Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 345  (Read 1927 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 345

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline mandakasayam

குரல்வளத்தின் மாமன்னன் மயக்கும்"" உனது குரலால்மனதை கொள்ளையடித்த அசுரன் பாடலால் இன்றும் பரவசம் அடையசெய்கிறாயே !!
        , ""இந்த மூச்சும்இந்த பாட்டும் அணையா விளக்கே!!  இன்றளவும் அனையா விளக்காக அனைவரின் இதயத்தில் சுடரொளி தீபமாய்  வெளிச்சத்தால் காட்சியளிக்கிறார் ....

இப்பூமி உள்ள வரை புகழும் பாடலும் பேசும் பொருளாய் பொக்கிஷம் தான். இசையின்றி தங்கள் குரலில் பாடலை கேட்க. இன்னுமோர் கீதமாய் இதயத்தில் கணக்கிறதே!!!  ஆச்சர்யம்

சின்னஞ்சிறு சினுங்களும் சிரிப்பும் பாடலில் வெளிப்படுத்த யாராலும்முடியாது! ராகத்தினை கூட உனது நளினத்தால் நாணம் அடைய செய்தாயே!!! 

சோகம் சூழ்ந்தாலும்  சொந்தமன உனது பாடல்களைதான்    நாடினோர் பல உண்டு
காயத்திற்க்கு கண்ணீராய் எக்காலத்திற்க்கும்   கருவாகவும் கரைந்து போக செய்தாயே!!

"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்"
  .இசையின்றி இன்னொரு ஆன்மா உனது குரலில் புதுமையான உணர்வுகளை புகுத்திகொண்டுதான் இருக்கிறது.


 புனிதம் பெற்ற உனது பாடலால்  பிணைய கைதிகளாய் சிறைபட்டோமே  அதை  விடுவிக்க உங்களது பாடலேதான்  விடுதலை!!!

இறைவா தூக்கம் இன்றி தவிப்பாயோ உனது
தாலாட்டிற்க்கு அழைத்து எங்களை கண்ணீரால் தத்தளித்துவிட்டாயே!!!

பாடும் நிலவே மறைந்ததா இல்லை மனித பிறவி உள்ளவரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் எம் குடும்பத்தில் ஒருவராக!!!!!
நமது இதய துடிப்பில்  தடம் பதித்த  தனி தீபஒளியாய் !!!
« Last Edit: June 12, 2024, 03:59:59 PM by mandakasayam »

Offline Symphony

                              பாடும் நிலா!
                            ஓர் சரித்திரம்!

                             பாடும் நிலா!
                            ஓர் சரித்திரம்!


பன்முகத்தன்மை புலவன் நீ அன்றோ!

              ஓட்டல் ரம்பாவில் துடங்கிய முதல், அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு!
              
                               ஓர் ஆயிரம்
                               நிலவாய் வந்தாய் நீ, 

                            இயற்கை என்னும்
            இளைய கன்னிகைக்கு
                             மல்ல்லிகை பூ

 வாங்கி வந்தவன் நீ !

பின்னணி இசை சேர்ப்பு
பாடகன் அல்ல நீ!
பன்மொழி பாவலன் நீ!
     
      மென்குரலொசையால்
               இன்னிசை யாழ்மிட்டும் இசை தாயின்.....♥️   மடியில் கருதறித்தாய் நீ!

                     இளமை எனும் பூங்கீற்றாய் சத்தம் இல்லாத தனிமையில் வளையோசை சல சல  என நிலவொன்று கானம் பாடும் வானம் பாடி  நீ!

                            பல பல பட்டங்கள்
                       கைப்பற்றி உலகின் விந்தை
                                     மிகு மாமன்னர் நீ,
                             சித்தகத்தி பூவாய் தேனாய் தென்பாண்டி மீனாய்
                  இசைதேனில் ஊரிய பலா நீயே!

                 இராஜா வின் மெட்டக்கள் என்னும் தோனியின் துடுப்பு நீயே!
                  
          என் மௌனமான நேரத்தில்,
                    சலங்கை ஒலி நீ!

                         சரிகமபதநி, சுரமும்! லயமும்! தகிடததிமி தந்தாணா போடும்
              உம் புகழ் பாடும் பாடல் பல்லாயிரம்!

                            மனதில் உறுதி வேண்டும்
                              மருத்துவன் நீ!

                  கேளடி கண்மணி
                 இந்த பாடகனின் சங்கதி தினம்
                       ஒரு புதுப் பாடல் படித்துவிட்டன்
                என்றா நீ! வின் நின்று
                               பார்க்கிறாய் கண்ணே!

                      பல்லவிக்கும், சரணத்திற்கும் உன் குரல் கொடுத்திட்டு  
                      என்!  கண்ணான என் கண்ணா!   

