Author Topic: இல்லறம் அது நல்லறம்  (Read 2759 times)

Offline thamilan

இல்லறம் அது நல்லறம்
« on: September 11, 2011, 04:37:48 PM »
திருமணம் பெண்ணுக்கு அடிமை சாசனம், குடும்பம் சிறைதண்டனை என்றெல்லாம் இன்னும் பேசுகிறார்கள்.
சரி திருணம் வேண்டாம் மாற்றுவழி என்ன பதில் சொல்பவர் யாரும் இல்லை.

மேலை நாட்டிலாவது சுதந்திர பாலுணர்வு தான் என்று சொல்லுகிறார்கள்.அந்த துணிச்சல் கூட நம்பவர்க்கு இல்லை.

சுதந்திர பாலுறவின் விளைவு என்ன என்று பட்டறிந்து கொண்டார்கள். பால்வினை நோய்கள், எய்ட்ஸ்.
இந்த பயங்கர விளைவுகளை அனுபவித்ததால் அவர்கள் திருந்தத் தொடங்கினார்கள்.
இங்கே இருப்பவர்களோ மற்றவர் அனுபவங்களால் கூட பாடங்கள் படித்துக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.
சுதந்திர பாலுறவை கொள்கையாக கொண்ட கூட்டமொன்று இருந்தது. அவர்கள் ஹிப்பிகள்.
அவர்களில் பெரும்பாலோனோர் பால்வைனை நோய்களால் அழிந்து போனார்கள்.அந்த‌ இய‌க்க‌மும் அழிந்து போன‌து.

சுத‌ந்திர‌ பாலுற‌வு என்ப‌து ம‌னித‌ன் நாக‌ரீக‌மும் ப‌ண்பாடும் பெறாத‌ காட்டுமிராண்டி கால‌த்தில் இருந்த‌ ந‌டைமுறை.சில‌ர் மீண்டும் அந்த‌ காட்டுமிராண்டி வாழ்க்கைகே போக‌ ஆசைப்ப‌டுகிறார்க‌ள்.

ம‌னித‌ன் ம‌ற்ற‌ உயிரின‌ங்க‌ளை விட‌ உய‌ர்ந்த‌வ‌ன்‌. இத‌ற்கு கார‌ண‌ம் அவ‌ன‌து ப‌குத்த‌றிவு என்கிறார்க‌ள். இல்லை ம‌ற்ற‌ உயிரின‌ங்க‌ளுக்கும் ப‌குத்த‌றிவு உண்டு.

பூக‌ம்ப‌ம் ஏற்ப‌ட‌ப்போகிற‌து என்ப‌தை ம‌ற்ற‌ உயிரின‌ங்க‌ள் ப‌ல‌ம‌ணி நேர‌த்துக்கு முன்பே அறிந்து பாதுகாப்பான‌ இட‌ங்க‌ளுக்கு சென்றுவிடுகின்ற‌ன‌.ப‌குத்த‌றிவு பெற்ற‌ ம‌னித‌ன் தான் அதை அறிந்துகொள்ள‌ முடியாம‌ல் அக‌ப்ப‌ட்டு அழிந்து போகிறான்.

ம‌ற்ற‌ உயிரின‌ங்க‌ளை விட‌ ம‌னித‌னை பிரித்து உய‌ர்த்திய‌து, பாலுற‌வை அவ‌ன் ஒழுங்குப‌டுத்திக் கொண்ட‌ ப‌ண்பாடுதான்

திரும‌ண‌ம் என்ற‌ ச‌ட‌ங்கு எத‌ற்கு? விருப்ப‌ப்ப‌ட்ட‌ இருவ‌ர் சேர்ந்து வாழ்ந்தால் போதாதா? என்கின்ற‌ன‌ர் சில‌ர்.

விருப்ப‌ப்ப‌ட்டால் சேர்ந்து வாழ‌லாம் என்ப‌தில் விருப்ப‌ப்ப‌ட்டால் பிரிந்தும் போகலாம் என்ப‌தும் அட‌ங்குகிற‌து தானே.

