Author Topic: காதல் தந்த காயங்கள்  (Read 2706 times)

Offline DuskY

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 239
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Be happy in this moment this sec is our life
காதல் தந்த காயங்கள்
« on: July 15, 2021, 10:42:36 AM »
கல்லூரிக் காலம் என்பது அனைவரின் வாழ்விலும் வசந்த‌ காலமே.. புதிய கனவுகள்
புதிய நட்புகள் , பழக்கம் என நம் வாழ்வின் முக்கிய‌திருப்பு முறையாக அமைந்து
விடுகிறது.‌அன்று கல்லூரியின் முதல் நாள் செல்வி பள்ளிப்படிப்பு முடித்து உலக
அனுபவம் ஏதுமின்றி பேருந்து பயணம், புதிய  நட்பு என‌ அனைத்தும் புதிதாகவே
இருந்தது அவளுக்கு.அவளின் இந்த வெகுளியான‌ குணத்திற்குக் காரணம்
குடும்ப சூழலே .தந்தை கரடு முரடான குணம் உடையவர் குழந்தைகள்
குற்றம் செய்தால் சொல்லித் தருவதே பெற்றோர் வளர்ப்பு .ஆனால் செல்வியின்
தந்தை மற்றவர் முன் நின்று அவமானப்படும்படியாக குழந்தைகளைக் கண்டித்து
அவர்கள் மனது புண்பட்டே பழகிப் போனது. தாயோ மிக மன‌உளைச்சலுக்கு
ஆளானவர். பேச்சு வார்த்தை ,கற்றுக் கொடுப்பது,அண்ணன் தங்கை உறவு ,
அப்பா பிள்ளை உறவு என ‌எல்லாமே அவரது குணத்தால் பாதிக்கப் பட்டது.


பள்ளியில் நண்பர்கள் உடன் கூட செல்வி பேசிப் பழகி இருக்க மாட்டாள். ஏனெனில்
உலக அறிவு மிகவும் குறைவு எனவே அனைவரிடமும் பேசவே சிரமப் பட்டாள்
கல்லூரியின் முதல் வகுப்பு அன்று யாரேனும் தெரிந்தவர் இருந்தால் நன்றாக இருக்கும்  என வகுப்பிற்குள் நுழைகிறாள். அனைவரின் முதல் பார்வையிலேயே அவள் வெகுளியாகத் தென்பட்டாள். முதல் வகுப்பு என்பதால் அனைவரும் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டனர். யாரிடம் பேசுவதென்றே தயங்கி
அமர்ந்திருந்தாள். பேராசிரியர் பகுப்பினுள் வந்து அனைவரின் அறிமுகத்தை பெற
விரும்பினார்.அப்போது ஓர் குரல் நான் உள்ளே வரலாமா என அனுமதி‌‌ கேட்கவே,
செல்வியின் முகம் சற்றே மலர்ந்திருந்தது. அது அவள் பள்ளித் தோழி மலர் தான்.
அதன் பின் வகுப்பு முடிந்ததும் இருவரும் பேசிக்கொண்டனர்.அப்போதுதான் தெரிந்தது மலர் செல்விக்காவே அந்தக் கல்லூரியில் சேர்ந்தாள் என்பது. அதன் பின் செல்விக்கு மலரை மிகவும் பிடித்துப்போனது. பள்ளியில் அவளின் அமைதியான
குணத்தைக் கண்டே மலருக்கு செல்வியைப்பிடிக்கும்.இப்போது இருவரின்
அடுத்த கட்ட வாழ்க்கை இக்கல்லூரியில் இருந்தே ஆரம்பமாகிறது.


வகுப்பில் இருவரும் இணைந்தே அமர்ந்திருப்பர். செல்வி சற்றே குழந்தைத்தனமாக
நடந்து கொள்வாள். வகுப்பு நடக்கும் தருவாயில் கூட சிறு சிறு விளையாட்டுகளை
விளையாடுவர். இருவரின் இந்த போக்கு அனைவரின் ஆர்வத்தையும் பெற்றுத்தந்தது.‌ஏனெனில் வகுப்பில் மொத்தமே இருபது நபர்கள் மட்டுமே இருந்தனர்.‌ஆகையால் யார் எங்கு என்ன உரையாடினாலும் அனைவரும் கேட்கலாம்.மலருக்கு இரு சகோதரர்கள் எனவே அனைவரிடமும் எளிதாகப் பழகினாள். செல்விக்கு அவ்வளவு எளிதாக யாருடனும் பழக்கம் ஏற்படவில்லை.
அவளுக்கு மலரின் நட்பு வட்டங்களினால் சிறிது மனவருத்தம்.தன்னிடம்
பேச எவரும் ஏன் முற்படவில்லை என எண்ணத்தொடங்கினாள்.நட்பு கிடைக்க
வேண்டுமெனில் சிறிது பேச்சாற்றல் கூட வேண்டும் என்ற உண்மை புரிந்தது
அவளுக்கு.

 தினமும் காலையில் தன் தோழிக்காகவே விரைவில் கல்லூரிக்கு வரும் செல்வி
அன்றும் வந்து கொண்டிருந்தாள்.ஆனால் அன்றோ மலருக்கு புதிய நண்பர்களிடம்
நேரம் கழிக்க வேண்டி இருந்தது. அதனைக் கண்டு வருத்தம் அடைந்ந அவள்
கண்டு கொள்ளாதது போல் வகுப்பிற்குள் சென்று விட்டாள். மலர் அவளின்
சிறு பார்வைக்கு கூட அர்த்தம் புரியும். ஏன் அவ்வாறு சென்றாள் என்பதைப் புரிந்து
கொண்டாள்.தகுந்த சமயத்தில் அவளை அழைத்து உரையாடினாள்.பழக்கங்கள் என்பது உரையாடினால் மட்டுமே கிடைக்கும் மனித உறவு, நட்புகள் என்பது ஒவ்வொரு கட்டத்திலும் தேவையானது. கல்வி மட்டுமே வாழ்க்கை ஆகாது என்பதை அவளுக்கு உணர்த்தினாள். அதன் பிறகு அவளும் தன் நட்பு வட்டத்தை பெற விரும்பி
பழகத்துவங்கினாள். அவளின் சிறுபிள்ளைத்தனம் கூட சிலருக்கு மிகப்பிடித்திருந்தது. எளிமையான அமைதியான சுபாவம் ஆண் நண்பர்களைக்கூட
பெற்றுத்தந்தது.இனிதே அவர்களின் நட்பு வட்டம் அதிகரித்தது.எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்லும் பன்னிரண்டு பேர் அடங்கிய அவர்களைக் கண்டு சற்றே ஆச்சரியம். கல்லூரி வாழ்க்கையை இனிதே செலவிட்டனர்.............
     
