கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கண்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன்.
இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான். இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அந்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.
அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். "கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால்தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா?"
சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். "நீவீர் சொல்வது சரிதான்.. வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால் தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன். மூட்டையாகச் சுமக்கும்போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும்போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். யோசிக்காமல் கொடுப்பதே தானம்...
பெண்களிடம் தன்னைத்தானே வர்ணிக்க சொல்லும்போது, வெறும் 2% பெண்கள்தான் அவர்களை அழகானவர்களாக வர்ணிக்கிறார்கள்
உலகத்திலேயே வெறும் 6% மருத்துவர்கள் மட்டுமே தங்களின் பணியை விரும்புகின்றனர்
கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களை பார்ப்பதற்கு சூதுவாது அறியாதவர் போல அப்பாவியாக தோற்றமளிப்பார்கள், ஆனால்…. உண்மையிலேயே மற்ற பெண்களைவிட அதிக ஆபத்தானவர்கள் இவர்களே
நாம் தூங்குவதற்கு முன்பு எவர் நம் நினைவில் இருக்கிறாரோ…. அவர்தான் நம்முடைய மகிழ்ச்சி அல்லது துன்பதுக்கு காரணமானவர்.
நாம் ஓடுவதை போல கனவு கண்டால்… நம்முடைய நிஜ வாழ்க்கையில் ஏதோ ஒரு ஆபத்திலிருந்து/கஷ்டத்திலிருந்து ஓடிகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
99% பேர், "நான் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் " என்று யாராவது சொல்லும்போது பதற்றம் அடைகின்றனர்
12 வயதிலிருந்து 22 வயது வரை நாம் கேட்கும் பாடல்கள், வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாததாக இருக்கும்
நம்முடைய படுக்கையறை எந்த அளவிற்கு குளிர்ச்சியாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நமக்கு கெட்ட கனவுகள் வர வாய்ப்புண்டு
நமக்கு என்றும் முதலில் மற்றும் கடைசியில் இருக்கும் விடயங்கள் மற்ற விடயங்களை விட நன்றாகவே ஞாபகம் இருக்கும். எனவே, நேர்காணல்
போன்றவற்றைக்கு போகும்போது முடிந்தவரை முதலாவது அல்லது கடைசி நபராக போவது நலம் உளவியலை பொருத்தவரை நாம் நம்மை நேசிப்பவர்களை உதாசினம் படுத்திவிட்டு, நம்மை வெறுப்பவரையே தேடி செல்கிறோம்.
ஒருவர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை கண்டுபுடிக்க திடீரென உங்கள் கைக்கடிகாரத்தை பாருங்கள். ஒருவேளை அந்நபர் உங்களை பார்த்துக்கொண்டிருந்தார் என்றால் அவரும் தன்னையறியாமல் தன் கைக்கடிகாரத்தை பார்ப்பார்.
நமக்கு நாம் சமைத்த உணவை விட பிறர் சமைத்த உணவே இன்னும் சுவைமிக்காதாக இருக்கும் ஒரு விவாதத்தில் வெற்றி பெற அதிகமான கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு பதிலளிக்க முடியாத நிலையில் எதிரே இருப்பவர் வலுவிழந்து விடுவார்
கோவக்காரர்களால் சாதாரண மனிதர்களை விட இன்னும் தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் சிந்திக்க இயலும்
ஒருவர் நம்மை முறைத்து பார்ப்பதை, நாம் தூங்கிகொண்டிருக்கும்போது கூட உணர முடியும் போலியாக சிரிப்பது ஒருக்கட்டத்தில் நம்மை உண்மையிலேயே மகிழ்ச்சி அடைய வைக்கும் நாம் பொய் பேசும்போது அதிகமாக கண்களை இமைக்கிறோம்
இரவில் தாமதமாக தூங்க செல்பவர்கள் வாழ்க்கையில் அதிகமான சவால்களை எதிர்நோக்க விரும்புவார்கள் ஒரு நண்பர் வட்டத்தில் மூன்று நான்கு பேரோடு சிரித்து கொண்டிருக்கும்போது, யார் நம்மை முதலில் பார்க்கிறார்களோ அவர்களே நம்முடன் நெருக்கமானவர்கள்
நாம் உண்மையில் இருப்பதை விட, கண்ணாடியில் பார்க்கும்போது 5 மடங்கு அழகாக தெரிகிறோம் ஒரு ஆண் பெரும் வெற்றியை தழுவும்போது தனக்கு அதிகமான பெண் துணைகள் தேவை என்று எண்ணுகிறார்.
ஒரு பெண் பெரும் வெற்றியை அடையும்போது தனக்கு ஆண் துணையே தேவையில்லை என்று எண்ணுகிறார் ஒருவர் தொடர்ந்து பேசவேண்டும் என்று நினைத்தால், அவரின் கண்களையே பாருங்கள். அவர் தொடர்ந்து பேசுவார்
28 நாட்களுக்கு நம்மால் ஒரு விடயம் இல்லாமல் வாழமுடியுமென்றால் (உதா. மது, தொலைபேசி ), வாழ்நாள் முழுக்க 100% நம்மால் அது இல்லாமல் வாழமுடியும்.
