Author Topic: வரும் 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் எனக் கூறுவதில் உண்மை உள்ளதா?  (Read 2587 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

ஒரு குறிப்பிட்ட மதத்தினர் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகம் அழியும் காலம் நெருங்கிவிட்டது. எனவே அழிவில் இருந்து தப்பிக்க இங்கு வந்துவிடுங்கள் என்று ஒரு இடத்தைக் குறிப்பிட்டு பிரசுரங்கள் அடிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் அதுபோல் நடக்கவில்லை என்று வாசகர்கள் கருதலாம்.

இதில் உண்மை என்னவென்றால் அவர்கள் கூறுவது போல் ஒட்டுமொத்த உலகமும் ஒரே நாளில் அழிந்துவிடாது. ஆனால் சிறு சிறு பகுதியாக அழியும். பொதுவாக நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஒரு சில கிரகங்கள் பாதிப்பையும், ஒரு சில கிரகங்கள் நன்மையயும் செய்கின்றனர்.

எனவே, உலகம் ஒட்டுமொத்தமாக அழிவைச் சந்திப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் அழியும். இனி வரும் காலத்தில் பூமிப்பரப்பும் குறையத் துவங்கும். நீரின் ஆதிக்கம் அதிகரிக்கும்.