                     கீதாஞ்சலி கண் காணா
              அழகுக்கு கவிதாஞ்சலி! என்றாய்

இன்றோ உனக்கு அஞ்சலி செலுத்த
                                 வைத்தும் ஏனோ ?

                  நீ தொலைவில் சென்றாலும்
                                உன் புன்னகை மின்னும் குரலொசை எங்கள்
                    செவிகளுக்குள்ளே ரம்மியமான இனிய மெல்லிசையாய்
                              தேன் வந்து பாய்கிறது
                               பாடும் நிலவே!

                              ஒலிவீசும் குயில்,                             
                       மூச்சு நின்றாலும் குரல் ஓசை களஞ்சியம் என்றும் ஒலிக்கும்
                            பாடும் நிலா பாலு துயில்
                       கொள்ளும் நிலா நீ!

                    எம் சிந்தையில் உதிர்ந்த மழைத்துளியே எங்களை
            கண்ணீர் கடலில் மூழ்கவைத்தாய் நீ!
                       வண்ணம் கொண்ட
                            வெண்ணிலவே
                   வானம் விட்டு வாராயோ
                   வண்ணம் கொண்ட
                                  வெண்ணிலவே ௭ன்று
                    உன்  ஆக்கம் கண்ட போனாவின்
                          மூனையும் ஏங்கும்!
                   சிகரம் எட்டி விட்டோம் என்றா
                    கொறோனா அரக்கனின்
                         கையில்     உனைகொடுத்து?
              மண்ணில் புதைந்து கிடக்கும்
         என் முத்தே என் முத்தாரமே
        என் இதயாஞ்சலி 👁 👁 👁 😭😭😭🌹🌹🌹😭😭😭
                உன் குரல் வண்ணம் மின்னும்
            என்றும் உள்ளம் கொள்ளை கொண்ட கள்வாரே பாடும் நிலா! நீ  ஓர் சரித்திரம்!

                  உங்கள் சிம்பொணி
« Last Edit: June 11, 2024, 09:11:34 PM by Symphony »
Raju

Offline Kavii

காணமுழயாத காட்சிகளை உனது கானங்களால் கண் முன் நிறுத்தினாய்! காற்றின் மொழியாய், கனவுகளின் குரலாய்! காதலின் மலராய் எங்கள் நெஞ்சில் நீந்தினாய்!
காலத்தின் காவியமே! கம்பனின் குரலே! கருத்தின் பொன்னகமே!
இசையே! இதயத்தின் குரலாய், மழலையின் சிரிப்பாய்!
காதலின் புரிதலாய்! காற்றின் தென்றலாய்! இயற்கையின் உருவமாய்!
எண்ணற்ற கான';களை உனது குரலால் எங்களை உணரச் செய்த இசைவாணியே!
காலமே உன்னைக் காவியமாக்கிச்  சென்றதேன்!

எழுந்திருக்கும் ஒவ்வொரு விடியலிலும். உனது இசையால் மெருகூட்;டினாய்!
கோயிலின் கோலமாய். கோபுரத்தின் நிழலாய்;. நந்தவனத்தின் மலராய். காதல் நதியின் ஓசையாய். ஒவ்வொரு நாளையும் உனது கானங்களால் நிஜமாக்கினாய்!

உன் பெருமையை எழுத இந்த ஒரு கவிதை போதாது!
ஏனெனில் சங்கீதத்தின் சரித்திரம் நீ!
இன்னிசையின் இமயம் நீ! எழுத முடியா காவியம் நீ!
வரையா முழயா ஓவியமும்; நீ!
உன் குரல் தனிமையின் துணை! உற்சாகத்தின் உற்சவம்!
கண்ணீரின் காட்டாறு! காதலின் மயக்கம்! அன்னையின் தாலாட்டு!
தந்தையின் பாசம்! நட்பின் தோழமை! மழலையின் சிரிப்பு! தெய்வீகத்தின் ராகம்!
இயற்கையின் காட்சி! பயணத்தின் துணை நீ!
மொத்தத்தில் நீ ஒரு புதுவித அனுபவம்!

இசைக்கடலில் ¬மூச்சு விடாமல் மூழ்கி முத்தெடுத்த சாதனையாளன் நீ!
அனைவரின் மனதையும் கட்டியிழுத்த இசையின் புதல்வனும் நீ!

என்னை நீ து{ங்க வைத்த இரவுகள் எத்தனையோ எண்ணிலடங்கா!
உறக்கம் வர உன் பாடல் போதும்!
நவரசமும் உன் குரலோசையில்!
ஒவ்வொரு மனிதனின் கண்ணீர், காதல், கோபம். ஏக்கம். மகிழ்;ச்சி, துன்பம் என
அத்தனை உணர்வுகளுக்கும் அருமருந்தாய். ஆறுதலாய் உன் ஒரு குரல் போதும்!

