FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: SweeTie on October 08, 2020, 10:33:28 PM

Title: சவாலே சமாளி !!!
Post by: SweeTie on October 08, 2020, 10:33:28 PM
     மோகன் ..... பெயருக்கு ஏற்றாப்போல்  பெரிய   அழகன்  இல்லையென்றாலும்   அவனுள் எதோ ஒரு ஈர்ப்பு  சக்தி இருந்தது.     நடுத்தர கருமை   என்று சொல்லலாம் அவனது நிறம்.    ஆமாம்  கருமை என்று சொல்லும்போது   நீங்கள்   கரிக்குருவி  நிறம்  என்று எண்ணிவிடக்கூடாது   என்றுதான்  அப்படி சொல்கிறேன்.  ஆண்கள் கொஞ்சம்  கருமையாக இருந்தால்தானே  பெண்களுக்கும்  பிடிக்கிறது.    அதிலும்   அவன் கொஞ்சி கொஞ்சி பேசும்போது  அவன் கண்களும் அல்லவா பேசும்.    எல்லாப் பெண்களுடனும் பேசும்போதும்  இப்படிதான்  பேசுகிறானா   அல்லது என்னுடன் மட்டும்தானா  என்று எனக்கு அடிக்கடி  சந்தேகம் வருவதும் உண்டு.    இருந்தாலும்  அவன் மனசு  நொந்துவிடக்கூடாது என்று நான்   அவனிடம் கேட்பதே இல்லை.   

     அவனும் நானும் முதன் முதலில் சந்தித்தது  ஒரு ரயில் பயணத்தில்.   அன்று ரயிலில்   ஒரே கூட்டம்.  இருக்க  இடம் கிடைக்கவில்லை.   அந்த நெரிசலில்  நின்று நின்று  எனக்கு கால் மரத்துவிட்டது.  இப்போதெல்லாம்  பெண்கள்  நிற்கிறார்களே என்று யாருமே   சீட்  கொடுப்பதில்லை.    அழகான பெண்களாய்  இருந்தால்    நெருக்கி  உட்க்கார்ந்து   பக்கத்தில் இடம் கொடுக்கிறார்கள்    இல்லை என்றால்  வயது  பாட்டிகளாய் இருக்கவேண்டும்.    அதுவும் சில வேளைகளில்  கொஞ்சம் கஷ்டம்தான்.  அப்படியாயின் ஏன் எனக்கு  யாரும் கொடுக்க முன்வரவில்லை என்றுநீங்கள் யோசிக்க கூடும்.  நான் பெரிய அழகி ஒன்றும் கிடையாது.   சுமாரான  அழகுதான்.   எனவே தன யாருமே கண்டுகொள்ளவில்லை போலும்.   

      நமது பெரியவர்கள் சொல்வார்கள்   நல்லவர்களை ஒருபோதும்  கடவுள் கைவிட மாட்டார் என்று .   அப்படி என்னையும்  கடவுள் கைவிடவில்லை என்றுதான் சொல்லவேண்டும் . ஆம் அந்த  அதிர்ஷ்ட  தேவதை என்னை கண்டுகொண்டாள்.   எனக்கு முன்னால்  இருந்த சீட்டில்    புத்தகத்தில் மூழ்கி இருந்தான்  ஒரு இளைஞன்..  சற்றே அவன் தலை நிமிர்ந்தபோது நான் நிற்க முடியாமல்  நின்ற கஷ்டம்  அவன் கண்களில் தெரிந்ததுபோலும்.   
."இதில்  உக்காருங்கள்” என்று அவன் சீட்டை  எனக்கு கொடுத்துவிட்டு  அவன்  என் இடத்தில  நின்று கொண்டான்.  எனக்கு ஒரு பக்கத்தில் சந்தோசமாக இருந்தாலும்  அவன் மீது ஒரு  பரிதாபமும் ஏற்படத்தான் செய்தது.   தேங்க்ஸ்   என்று சொல்லிக்கொண்டு நானும்  உட்கார்ந்தேன்.

     ரயில்  ஓடிக்கொண்டிருந்தது.   அவன் நின்றபடியே  புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தான்.  நான் அவனை அளந்துகொண்டிருந்தேன்.  அவனை பார்க்கும்போது  நல்ல ஒழுக்கமானவனாக   இருப்பான் போல் தெரிந்தது.  வீணாக யாருடனும் அலட்டிக்கொள்ளவில்லை.    அதுவே எனக்குஅவன்மேல்   ஒரு பரிவு வர காரணமாயிற்று.  அடுத்த தரிப்பில்  எனக்கு பக்கத்தில் இருந்த மூதாட்டியும்   அவள்  மகளும்  இறங்கி கொண்டார்கள்.  நான்  அந்த இளைஞனிடம்  இதில் உக்காருங்கள் என்று சைகை காட்டினேன்   அவனும் உக்காந்து கொண்டான்.    அவன் ஏதும் பேசுவான் என்று எதிர்பார்த்தேன்.   அவன் புத்தகத்திலேயே  கருத்தாய் இருந்தான்.   எனது  பொறுமை எல்லையை மீறியது.   எனவே நானே பேச்சை ஆரம்பித்தேன்.   பின்னர் அவனும் பேசினான்.   இருவரும் பேசிக்கொண்டே சென்றதில்    எனது  தரிப்பு வந்ததும்   அங்கு ரயில் நின்றதும்  மிகவும் வேகமாக நடந்துவிட்டது போல் உணர்ந்தேன்.     Bye bye  சொல்லிவிட்டு நான் இறங்கி என் வீட்டை நோக்கி நடக்கலானேன்.   
என்னுடன் சேர்ந்து  அவன் நினைவுகளும்   போன் நம்பரும்  வந்து கொண்டிருந்தன.   இப்போதெல்லாம்   முதல்  சந்திப்பிலேயே   போன் நம்பர்   முகப்புத்தக  ஐ;டி   என்பனவற்றை  பரிமாறிக்கொள்வது வழக்கமாகிவிட்டதால்     அடுத்தடுத்த  சந்திப்புகள் மிகவும் இலகுவாக அமைந்துவிடுகிறது.  கைத்தொலை பேசியும்   முகப்புத்தகமும்   இருக்கும்வரை     பிரச்சனையே
இல்லை  என்றாகிவிட்டது.    .     ‘

      நாளடைவில்   எங்கள் காதல் ஓடும்    ரயிலுடன் சேர்ந்தே ஓடத்தொடங்கியது.    அடடா   என்னை பற்றி சொல்லவே மறந்துட்டேன் பாருங்க. 
நான்   ஒரு   செய்தியாளராக  வேலை செய்துகொண்டிருக்கிறேன்.   எனது பெயர்  நிர்மலா.  ஆனால் மோகன் என்னை செல்லமாக   நிம்மி என்றுதான் அழைப்பான். சிலவேளைகளில்  அதுவும்  சுருங்கி நிம்  என்றாகிவிடும்.   எனக்கென்னவோ  அவன் அப்படி அழைக்கும்போது ரொம்பவே பிடித்திருந்தது.  அவனின் இதயத்துள்  இருப்பது போன்ற பிரமை ஏற்படும்.   மனதுக்கு பிடித்தவர்கள்   இதயத்துள்  நுழைந்தவர்கள்  நமக்கு சூட்டும்  செல்ல பெயர்கள்  கொடுக்கும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை . அனால் மோகனை எப்படி சுருக்கி கூப்பிடுவது.   யோசிச்சு யோசிச்சு  என் மண்டையே  குழம்பிவிட்டது.   டார்லிங்கை  சுருக்கி  டாலு  என்று கூப்பிட பழகி கொண்டேன். .  .  சொல்லும்போதே எனக்கு அந்த நாள் நினைவு ஞாபகம் வருகிறது.  முதலில் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது   .பின்னர் அதுவே அவன் பெயராகிவிட்டதுபோல் உணர்ந்தேன். 

