Author Topic: தொல்காப்பியம்  (Read 7907 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தொல்காப்பியம்
« on: May 05, 2012, 12:13:57 PM »
தொல்காப்பியம்



தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி

தொல்காப்பியம் (ஆங்கிலம்: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.
 
தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின


தொல்காப்பியர் காலம்
 
தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்துள்ள புலவர் பனம்பாரனார் தொல்காப்பியர் காலத்தவர். அவர் தம் பாயிர உரையில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிடுகிறார். ஐந்திரம் என்பது சமற்கிருத இலக்கணநூல். இது பாணினி எழுதிய சமற்கிருத இலக்கண நூலுக்குக் காலத்தால் முற்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் தோன்றவில்லை. எனவே தொல்காப்பியர் பாணினிக்கு முந்திய நூலான ஐந்திரம் என்னும் நூலையும் அறிந்திருந்தார். தமிழில் இருந்த 'முந்துநூல்'(அகத்தியம்) கண்டிருந்தார். எனவே தொல்காப்பியர் பாணினியின் காலமாகச் சொல்லப்படும் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது தெளிவு.
 
ஐந்திரம், தொல்காப்பியம் ஆகிய நூல்களைப் பற்றிப் பர்னல் என்பவர் ஒப்பிட்டு ஆராய்ந்தார். இந்திரன் செய்தது ஐந்திரம் என்றனர். இந்த இந்திரன் சமணமதத்தைத் தோற்றுவித்த இந்திரன் என இவர் கொண்டார். விளைவு தொல்காப்பியம் சமணர் காலத்துக்குப் பிற்பட்டவர் தொல்காப்பியர் எனக் காட்டலானார். உண்மையில் ஐந்திரம் என்னும் நூல் ஐந்திரன் என்பவரால் இயற்றப்பட்டது என்பதே பொருத்தமானது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது பர்னல் விளக்கம் தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. நாலாம் நூற்றாண்டுக்கு முன்னதாக்கிவிடும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தொல்காப்பியம்
« Reply #1 on: May 05, 2012, 12:17:49 PM »
தொல்காப்பியம் - பெயர் விளக்கம்
 
தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம். தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவிவருகின்றன


தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம்

 
தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.
 
அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம். இந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும், தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும், பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பிம் எனக் கொள்வதே முறைமை.
 
கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது.
 
தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும்


தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர்
 
இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.
 
நன்னூலின் 136-ஆம் செய்யுளின் விதிகளின்படி



ஈறு போதல் இடையுகரம் இய்யாதல்
 ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
 தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
 இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே
 
நன்னூல் - 136

தொன்மை + காப்பியம்
 "ஈறு போதல்" என்னும் விதிப்படி
 தொன்மை + காப்பியம்
 தொன் + காப்பியம்
 
"முன்னின்ற மெய்திரிதல்" என்னும் விதிப்படி
 தொன்ல் + காப்பியம்
 தொல் + காப்பியம்




தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தொல்காப்பியம்
« Reply #2 on: May 05, 2012, 12:19:03 PM »
தோற்றம்
 
தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார்.
 
தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை. தொல்காப்பிய ஆசிரியர் சமணர்[சான்று தேவை] என்று சிலரும் பிராமணர்[சான்று தேவை] என்று சிலரும் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல்[சான்று தேவை] என்றே நம்புகின்றனர்.
 
தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்கலில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.
 
பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் [சான்று தேவை] இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் கி.மு 700 ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை கி.மு 500-க்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய எஸ். வையாபுரிப் பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி கி.பி 3 ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். எனினும், இது கிறிஸ்துவுக்கு முற்பட்டது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாகும். .
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தொல்காப்பியம்
« Reply #3 on: May 05, 2012, 12:20:56 PM »
அமைப்பு



மூல ஓலையுடனான தொல்காப்பிய அமைப்பு


தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ்மரபையும் விளக்குகிறது
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தொல்காப்பியம்
« Reply #4 on: May 05, 2012, 12:23:12 PM »
எழுத்ததிகாரம்



தொல்காப்பி எழுத்து நடை - ஒரு பகுதி.


1.நூல் மரபு - (நூன்மரபுச் செய்திகள்)
 2.மொழி மரபு - (மொழிமரபுச் செய்திகள்)
 3.பிறப்பியல் - (பிறப்பியல் செய்திகள்)
 4.புணரியல் - (புணரியல் செய்திகள்)
 5.தொகை மரபு - (தொகைமரபுச் செய்திகள்)
 6.உருபியல் (உருபியல் செய்திகள்)
 7.உயிர் மயங்கியல் (உயிர் மயங்கியல் செய்திகள்)
 8.புள்ளி மயங்கியல் (புள்ளிமயங்கியல் செய்திகள்)
 9.குற்றியலுகரப் புணரியல் (குற்றியலுகரப் புணரியல் செய்திகள்)


எழுத்ததிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்
 
எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
 
முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துக்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துக்களின் தொகுப்புப்பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன.
 
இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துக்களைப் பற்றிய விளக்கமும், சொல் தொடங்கும் எழுத்துக்கள், சொல்லில் முடியும் எழுத்துக்கள் பற்றிய செய்திகளும் உள்ளன.
 
மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துக்களின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன.
 
நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது.
 
ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன.
 
ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது.
 
ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில், உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
 
எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
 
ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
 
இப்படி எழுத்து, மொழி(word), புணர்மொழி(combination of words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன.


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தொல்காப்பியம்
« Reply #5 on: May 05, 2012, 12:24:17 PM »
சொல்லதிகாரம்

 1.கிளவியாக்கம் - (கிளவியாக்கச் செய்திகள்)
 2.வேற்றுமை இயல் (வேற்றுமையியல் செய்திகள்)
 3.வேற்றுமை மயங்கியல் (வேற்றுமை மயங்கியல் செய்திகள்)
 4.விளி மரபு (விளிமரபுச் செய்திகள்)
 5.பெயரியல் (பெயரியல் செய்திகள்)
 6.வினை இயல் (வினையியல் செய்திகள்)
 7.இடையியல் - (இடைச்சொல் அகரவரிசைத் தொகுப்பும் விளக்கமும்)
 8.உரியியல் - (உரிச்சொல் அகரவரிசைத் தொகுப்பும் விளக்கமும்)
 9.எச்சவியல் - (எச்சவியல் செய்திகள்)
 
சொல்லதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்
 
சொல்லதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
 
முதலாவது கிளவியாக்கம் என்னும் இயலில் தமிழ்ச் சொற்றொடர் வாக்கியமாக அமையும் பாங்கு கூறப்படுகிறது.
 
இரண்டாவது வேற்றுமையியலில் வேற்றுமை உருபுகள் இன்னின்ன கருத்துக்களைப் புலப்படுத்திக்கொண்டு சொற்றொடராக அமையும் என்பது விளக்கப்படுகிறது.
 
மூன்றாவது வேற்றுமை மயங்கியலில் 2, 3, 4, 5, 6, 7 வேற்றுமை உருபுகள் உருவில் திரிந்தும், பொருளில் வேறுபட்டும் நிற்கும் இடங்கள் எவை என விளக்கப்படுகிறது.
 
நான்காவது விளிமரபு என்னும் இயலில் 8-ஆம் வேற்றுமையாக எந்தப் பெயர்ச்சொல் எவ்வாறு மாற்றம் கொள்ளும் என்பது விளக்கப்படுகிறது.
 
ஐந்தாவது பெயரியலில் பெயர்ச்சொற்கள் தோன்றுமாறும், அவை ஒருமை, பன்மை என்னும் எண்ணைப் புலப்படுத்தும்போதும், தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் இடத்தைப் புலப்படுத்தும்போதும் எவ்வாறு அமையும் என்பது விளக்கப்படுகிறது.
 
ஆறாவது வினையியலில் வினைச்சொற்கள் காலம் காட்டும் பாங்கும், ஐம்பால் மூவிடங்களில் ஈறுகள் கொள்ளும் பாங்கும், எச்சங்களாகத் திரியும் பாங்கும் விளக்கப்படுகின்றன.
 
ஏழாவது இடையியலில் பெயரையும் வினையையும் கூட்டுவிக்க இடையில் வந்தமையும் இடைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
 
எட்டாவது உரியியலில் பெயருக்கும், வினைக்கும் உரிமை பூண்ட உரிச்சொறகள் எடுத்துக் காட்டப்பட்டு அவை உணர்த்தும் பொருள்கள் இவை என்பதும் சொல்லப்படுகிறது.
 
ஒன்பதாவது எச்சவியலில்
 இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடுகளும்,
 பெயரெச்சம், வினையெச்சம், சொல்லெச்சம் பிரிநிலையெச்சம், எதிர்மறை எச்சம், ஒழியிசை எச்சம், உம்மை எச்சம், என-என்னும் எச்சம் முதலானவை பற்றிய விளக்கங்களும்,
 ஈ, தா, கொடு ஆகிய சொற்களின் சிறப்புப்பொருள்களும்,
 இடக்கரடக்கல், குறைசொற்கிளவி பற்றிய விளக்கங்களும்,
 காலமயக்கம், ஒருமை-பன்மை மயக்கம் பற்றிய பல்வகை மொழிக்கூறுகளும்
 
விளக்கப்பட்டுள்ளன.
 இவற்றுக்கு இடையே நிரல்நிறை, சுண்ணம், அடிமறி-மாற்று, மொழிமாற்று ஆகிய செய்யுளின் பொருள்கோள் வகை புகுந்துள்ளது விந்தையே.
மொத்தத்தில் சொல்லதிகாரம் மொழியின் வாக்கிய அமைப்பைக் (Syntax) கூறுகிறது எனலாம்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தொல்காப்பியம்
« Reply #6 on: May 05, 2012, 12:25:23 PM »
பொருளதிகாரம்

 1.அகத்திணையியல்
 தொல்காப்பியம் அகத்திணையியல் செய்திகள் 1.புறத்திணையியல்
 2.களவியல்
 3.கற்பியல்
 4.பொருளியல்
 5.மெய்ப்பாட்டியல்
 6.உவமவியல் (உவமவியல் செய்திகள்)
 7.செய்யுளியல்
 8.மரபியல் (மரபியல் செய்திகள்)
 
 பொருளதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்
 
பொருளதிகாரம் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் விளக்குகிறது. பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
 
முதலாவதாக உள்ள அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழையும், புறத்திணைகள் ஏழையும் விளக்குகின்றன.
 
