Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 284  (Read 1631 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 284

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline AK Prakash

  • Newbie
  • *
  • Posts: 20
  • Total likes: 87
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
பேயோடு ஓர் இரவு வாழ ஆசை
"டேய்  AK பிரகாஷ் நீ என்னோடு தான் வாழ்கிறாய்"
ம்...... யாரது  என்றேன் நடுங்கிய  குரலில்
திரும்பி பார்க்கிறேன்
யன்னலூடாக வந்த  வெளிச்சம்  அறையில் பரவ
காற்றில் ஜன்னல்  சீலை  அசைந்தாடுகிறது  ..

பேய்க்கு என் mind voice  கேட்டிருக்குமோ
மனசு படக் படக் என்று அடித்துக்கொள்கிறது 
கால் நடுங்க என்னையறியாமல்
நான் வீல்..... என்று அலறியடித்து ஓடி
கட்டிலில்   விழுந்தேன்   

க் ரிச்  க்ரீச்   என்று  தொடர்கிறது சத்தம்  ..
பயத்தில் போர்வையால் மூடி கொண்டு
பயத்தில்   நடுங்கிக்கொண்டிக்கிறேன்   .
போர்வைக்குள் ஓர் உருவம் என்னை உரச
பேய்ய்ய்ய்   ...என்று கத்தியபடியே
திறந்தேன் போர்வையை
உள்ளே இருந்தோ என் தங்கையின் பொம்மை...
தொப்   என்று கீழே விழுந்தது .

போன உசிரு திரும்பவும் வந்ததை உணர்ந்தேன்
காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்
எனக்கும்    தூக்கில் தொங்கி உயிரைவிட  தோழியின் 
 நினைவலைகள் வந்துபோயின 
அவளின்  காதலை  ஏற்றுக்கொண்டிருக்கலாம்   என்று
இந்நாளில்   தோன்றும்  எனக்கு 

அடிமனதில்  பதிந்த  ஆறாத  வடுக்கள் அவை 
சொல்லவும்  முடியவில்லை   மெல்லவும் முடியவில்லை
காலத்தின்    ஏடுகளில்   அவள் அடங் கினாலும்
என்னுள்ளே  கொழுந்துவிட்டு  எரிவதுபோல்  பிரமை
« Last Edit: November 23, 2021, 04:59:06 AM by AK Prakash »

Offline Dear COMRADE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Male
  • என் இனிய தனிமையே✍️
ஆவிகள்
ஆயுள் தீரும் முன்
அகால மரணத்தை தழுவி
மோட்சம் கிட்டும் வரை
மாய நிழலாய் இம் மண்ணில்
மணம் வீசும் வாடிய மலர்கள் என
ஆச்சி கூறும் கட்டுக்கதையிலும்
ஆர்ப்பரிக்கும் சினிமா திரையிலும்...

ஆடவரை மயக்கும் மோகினி என்பர்
ஆட்களை கொல்லும் பிசாசு என்பர்
அராஜகம் செய்யும் பேய் என்பர்
அன்புக்கு அடங்கும் ஆத்மாவும் என்பர்
அகோர ரூபங்களாய் - எமை
அச்சம் கொள்ள வைத்திடும் என்பர்...

நடுநிசி நாய்கள் குரைக்கும்
அமானுஷ்யமாய் ஏதோ நடக்கும்
நெஞ்செல்லாம் படபடக்கும்
உயிர் மூச்சு நின்று துடிக்கும்
காரிருள் நமைச் சூழ
கடவுள் எதிரே வந்தால் கூட
ஐயோ பேயென்று தான் - சட்டென
ஐயம் கொள்ளும் இம் மானிடம்...

அடர்ந்த இருள் காட்டிலும்
ஆளில்லா மாளிகைகளிலும்
இருப்பிடம் கொள்ளும் ஆவியொன்று
படிக்கட்டு வழியே -அங்கு
பயணம் செய்வது ஏனோ???

ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியை
தொகுத்து வழங்கும் Sweetie யை ஓடவிடவா
கதலை மறுத்த AK Prakash யை
கட்டியணைத்து முத்தம் இடவா - இல்லை
கடலை மன்னன் என தன்னை
கர்ஜித்துக் கொள்ளும் Dito வை கதறவிடவா
YesKay வை அலறவிடவா VickY யை மிரளவிடவா
Arasiயை அஞ்சவிடவா Evilலோடு கொஞ்சல்விடவா
Tinu வோடு டென்னிஸ் ஆடவா
Shalu வோடு walking போகவா
Beema வோடு வெட்டிப் பேச்சு பேசவா
Mr PeRfEcT யை வெளுத்து வாங்கவா - அன்றி
Natchathira வோடு குத்தாட்டம் போட வேண்டுமா
புகுந்த கொள்ள Orchids உடல் வேண்டுமா
Sunflower போடும் சாயா வேண்டுமா
Gabபோடு gapஇன்றி பேச வேண்டுமா - இல்லை
Paul Walker தெரிவுப் பாடல் வேண்டுமா...
Maya வின் மாயவிழி வேண்டுமா
அச்சச்சோ Agni யிடம் செல்லாதே
அவிந்து சாம்பலாகி விடுவாய் - பின்
ஆவி உன் ஆசையெல்லாம்
அநாதையாகி நின்று விடும்...


குறிப்பு: ஒரு நகைச்சுவை உணர்வுக்கு வேண்டியே நண்பர்களாகிய உங்கள் பெயர்களை உபயோகித்து உள்ளேன். தயவு கூர்ந்து தவறானால் மன்னித்து விடுங்கள்.
« Last Edit: November 23, 2021, 03:54:57 PM by Dear COMRADE »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !


அன்றோரு நாள்...!
அலைஅலையாய் வந்த
பேய்கனவுகளுடே திடீரென
விழித்தப்போது...

யாரோ மாடிப்படிகளில்
ஏறி வரும் ஓசை...
சலசலத்த சருகுசப்தம்...
ஜில்ஜில் கொலுசொலி..
ஆவியோ? பேயோ? பிசாசோ?
இவைகளின் மீது பயமில்லை!
ஆனால் ..

அடுத்தவர் எப்போது அசந்து
நிற்பார் அதை என்று
அபகரிக்கலாம் என்று திட்ட
கணக்கு போடும் பேராசைபேய்!

யார் யாரையோ நேசிக்கும்
நெஞ்சுக்கு யாரும் இல்லை
எனும் உண்மை தெரிய வரும்போது ஆதங்கமாய் வரும் ஆற்றாமைபேய்!

யாரோ சொன்ன அன்பு என்பது
மிட்டாய்காரன் பின்னே செல்லும்
காசில்லா குழந்தை போன்றது
எனும்போது அனாதைதன பேய்!

அதீத அன்பை அள்ளி அள்ளி கொடுத்து விட்டு அன்பு பிச்சைக்கு
பாத்திரம் ஏந்தி திரிவது
ஏளனப்பட்ட ஏக்க பேய்!

பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு
கோழிவருவலை நினைத்துக்கொண்டே...
கூழைக் குடிக்கும் போது வருவது
இயலாமை பேய்!

நம்பியவர்களை உதறி...
நட்டாற்றில் கைவிட்டு...
தன்னலத்திற்காக  வேறிடம் ஏகும்
மனிதர் ஓர் சுயநல பேய்!

கடமைகளை‌ தவறவிட்டு
மற்றவர் மடமையை பயன்படுத்தி
கூடவே இருந்து குழி பறிக்கும் ஏமாற்றுபவர் ஒரு துரோகபேய்!

இத்தகைய மானுடமில்லா
மனித பேய்களை விடவா..?
உயிரில்லா பேய்கள் நமக்கு
தீங்கு செய்திடும்?



Offline SweeTie

அடர்ந்த மரங்களால் சூழ்ந்த    காடு
நடுவே  ஒரு நட்சத்திர   ஹோட்டல் 
ஜன நடமாட்டமே  இல்லாத ஹோட்டல்   
மின்குமிழ்கள்  ஒன்று ரெண்டு  மின்னும் அங்கு

அவள் ஒரு அழகிய மங்கை 
அந்த  ஹோட்டலுக்கே   மகாராணி அவள்
பூமியில் நடமாடும் தேவதை என்பார்
அங்கு  வருவோரும் போவோரும் 

தேவதைமேல்   ஆசை கொண்டான் ஒரு இளைஞன்
எட்டாத  பழத்துக்கு    கொட்டாவி  விட்டவன் 
கொலை செய்யவும் தயங்கவில்லை  அவளை
அவள்  ஆவியாக  ஹோட்டலை வலம்வர  தொடங்கினாள்

ஹோட்டல்  அறைகள் வெறிச்சோடவே 
ஆவிகளின் நடமாட்டம்  ஆரம்பித்ததாம்
தினமும்  நடுநிசியில்     
நாய்களின்   ஊ   ஊ    என்ற ஊளை
தொடரும்  வினோத  சத்தங்கள்   

 கறுப்பு  உடையில்   படிக்கட்டுகள்   அருகே
பதுங்கி நிற்கின்றேன்    நான்   
ஆவியை  பார்த்துவிடவேண்மென்ற   ஆசையில்
பயம் ஒரு புறம் இருக்கவே செய்தது.