     நான்கு வருடம்   ரயில் பிரயாணத்தில்   கனவு கண்டுகொண்டிருந்த எங்கள்காதல் கனவாகவே  பறிபோய்விடும் என்ற  சூழ்நிலை  உருவாக ஆரம்பித்தது.
" டாலு  வீட்டுல  கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சுட்டாங்க  .   சீக்ரம் வந்து  என்னை  பொண்ணு கேளுங்க"
"நிம்   கொஞ்சம் டைம்  கொடுமா.   சீக்கிரமே   எங்க அம்மாவை  ஒத்துக்கவைக்கிறேன் ' மோகன்  கெஞ்சுவதை  பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

      மோகனின் வீட்டார்   திருமணத்துக்கு   எதிர்ப்பு தெரிவித்தார்கள்.   அதை மோகனால் தட்ட முடியவில்லை.    சாதி வெறி  மதவெறி  பிடித்த  நமது சமுதாயத்தில்   காதல் திருமணங்களுக்கு வழியில்லாமல் போய்விட்டது.     அவன் தங்கையை காரணம் காட்டி  எங்கள் காதலை  கொன்றுவிட்டார்கள்.    இதை  தாங்கிக்கொள்ள  முடியாத மோகன்    வேறு  ஒரு   நகரத்துக்கு   ட்ரான்ஸபெர்  வாங்கி கொண்டு  சென்று விட்டான்.  காதல் செய்யும்போது   இருக்கும்  உற்சாகம்    திருமணம் என்று வரும்போது  எங்கே போய்விடுகிறது.
அழு வதை  தவிர  எதுவும் தெரியவில்லை எனக்கு.. 
                                                                                                            ( தொடரும்......__)

 
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Stranger on October 09, 2020, 02:43:56 AM
miga nanraka ullathu jo next part. ethir paakiren appuram enna nadanthichu enru lol
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Hari on October 09, 2020, 08:07:03 AM
Super super azhagaana kadhal kadhai migavum suvaarasiyamaga irukirathu vazhthukal jo...👌👌👍
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: ரித்திகா on October 10, 2020, 08:08:25 PM
Jo bby kaathai interesting ah
Pore nerathule end card
Potingale..serial eh vida
Mosamaana seiyal bby ithu😔
Seekiram next part post pannungoo bby...
Me waiting 😉😘
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: SweeTie on October 11, 2020, 09:02:40 AM
( தொடற்சி ......._)

      நாட்கள்தான்  ஓடிக்கொண்டிருந்தன .   அனால்    அவனின் நினைவுகளும் பிரிவுகளும் என்னை விட்டு அகலவில்லை.       
" இனி அவனை நினைத்து பிரயோசனம் இல்லை.    நாங்க பார்க்கிற மாப்பிள்ளையை கட்டிட்டு சந்தோசமாக வாழ பழகிக்கொள்."  அம்மாவின் நச்சரிப்பு நாளுக்கு நாள்  அதிகரிக்கலாயிற்று.     அவர்கள்  சொன்னபடி  கேட்பதை தவிர   எனக்கும் வேறு வழி தெரியவில்லை.   
 
       தங்கராசு  எங்களுக்கு  தூரத்து சொந்தம்.   இதை தவிர வேறெதுவும் தெரியவில்லை.    எப்படி இருப்பாரா     என் உணர்வுகளை புரிந்து கொள்பவராக இருப்பாரா  ?  . என் மனதில் ஆயிரம் கேள்விகள்   ஆனால்  என் பெற்றோருக்கோ  எப்படியாவது  என்னை கரை சேர்த்துவிட வேண்டும்   என்ற   வைராக்கியம்.     பெண்கள் திருமணமானால்   கரை சேர்ந்துவிட்டார்கள்  என்று  ஒரு தப்பான அர்த்தத்தை   நம் சமூகம் புரிந்து வைத்தித்திருக்கிறது..    அவளுக்கும்  ஒரு இதயம் உண்டு என்பதை    யாருமே புரிந்துகொள்வதில்லை.  எனது பெற்றோர் விருப்பப்படியே   தங்கராசுவுக்கும்   எனக்கும் திருமணம் நடந்தேறியது..   மற்றவர்களை சந்தோஷப்படுத்தும்  திருமணத்தில்  நமக்கு என்ன சந்தோஷம் இருந்துவிட போகிறத.
 
        தங்கராசு நல்லவரா கெட்டவரா என்று  ஆராய்ச்சி  செய்யக்கூட  அவகாசம்  இல்லாமல் போய்விட்டது.   ஆனால்  அவரது நடவடிக்கை மூலம்  ஓன்று மட்டும் புரிந்துகொண்டேன்.     பெண்கள்  பிள்ளை  பெறும் யந்திரங்கள் என்னும்  கோட்ப்பாட்டை  கொண்டிருந்தார் என்பதுதான்.    அடுக்கடுக்காக  இரண்டு  குழந்தைகளுக்கு தாயாகிவிட்டேன் .  பேறு காலத்தில்  என்னை    கவனித்துக்கொள்ளாததால்   என் உடம்பில்  சோர்வு  தெரிந்தது.  அம்மா எத்தனையோ  தடவை  அவள் வீட்டுக்கு வரும்படி  கூப்பிட்டாள்     என் கணவருக்கு  அதில்  இஷ்டம் இல்லாததால்  நான் போகவில்லை.    அதன் பலன்  இப்பொது புரிகிறது.. 

        குழந்தைகளை  வளர்ப்பது  என்பது ஒரு பெரிய  பொறுப்பான  விஷயம்  என்பதை   உணர தொடங்கினேன்.    மேலை நாடுகளில்  கணவர்கள்  பிள்ளைகளை வளர்ப்பதற்கு மிகவும் ஒத்தாசையாக இருப்பார்கள். பெண்களுக்கு கிடைக்கும்  மகப்பேறு லீவு  போல  கணவர்களுக்கு   தந்தைவழி  லீவு கொடுப்பார்கள்.  எனவே குழந்தைகளை  இருவருமே   பார்த்து கொள்ளமுடியும்.   ஆனால் நம் நாடுகளில்  இன்னமும் பெண்கள்தான்  முழுமையாக செய்யவேண்டும்  என்ற ஒரு கட்டாய நிலை  தாண்டவமாடுகிறது. 