மூன்றாவதாக உள்ள களவியலும், நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள்.
 
ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப்பாடல்களுக்குப் பொருள் காணும் முறைமையை விளக்குகிறது.
 
ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும், புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. பெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள் உடலில்(மெய்யில்) வெளிப்படுவது.
 
ஏழாவதாக உள்ள உவம இயல் வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது.
 
எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும், நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது.
 
ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும், அவற்றின் இளமை, ஆண், பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன. அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய், பழம், முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களும் சுட்டப்படுகின்றன. நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்னும் வரிசையில் ஐந்து பூதப்பொருள்களும் சுட்டப்படுகின்றன.
 உயிரினங்களின் இளமை, ஆண், பெண் ஆகியவற்றை விளக்கிய பின்னர், ஓரறிவு உயிரினங்களை விளக்கியிருப்பதற்கு முன்னர், இடைப்பகுதியில், மக்களை அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்னும் பாகுபாடு, நிரல் மாறி உள்ளதால் இந்தப் பாகுபாட்டைப் பிற்கால இடைச்செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் மரபியலுக்குப் புறனடையாக அமைந்துள்ள நூற்பாக்களுக்குப் பின்னர் ஓர் இணைப்பைப் போல் நூல், உரை, உத்தி பற்றிய பாகுபாடுகள் பிற்காலத்து 13ஆம் நூற்றாண்டு நன்னூலார் பாங்கில் அமைந்துள்ளன.
மொத்தத்தில் பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலையும், தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தொல்காப்பியம்
« Reply #7 on: May 05, 2012, 12:27:09 PM »
இலக்கணம் - சொல்விளக்கம்
 
தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம்.
 
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்
 
தொல்காப்பிய ஆறு பண்டை உரையாசிரியர்கள்
 1.இளம்பூரணர்
 2.பேராசிரியர்
 3.சேனாவரையர்
 4.நச்சினார்க்கினியர்
 5.தெய்வச்சிலையார்
 6.கல்லாடனார்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தொல்காப்பியம்
« Reply #8 on: May 05, 2012, 12:38:10 PM »
செய்தித் தொகுப்புக் கட்டுரைகள்

**அகத்திணையில் உரையாடுவோர் (அகத்திணை மாந்தர்) (அகத்திணைப் பாத்திரங்கள்)
 **அகத்திணை வாயில்கள் (அகத்திணைத் தூதர்கள்)
 **தொல்காப்பியத்தில் விலங்கினம்


அகத்திணையில் உரையாடுவோர்

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


தொல்காப்பியத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகிய மூன்று இயல்களில் அகத்திணைச் செய்திகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் யார் யார், எப்போது, என்ன பேசுவர் என்னும் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூலிலுள்ள பாடல்களை அணுகுதல் வேண்டும்.

 1.அறிவர் கூற்று
 2.கண்டோர் கூற்று
 3.காமக் கிழத்தியர் கூற்று
 4.செவிலி கூற்று
 5.தந்தை கூற்று
 6.தலைவன் (கிழவோன்) கூற்று
 7.தலைவி (கிழவோள்) கூற்று
 8.தன்னை (தன் அண்ணன்) கூற்று
 9.தோழி கூற்று
 10.நற்றாய் கூற்று
 11.பாங்கன் கூற்று
 12.மற்றவர் கூற்று
 13.வாயிலோர் கூற்று
 
ஆகியவை அந்தப் பெருமக்களின் உரையாடல்கள்


அகத்திணை வாயில்கள்


அகவொழுக்கம் உள்ளத்தில் பதிந்துகிடக்கும் ஒழுக்ககம். பிறருக்குப் புலப்படுத்த முடியாத உடலுறவு பற்றியது. இது தலைவன்-தலைவி உறவாக அமையின் போற்றப்படும், அதுவும் திருமணத்துக்கு முன் இருக்கும்போது தூற்றப்படும். தூற்றுதலை அலர் என்பர். தலைவன்-பரத்தை உறவு பழிக்கப்படும்.
 
இந்த உறவுகள் தலைவன்-தலைவி மாட்டு அமையத் தூது செல்வோரை வாயில்கள் என்பர். இந்த வாயில்கள் யார் யார் எனத் தொல்காப்பியர் பட்டியலிட்டுக் காட்டுகிறார். (கற்பியல் 52)
 
1.தோழி, 2.தாய், 3.பார்ப்பான், 4.பாங்கன், 5.பாணன், 6.பாடினி, 7.இளையர், 8.விருந்தினர், 9.கூத்தர், 10.விறலியர், 11.அறிவர், 12.கண்டோர்
 
என்னும் 12 பேர் வாயில்கள். இவர்களை வீட்டுக்குள் நுழைய இடம் தரும் வாயிலோடு ஒப்பிடலாம்



தொல்காப்பியத்தில் விலங்கினம்


தொல்காப்பியம் மரபியல் பகுதியில் விலங்கினங்களில் பலவற்றின் இளமைப்பெயர்கள், ஆண்-பெயர்கள், பெண்-பெயர்கள் மரபுவழியில் எவ்வாறு பயிலப்பட்டுவந்தன என்பது சுட்டப்படுகிறது. அவற்றின் பெயர்கள் அகரவரிசையில் தொகுக்கப்பட்டு இங்குத் தரப்படுகின்றன.
 