வாழ்;க்கையின் எட்டு கட்ட அனுபவங்களை ஒரெ பாட்டிலே உரைத்த வள்ளுவன் நீ!
நவரசங்களை வடித்த குரல் சித்தன் நீ!
உணர்ச்சிகரமான நேரத்தில் மனதை சமநிலைப்படுத்தும் மாயக்குரலோன் நீ   !
நீ மறைந்தாலும் உன் கான ஓசை மறையாது எம் காந்த குரலோனெ!

இந்த உலகம் உள்ளவரை உன் கீதம் ஒலிக்கும்
உன் குரலுக்கு நிகரென்று எதுவுமில்லை இவ்வுலகில்!
இயற்கை உள்ளவரை ஒலிக்கும் உனது கானங்கள்!
எங்கள் மூச்சு உள்ள வரை இருக்கும் உனது நினைவுகள் உனது மயக்கும் குரல் வழியே!

எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும். போனாலும். நீ மட்டுமே பாடும் நிலா!

எங்கும் ஒலிக்கும் உமது குரல்! எப்பொதும் நிலைக்கும் உமது புகழ்!


Offline Vethanisha


சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த மன்னா!
அத்தமிழ் கொஞ்சும் 
இவர் பாடல் கேட்டாயோ

குரலோ அது புல்லாங்குழலோ
எம் செவிகளுக்கு கிடைத்த வாரமோ
பெருமைக்குரிய  சுப்ரமணியா
உம்  உமிழ்கொண்டு உலர
எம்மொழியும் அழகானதே

உம்
 அமுதகானம் கேட்டு எனை
மறந்த நாட்கள் தான் எத்தனை
கலக்கமோ மயக்கமோ என்றும்
 உம் கீதமே எமக்கு துணை

நான் கண்ட பருவம் யாவிலும் 
நீயும் ஓர் அங்கமே
இன்றும் உம்   கானங்கள்
என் உணர்வுகளின் தஞ்சமே 

காதல் அது அறியாமலே
 காதலுற்றேனே
ஏக்கம் அது அறியாமலே
மயங்கி போனேனே
கனவுகள் மெய்யாகும் போது
நிஜங்கள் பொய்யானதே

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே!

 பாடும் வானம்பாடி
இசை உள்ளவரை என்றும் நீ !

Offline SweeTie

இசையோடு கலந்த இன்ப ஊற்று 
தேனமுதோடு  கலந்த  தெள்ளமுது
ராகமும்  தாளமும்  இவர் மூச்சென்றால் 
இவர் பாடும் பாடல் நம் மூச்சு
'
இசைக்கு மயங்காதோர்  யார் உளர்?
இவர் இனிய குரலுக்கு மயங்காதோர் யாருமிலர்
இயற்கை என்னும்  இளைய கன்னிக்கு
அழகூட்டிய   இசை அமுதே   

துன்பத்திலும்    உன் துணையே 
இன்பத்திலும்  உன்  இசையே   
காதல் ரோஜாவே எங்கே  நீ எங்கே
உன் இசையில்  பெருகியதே  காதல் 

இசையால் வருடும் இளந் தென்றல் நீ
முகிலிடை மறையும்  முழு நிலவும் நீ
மூன்று தலைமுறை  இசையமைப்பில்
முழுதாக நீந்தியவனும்  நீ

காலங்கள் போனாலும்  அழியாது உன் பாடல்
காற்றோடு கலந்து  எங்கள் மூச்சோடு இணைந்து
நினைவோடு  என்றும் நிற்பவனே  ,
சாதனையாளருக்கு     சாவு  வருவதில்லை
நம்முடன்  என்றும் வாழும்   SPB !!!

 

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 533
  • Total likes: 1605
  • Total likes: 1605
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
அன்பில் வந்த ராகமே
அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன்
மனதில் இன்ப தேனும் ஊறும்!

உங்களை பற்றி கவிதை எழுத தமிழில்
சொற்களை தேடி தேடி தோற்று போனேன்…
அதனால் தான்
நீங்கள் பாடிய பாடலால்
இக்கவிதையை தொடங்கி உள்ளேன்…

இயற்கை தந்த
அற்புத கலைஞன் நீ!
இன்னிசையையும் இன்பம்
காண வைத்தவன் நீ!
மெல்லிசையையும் மனம்
மயங்க வைத்தவன் நீ!

பாடல் கேட்டால்
தூக்கம் வருமா?
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
என்று
இவர் பாடினால் அன்னையின் தாலாட்டாய் இருக்கும்!!