உளவியல் படி, ஒரு பெண்ணிடம் பொய் பேசுவதை தவிர்க்கவும். பெரும்பாலும், பெண்கள் உண்மையை தெரிந்து வைத்துக்கொண்டுதான் உங்களிடம் அதைப்பற்றியே கேட்பார்கள்
அதேநேரம் ஆண்களை விட அதிகமாக பொய் பேசுபவர்கள் பெண்களே, பொய்யை எளிதில் கண்டுபிடிக்கும் திறன் கொண்டதும் பெண்களே நம்முடைய நெருங்கிய நண்பரை திருமணம் செய்வதன் மூலம் 70% விவாகரத்துக்கான வாய்ப்பை குறைக்கலாம் நாம் தட்டச்சு (typing) செய்தவற்றை விட கைப்பட எழுதியவையே நினைவில் இருக்கும்
ஆண்களை விட பெண்களே அதிக நகைச்சுவை மிக்கவர்கள். ஆனால், நெருக்கமானவரை தவிர வேறு யாரிடமும் அவர்கள் அதனை வெளிக்காட்டுவதில்லை நம் கனவில் காணும் ஒவ்வொரு முகமும் நாம் இதற்கு முன்பு பார்த்த முகங்கள் தான்.
நம் மூளைக்கு புதிய முகங்களை உருவாக்க தெரியாது ஒருவரை முழுமையாக புரிந்துக்கொள்ள குறைந்தபட்சம் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் தேவைப்படுகிறது
சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டவர்கள் நிஜத்தில் பார்த்துக்கொண்டவர்களை விட சீக்கிரமாக இணைந்துவிடுவார்கள்
நாம் ஒரு பிரச்சனை பற்றி ஆழமாக சிந்தித்து கொண்டே தூங்கிவிட்டால், நம் மூளை அன்றிரவு முழுக்க இயங்கிக்கொண்டு தான் இருக்கும். மறுநாள் நாம் சோர்வாக விழிப்போம்
உலகத்தில் உள்ள கோடிஸ்வரர்களில் பெரும்பான்மையினர் அகநோக்குனர் (introvert) ஆவர் மன அழுத்தத்திலிருந்து விடுபட 80 விழுக்காட்டினர் பாடல்களை கேட்கிறார்கள்
ஒரு வருடத்தின் அதிகமான தொலைபேசி அழைப்புகள், அன்னையர் தினத்தன்று நிகழ்கிறது
மனிதரை விட மிருகங்களால் ஒருவரின் மனநிலையை எளிதாக புரிந்துகொள்ள முடியும்
ஒரு சுற்றுலாவிற்கு செல்வதற்குமுன் ஒரு நல்ல வாசனை திராவியத்தை வாங்கி அந்த சுற்றுலாவின்போது அதை பயன்படுத்துங்கள்.
அடுத்தமுறை அந்த வாசனையை நுகரும்போது அந்த சுற்றுலாவின் ஞாபகம் வரும்
ஒருவர் தன்னை வலிமை மிக்கவராக காட்டிக்கொள்ள கருப்பு நிற ஆடையை அணியலாம் 40% பெண்கள் தங்கள் தோழர்களுக்காக சர்வ சாதாரணமாக தன் காதலை விட்டு கொடுக்கிறார்கள்
நம்மால் ஒருவர் மீது ஒருமுறைதான் நம்பிக்கை வைக்க முடியும். அந்த நம்பிக்கையை அவர் உடைத்துவிட்டால், எவ்வளவு முயற்சித்தாலும் அதே அளவிலான நம்பிக்கையை மீண்டும் அவர்மேல் வைக்க இயலாது "நீங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யலாம் " என்று சொல்லும்போது நாம் ஒன்றும் செய்வதறியாது
விழிப்போம் . "நீங்கள் இதை மட்டும் செய்யக்கூடாது " என்று சொல்லும்போது நாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் மிக தெளிவாக இருப்போம் புதிதாக ஒருவரை சந்திக்கும்போது முடிந்தவரை அவருடைய பெயரை சொல்லி அழையுங்கள். மனிதர்களுக்கு அவர்களின் பெயரை பிறர் சொல்வது பிடிக்கும். Q நாம் அவர்களுடன் சுலபமாக நெருக்கமாகலாம்
நாம் 15 நிமிடங்கள் அசையாமல் இருந்தால், தூங்கிவிடுவோம்
6 வினாடிகளுக்கு மேல் ஒருவர் நம் கண்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவர் நம்முடன் நெருங்குவதற்கு அல்லது நம்மை கொலைசெய்வதற்கு ஆசைப்படுகிறார் என்று அர்த்தம்
ஆண்களுக்கு அதிகம் சிரிக்கும் பெண்களை பிடிக்கும் ஆனால் பெண்களுக்கு அதிகம் சிரிக்காத ஆண்களை பிடிக்கும்
ஒரு சராசரி மனிதர் ஏறக்குறைய 70000 விடயங்களை ஒரு நாளில் சிந்திக்கிறார்
அறிவாளிகள் என்றும் அவர்களை குறைத்து மதிப்பிடுவார்கள்
நகைச்சுவையை எளிதாக புரிந்துக்கொள்ளுபவரால், பிறருடைய சிந்தனையை அறிந்துகொள்ள முடியும் 10 லிருந்து 29 வயது வரை உள்ளவர்களில், 90 விழுக்காட்டினர் தங்கள் தொலைபேசியுடன் உறங்குகிறார்களாம்
ஒருவரை நமது சிந்தனையிலிருந்து அகற்ற முடியவில்லையென்றால், நாமும் அந்த நபரின் சிந்தனையில் இருக்கிறோம் என்று அர்த்தம்
டாட்டாவிற்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனா வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக் குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.
அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார். பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.
பேனா மறதியை பற்றி விசாரித்தார். அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது நண்பர்களே. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்
1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.
2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.
3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.
19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர் ஆவார். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். #இவை தவிர தான் எழுதிய நூல்கள்மூலம் காசிச்செட்டி அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். #தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் என்னும் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் கவிரியேல் காசிச்செட்டியின் புதல்வராகப் பிறந்தார். இன்று சிங்களப் பிரதேசமாக மாறிவிட்ட இப்பகுதி அக்காலத்தில் பெருமளவு தமிழர் வாழ்ந்த பகுதியாக இருந்தது. வணிக மொழியாகவும் தமிழே விளங்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர்.
காலப்போக்கில் இவர்கள் பிரித்தானியர் நடையுடைகளையும், அவர்கள் சமயத்தையும் சார்ந்து கொழும்புச்செட்டிகள் என வழங்கப்பட்டனர். இளம்வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், சிங்களம், அக்காலத்து ஆட்சி மொழியான ஆங்கிலம் என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர, #சமஸ்கிருதம், போத்துக்கீச மொழி, டச்சு மொழி, லத்தீன், கிரேக்கம், #எபிரேயம், அரபு மொழி ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். இவரது பதினேழாவது வயதில், 1824 ஆம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். இதன் போது இவரது திறமைகள் வெளிப்பட்டதால் இவரது இருபத்தொன்றாவது வயதில் 1828-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான மணியக்காரராக (Cheif Headman) உயர்வு பெற்றார். தனது இருபத்தேழாம் வயதில் 1833-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தின் முதலியாராகவும் எற்கனவே இருந்த மணியக்காரர் பதவியிலும் பணியாற்றினார். கோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆ.குமாரசுவாமி முதலியார் 1836 ஆம் ஆண்டு நவம்பரில் காலமாகிவிடவே உறுப்புரிமை வெற்றிடமானபோது, 1838 இல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1845-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர், மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் போன்ற பெருமைகள் இவரைச் சாரும். தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்பற்றி எழுதியதோடு, தமிழ்வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த்தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன. இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் கூடப் புகழ் பெற்றார். இவர் உதயாதித்தன் என்னும் தமிழ் மாசிகை ஒன்றையும் 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் எனினும் நீண்டகாலம் அதை நடத்தமுடியாமல் நிறுத்திவிட்டார். இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், தமிழ் புளூட்டாக்" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த #முதல்நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். #மாலத்தீவு மொழியிலே சிங்கள மொழி கலந்துள்ளமை பற்றியும், ஜாவாத்தீவின் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் காசிச்செட்டி எழுதியுள்ளார். அத்துடன் இலங்கையின் வரலாற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
கத்தோலிக்க சமயம் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளார். "கத்தோலிக்கத் தேவாலயங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும்" எனும் தலைப்பில் நூல் எழுதிய இவர் யோசப் வாஸ் எனும் பாதிரியார் பற்றியும் எழுதியுள்ளார். #கிரேக்க மொழியிலிருந்து கிறித்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த 'பிலிப் டி மெல்லோ என்பவர்பற்றிய வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் கிறித்தவ வேதாகமத்தின் பழைய ஏற்பாடான ஆதியாகமம் பற்றிய ஓர் நூலையும் எழுதியுள்ளார். #புத்தளப்பிரதேச முக்குவ குலத்தவரின் உற்பத்தியும் - வரலாறும்" எனும் ஆய்வுக் கட்டுரையையும் முஸ்லிம்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரையையும் எழுதியுள்ளார். சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார். திருக்கோணேச்சரம் பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டில் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். #சைமன் காசிச்செட்டி 1860 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று தமது ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார்.