இது ஒரு ப‌ல‌வீன‌மான‌ ப‌ந்த‌ம். அற்ப‌க் காரிய‌ங்க‌ளுக்காக‌வும் இது அறுந்து விட‌க் கூடும். இத‌ன் விளைவுக‌ள் விப‌ரீத‌மாக‌ இருக்கும். இத‌ன் ப‌லாப‌ல‌ன்க‌ளை பொண்ணே சும‌க்க‌ நேரிடும்.

மேலும் இந்த‌ உற‌வுக்கும் விப‌சார‌த்துக்கும் வித்தியாச‌ம் இல்லை.
திரும‌ண‌ ச‌ட‌ங்குக‌ள் உண்டாவ‌த‌ற்கு முன்ன‌ர் விருப்ப‌ப்ப‌ட்ட‌ ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் முறையே இருந்த‌து.போக‌ப்போக‌ இதில் பிர‌ச்ச‌னைக‌ள் உண்டாயின‌.பெண்ணோடு தொட‌ர்பு கொண்ட‌வ‌ன் அப்படி ந‌ட‌க்க‌வில்லை என‌ பொய் சொல்ல‌ ஆர‌ம்பித்தான்.
ஆணும் பெண்ணும் ஒழுக்க‌ம் த‌வ‌றியும் ந‌ட‌க‌க ஆர‌ம்பித்த‌ன‌ர்.

இத‌னால் ச‌மூக‌த்தில் பாதிப்புக‌ள் உண்டாக‌த் தொட‌ங்கின‌. இதை த‌டுக்க‌வே சான்றோர்க‌ள் திரும‌ண‌ம் எனும் ச‌ட‌ங்கை உண்டாக்கினார்க‌ள் என‌ தொல்காப்பிய‌ர் கூறுகிறார்.
 
        பொய்யும் வ‌ழுவும்
         புகுந்த‌ பின்ன‌ர்
         ஐய‌ர் யாத்த‌ன‌ர்
         க‌ர‌ண‌ம் என்ப‌
          (க‌ற்பிய‌ல் 4 )
   (ஐய‌ர்- ‍‍‍‍சான்றோர், க‌ர‌ண‌ம் -‍ ச‌ட‌ங்கு )

இருவ‌ர் கூடி வாழ போவ‌தை சமுதாய‌த்துக்கு அறிவிப்ப‌தே இந்த‌ ச‌டங்கின் நோக்க‌மாகும்.

இதனால் இவ‌ளை நான் அறியேன் என‌ ஒரு ஆண் பொய் சொல்ல‌ முடியாது.இணைக‌ளும் மாற‌முடியாது.

திரும‌ண‌ வாழ்வில் குறைக‌ள் சில‌ இருந்தாலும்  அத‌னால் ப‌ல‌ன்க‌ளே அதிக‌ம்.ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வ‌தை ச‌ங்க‌ கால‌த்தில் "க‌ற்பு" என்றார்க‌ள்.இல்ல‌ற‌ம் ஒரு ப‌ல்க‌ழைக்க‌ழ‌க‌ம். அதில் ஆணும் பெண்ணும் வாழ்க்கைக்கு தேவையான‌வ‌ற்றை க‌ற்றுக்கொண்டார்க‌ள்.
இது ஏட்டுக் க‌ல்விய‌ல்ல‌, அனுப‌வ‌க் க‌ல்வி.

ம‌னித‌ன் உற‌வுக‌ளை நேசிக்க‌லாம். அதில் பாராட்ட‌ ஏதும் இல்லை. இந்த‌ உற‌வுக‌ள் ர‌த்த‌ ச‌ம்ம‌ந்த‌த்தால் ஏற்ப‌ட்ட‌வை.என‌வே உற‌வுக‌ளை நேசிப்ப‌து ரத்த‌ தூண்டுத‌லால் ஏற்ப‌டுகிற‌து.

உற‌வுக‌ளைத் தாண்டி நேசிப்ப‌தை ஆண் பெண் உற‌வு தான் போதிக்கிற‌து.