        அதுவும் இந்த காலத்தில்   குழந்தைகள் பாதுகாப்பு நிலையத்தில் சேர்த்துவிடலாம் என்றால்    பெரிய  தொகை  கேட்கிறார்கள்   ஒருவருடைய   வருமானம் அதற்கே போய்விடும் போல்   தெரிந்தது.   முன்னர்போல்  இப்போதெல்லாம்   உதவிக்கு   யாருமே வருவதில்லை.   அந்த காலம் மலையேறிவிட்டது.  அவர்களை எங்குமே தனியாக  அனுப்ப முடியாது.  தனியாக  விட்டுப்போகமுடியாது.    முந்திய காலத்தைப்போல   பக்கத்துவீட்டில் உள்ளவர்களிடம்   உதவிகூட  கேட்க முடியாது.    இதை  பற்றி  நாங்கள்  அடிக்கடி சிந்திக்கலானோம்.    கடைசியில்     வேறு வழியில்லாமல் நான் வேலையை  ராஜினாமா  செய்வது என்ற முடிவுக்கு வந்தோம்.
  “ இது நமது   பிள்ளைகள்  வாழ்க்கை.   நாம்தான் தீர்மானிக்கவேண்டும்'
எனது கணவரின்   பேச்சு எனக்கு   சரியாகத்தான் இருந்து.     

        அரை குறை ,மனத்துடன்  அன்று   எங்கள் ஆபிசுக்கு   சென்றபோது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.  பத்து வருடங்களாக நான் அங்கு வேலை பார்க்கிறேன்.   அங்கு வேலை செய்யும் அனைவரும் மிகவும் பாசமாகவும்   நெருக்கமாகவும்  பழகுவார்கள்.   அவர்களை விட்டு பிரிவதை என்னும்போது    கஷ்டமாகத்தான் இருந்தது.

        எனது நண்பிகள்  “ வேண்டாம் நிர்மலா   எல்லாம் கொஞ்ச காலம்தான்.   அப்பறோம் எல்லாம் சரியாகிவிடும்”  என்று   என்னை   ராஜினாமா கொடுக்கவிடாமால் தடுத்தார்கள்.   எனது நிலைமையை அவர்களிடம் எடுத்து கூறி கடைசியில்  என் ராஜினாமாவை   கொடுத்து வீடு வந்த சேர்ந்த  போது   எனக்கு  தொண்டையை அடை த்துக்கொண்டது கவலை. 
 “ நிர்மலா   நமது குழந்தைகள்  முக்கியம்.    கவலை  வேண்டாம்.    நான்  எல்லாம் பார்த்துக்கொள்வேன்”  என் கணவரின் ஆறுதல் வார்த்தைகள்  என்னை ஆசுவாசப்படுத்தின. 

         உத்தியோகம் புருஷ லட்சணம்  என்று  என் தாயார்  சொல்வதுண்டு.    புருஷர்களுக்கு  மட்டுமல்ல  பெண்களுக்கு,ம்தான் என்பது  எனது  அபிப்பிராயம்.       

என் கணவர்  வீடு  ஆபிஸ்   என்று   ஓடி கொண்டிருக்க நான்  குழந்தைகள்  வீடு  என்று  அடைந்து கிடந்தேன்.  காலம்  எவ்வளவு பிரமிப்பானது.   வெளியில் சுதந்திரமாக பறந்த  கிளியை   சிறகை வெட்டி கூட்டில் அடைத்ததுபோல் இருந்தது என் வாழ்க்கை.    அதிகமாக  வேலை பார்க்கும் பெண்கள்  எவரும்    இதை விரும்புவதில்லை  தான்.    இருப்பினும்   பெண்களாக பிறந்துவிட்டால்  சில சில   அர்பணிப்புகளை   கடந்து செல்லவேண்டியவர்களாகி விடுகிறார்கள்.
தங்கராசு   குடும்பத்தின் மேல் அக்கறையாகத்தான்  இருந்தார்.   கொஞ்சம் குடிப்பழக்கம்   இருந்தது.  எத்தனையோ தடவை   இதை விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.    ஆனால்  அவரோ  கேட்பதாயில்லை. குடிப்பழக்கம்  கூடியதே தவிர குறையவில்லை.    இதையும்  சகித்துக்கொள்ளவேண்டிய   கட்டாயத்துக்கு   தள்ளப்பட்டேன்.   

     பெண்களுக்குத்தான்  எத்தனை   சோதனைகள்.    பள்ளியில்  எழுதும் சோதனைகளைவிட  இவை அல்லவா பெரிய சோதனைகள்.   
   
       ஆனால் அந்த குடியே  அவருக்கு   எமனாக  மாறும் என   அப்போது  தெரிந்திருக்கவில்லை.   அன்று  அவரது  நண்பர் ஒருவரின்   பிரியாவிடை   பார்ட்டிக்கு  சென்றவர்  வரும் வழியில்        ஒரு  லாரி மோதி  அதிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.    செய்தி கேட்டு  நான் அங்கு சென்றபோது     அவர் உடலை  போலீசார்  ஆம்புலன்ஸ் இல்  ஏற்றிக்கொண்டிருந்தார். மதுபோதையில்   இருந்ததாக போலீசார் கூறினார்கள்    பதறிப்போனேன்.    செய்வதறியாது   புலம்பினேன்.    என்னையும் அதே ஆம்புலன்சில்  ஏற்றி சென்றனர். பின்னர்   அவர் உடலுடன்   வீடு திரும்பினேன்.   குழந்தைகள்  என்னை கட்டிக்கொண்டனர்.  பயத்தில்  நடுங்கி கொண்டிருந்தனர்.     அவர்களை அணைத்தபடியே  உறைந்துபோனேன்   என் வாழ்க்கை அஸ்தமித்து.    நான் மூச்சடைத்து போனேன். 
                                                                                     (தொடரும்.......)
                                                                                                               
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Darth Vader on October 11, 2020, 06:59:47 PM
கதையின் ஆரம்பத்தை படிக்கும் பொழுதே இறுதி வரை படித்து விட வேண்டும் என்று தோண்றியது. பெரும்பாலும் காதல் கதைகளின் முடிவு இவ்வாறாகத்தான் இருக்கிறது. ஒன்று குடும்ப பெருமைக்காகவும் அல்லது வேறு காரணங்களுக்காகவும் பெரும்பாலான காதல் கதைகள் முற்று பெறாமலே முடிந்து விடுகிறது. அனைவருக்கும் வெற்றியே அமைந்து விட்டால் தோல்வி என்ற வார்த்தைக்கு என்ன பயன். தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. தோல்வியை வெற்றியை மாற்றுவதற்கு பழகி கொள்ளும் போதுதான் நாம் வெற்றி என்ற இலக்கை எட்ட முடியும். நல்ல கதையின் தொடக்கம் இந்த கதையில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் ஜோ.
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Jack Sparrow on October 13, 2020, 06:57:38 PM
Arumai Arumai Sago....Ithe Thiruppangaludan Kathai Thodara En Vaazhthukkal :) :) :) :)
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: AgNi on October 13, 2020, 07:41:31 PM

அன்பு ஸ்வீட்டி  சகோதரியே !
உங்கள் கதையின் நடையும் மொழியின் லாவகமும்
மேலும் மேலும் படிக்கச் தூண்டுகின்றன !
குடும்பத்துக்காக காதலை தியாகம் செய்து
பிறருக்காக வாழும் பெண்கள் எண்ணிக்கை இங்கு ஏராளம் !
அத்தகைய பெண்களில் ஒருத்தி உங்கள் கதாநாயகி!
இந்த தொடர் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் தோழி !
 