         

                                                                          தொடரும்............
« Last Edit: July 19, 2021, 06:03:46 PM by Arasi »

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: காதல் தந்த காயங்கள்
« Reply #1 on: July 15, 2021, 02:25:45 PM »
வாழ்த்துக்கள் தோழி அரசி  👏
மிக அருமையான தலைப்பு 👍
எளிமையான வார்த்தைகள் 🤗
கதை மிகவும் எதிர்பார்ப்பை தூண்டுகிறது 🤗


அடுத்த பகுதிக்கு ஆவலாக உள்ளேன் 👍
மேலும் உங்கள் படைப்பை எதிர் பார்க்கும் உங்கள் அன்பு தோழன்
  YesKay  👼
« Last Edit: July 15, 2021, 02:27:49 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline DuskY

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 239
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Be happy in this moment this sec is our life
Re: காதல் தந்த காயங்கள் 2
« Reply #2 on: July 15, 2021, 06:31:50 PM »
இனிதான வாழ்க்கையில் சில கசப்பான சங்கடங்களும்
நடக்கத்தானே செய்யும் . மலர் மற்றும் செல்வி இருவர் நட்பு
 போன்றதுதான் மதிவண்ணன் மற்றும் சரத்தின் நட்பு . அதே வகுப்பில்
அவர்களுடன் படித்தவர்கள்.மதி மற்றும் மலர் இருவரின் பரஸ்பர
நட்பு அழகான ஒன்று. மதி அவளை எவ்வளவு எள்ளிநகையாடிய
போதும் மலரும் அவனுக்கு இணையாக பேசுவாள். அதேபோல்
செல்வி மற்றும் சரத்தின் நட்பும் சற்றே வித்தியாசமானது. இருவருக்கும்
தாய் தந்தை உறவின் அன்பு முழுதாய் கிடைத்ததில்லை. எனவே 
இருவருக்குள் அதீத பிரியமும் பரிந்து கொள்ளும் தன்மையும்
உண்டானது. ஆனால் செல்விக்கு அவனின் கேளிப்பேச்சும்
கிண்டலான பார்வையும் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
 
சரத் வீட்டி மூத்த பையன் . அடுத்து ஒரு சகோதரன் அவன் அன்னை
அவனுக்கு ஐந்து வயது இருக்கும் போது ஒரு விபத்தில் தீக்காயம்
ஏற்பட்டு இறந்தார். பின் அவர் தந்தை இரண்டாம் திருமணம் செய்து
கொண்டார். அதுவும் அவர் ஒன்றரை வயது குழந்தைக்காகவே. சிறு
வயதில் மாற்றாந்தாய் வளர்ப்பில் சற்று சிரமப் பட்டே வளர்ந்தவன் சரத்.
எனவே அப்பாவின் பிடியில் இருந்து தனித்து வாழ்வே விரும்பினான்.
சரத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் செல்வி அர்த்தம் புரிந்து வைத்திருப்பாள்.
இதுவரை ஆண் நட்பே கிடைத்திடாத செல்விக்கு சரத் மற்றும் மதியின்
நட்பு ஒரு வரமாக இருந்தது . அனைவரும் குழுவாகப் படிக்கும் பழக்கத்தை
மேற்கொண்டனர்.நாட்கள் செல்ல செல்ல சரத்தின் நடவடிக்கைகள்
 மாறத் துவங்கியது.அழகாக தென்பட்ட சரத் செல்வியின் நட்பு மாறியது.
செல்வி வேறு நபர்களுடன் பழகும் போது சரத்தின் முகம் மிகவும் வெம்பி
விடும். அவளின் பிரியம் தனக்கு மட்டும் என்பதை அழுத்தமாக அவளிடம்
கூறினான். அவளும் சரத்திற்கு என்ன உணவு பிடிக்குமோ அவற்றைக்
கற்று செய்து வருவாள். சில சமயம் அனைவரும் அவள் சாப்பாட்டை
அவளுக்கே தெரியாமல் காலி செய்வதுண்டு. இது எல்லா நட்பு
வட்டங்களிலும் நடப்பதுண்டு.அதன் பின் சரத் அவளை யாரிடமும்
பேச அனுமதிப்பதில்லை.அவளின் அனைத்து நேரங்களையும்
அவனுடனே செலவிட விரும்பினான். இவனின் இந்த போக்கு
மற்றவரின் நட்பையும் பாதித்தது. மலர் செல்வியின் நட்பும்
பாதிக்கப்பட்டது. அம்மா இல்லாததால் இப்படி நடந்து கொள்வான்
என அனைவரும்‌ அவன் போக்கிலே விட்டனர்.
காலையில் மலருக்காக நேரம் செலவிடும் செல்வி போல் தற்போது
செல்விக்காக கல்லூரிக்கு விரைவில் சென்றான் சரத். அவனிடம்
பழக பழக தனக்கே தெரியாமல் போன விஷயங்களை சரத்திடம்
இருந்து தெரிந்து கொண்டாள் . அவள் எப்போது கல்லூரிக்கு முதலில்
 புடவை அணிந்தாள், எந்த பேருந்திலிருந்து வரும்போது அவளின்
முதல் பார்வை பேச்சு தன்னிடம் வருமென அனுதினமும்
எதிர்பார்த்திருந்த விஷயங்கள் அனைத்தும் உரைத்தான்.
தினமும் சந்திக்கிற போது அவனின் முதல் பார்வையும்
மந்திரம் போன்ற சிரிப்பும் அவளுக்கு விசித்திரமாக இருந்தது.
தற்போதெல்லாம்‌ வகுப்பில் எதேர்ச்சையாகத் திரும்பினால்
கூட‌ சரத்தின் பார்வை அவளை நோக்கியே இருந்தது.
செல்விக்கு எதோ நடக்கப் போகிறது என்று மட்டும் புரிந்தது.
மலரை தனியே சந்தித்து பேச விரும்பினாள்.
  மலரிடம் அவனின் நடவடிக்கைகள் மற்றும் உரையாடல்கள்
பற்றிக்கூறினாள். ஆரம்பத்திலே சிறிது பொறி தன் கண்களில்
தென்பட்ட போதும் காட்டிக்கொள்ளாத மலருக்கு என்ன
நடப்பதென்று புரிந்தது.அவளுடன் முடிந்த வரை நேரம்
 செலவிட்டாள்.
செல்விக்கு ‌இது காதல் என்று புரிந்து கொள்ளவே
ஒரு வருடமானது. அதற்குள் சரத்திற்கு அவள்
மீதான பிரியம் அதிகரித்திருந்தது. இருவரும் என்ன
சண்டையிட்டு பேசாமல் இருந்தாலும் மறுநாள் காலை
கவலை தோய்ந்த‌ அவனது முகத்தைப்பார்த்ததும்
அத்தனை கோபத்தையும் மறந்து போவாள். அவளுக்கும்
சரத்தின் மீது அதீத‌பிரியம் . இதுவரை யாரிடமும் இவ்வளவு
பிரியமாகப் பழகியதில்லை அவள்.எப்போதும் போல் ஒரு
நாள் காலை வகுப்பிற்கு இருவரும் விரைவாக வந்திருந்தனர்.
அன்று காலை வந்த முதலே அவன் செல்வியை விட்டு
 நகரவில்லை. சரத் ,செல்வி ,மலர் மூவர் மட்டுமே இருந்த
வகுப்பில் அவனது நடவடிக்கைகள் புரிந்து கொண்ட மலர்
நூலகத்திற்கு செல்வதாகக்கூறி சென்றுவிட்டாள்.
அன்றுதான் அவன் கண்களில் அவ்வளவு காதலை அவள்
 பார்க்கிறாள். எங்கே சொல்லி விடுவானோ என்ற பயத்துடனே
உரையாட ஆரம்பித்து ஏதோ கேளி கிண்டலுக்கு ஆளானாள்.
அதில் அவனை விளையாட்டாக அடிக்கச் சென்றவள் கைகளை
அவன் இறுகப்பிடித்துக் கொண்டான் . முதல் முறை நாணம் வந்த
அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.தினமும்
இவ்வாறு அவளுடன் இனிமையான நினைவுகள் சேகரிக்கவே
விரும்பினான் சரத். செல்வியோ அவனின் காதல் புரிந்தும்
கேட்டு விட்டால் என்ன கூறுவது என்ற பயத்துடனே
இரண்டாம் ஆண்டு படிப்பு முடிந்து போனது......
                   தொடரும்.........