பாடல் கேட்டால்
உத்வேகம் வருமா?
உன் கையை நம்பி உயர்ந்திட பாரு
உனக்கென எழுது ஒரு வரலாறு
என்று
இவர் பாடினால் துவண்ட மனமும் புத்துணர்வு பெறும்!!

பாடல் கேட்டால்
காதலின் பிரிவை உணர முடியுமா?
மின்னலே நீ வந்ததென்னடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என்று
இவர் பாடினால் காதல் கண்முன் நிற்கும்!!

பாடல் கேட்டால்
வீரம் தோன்றுமா?
கப்பல் ஏறி போயாச்சு
சுத்தமான ஊராச்சு
என்று
இவர் பாடினால் நாடி நரம்பு புடைக்கும்!!

பாடல் கேட்டால்
நகைச்சுவை உணருமா?
என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமாமா கண்ணு சௌக்யம்தான்
என்று
இவர் பாடினால் முகத்தில் சிரிப்பு மலரும்!!

பாடல் கேட்டால்
உற்சாகம் பொங்குமா?
எங்கேயும் எப்போதும் 
சங்கீதம் சந்தோஷம்
என்று
இவர் பாடினால் மகிழ்ச்சி பன்மடங்காகும்!!

பாடல் கேட்டால்
அழுகை வருமா?
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்று
இவர் பாடினால் கண்ணீர் பொழியும்!!

High Pitchலும்
பாசம், காதல், கொஞ்சல், சிணுங்கல்,
காமம், சோகம்,அழுகை,பிரிவு, வலி என 
அனைத்து உணர்ச்சிகளையும் பிசிறுத்தட்டாமல்
பாடும் ஒரு  Perfectionist தான்
பாடும் நிலா “SPB”

நீங்கள் வாழ்ந்த காலத்தில்
நாங்களும் வாழ்ந்தோம் என்ற
ஒற்றை பெருமை போதும்!
ஆரம்பத்தை போல் முடிவும்
நீர் பாடிய பாடல் வரிகளில் முடிக்கிறேன்!!
இசையின் ஆதியும் அந்தமாய் என்றும்…

இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்!!!


« Last Edit: June 20, 2024, 08:05:47 AM by SaMYuKTha »

Offline VenMaThI



வார்த்தைகளை கோர்வையாக்கினான் கவிஞன்
சந்தம் கொடுத்து இசை அமைத்தான் ஒருவன்
வார்த்தைகளுக்கு உன் குரலால் உயிர் கொடுத்து
எங்களுடன் உலாவச்செய்த பாடகன் நீ ...

உன் குரல் ...
கேட்போர் மனதில் நங்கூரமாய்
என்றுமே நிலைக்கும் ரீங்காரமாய் ...
செவிக்கு என்றுமே விருந்தாய் அமையும்...
மனதோடு பேசும் பல அற்புதமும் நிகழ்த்தும்....

வலியும் பசியும் மறக்கக்கூடும்
மனதின் ரணமது பறக்கக்கூடும்
தாலாட்டாய் மாறி தூங்கச்செய்யும் - தலைவனே
நின் குரல் அனைவரையும் மயங்கச்செய்யும் ...

தனிமையில் இனிமை காணவும் செய்தாய் .. அந்த
தனிமையை போக்கும் மாயமும் செய்தாய் ..உன் குரல் கேட்டு
வாழ்வை வெறுத்தவனும் வெற்றி பல கண்டான்
வாழ்க்கை பாதையில் பல வசந்தங்கள் கொண்டான்...

corona என்னும் கொடிய நோய் போக்க
"தொடுதல் வேண்டாம் தனிமை கொள்வோம்" என்றுரைத்து
யாரும் தொட முடியா தூரத்தில்
தனிமையில் இனிமை காண சென்றாயோ ?

"corona vayum கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்"
உன் வரிகளும் இன்று பொய்யாய் போனதோ
உன் வாழ்க்கையும் அதற்கு இறையாய் போனதோ ?

அழுதவன் கண்ணீரை துடைத்த உன் குரல்
இன்றும் ஆழமாய் எங்கள் மனதினில் நிற்க
புது படைப்புகழுக்காய் ஏங்கும் நெஞ்சங்கள்
புன்னகை சிந்திட மீண்டும் ஜனனம் எடுப்பாயா ?

நிலவது தேய்வதும் .. பின் அது வளர்வதும்
இயற்கையின் விதியாய் அமைந்த போதும் - பாடும் நிலாவே
நீ வானுயற பறந்தாய்
பின் ஒரு நாள் மறைந்தாய் ...

உம் மறைவின் வேதனையில் இருந்து
நாங்கள் மமீண்டு வருவது எப்போதோ...
எங்கள் மனம் குளிரும் குரல் கொடுக்க
நீர் மீண்டும் வருவது எப்போதோ ?

« Last Edit: June 20, 2024, 01:15:40 PM by VenMaThI »