திரும‌ண‌ வாழ்க்கை பெண்ணின் உரிமைக‌ளை ப‌றிக்கிற‌தாக‌ சொல்கிறார்க‌ள். திரும‌ண‌ வாழ்க்கை பெண்ணின் உரிமைக‌ளை ம‌ட்டுமா ப‌றிக்கிற‌து? ஆணின் உரிமைக‌ள் ப‌றிபோக‌வில்லையா?

அட‌ங்காம‌ல் திரியும் விட‌லை ப‌ச‌ங்க‌ளை இவ‌னுக்கு கால்க‌ட்டு போட்டால் தான் அட‌ங்குவான் என்று சொல்வ‌தில்லையா?

திரும‌ண‌ம் இருவ‌ர‌து உரிமைக‌ளையும் ப‌றிக்கிற‌து. பிற‌கு ஏன் திரும‌ண‌ம் என‌ கேட்க‌லாம்.சுத‌ந்திர‌த்தையும் உரிமைக‌ளையும் இழ‌க்க‌ க‌ற்றுக்கொள்ள‌த் தான்.
ம‌னித‌னுக்கு நூற்றுக்கு நூறு சுத‌ந்திர‌ம் சாத்திய‌ம் இல்லை. அது அபாய‌மான‌து. ம‌னித‌ன் த‌வ‌று செய்ய‌ அதுவே வ‌ழிவ‌குக்கும்.

ச‌மூக‌ம் என்ற‌ அமைப்பே ம‌னித‌ன் த‌ன் த‌னிப்ப‌ட்ட‌ உரிமைக‌ள் சில‌வ‌ற்றை தியாக‌ம் செய்ய‌ வேண்டும் என்ற‌ அடிப்ப‌டையில் உண்டாக்க‌ப்ப‌ட்ட‌து தான். இல்ல‌ற‌ம் என்ப‌து ச‌மூக‌த்தின் அடிப்ப‌டை அல‌கு.ம‌னித‌ன் இங்கே தான் தியாக‌ம் செய்யப் ப‌ழ‌குகிறான்.

அன்பு என்ற‌ சுட‌ருக்கு தியாக‌மே எண்ணெய்யாக‌ இருக்கிறது. தியாக‌ம் இல்லாம‌ல் அன்பில்லை, காத‌லில்லை. நான் எந்த‌ உரிமையையும் விட்டுக் கொடுக்க‌மாட்டேன் என்று சொல்லுப‌வ‌ர்க‌ள், அன்புக்கும் காத‌லுக்கும் அருக‌தை அற்ற‌வ‌ர்க‌ள்.
தியாக‌த்துக்கு த‌யாராக‌ இல்லாத‌வ‌ர்க‌ளே திரும‌ண‌த்தை வெறுக்கிறார்க‌ள்.

காத‌ல‌ர்க‌ள் திரும‌ண‌ம் இல்லாம‌ல் சேர்ந்து வாழ‌ முடியாதா? முடியும்.ஆனால் பாலிச்சை ம‌ட்டும‌ல்ல‌ காத‌லும் நாள‌டைவில் த‌ணிந்து போகும்.அத‌ன் பிற‌கு என்ன‌ ப‌ண்ணுவ‌து?
திரும‌ண‌ம் இல்லாம‌ல் இணையும் காத‌ல‌ர்க‌ளுக்கு பிற‌க்கும் குழ‌ந்தைக‌ளின் க‌தி?

இல்ல‌ற‌ம் என்ப‌து வெறும் பாலுண‌ர்வுக‌ளை த‌விர்ப‌த‌ற்காக‌ உண்டாகும் ப‌ந்த‌ம‌ல்ல‌. குடும்ப‌தை நிர்வ‌கிப்ப‌தால் நிர்வாக‌ திற‌மை, குடும்ப‌தை சும‌ப்ப‌தால் பொறுமை, பிர‌ச்ச‌னைக‌ளை தீர்ப்ப‌தால் ம‌ன‌வ‌லிமை. இவை அனைத்தும் இல்ல‌ற‌த்தால் ந‌ம‌க்கு கிடைக்கும் ப‌லாப‌ல‌ன்க‌ள்.