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: காதல் தந்த காயங்கள்
« Reply #3 on: July 15, 2021, 11:48:29 PM »

செம்ம வாழ்த்துக்கள் அரசி 👏
விறுவிறுப்பான கதை சொல்லும் பாங்கு மிக அருமை 👍
அடுத்த பகுதி எப்போது வரும் 👼



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline DuskY

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 239
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Be happy in this moment this sec is our life
Re: காதல் தந்த காயங்கள் 3
« Reply #4 on: July 17, 2021, 01:21:13 PM »
இரண்டு வருட வசந்த கால கல்லூரி வாழ்க்கை சிறிது சிறிதாக மாறத் துவங்கியது .ஒவ்வொரு விழா கல்லூரியில் நடக்கும் போதும் அனைவரும் இணைந்து
செயல்படவே விரும்புவர். விழா நடைபெறும் போதோ அல்லது விழா முடிந்த
பின்போ செல்வி யார் அருகில் அமர்ந்தாலோ யாரிடம் பேசினாலோ சரத்தினால்
தாங்கிக் கொள்ள இயலாது. அவளின் சுதந்திரம் முழுதும் அவனால் கட்டுப்
படுத்தப்படுவதைப் போல் உணர்ந்தாள். யாரிடமும் பேசாமல் எவ்வாறு பொது
இடங்களில் ஒரு மாணவியாக இருக்க முடியும்? இவளின் நிலை புரிந்தும்
சிலர் தன் இஷ்டத்திற்கு வதந்திகளை பரப்ப ஆரம்பித்தனர். வாழ்க்கையே
நரகமாவதைப் போல் இருந்தது. இங்கு இவ்வாறு இருக்க சரத் செல்வியை
சந்திக்கும் போதெல்லாம் அலாதி பிரியத்துடனே நடந்து கொள்வான்.
அவளுக்கு என்ன பிடிக்குமோ அனைத்தும் கேட்காமலேயே வாங்கி வந்து
விடுவான்.ஒருவர் இப்படியும் கூட அன்பு வைப்பார்களா ? என வியக்கும்படி
நடந்து கொள்வான். செல்வி சற்று முகம் வாடினால் கூட காரணம் அவனால்
புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு அன்பும் வளர வதந்திகள் பேச்சும்
சேர்ந்தே வளர்ந்தது .
செல்வி ஓர் முடிவிற்கு வந்திருந்தாள் என்ன நடந்தாலும் இந்த வதந்திக்கு
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அவள் எண்ணம். அவன் கட்டுப்
பாட்டிற்குள் இருக்க அரவே அவளுக்கு விருப்பம் இல்லை என்ற போதும்
அவ்வளவு பிரியத்தை இதுவரை யாரிடமும் அவள் உணர்ந்ததில்லை.
விரும்புகிறாயா ? இல்லையா? என்று கேட்டு விட்டு இனி விலகி இருக்கலாம்
என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.மனதிற்குள்' ஒருவேலை அவனும் விரும்பவதாகக்கூறினால் வதந்திகள் உண்மையாகி விடுமே ' என்ற நெருடல் இருந்தபோதும்' என் பெயர் இவ்வாறு கெட்டுப்போகும் அளவு அவன் நினைக்க
மாட்டான் '  என்று நம்பிக்கையுடன் சரத்திடம் கேட்டு விட்டாள். அவனுக்கோ
இந்த கேள்வி அவளிடமிருந்தே வருமா என ஆச்சரியத்தில் இருந்தான் .
என்ன பதில் கூறுவதென்று புரியவில்லை. இல்லை என்று கூறிவிட்டால்
அடுத்து அந்த உறவிற்கு அர்த்தமில்லை என்று நினைத்து 'நான் விரும்பிக்
கொண்டுதான் இருக்கிறேன்' என்று உரைத்தான். இந்த பதில் கூறும்போது
அவன் முகத்தில் அவ்வளவு புன்னகை மகிழ்ச்சி இருந்தது . இந்த
பதிலை எதிர்பார்க்காத அவள்' நம்மை சுற்றி என்னென்ன வதந்திகள்
 வருவதென கேட்டுதான் பேசுகிறாயா?' என்ற கேள்வியை முன் வைத்தாள்.
'மற்றவர் பேச்சுதான் நம் வாழ்க்கை என எண்ணினால் அதுவாகத்தான் இருக்க
வேண்டும் நாம் நம்மைப்பற்றி யோசித்தால் மட்டும் போதும்' என்றான்.சற்றும்
யோசிக்காமல்' நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா ?' என்ற கேள்வியை
முன் வைத்தான். செல்விக்கு இந்த சூழ்நிலையை எவ்வாறு சமாளிப்பது என்று
முன்யோசனை எதுவுமில்லை. பதில் கூறவும் விரும்பவில்லை அதே சமயம் அவன்
மகிழ்ச்சியை கெடுக்கவும் நினைக்கவில்லை.'இதை நாளை பேசிக் கொள்ளலாம்' என மழுப்பலாகக் கூறி வந்துவிட்டாள். ' தேவை இல்லாத சிக்கலில் மாட்டிக்
கொண்டோம் ' எனப்புரிந்தது. ஆனாலும் நம்மை புரிந்து கொண்ட உறவு இனி
நமக்கு கிடைக்காதே என்றும் குழம்பத்தொடங்கினாள்.
 