நடுநிசி  நாய்கலின்    ஊ..   ஓஒ..  என்ற ஊளை 
க்ரீச் என்றொரு சத்தம் கதவு திற ப்பதுபோல்
டொக்  டொக்  டொக்  டொக்  என்ற  ஓசை
ஹை ஹீல்ஸ்  போட்டு  ஒரு பெண் நடப்பதுபோல்
திறந்திருந்த   வாசல் வழியே  ஒரு வெளிச்சம்
திடீரென பாய்ந்தது உள்ளே

பயம்  என்னை கவ்விக்கொண்டது   
ஒரு வெள்ளை  அருவம்    என்னை நோக்கி வர
நான் வீல்   ....  என்று கத்தியபடியே   கண் விழித்தேன்
பயத்தில்  என் ஆடை  வியர்வையால்   நனைந்திருந்தது
'பக்கத்தில் இருந்த  தண்ணீர்  டம்ளரை எட்டிக்கொடுத்தது ஒரு கை

நடுக்கத்தோடு நிமிர்ந்து பார்த்தேன்   
அங்கே நின்றது வேறு யாருமில்ல
வெள்ளை உடையில் நட்சத்திரவேதான்   
இவள்தான்   என் கனவில் வந்த  பேயோ என
என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன்


 
« Last Edit: November 26, 2021, 12:46:54 AM by SweeTie »

Offline Orchids

  • Jr. Member
  • *
  • Posts: 61
  • Total likes: 215
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
நான் யாரென்று தெரியாது
தேடுகின்றேன் என்னையே

நிழல் மட்டுமே சொந்தமாய்
உலவுகிறேன் காற்றில்

அட.. இவன் யார்..மிதக்காமல் நடந்து செல்கிறானே!..
ஆனால் என் கால்களை காணோமே..

ஆஹ்..இங்கே பார் ice Cream..
சாப்பிட உதவும் கைகளை காணோமே :'(
முதலில் வாய் இருக்கிறதா..
அடடே அதையும் காணோமே

மூச்சும் வரவில்லை..
பேச்சும் வரவில்லை
நாசியையும் காணோம் குரலையும் காணோம்..

அதோ நிற்கிறான் ஒருவன்..
இவனிடம் உதவி கேட்கலாம்..!
கேட்டு தான் பார்ப்போமே.. :-\

ஸ்வீவீவீவீ

ஆஹா... இவனை தொட முடியவில்லை..
காற்று தானா நான் :(

எங்கோ தொலைந்து போனேன்
எங்கோ அலைந்து திரிகிறேன்.. :-\

என்னையும் யாரேனும் தேடுவர்களா..
என்னையும்  யாரேனும் நேசித்திருப்பார்களா :'(

தனிமை கொள்கிறது
யாரேனும் என்னுடன் பேசுவார்களா..

அச்சோ இந்த நாய்குட்டி உற்றுப்பாற்கிறதே  ;D
ஹே நாய்குட்டி ..
என்னுடன் பேசுவாயா..
லொள் லொள்..
அய்யயோ.. பிடி ஓட்டம்..

எவ்வளவு காலம் தான் காற்றிலே மிதப்பது..
எனக்கென்று ஓர் கூடு கிடைக்காதா..

இருப்பினும் மனிதன் படும் பாடு திண்டாட்டம்தான்
பொறாமை வெறுப்பு வண்மம் அகந்தை..
இவ்வளவும் சுமந்து கொண்டு
எப்படி தான் வாழ்கின்றானோ.

அடுத்தவர் இருக்கட்டும் ..
நான் எப்படி தான் வாழ்ந்தேனோ😒

ஹா.. எனக்கிப்போது கிடைத்தது வரம் தான்..
It's drama time..
காற்றில் கலந்து..
மனிதர் பலர் அரங்கேற்றும் நாடகங்களை
நின்று நிதானமாய் ரசிக்கிறேன்   :P
« Last Edit: November 26, 2021, 02:32:02 AM by Orchids »

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


அன்று ஓர் அழகிய நாள் ... 
நிசப்தமான இரவு வேளையில்...
அம்மாவின் கைவண்ணத்தில்
உருவான இரவு உணவு.. .
வீடெங்கும்  மனம் வீசிட..
என்னை வா.. வா.. என்றழைத்தது.. 

நல்ல பசி என்னை..
வாட்டியெடுக்க ஓடினேன்..
சமையல் அறை நோக்கியே..
 என்னை பார்த்து அழகாய்
புன்னகைத்த... உப்புமாவை...
சாப்பிட்டு கொண்டே திரும்பினேன்..