Title: Re: சவாலே சமாளி !!!
Post by: SweeTie on October 14, 2020, 06:25:22 AM
  (தொடற்சி.....

அர்த்தமற்ற இந்த வாழ்க்கை எதற்காக?   என்னை நானே  மறுபடியும் மறுபடியும்  கேட்டுக்கொள்கிறேன்.  என் உயிரை விட்டு விடலாமென்றால்   முடியாத காரியம்.   என்னை நம்பி இரு குழந்தைகளை  இறைவன் அனுப்பிவிட்டான்.    பலரும் பலவிதமான   ஆறுதல்களும்    ஆலோசனைகளும்  சொன்னார்கள்.   கண்ணை கட்டி  காட்டில் விட்டது போல்  இருந்தது எனக்கு அடுத்தது  என்ன?   திரும்ப திரும்ப  இதே கேள்வியை என் மனம் கேட்டுக்கொண்டிருந்தது.    என்  பிள்ளைகள் மிகவும் சிறியவர்கள்.   இவர்களை  எப்படி  வளர்ப்பது.  மீதமுள்ள வாழ்க்கையை எப்படி  ஓட்டுவது  என்று என்மனம்   ஊசலாடிக்கொண்டிருந்தது

        எங்கோ வாசித்த ஞாபகம்   பெண்கள் மிகவும் தைரிய சாலிகள்.   எதையும் சாதிக்க துணிந்தவர்கள்.   இப்பொது இந்த வார்த்தைகளின் அர்த்தம்  எனக்கு  புரிந்தது.    என்னை நம்பி இருக்கும் இரண்டு உயிர்களை காப்பாற்ற வேண்டும்.   கடந்து போனவை  திரும்பி வராது.   தள்ளாடிய மனதுக்கு  ஒரு  ஆறுதல் கிடைத்தது   திரும்பவும் நான் ஒரு வேலை தேடவேண்டும் என்ற மனநிலைக்கு    உள்ளானேன்.   

          பெண்களை மேலும் கீழும்  வேடிக்கை பார்க்கும் சமுதாயத்தில்  வேலை கிடைப்பது   இலகுவல்லவே.    இருக்கும் தகுதிக்கு மேலாக   காலத்துக்கேற்ப  உடைகளும்  முக்கியமாகிவிட்டன    இன்னும் சொல்லப்போனால்  ஆறுமுழச்  சேலைக்கு  இப்போ யாருமே மதிப்பு கொடுப்பதில்லை.   மேலை  நாட்டு கலாச்சாரங்களுக்கு  நாம் அடிமையாகிவிட்டோம்.   .   வேலை கிடைத்தாலும்  அங்கும்  பல பல கஷ்டங்களை  அனுபவிக்கவேண்டிய  கட்டா யங்களும்  இருக்கத்தான் செய்கின்றன. தினமும்  படிகளை  ஏறி இறங்கி    கட்டிடங்களை  கணக்கிட்டுக்கொண்டிருந்தேன் .  கடைசியில்    ஒரு புண்ணியவான்   கருணைக்  கண்களை திறந்தான்

            பிறவிக்குருடனுக்கு   பார்வை கிடைத்தால்   கிடைக்கும்  சந்தோசத்தை  அடைந்தேன்.  நான்.    கடவுள் என்னை கைவிடவில்லை.   கடவுளை  ஒரு முறை பிரார்தித்துக்கொண்டேன் .     மீண்டும்   என்  உணர்வுகள்   சிறகடிக்க தொடங்கின.      என் சுதந்திரம் எனக்கு கிடைத்தது போல  உணர்ந்தேன்..   பிள்ளைகளை  பார்த்துக்கொள்ள  ஒரு  ஆயா வும்  கிடைத்தாள்   வாழ்க்கை சுமூகமாக ஓடிக்கொண்டிருந்தது.
 
          அன்று ஒரு சனிக்கிழமை.   வேலை லீவு நாள் 
“அம்மா  இன்னிக்கு பீச்  ககூட்டி  போங்கம்மா"    பிள்ளைகள்  அடம்  பிடித்தார்கள்   என் கணவரின்  இறப்புக்கு  பின் நாங்கள் எங்குமே போனதில்லை.   பாவம் குழந்தைகள்.    அவர்கள்  யாரிடம் கேட்பார்கள்.   
“:ஓகே  ஓகே   போவோம்:    என்றதும்  அவர்கள்  சந்தோஷத்தில் துள்ளி குதித்து  சீக்கிரமே புறப்பட்டும்   விட்டார்கள்   

         பீச்  வந்ததுமே  குழந்தைகள்  மணலில்  புரண்டு  விளையாட  தொடங்கிவிட்டார்கள்.   நான் அவர்களை வேடிக்கை  பார்த்துக்கொண்டு   இருந்தேன்.   மோகனுடன்  அந்த  கடற்கரை மண்ணில்  பேசிக் கழித்த நாட்கள்  என்  மனத்திரையில்  ஓடிக்கொண்டிருந்தது.     சிலருக்கு   வாழ்க்கை  கனவாகவே அமைந்துவிடுகிறது.    அந்த இன்பமான  நாட்களை எண்ணியபடியே  அவர்கள் வாழ்க்கை கழிந்தும் விடுகிறது.   
       .     
         தூரத்தில்  என்னை யாரோ  உற்று நோக்குவதாக தெரிந்தது.   எனக்கு யாரென்று  தெரியவில்லை. மனதில் கொஞ்சம்  பயம்  உண்டானது.    பிள்ளைகள்  அழைத்து கொண்டு   ஓடிவிடலாம் என்று  நினைத்தேன். அந்த  உருவம்  என்னை  நோக்கி நடந்து  வந்துகொண்டிருந்தது. கிட்டே .வந்ததும்         . 
   
 
 ‘நிம்மி என்னை தெரியவில்லையா "  என்கிறார்
எங்கேயோ  கேட்ட குரல் போல் தெரிந்தது.    மோகனாக இருக்குமோ   என் நெஞ்சு படபடத்தது. 
அடுத்த கணமே  என் பிரமைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது என்று என்னை  திட்டிக்கொண்டு
"சாரி   சார்  நீங்கள் யாரென்று  தெரியவில்லை"  என்றேன் 
:" நிம்மி   இன்னுமா  என்னை தெரியவில்லை"   என்றான்
என்னை ஒருதரம் கிள்ளி ப்  பார்த்துக்கொண்டேன்.    எல்லாம் நிஜம்தான்  போல் இருந்தது
"ஓ... மோகன நீங்களா ... எப்படி  பாறிவிட்டீர்கள்"   
:" என்னாயிற்று உங்களுக்கு    இப்படி மெலிந்து  ஆளே  மாறிவிட்டிர்கள்."'  மனதில் ஒரு தைர்யத்தை
ஏற்படுத்திக்கொண்டேன்
 . 
          மாறாக என்னையம்  குழந்தைகளையும்  உற்று உற்று பார்த்தான்.
":நிம்மி  .. சந்தோஷமாய் இருக்கிறாயா ? ...கணவரும் வந்திருக்கிறாரா?  , உங்கள் குழந்தைகளா ?
கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்.   எனக்கோ  ஓ வென்று  அவன் மடியில் படுத்து அழவேண்டும் போல் இருந்தது.  அடக்கிக்கொண்டேன்       
"நானும் குழந்தைகளும்தான் வந்தோம்"  .  என்றேன்.  ஆனால்  என் கண்கள் குளமாவதை  தடுக்கமுடியவில்லை.   மடை திறந்த வெள்ளம் போலானேன் .  மனதில் அடக்கி வைத்திருந்த  அனைத்தயும் அவனிடம் கொட்டி தீர்த்தேன்.    அவன்  திகைத்துப்போனான்.
                                                                                                 .(தொடரும்.....)                                               
 