சரத்திடம் கோபப்படும் குணமும் கோபத்தின் பின்னனி என்ன என்பதை
மறைக்கும் குணமும் அதிகமாகவே இருந்தது.அத்துடன் அவளை யாருடனும்
பழக அனுமதிக்காமல் இருப்பது அவளை மிகவும் வருந்த வைத்தது .
எப்படியோ இரண்டு நாட்கள் பதில் கூறாமல் சமாளித்து விட்டாள் . இன்றும்
பதில் கூறாமல் போனால் வீண் வாக்குவாதம் கூட நடக்கலாம் என
பயத்துடனே சென்றாள். சரத்தும் அவளின் பதில் வாங்காமல் விடுவதில்லை
என்ற எண்ணத்துடனே அவளை நேரில் சந்திக்கச் சென்றான்.செல்விக்கு
ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை குணம் ஒத்துபோகுமா? வீட்டில் அப்பா
என்ன நினைப்பார்? ஏற்றுக்கொள்வாரா? சாதி என்று ஒன்றைப்பற்றி
அவளுக்கு அதுவரை தெரியாது. இவ்வாறு பல எண்ணங்கள் வந்து
கொண்டிருக்க அவனோ மகிழ்ச்சி கலந்த குழப்பத்தில் காத்துக்
கொண்டிருந்தான். அவனைப் பார்த்த பின் அவள் மனம் அந்த மாய
உலகிற்குள் செல்ல ஆரம்பித்தது .யாருக்கும் கிடைத்திடாத அரிதான
தோற்றம் ,அழகான சிரிப்பு, மெய் மறக்கும் அன்பு இதை விட அவன் குறைகள்
பெரிதாகப்படவில்லை அவளுக்கு. அவளும் சம்மதம் என்றே கூறி
விட்டாள். ஆனால் அவள் தந்தையைப்பற்றி சிறிது பயம் மட்டும் அந்த கணம்
முதல் தொற்றிக்கொண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க
ஆரம்பித்தனர். ஆனால் அப்பாவைப் பார்க்கும் போது மட்டும் அவ்வபோது
குற்ற உணர்வு ஏற்படும் என்ன பேசுவாரோ உண்மை தெரிந்தால் என்ற
பயம் இருந்தது. அதன் பின் இருவர் வாழ்விலும் ஒவ்வொரு நிமிடமும்
இனிமையான தருனமாகவே இருந்தது.இருப்பினும்  செல்வி அவனைத் தவிர
வேறு ஆடவருடன் பழகினால் மட்டும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
சரத்திற்காக மற்ற நண்பர்களை இழக்க வேண்டிய சூழல் .சரத் அவன்
அப்பாவிடம் செல்வியைப்பற்றிய உண்மையைக் கூறி நேரில்
அழைத்து வந்து கல்லூரியில் வைத்தே இருவரையும் சந்திக்கும்படி செய்தான்.
செல்விக்கு அவன் அவசரப்படுகிறான் எனப்புரிந்தது.படித்து முடிக்கவில்லை
வேலை என்று ஒன்று அமையவில்லை அதற்குள் பெற்றோருக்கு
தெரிய வேண்டிய அவசியமில்லை என எண்ணினாள்.
அவளுக்குத் தெரிந்தவரை சரத் படித்து வளர உதவி செய்தது எல்லாம்
சரத்தின் ஆசிரியை என்னும் அம்மா ஒருவர் தான் . அப்பா உதவியை
துளி அளவும் நாட மாட்டான்.அம்மா மனம் வருந்தும் படி ஒரு காரியம்
கூட செய்வதில்லை.அவரும் பெறாத மகனாக இருந்தாலும் அளவு கடந்த
அன்பினை அவன் மீது காட்டுவார். சரத்திற்கு உணவு , டியூசன் சென்டர்
என அவனை அடுத்த தரத்திற்கு கொண்டு செல்ல எண்ணினாள்
 அந்தத் தாய். அவர்களுக்கும் செல்வி பற்றிய விஷயம் அவன் நண்பர்கள்
மாணவர்கள் மூலம் தெரிய வந்தது.இருப்பினும்  சரத் அவள் எனது நல்ல
தோழி எனவே கூறிவிட்டான்.
ஒரு நாள் எப்போதும் போல செல்வியிடம் மிகவும் கடுமையான
சொற்களால் வாக்கு வாதத்தில் ஈடுபட்டான் சரத். செல்வியுடன் சேர்ந்து
அவனது தோழன் பாடம் நடத்தும் படியான பொறுப்பை பேராசிரியர்
வழங்கி இருந்ததுதான் இதன் காரணம்.அதற்கு அவளால் என்ன
செய்ய இயலும் ?சொன்னதை முடித்தால் தானே ஆசிரியர் மதிப்பெண்
வழங்குவார் என பொறுமையாகக் கூறிப்பார்த்தாள். இந்த சாதாரண
 விஷயத்தைக் கூட இவ்வளவு பெரிதாக்குகிறானே ! வாழ்க்கை முழுதும்
இவனுடன் சரிவருமா ? என குழம்ப ஆரம்பித்தாள்‌. அவனும் அடங்குவதாய்
இல்லை . செல்வியும் கோபப்பட ஆரம்பித்தாள். 'யாரிடமும் பழகாமல்
இருக்க நான் உன் அடிமை கிடையாது எனக்கு என்ன தேவை யாரிடம்
எப்படி பேசனும் எல்லாம் எனக்கும் தெரியும் . உன் நண்பன் கூட பாடம்
 எடுப்பது அவ்வளவு பொறாமையா உனக்கு?  அப்படிதான் பேசுவேன் என்ன பண்ணனுமோ பண்ணு ' என்று முதல் முறை பொறுமை இழந்து பொங்கி
விட்டாள். அதன் பின் சரத் 1 வாரமாகியும் கல்லூரிக்கு வரவில்லை.
'எது நடந்தாலும் சரி அவனிடம் இரக்கம் காட்டி பேசக் கூடாது ' என்றே
தீர்க்கமாக எண்ணினாள் செல்வி.....

Offline DuskY

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 239
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Be happy in this moment this sec is our life
Re: காதல் தந்த காயங்கள் 4
« Reply #5 on: July 17, 2021, 04:04:31 PM »
 அந்த வாரம் முழுதும் தன்னிடம் பேசாமல் இருந்த செல்வியின் மீது
கோபம் இருந்த போதும் அவளை எந்த சூழ்நிலையிலும் இழந்து
விடக்கூடாது என்ற எண்ணத்துடன் அன்று கல்லூரிக்கு சென்றிருந்தான்.
ஆனால் வகுப்பிற்கு எவ்வாறு இந்த உணர்வுடன் செல்வதென்று
புரியவில்லை .'இந்நேரம் தன்னைப்பற்றி யாரிடம் என்னவெல்லாம்
கூறியிருப்பாள்.அவர்கள் என்னை ஒரு கொடுமைக்காரனைப்
போல் பார்ப்பார்களே ' என்று  குற்ற உணர்வில் ஒரு மரத்தடியில்
கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து விட்டான்.எப்படியோ விஷயம்
செல்வியின் கவனத்திற்கும் செல்ல அவள் மனம் இறங்கி பேசுவதாய்
இல்லை. ஆனால் கேளிப்பேச்சும் கிண்டலான கருத்துக்களும்
அவள் பிடிவாதத்தை உடைத்தது. அவனிடம் நேரில் சென்று
அவன் முன்பாக நின்றாள். சரத்தின் முகத்தைக்கூட அவள் பார்க்க
விரும்பவில்லை என்றாலும் தாயற்ற ஒருவனை மேலும் துன்பப்
படுத்த அவள் விரும்பாமல் பேச்சைத் துவங்கினாள்.' நீ இந்த குணத்தை
மாற்றிக் கொள்வதென்றால் என்னிடம் பேசு இல்லையேல்
பேசத் தேவையில்லை ' என்றாள். மனது நொந்து போன
 அவனோ நிமிர்ந்து அவள் முகத்தைப்பார்த்தான்.
 அப்போதுதான் புரிந்தது அவன் செல்வியிடம் பேசாமல் இருந்த
அத்தனை நாட்களும் அவன் அழுதிருக்கிறான் என்று. சரத்தின்
கண்கள் சிவந்து முகம் வீங்கி போய் இருந்தது.
தானும் தவறாகப் பேசவில்லை அவனும் பெரிய தவறேதும்
செய்யவில்லை இருந்தும் இவ்வளவு வேதனைப்பட என்ன காரணம்
என்றே அவளுக்கு புரியவில்லை. எப்படியோ அவளிடம்
சமாதானமாகி மீண்டும் இயல்பான பழக்கத்திற்கு வந்தனர்.
 