மனதில் திகில் தொற்றிக்கொள்ள
இதயம்  டிக் டிக் டிக் என
வேகமாக துடிக்க.. சிலையானேன்..
நான் இறங்கி வந்த படிகளில்..
ஏதோ ஒரு வெண்ணிற அருவம்..
மெல்ல அசைந்து மிதந்தது..

என் இமைகளும் இமைக்க மறந்து...
என் வாயில் இருந்த உணவை..
விழுங்க மறந்த நிலையில்.. 
மெல்ல மெதுவாக எழுந்தேன்..
அது என்னவாக இருக்கும்?..
என காணும் ஆவலில்..
அவ்வுரு நோக்கி நகர்ந்தேன்..

இது என் கண்ணனாக இருக்குமோ?-இல்லையெனில்..
இது தேவதைகளின் ஒருவளாக இருக்குமோ? .. இல்லையெனில்..
இது நம் முன்னோர்களாக  இருக்குமோ?..இல்லையெனில்.. 
இது சிறு தெய்வங்களாக இருக்குமோ? இல்லையெனில்.. 
இது நல் ஆத்மாவாக இருக்குமோ? இல்லையெனில்.. 
இது கெட்ட எண்ணம் கொண்ட பேய் யாக இருக்குமோ..

ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள்..
என் மனதில் தலை தூக்க.. 
பூமி அதிராது.. என் பாதங்கள்
தரையில் பதியாது மெல்ல நடந்தேன்..
படியின் அருகில் சென்று.. அந்த உருவை
தொட என் கைகளை நீட்டினேன்..
 
என் கைகளில் வெண்ணொளி பட
வெடுக்கென.. என் இரு கைகளை..
என்பால்  இழுத்து கொண்டேன்..
சற்று நிதானித்து.. யோசித்தேன்..
என் கைகளை தீண்டியது.. நிலவொளியா?
என் புருவம் சுருங்க.. இரு படிகள் மேலேறி..
நிமிர்த்து பார்த்தேன்.. என்னுள் சிரித்து விட்டேன்..

வீட்டின் மேல் கூரையின்.. விரிசலில்
மெல்ல சிணுங்கி சிரித்தது.. வெண்ணிலா..
அடி நிலா பெண்ணே.. ஏன்... என்னை..
நீ..  இப்படி பயமுறுத்தினாய்.. 
செல்லமாக கடிந்து கொண்டேன்.

தூசி நிறைந்த நிலா வெளிச்ச பிம்பம்..
என் பசி மறக்க செய்து விட்டதே....


Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 127
  • Total likes: 761
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
எங்கும் காரிருள்..
எங்கும் மௌனம்....
காற்றின் குரல் மட்டும்
தன் இருப்பை திரைச்சீலை
அசைவில் தெரிவித்துக் கொண்டிருந்தது...

எங்கும் இருட்டாயினும்
எனது கண்களுக்கு மட்டும்
அனைத்தும் தெளிவாய் தெரிந்தன...
நான் வாழ்ந்து கொண்டிருக்கும்
வீடு இது...

கண்கள் இல்லையாயினும்
கடக்க முடியும் என்னால்..
அத்தனை அத்துபடி
கண்களுக்கும் மனதுக்கும்...

என்னை அறியாமல்
எனது கால்கள் மாடிப்படியை
நோக்கி முன்னேறுகின்றன...
எடுத்து வைக்கிறேன்
ஒவ்வொரு அடியாய்...
ஒவ்வொரு படியாய்....

செல்வது நானா அல்லது
எனது மனமா?
எதுவாய் இருந்தால் என்ன
இரண்டுமே நான் தானே...

வெளிச்சத்தின் கீற்று
மேனியெங்கும் பரவ
இதோ வந்து விட்டது
எனது அறை....

யாரது என் அனுமதி இல்லாமல்
என் கட்டிலில் படுத்திருப்பது?
அருகில் சென்று பார்க்கிறேன்..
மிக நெருக்கமாய் சென்று பார்க்கிறேன்...

இந்த வதனத்தை அடிக்கடி
பார்த்திருக்கிறோமே என்ற எண்ணம்
மேலெல இன்னும் சற்று
உற்று பார்க்கிறேன்....

ஆமாம் அது நானே தான் ...
கட்டிலில் படுத்திருப்பது நானே தான்...

அப்போ உற்று பார்த்துக் கொண்டிருக்கும்
நான் யார்? நீங்கள் சொல்லுங்கள்
நான் யார்...........?