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: ரித்திகா on October 14, 2020, 03:06:35 PM
Jo baby..
Oru sila Peningalin vaazhkaiyil
Nadakakudiya unmai nigalvai
Ungal
Kathaiyil vadivamaithulir ..
Romba sirappa poi kondu
Irukirathu ungal kathai..
Adutha thodarchiyai padikka
Aavalaga ullen...
Seekiram post pannidungo bby...
Vaazhthukal bby..
Keep going on..
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Darth Vader on October 14, 2020, 11:14:17 PM
தொடர்ந்து பயணியுங்கள் ஜோ. ஆர்வமுடன் கதையின் முடிவை எதிர்பார்த்து இருக்கிறேன்.
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Jack Sparrow on October 15, 2020, 06:51:58 PM
Sema Sago... :) Keep Rocking.., Waiting for 4th Episode
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Natchathira on October 16, 2020, 04:23:38 AM
மிகவும் சுவாரஸ்யமான கதை. தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள் அண்ணி. Good Bless you
(https://i.postimg.cc/v86h7P3v/just-keep-writing-dory.jpg)
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Dragon Eyes on October 17, 2020, 11:46:02 AM
very interesting story waiting for your next part
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: SweeTie on October 17, 2020, 08:49:55 PM
(தொடர்ச்சி........) 

      சில நிமிடம்  அங்கே அமைதி நிலவியது.      இருவருக்கும் எதை பேசுவது என்று தெரியாமல் நின்றோம்.1
“எப்போது திரும்பவும்  இங்கே வந்திங்க மோகன்”
“திருமணமாகிவிட்டதா மோகன்  ...எங்கே உங்கள் மனைவி
  என் அடுக்கடுக்கான கேள்விகள்  மௌனத்தை கலைத்தன. 
அவன் ஒரு    நமட்டு   சிரிப்பு சிரித்தான்.   அதில் ஆயிரம் அர்த்தங்கள்  தெரிந்தன.    இல்லை  என்று தலையை மட்டும்  ஆட்டினான்.   
 மோகன்   அவன்   தாயை இழந்ததையும்    பின்னர்  இங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறினான்.    வாழ்க்கை எப்படி  யெல்லாம் திருப்பி போடுகிறது    நினைக்கவே பிரமிப்பாக  இருந்தது  எனக்கு   
“எனக்கு  திருமணத்தில் இருந்த நம்பிக்கையே போய்விட்டது நிம்மி.   என் தேவதை  என் உள்ளத்தில் என்றும் வாழ்த்துக்கொண்டிக்கிறாள்.   அவள்  இடத்தில வேறு யாரையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை”’. 
 
        என்னையுமறியாமல்   என் கண்களில்  கண்ணீர் துளிகள்  வழிந்தோடின.
விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள்  ஓடிவந்தார்கள்.
“அம்மா   இந்த  அங்கிள்   யாரு மா”   என்று என்  மகன்  விஜி வினவினான்
நான் தடுமாறுவதை கண்ட மோகன்   அம்மாவின்  நண்பன்   என்று பதில் சொன்னான்,   மோகன்  குழந்தைகளுக்கு    ஐஸ் கிறீம் வாங்கி கொடுத்தான்.   அவர்கள் வாங்கலாமா என்று என்னை பார்க்க   வாங்கிக்கொள்ளுங்கள் என்றேன்.  பின்னர்  வாங்கிகொண்டார்கள்.  என் மகள்  ஜனனி   மோகனை  எற இறங்க  பார்த்துவிட்டு  முகத்தை திருப்பிக்கொண்டாள். .  ,மோகனுக்கு புரிந்தது   ஜனனிக்கு  அவனது    நீண்ட  தாடி மீசை  பிடிக்கவில்லை என்று.
" நான் இன்றைக்கே   ட்ரிம்   செய்துவிடுகிறேன்   ஓகே வா"  என்று அவள் கன்னத்தை தட்டியபடி சொன்னான்   ஜனனி   சிரித்துக்கொண்டே    ஓகே  என்றாள் .  நான்  சொல்ல  நினைத்ததை    ஜனனி   செய்துவிட்டாள்    என்று எனக்கு  உள்ளுக்குள்  சந்தோசம்தான்.
  . 
       மோகன்  முகத்தில்   சந்தோசம்  தெரிந்தது. நேரம்  ஆகிக்கொண்டிருந்தது.    வீட்டுக்கு போகலாம்  என்றேன்   பிள்ளைகளிடம்.   அவர்களும்  சரியென்று   "அங்கிள்  பை "  சொல்லிக்கொண்டு   புறப்பட்டார்கள்     

          அடிக்கடி  மோகனுடன் பேசுவது இப்பொது  பழக்கமாகிவிட்டது.    தொலைத்த  ஒரு பொருளை அடைந்த சந்தோசத்தை என்னால் உணர முடிந்தது.
என் பிரச்னைகளை அவனுடன்   பகிரும் போது  மிகவும் ஆறுதலாகவே இருந்தது.   அவனும்  என்னைப்போலவே உணர்ந்திருக்கலாம்   பிரிவுகள்  பல நேரங்களில்  நம்மை மிகவும் நெருக்கமாக்குகின்றன.   
   
         என் மகனுக்கு  ஆறாவது  பிறந்ததினம்.   அவனே போனில் மோகனுக்கு இன்விடேஷன்  அனுப்பி இருக்கிறான்.   மோகனும் வந்தான்.   விளையாட்டு பொருள்கள்   சாக்லேட்   வேறு வேறு இனிப்புகள் என்று  வாங்கி குவித்திருந்தான் . குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார்கள்.   மோகனிடம் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டனர்.   மோகனும் அடிக்கடி வீட்டுக்கு வந்து போக  ஆரம்பித்தான்.     இப்பொது அடுத்த சோதனை   ஆரம்பிக்கலாயிற்று.   அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள்  .மோகனையும் என்னையும் தப்பாக பேச ஆரம்பித்தார்கள்.     இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை   

        ஒரு பெண்  கணவனை இழந்தோ   பிரிந்தோ  இருந்தால்   அதற்கு பல பெயர்கள் சூட் டும் சமுதாயம்   அவளைப்பற்றி   கிஞ்சித்தும்  கவலை கொள்வதில்லை.   மாறாக அவளை  மாசு படுத்தவே  முனைகிறார்கள்
ஒற்றை தாயாக  வாழும்  ஒரு பெண்ணுக்கு  ஏற்படும்   கஷ்ட நஷ்டங்கள்   பற்றி  யார் கவலை கொள்ளப்போகிறார்கள்?  மாறாக  வசை சொல்ல  ஆயிரம்பேர் காத்திருப்பார்கள்.    பெண்களுக்கு மட்டும்  ஏன்  இந்த  நிபந்தனைகள் ?   
     