அந்த கருத்து வேறுபாட்டிற்கு பிறகு சரத்திற்கு செல்வி
மற்றவருடன்‌ பழகும் போது உறுத்தல் இருப்பினும்‌
வெளிப்படுத்தாமல் இருந்தான்.செல்வியோ தன் பேச்சைக்
கேட்டு இப்படி ஒரு மாற்றமா என நம்பிக் கொண்டிருந்தாள்.
மாதங்கள் பல சென்றது கல்லூரி இறுதியாண்டு
படிப்பின் மீதும் நட்பின் மீதும் கவனம் செலுத்தும் மற்ற
நண்பர்கள் போல் இவர்களும் நாட்களைக் கடத்திக்
கொண்டிருந்தனர்.சரத்திற்கு எங்கே கல்லூரி முடிந்தால்
செல்விக்கு வரன் பார்க்க ஆரம்பித்து விடுவார்களோ
என்ற எண்ணம்.எனவே செல்வியிடம் தன்னை பதிவுத்
திருமணம் செய்து கொள்ளும்படி நிர்பந்தம் செய்ய
ஆரம்பித்தான். அனைத்தும் புரிந்த செல்விக்கு
அவனின் அவசர குணம் மற்றும் வேதனை பற்றி
ஒன்றும் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனிடம்
கேட்டாலும் தெளிவான விளக்கம் கொடுப்பதில்லை.
அனைத்தும் சமாளித்து கல்லூரி இறுதி ஆண்டும்
முடிந்து விடுமுறையும் துவங்கியது.செல்விக்கோ
அவனை தினமும் ஆவலோடு சென்று பார்த்தே பழகி
போனவளுக்கு காணாமல் இருக்க முடியவில்லை.
சரத்திற்கு அவளை திருமணம் செய்து விட்டால் எப்போதும்
தன் உடனேயே இருப்பாள் என்ற எண்ணம் மட்டுமே.
இதனைப் பல முறை அவளிடம் கூறிவிட்டான்.
செல்வி அவன் எப்படியேனும் நல்ல வேலையில்
சேர்ந்து வீட்டில் பேச வேண்டும்‌ என்றே கூறி வந்தாள்.
இந்நிலையில் அவனுக்கு ஒரு நல்ல வேலை இல்லை
என்றாலும் தற்போதைக்கு தேவை வேலை என்று
சென்று கொண்டிருந்தான். அங்கும் செல்வி உடன்
வேலை புரிந்தால் நன்றாக இருக்கும் என்று எப்போதும்
அவள் பற்றியே சிந்தித்தான். இப்படியே இரண்டு வருடங்கள்
சரத்திற்காக அவள் காத்துக் கொண்டு இருந்தாள்.
அவள் வீட்டில் அவளுக்கு திருமணம் செய்ய
ஏற்பாடுகள் துவங்கியது.
எந்நிலையிலும் கைவிடக் கூடாது என்ற எண்ணத்துடன்
இருந்த செல்வி அவள் வீட்டில் நிலைமையைக்
கூறினாள். இதனை அவள் அப்பாவிடம் நேரடியாகக்
கூற பயந்த அவள் தன் தாத்தா பாட்டி மூலம்
தெரிவித்தாள்.வீட்டிற்குள் இருந்த செல்வியை நோக்கி
வாசலில் வரும்போதே கீழ்தரமான வார்த்தைகளால்
வசைபாடிக்கொண்டே வந்தார் அவள் அப்பா.
அவளைக்கண்டதும் பரபரவென இழுத்து அடிக்க
வந்தவரை அவள் அம்மா தடுத்தார்.அம்மாவிற்கு
விஷயமே தெரியாது.தகாத வார்த்தைகளால்
செல்வியின் மனதை சுக்கு நூறாக துளைத்து
எடுத்தார்.இது வரை தன்னைப்பற்றி மற்றவரிடம்
பெருமையாகப் பேசும் தந்தை தன்னைப் பார்த்து
கீழ்த்தரமான வார்த்தைகள் பேசுவதை அவளால்
தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.அவளிடம்
இருந்த கைப்பேசியை எடுத்துக் கொண்டு ' யாராக
இருந்தாலும் சரி இங்க வரனும் அப்போதான்
நல்லவன் 'என்று சொல்லி அவளை வீட்டிலேயே
பூட்டி வைத்தனர்.வீட்டில் சொல்வதற்கு முன்பே
சரத்திடம் நிலைமையைத் தெரிவித்திருந்த செல்வி
ஒரு மாதமாக நரகத்தை அனுபவித்தாள்.சரத்
வீட்டிற்கும் வரவில்லை அப்பா வைத்திருந்த தன்
கைப்பேசிக்கும் அழைக்கவில்லை. என்ன காரணமாக
இருக்கும் என்று அவன் மீது கோபத்துடன் மட்டுமே
இருந்தாள்....இவ்வாறாக 6 மாதம் சென்றது.
அவனிடமிருந்து ஒரு அழைப்பு கூட இல்லை.
வாழ்க்கையே வெறுத்து விடும் போல் இருந்தது
அவளுக்கு....
        தொடரும் .........

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: காதல் தந்த காயங்கள்
« Reply #6 on: July 17, 2021, 05:48:39 PM »

அரசி மாஸ் 👏
Weldone மின்னல் 🤗
நான் உங்கள் ரசிகன் 👼

« Last Edit: July 17, 2021, 05:52:43 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline DuskY