இடையில் தொல்காப்பியர் தந்துள்ள சில குறிப்புகளும் உள்ளன
« Last Edit: May 05, 2012, 01:27:51 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: தொல்காப்பியம்
« Reply #9 on: May 05, 2012, 01:21:50 PM »
தொல்காப்பியத்தின் சமகால முக்கியத்துவம்


மாற்றங்களின் அடிப்படையில்தான், அவற்றின் தாக்கங்களினால்தான் கோட்பாடுகள் புதுப்பிக்கப்படுகின்றன. புதிய படைப்புகள் உருவாகும்போது புரிந்து கொள்ளலில் வரும் மாற்றங்கள் கவனிக்கப்படுகின்றன. அதற்குத் தகுந்தவாறு கோட்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு புதிய ரீதியில் படைப்புகள் படைக்கப்படுகின்றன. மீண்டும் சுவைத்தலில் வரும் வேறுபாடு இலக்கியப் படைப்பிலும், தொடர்ந்து ரசனையிலும் மாற்றங்களுக்குக் காரணமாகிவிடுகிறது. மாற்றங்களுக்குப் பின்னாலுள்ள தத்துவங்கள், அவற்றை ஊக்குவித்த தன்மைகள், கவனிக்கவும்படுகின்றன; பிறகு ஒழுங்கும் படுத்தப்படுகின்றன.

தொல்காப்பியத்தை எடுத்துக்கொண்டால், அது யாரால், எப்போது, எவ்வாறு எழுதப்பட்டது போன்றவற்றைப் பண்டிதர்களுக்கு விட்டுவிடுவோம். நாம் வாழும் இன்றைய காலத்தில் இலக்கியப் படைப்புகளைப் படிப்பதற்குத் தொல்காப்பியப் பொருளதிகாரம் எந்த அளவுக்கு உதவும் என்பதைத்தான் இங்கே ஆராய்ந்து பார்க்கிறோம்.

திராவிட அழகியலின் அதிகாரபூர்வமான நிரூபணமாகக் கருதப்படவேண்டிய பொருளதிகாரத்தில் மானிட வாழ்வை அதன் அடிப்படையும் ஊக்கச் சக்தியுமான இயற்கையுடனும் பருவங்களுடனும் தொடர்புபடுத்தும் ஒரு முழுமையான தரிசனத்தைப் பார்க்க முடிகிறது. இன்று பிரபலமாகிக்கொண்டிருக்கும் சுற்றுப்புற அழகியலுடன் ஓர் அளவுக்காவது இந்த தரிசனத்திற்கு ஒற்றுமை உண்டு.

பல்வேறு நிலப் பிரிவுகளாகக் கணக்கிடப்படுகிற திணைகளை அடிப்படையாகக் கொண்ட திராவிட இலக்கியத் திறனாய்வில் இரு முக்கியக் கூறுகளாக இலக்கியம் பிரிக்கப்பட்டிருக்கிறது. உள்ளுணர்தலும் தனித் தன்மையும் உணர்வு முக்கியத்துவமும் ஆன உணர்ச்சிப் பாடல் விசேஷங்கள் உட்கொண்ட அகக் கவிதைகள் ஒரு பிரிவு; மெய்யுணர்தலும் சமூகப் பிரக்ஞையும் விவரிப்பு முக்கியத்துவமும் ஆன எடுத்துரைத்தல் விசேஷங்கள் உட்கொண்ட புறக் கவிதைகள் இன்னொன்று. இவற்றுக்கு அடிப்படையான திணைகள்தான் அகத் திணைகளும் புறத் திணைகளும். இவை இரண்டையும் பரஸ்பரம் தொடர்பில்லாத, தண்ணீர் நுழைய முடியாத அறைகளாகக் கணிக்க வேண்டிய தேவையில்லை. திணை மயக்கம் ஒதுக்கப்பட வேண்டியதல்ல.

பொருளதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பவற்றை வைத்துப் பார்த்தால், இலக்கியத் திறனாய்வில் முதலில் முக்கியமாக எழும் கேள்விகள் இடம், காலம் சம்பந்தப்பட்டவையே. அகத்திணையிலும் புறத்திணையிலும் முதல் பொருளாய் இயங்குவது எங்கே, எப்போது என்ற கேள்விகளுக்கான விடைதான். படைப்பில் எடுத்தாளப்படும் அனுபவங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஆதாரமும் பகைப்புலனுமான இயற்கைக் காட்சிகளின் அடிப்படையில்தான் அகத்திணைகளும் புறத்திணைகளும் ஏழு ஏழாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு திணைக்கும் தனித்தனிப் பொருத்தமான பருவங்களும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. காலக் குறிப்பீட்டில் ஆண்டின் பாகங்களான ருதுக்களும் (பருவங்கள்) நாளின் பாகங்களான யாமங்களும் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு செடி அல்லது மரத்தின் பெயர் ஒவ்வொரு திணையையும் குறிப்பதற்கான குறியீடாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இட, கால நிலைகளின் இணைப்புதான் ஒவ்வொரு திணையும். தொல்காப்பியர் வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த தென்னிந்தியப் புவியியல் இயற்கையை ஆதாரமாக்கித்தான் ஏழு அகத்திணைகளும் ஏழு புறத் திணைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. பூகோளத்தின் ஏனைய பாகங்கள் கவனத்தில் வரும்போது கூடுதல் திணைகளை ஏற்றுக்கொள்வது, அதாவது திணைப் பெருக்க விரிவு நியாயமானதே.

ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு உரிப்பொருள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கால தேச நிலைகளுக்குப் பொருத்தமான உணர்வு மண்டலத்தை இலக்கியப் படைப்புகளில் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிவதால், கவிதைப் பகைப் புலனைக் கவிதையின் உள்ளடக்கச் சாரத்துடன் தொடர்புபடுத்துவது சாத்தியமாகிறது. இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள பரஸ்பர உறவு இலக்கியத்தில் பகைப் புலனும் உள்ளடக்கமுமாக உள்ள பரஸ்பர உறவு வழியாக நுட்பமாகக் குறிப்பிடப்படுகிறது என்று மேலோட்டமாகச் சொல்லலாம். இந்த உறவு எப்போதும் வெளிப்பட்டுத் தோன்ற வேண்டுமென்பதில்லை. இலை மறைவு காய் மறைவுக்குத்தான் இலக்கிய ரசனையில் கூடுதல் முக்கியத்துவம்.

முதல் பொருளை உரிப் பொருளோடு தொடர்புபடுத்துவதற்கு உதவும் ஆக்கக் கூறுகள்தான் கருப் பொருள் என்ற குறியீட்டினால் பொருளதிகாரத்தில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கால தேச நிலைகளின் சூசக அடையாளங்களும் வெளியீட்டு ஊடகங்களும்தான் கருப்பொருள் எனலாம். இரண்டு திணைகள் இணங்கிச் சேரும்போது உரிப்பொருளில் நிகழ்வதைப் போல் கருப் பொருளிலும் சில மாற்றங்கள் நிகழலாம். புதிய திணைகளைக் கண்டுபிடிக்கும்போது பொருத்தமான உரிப்பொருளையும் கருப்பொருளையும் சேர்த்துக்கொள்ள வேண்டி வரலாம். ஒவ்வொரு திணைக்கும் கருப்பொருளாகப் பதினொரு விதமான பொருள்கள் பொருளதிகாரத்தில் தரப்பட்டிருக்கின்றன. இவற்றுக்குக் கூடுதல், குறைவு வராது என்பதில்லை. பழைய திணைகளைப் புதிதாய் விளக்கவும் புதிய திணைகளை இனம் காணவும் முயலும்போது, முதல், உரி, கருப் பொருள்களில் பொருத்தமான மாற்றங்கள் ஏற்படவேண்டிவருகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலக் கவிதைகளின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வந்த இலக்கியக் கோட்பாடுகளில் சமகால இலக்கியத் திறனாய்வுக்குத் தகுந்த நவீனப்படுத்தல் நிகழவேண்டியுள்ளது.