      அவனிடம்   இதை  எப்படி  நேரில் சொல்வது  என்று  தெரியாமல்  பலமுறை  யோசித்தேன் .   அன்று இரவு  போனில் பேசும்போது   நாசூக்காக   சொன்னேன்.   நிட்சயம்   அவன் புரிந்துகொள்வான்  என்று எதிர்பார்த்தேன். 
"நிம்மி  என்னை வரவேண்டாம்  என்று சொல்லாமல்   சொல்கிறாயா" என்று பளீர்  என்று  கேட்டான் மோகன்,    எனக்கு   கன்னத்தில்  ஓங்கி அறைந்தது போலிருந்தது. 
 
  "நான் மட்டுமில்லை   உனது வேறு நண்பர்கள்  யார் வந்தாலும்    இதையேதான் பேசபோகிறார்கள்.     நமது சமுதாயம்  மேலை நாட்டு   உணவுகள்    கலாச்சாரங்கள் என்பவற்றை  பின்பற்றினாலும்   இன்னும்  அடுத்தவன்  வீட்டு  படுக்கையறையை   எட்டிப்பார்ப்பதை   மறக்கவில்லை... நமக்காக   கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கையை  நாம்தான் வாழவேண்டும்"   என்றான்.
“அப்படியானால்     இந்த  கஷ்டம்  என் வாழ்நாள்   முழுவதும்  தொடருமா :?”    என்றேன் நான்  புரியாமல்
“நிம்மி   ஒவொரு கேள்விகளுக்கும்  இரண்டு விடைகள் உண்டு.   ஓன்று  ஆம்   மற்றது இல்லை.   இதில்   எதை   எடுக்கவேண்டும்  என்பது  அவரவர்    முடிவு.”   
மேலும்  என்னை  குழப் பினான் மோகன்.    எனக்கு    உலகமே சுற்றியது. 
  இரவு வணக்கம் சொல்லிவிட்டு  போநை  வைத்துவிட்டேன்.    அன்று இரவு  புரண்டு புரண்டு படுத்தும்  தூக்கம் வரவில்லை.  பதிலும் கிடைக்கவில்லை.    இரண்டு நாட்கள் அப்டியே கழிந்தன.
,மூன்றாம் நாள்  மோகன்  போனில்  கூப்பிட்டான்.
"  என்ன  முடிவு செய்தாய்"
" என்னால்  எதுவுமே  யோசிக்க முடியவில்லை"
" நிம்மி நீ ஏன் மறுமணம் செய்துகொள்ளக்கூடாது "திடீரென்ற   மோகன் கேட்டதும்   நான்  ஆடிப்போனேன்
" இல்லை  எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.   அவர்கள் வாழ்க்கை முக்கியம்
"  நடக்கிற   விஷயத்தை  பேசுங்கள்” என்றேன் 
.   
      பேச்சளவில் தான்  நமது சமுதாயம்   விதவைகளுக்கு மறுவாழ்வு அவசியம்  என்கிறார்கள்.   ஆனால்    நடைமுறை என்று வரும்போது  பின்வாங்குகிறார்கள்.   ஆனால்  ஆண்களுக்கு எந்தவித விதிவிலக்கும் இல்லை.    மனைவி இறந்துவிட்டால்   சீக்கிரமே  திருமணம் செய்யும்  ஆண்களைதான் பார்த்திருக்கிறோம்.  பிள்ளைகளை பார்த்துக்கொள்ள  யாருமில்லை  என்ற  ஒரு சாக்கு போக்கு வைத்திருப்பார்கள்.   என்ன உலகமடா இது.
                                             
                                                                                               (தொடரும்......_),
 
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Dragon Eyes on October 17, 2020, 09:53:38 PM
romba interesting ah poguthu  story avagu seruvagala mathagala nu therinjika arvama iruku. waiting for ur next episode. very nice story
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Jack Sparrow on October 17, 2020, 10:33:32 PM
:)Arumai Sago
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Darth Vader on October 18, 2020, 09:58:41 PM
இக்காதயில் வரும் பெண்ணை போன்றே பல கைம்பெண்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகத்தான் உள்ளது. கைம்பெண்கள் மறுமணம் செய்வது கொள்வதை கூட ஏற்றுக்கொள்ளாத சமுதாயத்தில் தான் நாம் வாழந்தது கொண்டு இருக்கிறோம் என்பதை நினைக்கயில் இன்னும் எத்தனை சீர்திருத்த வாதிகள் வந்தாலும் இந்த சமுதாயம் திருந்துமா என்ற கேள்வி தான் எழுகிறது. மனிதர்களின் இயல்பே மற்றவர்களின் குறையை ஆராய்வதில் தான் இருக்கிறது. எப்போது மனிதன்  தான் குறையை ஆராய்ந்து தன்னை சீர் திருத்தி பொதுநலத்தோடு வாழகிரானோ அப்போதுதான் இந்த மனித சமுதாயம் சீர் பெற முடியும். உங்கள் கதையின்  இருதி பகுதியை ஆர்வமுடன் எதிர் பார்த்து இருக்கிறேன் ஜோ.
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Hari on October 19, 2020, 07:27:04 AM
அருமை அருமை ஸ்வீட்டி , உங்கள் கதை ரொம்ப சுவாரசியமாக செல்கிறது இது வரை ஸ்வீட்டி  ஓரு கவிதாயினி என்று தான் நினைத்திருந்தேன் ஆனால் இப்போது நீங்கள் ஓரு நல்ல கதை ஆசிரியை என்பதை வெளிப்படுத்தி இருக்கீங்க, வாழ்த்துக்கள் நீங்கள் இந்த பதிப்பில் கூறியதுபோல் ஆண்கள் ஏதாவது காரணம் கூறி சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால் பெண்கள் தன் வாழ்க்கையை பெற்ற பிள்ளைகளுக்காக அவர்களின் ஏதிர்காலத்தை நினைத்து  தியாகம் செய்கிறார்கள் அதனால் தான் தாயை தெய்வத்திற்கு மேல் முதல் இடத்தில் வைத்து போற்றி வணங்குகிறோம், தாய்க்கு நிகர் இவுலகில் எதுவும் இல்லை, வாழ்த்துக்கள் தோழி அடுத்த பதிப்பிற்காக காத்துகொண்டு இருக்கிறோம்...
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: AgNi on October 19, 2020, 10:54:08 AM


அன்பு சுவீட்டி sis  !
இந்த  சமுதாயத்தின் சாப கேடுகளில் ஒன்றான கொந்தளிப்பை தங்கள் வரிகள் பிரதிபலிக்கின்றது..மிகவும் அழகான உங்கள் எழுத்து நடை மேலும் அழகு சேர்கின்றது ! தொடரட்டும் உங்கள் எழுத்து பணி!வாழ்த்துக்கள் ! 