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 239
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Be happy in this moment this sec is our life
Re: காதல் தந்த காயங்கள் 5
« Reply #7 on: July 18, 2021, 10:39:05 AM »
தன் வேலை விஷயமாக தன் கைப்பேசி தனக்கு வேண்டும் என
வாங்கி ஒரு நல்ல வேலைக்கு தேர்வானாள்‌. ஆன போதும் பிரிவு அவளை
மிகவும் வாட்டியது. எங்கு காண்பினும் அவனைப்போல் தோற்றமும்
அவன் வாகன ஓசையாக இருக்குமோ என்ற கற்பனைகளிலே வாழ
ஆரம்பித்தாள். அவள் அப்பாவிற்கு அவள் மீது துளி கூட நம்பிக்கை
இல்லை.எனவே அவரே வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று விடுவதும்
அழைத்து வருவதுமாக ஒரு வருடம் சென்றது.வீட்டில்
அனைவரின் மனக்கொந்தளிப்பும் பயமும் சற்றே தணிந்து
இருந்தது. எனவே செல்வி எப்படியாவது சரத்திடம் பேசி விட
வேண்டும் என்று எண்ணினாள்.அவன் எண்ணிற்கு தொடர்பு
கொண்டாள். முதல் அழைப்பை அவன் ஏற்கவில்லை.
மனத்தில் பெருங்குழப்பம் அவளுக்கு ஒருவேலை அனைவரும்
கூறுவது போல் வேறு காரணங்கள் இருக்குமா? என எண்ணிக்
கொண்டு சிறிது நேரத்திற்குப் பின் தொடர்பு கொண்டாள்.
அழைப்பின் மறுபுறம் சரத் 'என்ன ?' என்று ஒரே வார்த்தையில்
கேள்வி வந்தது. செல்வி நடந்தவற்றைக் கூற முற்பட்டாள்.
ஆனால் அதற்குள் சரத் 'இவ்வளவு நாள் என்னைப்பற்றி
துளி கூட கவலைப்படவில்லை.இது பேர் காதல் இல்லை.ஒன்னு
நான் இல்லை என்றால் உன் அப்பா முடிவு பண்ணிட்டு
சொல்லு' என்று தொடர்பைத் துண்டித்தான்.
'நான் கூற வருவதை காதில் கூட வாங்கவில்லையே
என் நிலைமை என்ன ? எந்த சூழலில் அழைத்தேன் எதுவுமே
இவனால் யோசிக்க முடியாதா?  . அவனைப்பற்றி சிந்திக்காமலா
இவ்வளவு கஷ்டப்பட்டேன் ஆறுதலா கூட பேசவேண்டாம்
என்ன பண்ணணும்னு கூட கேட்கலையே ! ' என மனதில்
எண்ணிக் கொண்டு மீண்டும் அழைத்தாள்.‌ஆனால் அவன்
அழைப்பை ஏற்பதாய் இல்லை.மிகவும் மனம் நொந்தே
போனாள் செல்வி. அடுத்து என்ன நடக்கும் என்ன
செய்வது என்றே புரியவில்லை.
சரத்தின் குறைகளான குணங்களால் இப்போது அவள்
மிகவும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டாள்.
இருப்பினும் அவன் மீது இருந்த பிரியத்தால் தந்தையிடம்
பேசி புரியவைப்போம் என முடிவெடுத்து ஒரு நாள்
பொது இடத்தில் வேலைக்கு விட வரும் போது
தந்தையிடம் சரத்தைப்பற்றி பேச்சை எடுத்தாள்.
ஆனால் அவர் குணமோ சுத்தமாக மாறிப்போய்
இருந்ததே .பொது இடம் என்று கூட பார்க்காமல்
' அந்த அளவுக்கு ஊறிப்போய் இருந்திங்களோ? என்று
கீழ்தரமான வார்த்தையால் அவளை பதம் பார்த்து
விட்டுச்சென்றார்.மனமே வெடித்து விடும் போல்
இருந்தது அவளுக்கு.சரி இங்குதான் பேச
முடியாது சரத் வீட்டில் இருந்து வந்தால் எப்படியும்
சம்மதிக்க வைத்து விடலாம் என அவனை மலை போல்
நம்பிக்கோண்டிருந்தாள்.மீண்டும் அவன் எண்ணிற்கு
அழைத்தாள் ஆனால் இந்த முறை அழைப்பை ஏற்றது
அவன் அன்னை ,எடுத்ததுமே 'உன்னை வேண்டாம்
என்றுதானே விலகிச் செல்கிறான் ஏன் தொந்தரவு
செய்து கொண்டே இருக்கிறாய் ? எங்களுக்கு வேலை
ஏதும் இல்லை உன் அழைப்பை எப்ப வேண்டுமானாலும்
ஏற்கனும்னு நினைச்சியா?'என்றாள்.
செல்விக்கு விவரம் ஒன்றும் புரியவில்லை. அவனது
கைப்பேசி இவரிடம் எப்படிப்போனது? ஏன் இப்படி பேசுறாங்க?
என்ற பெருங்குழப்பம்.'நான் அவனிடம் ஒருமுறை
பேசவேண்டும்.அவன் கைப்பேசி உங்க கிட்ட எப்படி வந்துச்சு ?
நீங்க ஒன்னும் சரத்தை பெற்ற அம்மா கிடையாதே?ஏன் இதுல
இவ்வளவு தலையிடுரீங்க?  உங்க கிட்ட என்னைப் பத்தி
சொன்ன பிறகுதான் அவன் இப்படி என்னை தவிர்க்கிறான்.
எதுவா இருந்தாலும் சரத் பேசட்டும் நான் விலகுறேன் ' . என்று
இணைப்பைத்துண்டித்தாள். அவள் மனம் கொந்தளிக்க
ஆரம்பித்தது.'பெண் என்றால் என்ன பொம்மையா? அனைவரும்
தன் இஷ்டத்துக்கு பேசுறாங்க தனக்கு சமந்தமில்லாதது போல்
நடந்து கொள்கிறானே! 'என அவள் மனம் வேதனைப்பட்டது. அன்று
மாலை சரத்திடம் இருந்தே அழைப்பு வந்தது .சற்று
தைரியப்படுத்திக்கொண்டு இனி பிரச்சினை குறையும்
என்ற நம்பிக்கையில் அழைப்பை ஏற்றாற். மறுபுறம்
சரத் 'இனி எனக்கு தொடர்பு கொள்ளாதே .என்னை மறந்திடு
நமக்கு ஒத்துப் போகாது' என்று தொடர்புடன் சேர்ந்து அவள்
உறவையும் துண்டித்தான்.உலகமே நின்று விடும்
போல் உணர்ந்தாள். அந்த வலியை அவளால் தாங்கவே
முடியவில்லை மூச்சே நின்று விடும் போல் அழுது விட்டு
மீண்டும் அவன் எண்ணிற்கு அழைக்க அவனோ செல்வியின்
எண்ணை பிளாக் போட்டு விட்டான்.
சரத்தா இப்படிப்பேசினான் ? கனவில் ஏதும் இருக்கிரேனா?
அத்தனையும் கனவாகத்தான் இருக்கனும்னு தினம் தினம்
மனதை சமாளிக்க முடியாமல் வேதனையில்
வெறுத்தே போனாள்............
                                   தொடரும்......‌

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: காதல் தந்த காயங்கள்
« Reply #8 on: July 18, 2021, 12:20:00 PM »

« Last Edit: July 18, 2021, 12:30:15 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline DuskY