பொருளதிகாரத்தின் பாடங்கள்

இலக்கிய ரசனையை, படிப்பைச் சீரிய முறையில் மனப்பூர்வமாக எடுத்துக்கொள்ளும் நபர் ஒரு படைப்பை அணுகும்போது முதலில் கவனிக்க வேண்டியவை என்னென்ன என்ற கேள்விக்குத் தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் தரும் பதில் மிக அடிப்படையானது. முதல் பொருள், அதாவது முதன்மைத் தத்துவங்கள் என்றால் அவை கால தேச நிலைகள் என்பவையாகும். கால நிலையையும் தேச நிலையையும் கணக்கில் எடுக்காமல் ஒரு படைப்பைப் பற்றிய ஆய்வை ஆரம்பிப்பது சாத்தியமில்லை என்றுதான் இங்கே சுட்டப்படுகிறது. காலநிலை எவை? தொல்காப்பியத்தில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள காலநிலைகள் இரண்டு. ஒன்று, மழைக் காலம், வேனில் காலம் போன்ற பெரும்பொழுதுகள், பருவங்கள். இரண்டு, காலை, மதியம், மாலை, இரவு போன்ற சிறு பொழுதுகள். இத்தனை மட்டுமே பொருளதிகாரத்தில் பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கின்றனவென்றாலும் விசாலமான பொருளில் உள்ள காலக் கணிப்பைக்கூட இதில் உட்படுத்த வேண்டுமென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. குறிப்பாக, வரலாறு, பண்பாடு முதலிய செல்நெறிகள் உட்படுகின்ற காலகட்டங்கள். காரணம், கால நிலை என்பது வரலாற்று அம்சம் உட்படுகின்ற ஒரு கருத்தாக்கம். வருடமானம் தினமானம் ஆகிய கணக்குகளைப் போல் யுகமானமும் இதில் உட்படும்; உட்படவேண்டும்; உட்படுத்தவேண்டும். இந்த உள்ளுணர்வைத் தொல்காப்பிய வரிகளின் இடையே நாம் வாசிக்க முடிகிறது. சுற்றுப்புறச் சூழல், சூழ்நிலை என்று சொல்லும்போது பகலும் இரவும்போல், வெளிச்சமும் இருளும்போல், கோடையும் மழையும்போல் சரித்திரக் காலகட்டங்களும் மாறிக்கொண்டிருக்கும் மனித வாழ்வின் - சூழலின் முக்கியமான அம்சங்களாகும். இலக்கியப் படிப்பில் கால நிலையை ஒட்டிக் குறிப்பிடுகிற எல்லா அம்சங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. வரையறை செய்யப்பட்ட பொருளில் பெரும் பொழுதுகளின் சிறப்புத் தன்மைகளும் மனித வாழ்வின் மீது அவை செலுத்துகிற சிறப்பும் தீவிரப் பரிசீலனைக்கு உகந்தவை. அதைப் போலவே எதன் கால நிலை என்ற கேள்விக்கு நாம் பதில் கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் விரிவான பொருள் தேடலில் காலநிலையின் மூன்று அம்சங்களாவது உட்பட்டிருக்கும். ஒன்று, எழுதிய ஆளின் காலம், எழுதிய காலம்; இரண்டு, படைப்பில் விவரித்திருக்கிற, சூசகமாக்கப்பட்டிருக்கும் காலம், காலகட்டம்; மூன்று, வாசகனின் நிகழ்காலம், வாசிக்கும் காலப் பிரமாணம். முன்பு எழுதப்பட்ட ஒரு படைப்பை இன்று வாசிக்கும்போது எழுதப்பட்ட காலத்தைப் போல் வாசிக்கிற காலத்தையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். அவற்றைப் போலவே முக்கியமானவை படைப்பினுள் விவரித்திருக்கும் காலகட்டம், பெரும்பொழுதுகள், சிறு பொழுதுகள், ருதுக்கள், நாள் பிரிவுகள் ஆகியவை.

பொருளதிகாரத்தில் இவ்வாறு குறிப்பிடப்படும் முதல் பொருள், கருப் பொருள், உரிப் பொருள் இவற்றை ஒரு துவக்கமாய்ப் பார்க்கும்போது, முதல் பொருள்தான் அடிப்படை. அதில் குறிப்பிடப்படுகிற இடமும் காலமும் மேலே விவரித்திருக்குமாறு சமகாலப் படைப்புகளின் ரசனைக்கு உதவ வேண்டும்.

இடத்தைக் குறிப்பிடுகிற திணைகள் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டவற்றுக்குள் (அகம் 7 + புறம் 7 = 14) அடங்கி நிற்க வேண்டும் என்பதில்லை.

தமிழிலும் ஏனைய இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உட்பட்ட திராவிடமல்லாத பிற உலக மொழிகளிலும் வெளிவந்துள்ள படைப்புகளில் புதிய திணைகளைக் கண்டுபிடிக்கலாம். இதைத் திணைப் பெருக்கம் என்று அழைப்போம். மலையாளத்தில் கோவிலனின் ஹிமாலயம், முகுந்தனின் டெல்ஹி' வங்கமொழியில் விபூதிபூஷணின் ஆரண்யக், தமிழில் ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, நீல. பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் போன்ற நாவல்கள் - எடுத்துக்காட்டாக இந்தப் படைப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு, மேலே தொல்காப்பியம் விதித்திருக்கும் திணைகளிலிருந்து இவை பிறந்திருக்கின்றனவா, எங்கே ஒன்றுபடுகின்றன, பிறந்திருக்கிறதென்றால் திணைப் பெருக்கத்திற்கு வழிவகுக்குமா என்றெல்லாம் விரிவாக ஆய்வு செய்வது, திணைப் படிப்பைச் சமகால இலக்கியத்தின் நவீனப் பார்வைகளுக்குச் சாதகமாக்க வெகுவாகத் துணைபுரியும்.

ஒன்றுக்கு அதிகமான திணைகள் ஒரு படைப்பில் இணங்கிச் சேர்ந்திருந்தால் திணையிணக்கம், திணை மயக்கம் என்று அழைக்கிறோம். இணங்காதிருந்தால் திணைப் பிணக்கம் (ஐரனி). இவற்றை மேலே குறிப்பிட்டிருக்கும் இந்திய மொழிப் படைப்புகளுக்கு மட்டுமல்ல, திராவிடம் அல்லாத பிற படைப்புகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக ஷேக்ஸ்பியரின் 'மாக்பெத்'தை இங்கே ஆய்வு செய்து பார்ப்போம்.