Title: Re: சவாலே சமாளி !!!
Post by: SweeTie on October 19, 2020, 08:25:39 PM

 
(தொடற்சி ........_)

  "நிம்மி  என்ன பதிலையே காணோம்"   என்றான் மோகன்
" என்னிடம்   பதில் இல்லை " என்றேன்
“அப்படி என்ன நடக்காத விஷயத்தை கேட்டுவிட்டேன், அப்படியானால்   இப்போ நேரடியாகவே   கேட்கிறேன்   என்னை திருமணம் செய்துகொள்கிறாயா" என்றான்
எனக்கு மயக்கமே வந்துவிட்டது.   
" என்னது  உங்களையா"   என்றேன்.
" ஏன்  நான் உனக்கு ஏற்றவன் இல்லையா?"
" மோகன்  நடக்கிற விஷயமாக பேசுங்கள்.  நீங்கள் வாழவேண்டியவர்."  என்றேன்.
" வாழ்வதற்காவே தான்   கேட்கிறேன்:"  என்றான். 
 
       “நிம்மி   நான் மிகவும் நன்றாக  யோசித்துதான்   இந்த முடிவுக்கு  வந்தேன்
இருவரும்  காதலர்களாக  இருந்தோம்  ஒரு காலம்.     .திருமணம் செய்ய தவறி விட்டோம். ஆனால்  இன்னும் உன் நினைவுகள் என் கூடவே .இருக்கின்றன.    வேறு  யாரையும்   கட்டிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை  மனசுக்குள்   ஒருத்தியுடன்  வாழ்ந்துகொண்டு   வெளியில்   மற்றவர்களுக்காக  வேறொருத்தியுடன்    வாழ்வதில்  எனக்கு  இஷ்டமில்லை.   அதனாலேயே நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.    உனக்கு பிடித்தால்  எனக்கு  பிடித்தவளுடன்   வாழ்ந்துவிட்டு போகிறேன்.    இல்லையென்றால்  இப்படியே  இருந்துவிட்டு போகிறேன்”    என்றான். 

           என் காதுகளையே என்னால் நம்பமுடியவில்லை .  என்  உடம்பில்   ஒரு பதற்றம்   தெரிந்தது.  பதற்றம் என்பதை விட  குற்ற உணர்வு என்றுகூட சொல்லலாம்.  இப்படியும் ஆண்கள்   இருப்பார்களா?       ஆண்களைப்பற்றிய  என் தப்பான  அபிப்பிராயம்   என்னை குத்திக்காட்டியது. 
   
        ‘ சில நேரங்களில்   மற்றவர்களை  சந்தோசப்படுத்துவதற்காக   சில தப்பான முடிவுகளை  எடுத்து  நம்மை நாமே  சீரழித்துவிடுகிறோம் .   நமது வாழ்க்கை யை  நாம்தான் வா.ழவேண்டும். மற்றவர் நம்  வாழ்க்கையை  வாழ  அனுமதித்தால்  ஆபத்து நமக்குத்தான்' எங்கோ  படித்த வரிகள் என் ஞாபகத்தில் வந்தன 
 
எங்கிருந்தோ வந்த விஜி   போனை பறித்து  பேச தொடஙிவிட்டான் 
"அங்கிள்  ஏன் நீங்க வரல  நாங்க மிஸ் பண்றோம்"
"அம்மாவிடம்தான்  கேட்கவேண்டும் "  என்றான் மோகன்
விஜியிடம்  இருந்த போனை  பறித்து  நான்  பேசலானேன்.   
"மோகன்  அவர்கள் குழந்தைகள்.  எதற்கு   அவனிடம்  இதெல்லாம் " என்றேன்.
சரி சரி   குழந்தைகளோடு  பேசி   ஒரு முடிவுக்கு வாங்க "  மோகன்  போனை வைக்கும்  சத்தம்   கேட்டது.  அவனது குரலில்  ஒரு ஏக்கம்  தெரிந்தது .


      இந்த   கைத்தொலைபேசி   ஒரு தொல்லைபேசியாகி விட்டது.  மனதுக்குள் திட்டிக்கொண்டேன் . மோகன்  கூறிய  வார்த்தைகள்  என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன.  அப்படியானால் மோகன் இன்னும்  என்னை காதலிக்கிறானா?   எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஏன் எனக்கும்தான்  அவனை  மறக்க முடியவில்லையே!      இருந்தாலும்   இப்பொது   நான்  இரண்டு குழந்தைகளுக்கு   தாய்.   அத்துடன் ஒரு விதவை.    இதையெல்லாவற்றையும் தாண்டி  மோகன் என்மீது  அதே  காதலுடன்  இருக்கிறானென்றால்    ........என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.   முன்னர் இருந்த காதலைவிட   இன்னும்   பல  மடங்கு   அவன்மேல்  மதிப்பு  அதிகரித்தது.    பிள்ளைகள்  பெறுவதற்காகவே  திருமணம் செய்த  தங்கராசுவை விட    மற்றவன் பிள்ளைகளை  தனது  பிள்ளைகளாக  வளர்க்க முன் வந்த  மோகன்   பல படிகள்  உயரத்தில்  நிற்பதை   எண்ணி   என் கண்களில்   ஆனந்த கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.      கடவுள் எதிரே  வந்தது போல்  உணர்ந்தேன். 
   
  அன்று  தூங்கும்போது   குழந்தைகளிடம்  " நாம  ஒரு புதிய  அப்பா  வாங்குவோமா"  என்று கேட்டேன்
"வேணாம் வேணாம்"  என்று கத்தினார்கள்     எனக்கு   திக்   என்றாகி விட்டது
  குழந்தைகளுக்கு   பிடிக்கவில்லைபோல்  தெரிகிறது.    அப்படியானால்    எனக்கும்   வேண்டாம்.   எனக்கு அவர்கள் வாழ்க்கைதான் முக்கியம்      என்று நினைத்தேன்   .  ஆனால்  அவர்களின்   அடுத்த    கோரிக்கை  என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
" அம்மா  மோகன்   அங்கிளை  வாங்குவோமே " என்றான்  விஜி. எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
" எங்களுக்கு  அவரதான் பிடிச்சிருக்கு:  என்றார்கள்.
மோகன்  என் பிள்ளைகள் மனதில்  குடியேறிவிட்டான்  என்பதை நினைக்கும்போது எனக்கு சந்தோசம் இரட்டிப்பாகியது.   விடிந்ததும் மோகனுக்கு  ஒரு அதிர்ச்சி கொடுக்கவேண்டும் .  அன்று சுகமான தூக்கம் தழுவிக்கொண்டது.

        காலை 7 மணி வரை காத்திருந்து   என் சம்மதத்தை தெரிவிக்க   போன் செய்தேன்,   போன்   "சுவிட்ச்  ஆப்"  இல்  இருந்தது.    பலமுறைகள் போன் செய்தேன்   முடியவில்லை.     எனக்கு  ஓவென்று   அழவேண்டும் போல் இருந்தது.     மோகனின்  வீட்டை  நோக்கி  ஓடினேன்.   வீட்டின் வெளி வாயிலில்    பூட்டு போடப்பட்டிருந்தது.    கடவுளே   இது என்ன சோதனை . 
பக்கத்து வீட்டில் விசாரித்தபோது     காலையில் அவன்  வீட்டை  பூட்டிவிட்டு   ஊருக்கு போவதாக   ரயில்வே  ஸ்டேஷன்   சென்றதாக கூறினார்கள்.    ஓடிச்சென்று   ரயில்வே  ஸ்டேஷனை   அடைந்தபோது   அங்கு  நின்றுகொண்டிருந்த   ரயிலில்   மோகன்   எற  ஆயத்தமாய் நிற்பதை பார்த்தேன்.   என்னையுமறியாமல்   
:"மோகன்......:”.. என்று கூச்சலிட்டபடியே   பாய்ந்து சென்று   அவனை  தடுத்து  நிறுத்தி  அவனைக் கட்டிகொண்டேன்.   ரயில் ..கூ....வென்று கூவிக்கொண்டு    புறப்பட்டு சென்றுவிட்டது.   எனக்கோ  மேல்மூச்சு  கீழ்மூச்சு  வாங்கியது.   

