Author Topic: நாம் மிதக்கும் நகரங்களில் வசிப்போம்  (Read 321 times)

Offline Little Heart

எதிர்காலத்தில் நாம் மிதக்கும் நகரங்களில் வசிப்போம்! என்ன நம்ப முடியவில்லையா…? இதோ இந்த அறிவு டோஸைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பாரிஸ் நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2070 ஆம் ஆண்டுகளில் கடலின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படும் எனப்படுகின்றது. இதன் விளைவாக வானிலை மாற்றங்கள் மற்றும் உலகில் உள்ள கடலோர நகரங்களில் வெள்ளப்பெருக்கு எற்படும் என்றும் கூறப்படுகின்றது. இப்படி நடப்பதால் ஏறத்தாழ 150,000,000 மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் உள்ளது. இது எல்லாம் போதாது என்று 35,000,000,000,000 டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. எனவே, கடல் மட்டத்தில் வாழும் மக்கள் வேறு வழியே இல்லாமல் மேல் மட்டத்திற்குக் குடிபெயர்ந்து செல்ல வேண்டும்.

ஆனால் வின்செண்ட் கேலிபட் (Vincent Callebaut) என்னும் பெல்ஜியத்தைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஒரு புதுவித யோசனையை முன்வைத்துள்ளார். கடல் மட்டத்திற்க்குக் கீழ் வாழும் மக்களை இடம்பெயர்ப்பதற்குப் பதிலாக, நீரில் மிதக்கும் நகரங்களை வடிவமைத்தால் என்ன என்பது தான் அவரது புதுமையான யோசனை ஆகும். 2008 ஆம் ஆண்டு கேலிபட் இந்தத் திட்டத்தை தனது இணையத்தளத்தில் லில்லிபட் (Lilypad) என்னும் பெயரில் வெளியிட்டார். இந்த மிதக்கும் நகரத்தில் சுமார் 50,000 மக்கள் வாழக் கூடியதற்கு இடம் உண்டு. மேலும், லில்லிபட்டில் உணவு மற்றும் குடிநீர் உற்பத்திக்கு விசேஷமாக அமைக்கப்பட்ட நீர் பூங்காக்கள் உள்ளன. இதை விட மின்சக்தி பெறுவதற்கு சூரிய ஒளி ஆற்றல் மற்றும் காற்றுத் திறண் பயன்படுத்துவதே அந்தத் திட்டத்தில் உள்ள சிறப்பு. இப்படிப் பொதுவான நகரங்களில் என்னவெல்லாம் உள்ளதோ, அதை அனைத்தும் லில்லிபட்டிலும் அமைப்பதே அவரின் நோக்கமாகும்.