ஒரு சரித்திரப் பின்னணியுள்ள அரசியல் கதையானதால் ஸ்காட்லாந்தின் அரசியல் வரலாற்றில் இதிகாச இயல்பான காலகட்டம் இங்கு சித்தரிக்கப்படுகிறது. நிகழ்ச்சிகள் நடப்பது, யுத்தத்தின் பின்னணியில். டங்கனின் கொலையும் ஆவியின் பிரவேசமும் எல்லாம் நடப்பது இரவில். மொத்தத்தில் மனிதனின் நல்ல தன்மைகளை நெருக்கிக் கொல்லும் குரூரத்தைத் தொனிக்கச் செய்யும் இருள்சூழ்ந்த நிசியின் சூழ்நிலை படைப்பு முழுதும் நிறைந்து நிற்கிறது. பொருளதிகாரத்தின் அடிப்படையில் பார்த்தால் மாக்பெத்தின் குணத்திலேயே இருக்கும் முரண்பாடு வெளிப்படுகிற அம்சங்களைப் பார்க்க முடியும். யுத்தக் காட்சிகள், கோட்டை முற்றுகை, எதிரிகள் அழிப்பு போன்றவை உட்படும் பகல்களில்கூட மாக்பெத்தின் மனப் போராட்டமும் வஞ்சனையும் பதவி மோகமும் சூசகமாக்கும் இரவுகளும் சேர்ந்த ஒரு கால அளவு இங்கே வெளிப்படுகிறது. உள்ளடக்கம் அல்லது கதைக் கருவோடு தொடர்புபடுத்தித்தான் தொல்காப்பியத்தில் முதல் பொருள் பரிசீலனை செய்யப்படுகிறது. ஒரு முழுநீள நாடகமாதலால் ஒன்றுக்கு மேற்பட்ட பெரும்பொழுது, சிறுபொழுதுகளை இப்படைப்பில் காணலாம். அக உணர்வுகளை வெளிப்படுத்த இரவும் சமூகக் காட்சிகளுக்குப் பகலும். அதைப் போலவே, ஒன்றுக்கு அதிகமான பெரும்பொழுதுகளுக்கு இடமுள்ள முறையில்தான் நாடகத்தின் உணர்வுச் சித்திரிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாகச் சொன்னால் முரண்பாடுகள் கொண்ட இருள் மூட்டமான சூழ்நிலை 'மாக்பெத்'தில் வெளிப்படுத்தப்படுகிறது. சுருக்கமாக, அதன் கால ஆய்வாக இத்தனையையும் குறிப்பிடலாம்.

பிரதேச நிலை என்று சொல்லும்போது படைப்பின் சம்பவங்கள் நடக்கிற இடம், படைப்பு உருவாக்கப்பட்ட இடம், படைப்பை வாசித்துப் புரிந்துகொள்ளப்படும் பிராந்தியச் சூழ்நிலை இவையெல்லாம் முக்கியமாக வரும். 'மாக்பெத்'தின் புவியியல் பின்புலமான பிராந்தியம் ஸ்காட்லாந்து. அங்குள்ள கோட்டை, கொத்தளங்கள், அரண்மனைகள், போர் நடக்கும் திறந்த வெளியிடமெல்லாம் இதில் உட்படும். தனிநபரான மாக்பெத்தின் மனப் போராட்டத்தைத் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அகத்திணையில் மருதத்துடன் தொடர்புபடுத்தலாமெனினும் வெளியில் உள்ள மோதல் -போர்க்காட்சிகள், புறத்திணையில் உழிஞையோடு தொடர்புப்படுத்துவதுதான் பொருத்தம். 'மாக்பெ'த்தின் உள்ளடக்கம் அக, புறத் திணைகளில் உட்பட்ட மருதமும் உழிஞையும் சேர்ந்ததாகக் காணப்படுகிறது. டங்கனின் கொலையும் யுத்தக் காட்சிகளின் கொலையும் வேறுபட்ட உணர்வுகளின் லட்சணங்களைக் கொண்டிருப்பதால் இரட்டைத் திணையுள்ள படைப்புதான் 'மாக்பெத்' என்று சொல்லலாம்.