"மோகன்  ஏன் இப்படி செய்தீங்க"   என்று கேட்டேன் கொஞ்சம் கோபத்துடன்
"இரவு முழுவதும் உனது  கால்  வரும் வரும் என்று காத்திருந்தேன்.   வரவில்லை.  உனக்கு சம்மதம் இல்லை என்று நினைத்து    ஊருக்கே சென்றுவிடலாம்  என்று நினைத்தேன்"  என்றான்  மிகுந்த வருத்தத்துடன்
" அதுக்குள்ள   அவ்வளவு அவசரசமா .   விடிந்ததும்  என்   சம்மதத்தை   சொல்ல போன் பண்ணினேன்.  உங்கள் போன் தொடர்பில்  இருக்கவில்லை : .எவ்வளவு   பதறிப்போனேன் தெரியுமா?" என்றேன்.
மோகன் என்னை  உற்று பார்த்தபடி   நின்றான் .  அவன் கண்களில் தெரிந்தது  காதலா?  கருணையா ?  ஆதங்கமா?
"வாங்க  வீட்டுக்கு போகலாம் "  என்று அவனையும்  அழைத்துக்கொண்டு   எங்கள் வீட்டுக்கு சென்றோம்.  குழந்தைகள்   மோகன்  பெட்டியுடன்  வந்ததை கண்டதும்  ஆனந்தமாய்  துள்ளி குதித்தார்கள். 
:" அங்கிள்   இனி எங்க வீட்டுல   இருக்கட்டும் அம்மா”  என்றார்கள்.    ,மோகனின் முகத்தில் மகிழ்ச்சி  கோடுகள்  தெரிந்தன.   மனதுக்கு பிடித்தவர்கள்   உடன்  இருந்தால்    என்றுமே    மகிழ்ச்சிதான்    அதே  மகிழ்ச்சியுடன்   ரெஜிஸ்ட்ரார்    ஆபிஸ்  சென்று      பதிவுத் திருமணம் செய்துகொண்டோம்.

                                                                        ( முற்றும் ...)   
 
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Stranger on October 20, 2020, 08:45:24 PM
 nanraka irukinrathu miga miga arumai ponkalu nadakira soozhnilai loves irukira soozhnilai patri nanrkala eluthi ulleerkal jo
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Hari on October 21, 2020, 07:27:35 AM
Super super sweetie kadhai romba  suvaarasiyamaga irundhathu super 😎😎😎 congrats....
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Dragon Eyes on October 21, 2020, 09:47:02 PM
Nice climax epadiyo rendu perum serthutagu
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Jack Sparrow on October 21, 2020, 09:55:29 PM
Arumai Sago.....Subamana Mudivu., Ithu pola pala Kadhaikal Ezhutha En Vaazhthukkal
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Natchathira on October 22, 2020, 03:46:53 AM
Beautiful ending. Thank you for the story Anni.

(https://i.postimg.cc/T3CsBNdh/ab122b4454bfdfbfe8542f3ca1697de4.jpg)
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Darth Vader on October 22, 2020, 03:40:01 PM
கதையின் முடிவு மகிழ்ச்சிகாரமானதாக அமைந்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இக்கதையில் இருந்து நான் பெற்று கொண்ட கருத்து இக்கதையில் வரும் பெண்ணை போன்று எத்தனையோ கைம்பெண்கள் வாழ்க்கையை இழந்து செய்வதறியாது விழி பிதுங்கி நிற்க்கிறார்கள். அவர்களுக்கும் நல்ல வாழ்க்கை  அமைய வேண்டும் அதற்க்கு இந்த சமுதாயம் மாற வேண்டும். இந்த இருபத்தி ஓராம்  நூற்றாண்டிலும் விதவை மருமணங்களை எதிர்க்க கூடிவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிபட்ட குறுகிய மனம் படைத்தவர்கள் பொதுநலத்துடன் சிந்திக்க துவங்கும் போது விதவை மருமணங்கள்  மட்டுமல்ல இன்னும் சமுதாயத்தின் சாப கேடாக இருக்கும் எத்தனையோ மூட பழக்க வழக்கங்களும் மறைந்து போகும். அப்படிபட்ட ஒரு சமுதாயம் நாம் வாழ்நாளில் ஏற்படா விட்டாலும் நிச்சயம் என்றாவது ஒரு நாள் இந்த பூமியில் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.

இன்னும் பல நல்ல கருதுள்ள மக்களின் சிந்தனையை தூண்ட கூடிய கதைகளை எழுத என் வாழ்துக்கள் ஜோ.
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: JoKe GuY on October 23, 2020, 08:36:39 PM
Good.. Keep it up
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: SweeTie on October 26, 2020, 05:52:21 AM
நன்றி  தோழமைகளே.    நீங்கள் தரும்   ஊக்கம் என்னை  மேலும்  எழுத தூண்டுகிறது.   
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Ninja on October 27, 2020, 04:39:50 PM
அருமையான தொடர் கதை ஜோ சிஸ் . I agree with Darth bro comments. எல்லாமே அவர் கரெக்ட்டா சொல்லி இருக்காரு. பெண்களுக்கு இந்த சமூகம் கொடுக்கும் அழுத்தம் ஏராளமானது. அதுவும் விதவை பெண்களுக்கும், விவாகரத்தான  பெண்களுக்கும் இந்த சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடுகளும், வேலிகளும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத நிலைமையில் உள்ளது. வெகு சிலர் மட்டுமே இந்த மூடத்தனத்திலும், பிற்போக்குவாதத்தில் இருந்தும் மாறுபட்டு முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர். உங்களின் கதை மாந்தர்களும் அப்படி அமைந்திருப்பது தான் இந்த கதையின் சிறப்பு.தொடர்ந்து இதுபோன்ற முற்போக்கு கதைகளையும், ஊக்கமளிக்கும் கதைகளையும் எழுதுங்கள் ஜோ சிஸ்
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: இணையத்தமிழன் on October 31, 2020, 06:29:39 PM
kathaiyoda arambathula neriya valigal niranji irunthalum mudivu inithavey mudinjithu arumaiyana kathai sweetie melum ninga pala kathaikal elutha vazhthukal
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: JKJ on November 01, 2020, 06:21:28 PM
Jo sis..

The ending of the story is good .. The decision they made was excellent.. keep it up sis :) :)
Title: Re: சவாலே சமாளி !!!
Post by: Stranger on November 03, 2020, 07:11:06 AM
     nanraaka irukinrathu.  life la onnu sernthularkal. kadasi la sariy yaarum avarkalai kulappa villai nanraga end