எப்படி ’ஷோக்கா’ சொல்லுது பாரு பயபுள்ள. (அட, என்னையச் சொன்னேன்)

*

சண்டை போடுறதும் அதே வாய், சமாதானம் பேசுறதும் அதே வாய்.

*

தன் தோல்விகளை விட, மற்றவர்களின் வெற்றிகள் ஏற்படுத்தும் சஞ்சலமே அதிகம்.

*


எல்லா மௌனமும் கோழைத்தனம் அல்ல.


Offline Anu

Re: கீச்சுகள்
« Reply #1 on: July 13, 2012, 02:45:23 PM »
அவனை அவனாகவே வெளிப்படுத்த விரும்பாமல், வேறு ஒருவனாக நிறுவிக்கொள்ளத்தான் இத்தனை போராட்டமும்!

*


’இப்படி இருப்பார்கள்’ என்று நினைக்கும் எவருமே பெரும்பாலும் ’அப்படி இருப்பதில்லை’ # உடல், புத்தி, மனசு!

*

உறக்கத்தில் சூழும் மௌனம் ஓர் வரம்.

*

’அன்னையர் தினம்’ என அறியாத அன்னையரே அநேகம் பேர்!

*

’வாழ்த்த வயதில்லை’னு சொல்றவங்களே, வாழ்த்துறதுக்கு வயசைவிட மனசு ரொம்ப ரொம்ப முக்கியம்ப்பா!

*


ஆற்றங்கரையில் நாகரிகம் வளர்ந்தது அந்தக்காலம், சாயப்பட்டறைகள் வளர்ப்பது இந்தக்காலம்!

*


தாக்கவும், தற்காக்கவும் மௌனத்தைவிடச் சிறந்த ஆயுதமில்லை!

*

முன் முடிவுகளற்ற அணுகுமுறையில், பெரிதும் சிக்கல்கள் உருவாகுவதில்லை!

*


கேட்கிறவங்களுக்கு 'உண்மை பிடிக்காது' என்பதனாலேயே சொல்கிறவங்க 'பொய்' சொல்லுறாங்க!

*

கூழாங்கற்கள் பிறப்பதில்லை உருவாகின்றன!

*

உலகத்தில் ”பொழுதைப் போக்க” மெனக்கெடும் ஒரே உயிரினம் மனிதன்! # பொழுதுபோக்கு

*


கோபமே ஒரு கோழைத்தனம், இந்த லட்சணத்தில் ஒருவரிடம் இருக்கும் கோபத்தை வேறொருவரிடம் திணிப்பது அயோக்கியத்தனமன்றி வேறேதுமில்லை!

*

கோடிப்பேரிடம் பிடுங்கி, கொஞ்சம் தந்து மிச்சத்தை ஆட்டையைப்போட்ட லாட்டரிக்கு சற்றும் சளைத்ததல்ல கோடிஸ்வரனாக்க துடிக்கும் டிவி நிகழ்ச்சிகள்

*

எப்போதுமே பாராட்டியிராத ஒருவரை குறைமட்டும் சொல்லும் அதிகாரத்தை உங்களுக்கு யார் அளித்தது!?

*

யாரோ ஒருவர் செய்கையில் தவறாகவும், தான் செய்கையில் தவறு இல்லாததாகவும்படுகிறது. அதை நியாயப்படுத்தவும் மனம் விழைகிறது #மனிதன்

*


புன்னகைக்க வேண்டிய இடத்தில் புன்னகைக்க மறுப்பதின் மூலம் என்ன சாதித்துவிடப்போகிறோம்.

*


வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் ஜெயிக்கிறோம், தோற்கிறோம், கொண்டாடுகிறோம், கூப்பாடு போடுகிறோம், இறுதியாக மரணத்திடம் தோற்றுப்போக!

*

காதலனோடு ஓடிப்போவது குறித்து பேருந்தில் சப்தமாக விவாதிக்கும் பெண், உடன் பயணிக்கும் அம்மாக்களுக்குள் இனம்புரியா பயத்தை திணிக்கிறாள்.

*

கனவின் நீளத்தையும், காட்சிகளையும் நான் தீர்மானிக்க முடிவதில்லை, அது நான் காணும் கனவுதான் என்றபோதிலும்!

*


கடைசி நிமிசத்துல 'திக் திக்'னு ரயிலைப் பிடிக்கிறவங்களுக்காகவேதான் ரயிலு அப்பப்போ லேட்டா வருது போல! :)

*


சில முட்டாள்தனங்களைக் காண கருணையற்ற கோபம் வருகிறது. அதை முட்டாள்தனமாக நினைப்பது, நம் தவறாக இருக்கும் பட்சத்தில் கோபம் முட்டாள்தனமாகிறது.

*

என் தலைமுடியைப் பாராட்டினார் மதுரை ஆதீனம்-நித்தியானந்தா # பாஸ், நீங்க ’எர்வாமாடின்’ பயன்படுத்துற ரகசியம் அந்தப் பெருசுக்கு தெரியலபோல! :)

*

தேர்வு எழுதியவுடன் மறந்துபோகும் மந்திரத்தோடே, வடிவமைக்கப்பட்டுள்ளன நமது பாடத்திட்டங்கள்.

*


ஒவ்வொன்றிற்கும் 'தயார் படுத்துதலே' வாழ்க்கை எனப்படுகிறது!

*

மன்னிப்பை விட மிகப்பெரிய மருந்து ஏதுமில்லை # கேட்கையில், கொடுக்கையில்!


Offline Anu

Re: கீச்சுகள்
« Reply #2 on: September 10, 2012, 07:33:52 AM »
செத்துவிடக் காரணம் தேடுபவனுக்கு, வாழ்ந்துவிடக் காரணமா கிடைக்காது # தேடு.. அம்புட்டுதான்

~

சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் ”கடந்து போதல்”

~

உண்மைகள் கடினம்தான், மறப்பதில்லை. பொய்கள் எளிதுதான், மறக்காமல் சுமக்க வேண்டியிருக்கிறது.
சட்டம் தன் கடமையைச் செய்ய ’காவு’ கேட்கிறது, ஒவ்வொரு முறையும்!

~


குற்றங்கள் பழையதுதான்... செயல்படுத்தும் விதம் மட்டும் புதியதாய்! #வளர்ச்சி!

~


தேயும் இரவில் உறக்கம் நிரம்புகிறது!

~


நமக்குப் பிறகு பிறந்ததுதானே "பிரச்சினைகள்"

~

தடுமாறித் தவித்து ஒருவர் உங்கள் கையை தேடுகையில், அவருக்குத் தேவை உங்கள் கை மட்டுமே, அதில் உங்களுக்கிருக்கும் தன்னம்பிக்கை, திறன், தகுதி அல்ல!

~


அலுப்பை அணிந்திருப்பதைவிட, செயற்கையான உற்சாகத்தைச் சுமப்பதே மேல்!

~

தன்னிடமிருப்பதைக் கொண்டு தனக்குத் தேவையானதை வடிவமைத்துக் கொள்பவனிடம் புலம்பலை விட படைப்புத்திறன் மிகுந்திருக்கும்

~


உன்னை உன்னைவிட யாரும் நல்லா வெச்சுக்கமுடியாது!

~

உனக்கு நீ என்னவோ செய்துகொள், இன்னொருவன் மேல் வஞ்சகமாய், வன்முறையாய் ஒன்றைத் திணிப்பதுதான் சகிக்க முடியாத குற்றம்.

~

சம்பிரதாயங்களுக்கு எனச்செய்பவைகளில் என்ன உயிர்ப்பு இருந்துவிடப்போகிறது?