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 239
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Be happy in this moment this sec is our life
Re: காதல் தந்த காயங்கள் 6
« Reply #9 on: July 18, 2021, 06:55:52 PM »
எவ்வளவோ முயன்றும் செல்வியால் சரத்திடம் உரையாட
முடியவில்லை.இவ்வளவு எளிதில் தன்னை வேண்டாம் என முடிவு
எடுக்கும் அளவிற்கு அவன்‌ அன்பு மாறிப்போனதா? அவன் அப்பா
அல்லது அன்னை இவர்களில் யாரேனும் சரத்தை கட்டுப் பாட்டில்
வைத்திருக்கிறார்களா? இல்லை இந்த இரண்டு மூன்று
ஆண்டுகளில் வேறு பெண் யாரேனும் பிடித்திருக்குமோ?
என்றெல்லாம் அவள் மனம் அலைபாயத் துவங்கியது.வேறுவழியே
இல்லை நேரில் சந்தித்து நடந்தவற்றைக்கூறி சமாதானம் செய்தால்
நிலைமையை சரி செய்யலாம் என்றெண்ணி அவன்
சென்டருக்கு சென்று காத்துக் கொண்டிருந்தாள். மாணவர்கள்
வருவதும் போவதுமாய் இருந்தனரே தவிர சரத் அங்கு வந்த
பாடில்லை. வேறு எண்ணில் இருந்து தான் அவனது சென்டரின் முன்
காத்திருப்பதாகத் தெரிவித்தாள்.அவன் தொடர்பினை ஏற்ற போதும்
மூச்சு கூட விடவில்லை. ஒரு நாள் முழுதும் செலவழித்துக் சரத்
மனமிரங்கி வருவதாய் தெரியவில்லை.அவ்விடத்தை  விட்டு
ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய அவளுக்கு எத்தனை நாட்கள்
நான் அழைத்த மறுகணம் எல்லாவற்றையும் விட்டு காண
வந்த நாட்கள் அனைத்தும் கண்முன்னே தோன்றின.தன்னை
ஏமாற்றும் நோக்குடன் பழகுபவனாய் இருந்தால் அவனுடைய
அப்பாவிடம் கூற வேண்டிய அவசியமில்லை ,பதிவுத்திருமணம்
செய்யக்கூறும் அவசியமில்லை.தவிர்க்கும் காரணத்தை தெரிந்தே
ஆக வேண்டும் என எண்ணினாள்.அதே சமயம் வீட்டில் நிலைமை
இன்னும் மோசமானது. அவளை அழைத்து அடிக்கடி திருமணம்
செய் என கட்டாயப்படுத்த ஆரம்பித்தனர். 'உனக்கு வரன்  வந்து கொண்டே
இருக்கிறது .பார்க்க அழகில்லை என்றால்கூட பரவாயில்லை. எல்லா
உறவுகளிடமும் அமைதியாக பழகும் குணமும் ,அழகும் ,படிப்பும் நிறையவே
இருக்கிறது. உன்னை வேண்டாமென்று சொல்லும் அளவுக்கு அவனுக்கென்ன
தகுதி இருக்கிறது,அவனே ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவன் நமக்கு முன் நிமிர்ந்து
நிற்கக் கூட பயப்படும் ஓர் இனத்திலிருந்து வந்தவன்.காமராஜர் ஆட்சியில்
தான் இனப்பாகு பாடு மறைந்து அவர்கள் அடையாளமும் மறைந்தது.சரி
சாதி பெயரைவிடு குணத்தை பார் உன் குணத்திற்கு சிறிது ஒத்துழைத்தால்
கூட நாங்களே உன்னை அவனிடம் ஒப்படைக்கிறோம்.இனி எங்கள்
குடும்பத்திற்கும் உனக்கும் ஒன்றுமில்லை என எழுதிக்கொடுத்துவிட்டு
நீ புறப்படு' என்று அவள் தாத்தா அவருடைய மனத்தாங்கள்களைக்
ககொட்டித் தீர்த்தார்.அப்போதுதான் செல்விக்கு சாதி என்ற ஒன்று பற்றிய
விழிப்புணர்வு வந்தது.தாழ்த்தப்பட்ட அவன் உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த
அவளைக் கேட்டு வந்தால் உயிருக்குக் கூட ஆபத்தாகலாம் என்று எண்ணி
சரத்தின் அன்னை தான் அவனை வரவிடாமல் ‌செய்திருக்க வேண்டும்
என்பதைப்புரிந்து கொண்டாள்.'சாதி என்பதைப்பற்றி சரத்திற்கும்,
அவன் குடும்பத்தாருக்கும் படிக்கும்போதே தெரியுமே! ஏன் அவனது தந்தை
அவனைத் தடுக்கவில்லை? ' என்று கேட்டாள்.'அவர்களுக்கு இதுதான்
தொழில் ..உயர்சாதி பெண் பையன்களைத்திருமணம் செய்து தன்
இனத்தினை அதிகரிக்கும் நோக்கில் இருப்பவர்கள்.ஏன் உன் அழைப்பை
ஏற்கவில்லை? உனக்கு குடும்பம் ஆள் பலம் அதிகம் என்பதை இப்போதுதான்
தெரிந்து கொண்டு ஓடிவிட்டான் 'என்ற பதில் கூறினர்.
'உனக்கு இன்னும் ஒரு வருடம் தான் அதற்குள் இதிலிருந்து மீண்டு வந்து
திருமணம் செய்ய வேண்டும் . இல்லை அவன்தான் வேண்டும் என்றால்
அவன் உனக்காக எத்தனை துன்பம் தாக்கினான் ? இந்த பிரச்சினையில்
எவ்வளவு துணையாக நிற்கிறான் என்பதை மட்டும் சிந்தித்து முடிவெடு'
என்று அனுபவத்தில் மட்டுமன்றி வாழ்க்கையிலும் முன்மாதிரியாக திகழும்
அவளது தாத்தா கூறி அனுப்பி விட்டார்.
செல்விக்கு இப்போதுதான் என்ன நடக்கிறது ? எனப்புரியவே ஆரம்பித்து.
அவனை இனி தொடர்பும் கொள்ள இயலாது. நிலைமையை நாம் மட்டும்
நின்று சரி செய்யவும் முடியாது என நம்பிக்கையைக் கைவிட்டாள்.இரண்டு
ஆண்டு இந்த வலியில் இருந்து அவள் மீள் முடியாமல் வேலைக்குச் சென்று
வந்தாள்.காலப்போக்கில் அவள் கண்களில் சரத்தின் நினைவு நின்று
போனாலும் நீங்கவில்லை.அந்த வருடம் அவளுடன் பயின்ற தோழி
ஒருத்தி அவள் திருமணத்திற்கு அழைக்கும் நோக்கில் தொடர்பு
கொண்டாள். செல்வியும் வருவதாய் கூறினாள். அப்போது அந்த தோழி
'தான் சரத்திடம் பேசியதாகவும் அவன் உன்னை சம்மதம் வாங்கி விட்டு
தொடர்பு கொள்ளச் சொன்னான்.நீ தான் அவனைத் தவறாகப் புரிந்து
கொண்டாய்' எனவும் தெரிவித்தாள்.'சம்மதிக்க வைக்க முதலில்
விரும்பியவன் என்று ஒருவன் உடன் இருந்தால்தானே! காரணமே
சொல்லாமல் தவிர்த்து மனதை வேதனைப்படுத்திய அவனை எவ்வாறு
நம்புவது ? 'என்ற நம்பிக்கை தோய்ந்த குரலில் பதில் கூறினாள்.
சிறிது நாட்களுக்கு பின் செல்விக்கு முற்றிலும் தெரியாத அழைப்புகள்
அவள் கைப்பேசிக்கு வந்து கொண்டே இருந்தது. செல்வி அப்படிப்பட்ட
அழைப்புகளை ஏற்பதில்லை.தொடர்ந்து ஒரே எண்ணில் இருந்து
அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அவள் மனதிற்கு தெரியும் அது
யாராக இருக்கும் என்று . மனதில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அழைப்பை
ஏற்றாள். மறுபுறம் வந்த குரல் 'உனக்கு  கல்யாணம் ஆகி விட்டதா?
வேலைக்கு போரதானே? நான் உன்னிடம் என்ன கூறினேன் ?
உனக்கு நினைவில் இல்லையா? ' என அடுக்கடுக்காய் கேள்விகள்
மட்டுமே வந்தது.சம்மந்தமில்லாமல் யார் தன்னிடம் இப்படி
பேசுவார்கள் என்று தெரிந்து வேண்டும் என்றே ' எப்ப யார்
சிக்குவாங்க ?வாழ்க்கையைக் கெடுக்கலாம்னு இப்படி எத்தனை
பேர் கிளம்பி வந்துருக்கீங்க ? ' என்று கேட்டு விட்டு இணைப்பைத்
துண்டித்தாள்.
செல்வியின் மனம் வலிகள் ,வேதனைகள்,தகாத வார்த்தைகள்
அத்தனையும் தாங்கி தாங்கி மரத்தே போனது.அந்த அழைப்பில்
இருந்து வந்த குரல் சரத் என்பதை உணர்ந்தும் அவள் அவனை
சந்தேகப்படவும் இல்லை வெறுக்கவும் இல்லை. காதலன் என்ற
ஒரே உறவிற்காக அவள் இழந்த நட்புகள்,பட்ட கஷ்டங்கள் ,
 வாங்கிய வார்த்தைகள் எதுவுமே சரத் தெரிந்து கொள்ள
விரும்பவில்லை. அவனை எப்படி இவ்வாறு வளர்த்தனர்?
ஒருவர் தனக்காக கஷ்டப்படுகிறார் எனத் தெரிந்தும் அவருக்குத்
துணையாக நிற்க முடியாத அளவுக்கு அவன் மனம் கல்லாக இருந்ததே!
அவன் வாழ்க்கையில் யாருக்கு துணையாக இருப்பான்?'
என்று அனைத்தும் யோசித்து விட்டு தான் அந்த பதிலை
உரைத்தாள்.
சரத் வளர்ப்பிலே தாயன்பை இழந்து மாற்றாந்தாய் மூலம் துன்பத்திற்கு
ஆளானவன்தான்.ஆனால் அதே துன்பத்திலிருந்து தப்பித்து செல்லவே
அவன் எண்ணியிருந்தான். சரத் அப்பாவிடமும் பேச்சு வார்த்தை கிடையாது.
அதன் பிண்ணனியும் தெரியாது.பள்ளிப்படிப்பு முடியும் வரை யார்
பேச்சைக்கேட்டு யாருடைய கண்காணிப்பில் வளர்ந்திருப்பான்.
சரத் வளர்ந்து வர உதவிய வளர்ப்பு அம்மா கண்காணிப்பில் என்றால்
அங்குதானே தங்கியிருக்க வேண்டும்.எது நல்லது எது கெட்டது என்று
நமக்கு சின்ன சின்ன விஷயம் கூட அப்பா அம்மா உடன் இருந்து தான்
வளர்த்தனர்.சரத் யார் பேச்சையும் சிறிதும் மதித்து நடந்து கொண்டதில்லை
அவன் அப்பாவைக் கூட அவன் இவன் என்று கூறுவதை பல‌முறை
கேட்டிருக்கிறாள்.இப்படி பல குணங்கள் விசித்திரமாக இருந்தது.
சில குணங்களை மாற்றும்படி கூறினாலும் மறைப்பானே தவிர
மாற்றப்போவதில்லை....
செல்வியும் சரத்தை வேண்டாம் என்றே நினைத்திருந்தாள்.
அதற்கு ஒரே ஒரு காரணம் செல்வியால் நண்பர்களை இழந்து
சுதந்திரத்தை விட்டுக்கொடுத்தது போல் பெற்றோரையும் இழந்தால்
வாழ்க்கை முழுதும் அவன் கட்டுப்பாட்டிலே சென்று இருக்க
வேண்டி நேரிடலாம்.ஒருவேளை சரத் தன்னிடம் பேச நேரிட்டால்
அதன்பின் நிலைமையை என்ன செய்வதென்று மற்றோர் எண்ணமும்‌
இருந்தது. ஆனால் மூன்றாண்டுகள் ஆகியும் தெரியாத எண்ணில்
இருந்து அழைப்பு வருமே தவிர துணிவுடன் பிரச்சினைகளை
எதிர்கொள்ள சரத் முற்படவில்லை.அதன் பின் அவள் குடும்பத்தில்
யாரெல்லாம் அவளை வார்த்தைகளால் வேதனைப் படுத்தினார்களோ
அவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்து பிரச்சினை வர ஆரம்பித்தது.
செல்வியின் தந்தைக்கு விபத்தில் ஒரு கால் பாதிக்கப்பட்டது.அவளின்
பாட்டிக்கும் கீழே விழுந்ததில் கால் எலும்பு 3 முறைக்கும் மேல் முறிவு
ஏற்பட்டது.அனைவர்க்கும் பெண் பிள்ளையை கஷ்டப்படுத்தியதால் தான்
அடுத்தடுத்து அசம்பாவிதம் நடப்பதாக எண்ணினர்.செல்வியை அழைத்து
'என்னதான் நடக்கிறது.. உண்மையை உள்ளபடி கூறு ..உன் பாவத்தை
நாங்கள் வாங்க விரும்பவில்லை.'என்று கேட்டனர். அதுவரை விதி ,
கர்மா ,பழி , பாவங்கள் பற்றிய அறிவு ஏதும் இல்லாதவள் நடந்த அனைத்தும்
கூறினாள்.' உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் அவனிடம் இருந்து
எந்த தகவலோ தொந்தரவோ கிடையாது' என்று முடிவினைக் கூறினாள்.
இருந்தும் அவள் எப்போதெல்லாம் மனம் நொந்து   அழுகிறாளோ
அப்போதெல்லாம் குடும்பத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதை
உணர்ந்தாள்.அவளுக்கும் கர்மா விதி இவற்றின் மேல் நம்பிக்கை
வளர்ந்தது. 'உணர முடியாத ஏதோ ஓர் சக்தி நம்மை சுற்றி இருக்கிறது
அதுதான் தன்னைச் சார்ந்தவர்களுக்கு துன்பத்தை தருவதை
உணர்ந்தாள்.இவர்களுக்கே இப்படி என்றால் தனது இந்த நிலைக்கு
காரணமானவனும் துன்பப் படுவான் அவன் விதியை அவனே
அனுபவிப்பான்' என்றே எண்ணிக் கொண்டாள்.