ம‌ண‌வாழ்க்கை ம‌னித‌னை தூய்மை ப‌டுத்துகிற‌து. ம‌ண்ணுத‌ல் என்றால் செப்ப‌னிடுவ‌து என்று பொருள். ம‌ண‌வாழ்க்கை ம‌னித‌னை செப்ப‌னிடுகிற‌து.
« Last Edit: September 11, 2011, 08:42:30 PM by thamilan »

Offline Yousuf

Re: இல்லறம் அது நல்லறம்
« Reply #1 on: September 11, 2011, 05:35:24 PM »
சிறப்பான பதிவு தமிழன் மச்சி திருமணத்தின் அவசியத்தை பற்றியும் திருமணம் இந்த காலத்தில் தேவை இல்லை அணுக்கும் பெண்ணுக்கும் பிடித்து இருந்தால் சேர்ந்து வாழலாம் என்று கூறுபவர்களுக்கு தக்க பதிலடியாகவும் அமைந்திருந்தது.

உங்களிடம் இருந்து அதிகமான தகவல்களை எதிர்பார்க்கிறேன் தமிழன் மச்சி...!!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இல்லறம் அது நல்லறம்
« Reply #2 on: September 11, 2011, 10:10:15 PM »
Quote
ம‌ண‌வாழ்க்கை ம‌னித‌னை தூய்மை ப‌டுத்துகிற‌து. ம‌ண்ணுத‌ல் என்றால் செப்ப‌னிடுவ‌து என்று பொருள். ம‌ண‌வாழ்க்கை ம‌னித‌னை செப்ப‌னிடுகிற‌து.

நல்ல பதிவு ... அனால் தமிழன் இன்னும் சிலர் திருமண வாழ்வு அடிமை படுத்தலாஹத்தான் இருக்கிறது .. ;) ;)


                    

Offline thamilan

Re: இல்லறம் அது நல்லறம்
« Reply #3 on: September 12, 2011, 11:42:06 PM »
ஏஞ்சல்
நீங்க சொல்லும் சில எல்லாவற்றிலும் இருக்கிறது. நான் இதை எழுதியதே அந்த சிலருக்காகத்தான்.
சிலரது திருமணம் அடிமைபடுத்தலாக இருப்பதற்கு காரணம் தியாக மனப்பான்மை இல்லாததே. அதாவது விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாமையே.அது ஆண், பெண் இருவரிடமும் உள்ளது தான்.
பெண்களை பொருத்தவரை ஆண்கள் ஒரு விசயத்தில் விட்டுக் கொடுத்தால் அவர்கள் ஒன்பது விசயத்தில் விட்டுக் கொடுப்பார்கள். ஆண்கள் ஒரு விசயத்தில் பிடிவாதமாக இருந்தால் பெண்கள் ஒன்பது விசயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள். இது பொண்களின் மனோதத்துவம்.
கணவன் மனைவி என்பது ஒரு வண்டியில் பூட்டப்பட்ட 2 மாடுகள். 2 மாடுகளும் ஒரே திசையில் ஒரே வேகத்துடன் ஓடினால் தான் வண்டி இலக்கை எட்டும். இதற்காகவே பெண் ஆண் இருவரையும் திருமணம் என்ற வண்டியில் பூட்டுவது.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இல்லறம் அது நல்லறம்
« Reply #4 on: September 13, 2011, 01:22:10 AM »
 ;D ;D :D :D :D :D :D :D

Quote
பெண்களை பொருத்தவரை ஆண்கள் ஒரு விசயத்தில் விட்டுக் கொடுத்தால் அவர்கள் ஒன்பது விசயத்தில் விட்டுக் கொடுப்பார்கள். ஆண்கள் ஒரு விசயத்தில் பிடிவாதமாக இருந்தால் பெண்கள் ஒன்பது விசயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள். இது பொண்களின் மனோதத்துவம்.
[/b]