மற்றவர் மனது நோகப் பேசுவது ,திருமண ஆசை காட்டி ஏமாற்றுவது
தன்னால் ஒருவருக்கு துன்பம் வந்தால் தனக்கும் அதற்கும்
தொடர்பில்லாதது போல் செல்பவர்கள், கோபப்படும் போது
வார்த்தைகளால் ஒருவரை வதைப்பது இவற்றிற்கு யார்
தண்டனை கொடுப்பார்?  என்ற தைரியத்தில் பலரும் தவறு
செயவதுண்டு.இவை அனைத்தையும் உங்கள் உள்மனது பதிவு
செய்தே வைத்திருக்கும்.அதன் வீரியம் எப்போதெல்லாம்
அதிகரிக்குமோ அப்போதெல்லாம் குற்றத்தை செய்தவர்
தகுந்த காலங்களில் தண்டனை பெறுவர்.எனவே தங்களின் மனதிற்கு
உறுத்தலாக இருக்கும்  செயல்களில் ஈடுபட வேண்டாம்.
குறிப்பாக விரும்பி திருமணம் செய்ய விளையும் அனைவருமே
யாருடைய மனதையாவது உடைக்க வேண்டிய சூழல் இன்னும் நம்
நாட்டில் இருக்கத்தான் செய்கிறது.மதம் ,இனம்,மொழி இவை
அனைத்தைப்பற்றிய செய்தி எதுவும் எங்கும் கிடையாது. எங்கே,எப்போது‌
யாரால் உருவாக்கப்பட்டது என்பதும் தெரியாது.அதனைத் தீவிரமாக‌
பின்பற்றும் நபர்கள் இருக்கும் வரை அந்த வட்டங்களை தாண்டி
நாம் எதனையும் யோசிக்கவோ அடையவோ நினைப்பது பல
அசம்பாவிதங்களையும் பல உயிர்களையும் பலி வாங்கதான்
செய்யும்.எனவே ஒரு நபரை விரும்புவது கூட பாவச்செயல்தான்
நாம் அவருடன் சேரமுடியாவிட்டால் அவரது வேதனையும்
பாவங்களாய் நம்மைப் பின் தொடரும் என்பதை உணர்ந்து
 செயல்படுங்கள்...
 
மேற்கண்ட கதையில் நடந்த அத்தனையும்,அனைத்து
உறவுகளும் , நிகழ்வுகளும் கற்பனையல்ல நிஜமாக
நடந்த நிகழ்வுகள்....
               



                                        முற்றும்......





 

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: காதல் தந்த காயங்கள்
« Reply #10 on: July 18, 2021, 09:43:23 PM »
oru nija kathaiyai uir utti azhaga ezhuthi engalin kangalukum sevikum viruthalithir gal mel melum ezhuthungal machi nice story machi

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: காதல் தந்த காயங்கள்
« Reply #11 on: July 19, 2021, 12:25:04 AM »

அற்புதம் தோழி அரசி? 👏
கதை சொல்லும் பாங்கு நேர்த்தி 🖐️
மிக அருமையான நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகள் நிறைந்த கதை! 👍
கதையின் முடிவு என்னை சிந்திக்க வைக்கிறது? 🤔
வலிகள் நிறைந்த கதை என்னை கண் கலங்க வைத்து விட்டது? 😓
 வலிகள் இல்லா விட்டால் வாழ்க்கை  ஏது? 👼




தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்