இவ்வாறு பொருளதிகார முறையில் பார்க்கும்போது 'மாக்பெத்'தின் உரிப் பொருள் நம்பிக்கைத் துரோகமும் பதவியைக் கைப்பற்றலுமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட பெரும்பொழுதுகளின் பின்னணியை இங்கே காண முடியும். சூனியக்காரிகளின் மந்திரஜபங்களுக்கும் விழாவுக்கும் பரிவாரமாக வருவது இடியும் மின்னலும். இவை நிகழ்வது சதுப்பு நிலத்தில். காட்சி இன்வேணட் கோட்டைக்கு மாறும்போது சூழ்நிலை தெளிவற்றதாகிவிடுகிறது. "இது நல்ல இடம், நமது மிருதுவான புலன்களுக்கு இன்பம் தருகிறது. இங்குள்ள காற்றுக்கூட" என்றெல்லாம் கூறி அந்தியுறங்கும் டங்கன் அதிகம் தாமதியாமல் கொல்லப்படுகிறான். மாக்பெத்தின் மனத் தடுமாற்றத்திற்கும் இச்சையை அடக்கும் சக்தியின்றிச் செய்துகொண்டிருக்கும் பாவங்களுக்கும் தவிர்க்க முடியாமல் தலையில் வந்து விழும் பேராபத்துக்கும் ஏற்ற பகைப் புலனை ஷேக்ஸ்பியர் தயார்படுத்தியிருக்கிறார். இந்த நேரடி-மறைமுக முரண்பாடு, நாடகத்தில் மொத்தமாய் நிறைந்து நிற்கும் எதிரிடைப் பண்பாகவும் விதிவிபரீதமாகவும் நமக்கு அனுபவமாகிறது. இங்குதான் இரு திணைகளின் கூடிச் சேருதல் அல்லது கூடிச் சேராதிருத்தலை நாம் புரிந்துகொள்கிறோம். இந்த முரண்பாட்டை ஐரனியாகப் பல மேல்நாட்டு விமர்சகர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். "நிழலும் ஒளியும் இணைந்து சேர்ந்த வாழ்க்கை, மரணங்கள் பரஸ்பரமுள்ள முரண்பாட்டை எடுத்தாளுகிறது மாக்பெத்" என்று காலரிட்ஜும் மூடுதிரையிட்ட சிந்தனைக் குழப்பமென்று ராபர்ட் பிரிட்ஜஸும் மாக்பெத்தின் ஐரனியென்று க்வில்லர் கவுச்சும் ஐரனி ஒரு செயல் உருவில் என்று மோல்ட்டனும் விவரிப்பது இந்தத் திணைப் பிணக்கம் கொண்டு வருகிற சிறப்பியல்பாக நமக்குக் காண முடியும். ஒரு திணையின் கருக்கள் இன்னொரு திணையில் வந்தால் அது திணைமயக்கம். திணைகள் இணங்காமல் நின்றால் திணைப்பிணக்கம். சூழ்நிலை முரண்பாடு உணர்ச்சி இறுக்கம் வெளிப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 'மாக்பெத்' என்ற படைப்பின் பேராபத்து வெளியீட்டின் மொத்த அழகியல் சுற்றுப்புறச் சூழ்நிலைச் சித்தரிப்புடன் தொடர்புடையது என்று சுருக்கமாகக் கூறலாம்.

முதல் பொருளையும் உரிப் பொருளையும் உணர்ந்துவிட்டால் அவற்றில் வெளிப்படுத்தப் பயன்பட்ட கருப் பொருள் கவனத்தில் படும். கால தேச நிலைகளுக்குத் தகுந்தவாறு பறவை, விலங்கு, மரம், இசைக் கருவி (பறை), பண், மக்கள், உணவு முதலியவற்றையும் தெய்வம், தொழில் போன்றவற்றையும் படைப்பில் காணமுடியும். தேவதையின் இடத்தில் இங்கே போர்த் தேவதையின் பிரதிநிதிகளென்று சொல்லத் தகுந்த சூனியக்காரிகள் முதல் காட்சியிலேயே தோன்றுகிறார்கள். கட்டுப்படுத்தும் சக்தியாக நாடகாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். அழிவின் விதையை அவர்கள் விதைக்கிறார்கள். அவர்களுக்குப் பொருத்தமான இயல்தன்மைதான் ஆவியின் வருகையும். உழிஞைத் திணைக்குப் பொருத்தமான யுத்தமும் நாட்டின் ஆட்சியும் கதை மாந்தர்களின் முக்கியத் தொழில்களாக இருக்கின்றன. பறவைகளின் இடத்தில் அமைதிக் குணம் படைத்த மார்ட்டினுக்கு நேராக ஆந்தை இரவு முழுதும் உரத்துக் குரல் எழுப்பியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மரத்தின் இடத்தில் பெர்னாம் மரக் கூட்டம் முழுதும் உண்டு. இந்தக் கருக்களையெல்லாம் திறமையாக ஒன்றிணைத்துத்தான் பயங்கரமும் கொடூரமுமான துன்பியல் கதையை ஷேக்ஸ்பியர் நாடகமாக்கியிருக்கிறார்.

தொல்காப்பியத்தில் இலக்கியம் முழுமையும் அகம், புறம் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. அகமென்றால் உட்புறம் சம்பந்தப்பட்டது; தனிநபர் சார்ந்தது; உளவியல் பாற்பட்டது; மென்மை உணர்வு; மோகனம்; சுயசார்புடையது என்றெல்லாம் கூறலாம். புறம் என்றால் வெளி; எல்லையற்றது; சமூகவியல் சம்பந்தப்பட்டது; தீவிர உணர்ச்சி வெளியீடு; பொருள் சார்ந்தது என்றெல்லாம் குறிப்பிடலாம். ஒவ்வொன்றிற்கும் முறையே ஏழு திணைகள் பொருளதிகாரத்தில் விதிக்கப்பட்டிருக்கின்றன. இது ஓர் எடுத்துக்காட்டு (மாடல்) மட்டும்தான். இந்தக் கோட்பாட்டை மனித நிலைகளின் காலதேச நிலைகளுடன் தொடர்புபடுத்தும் அழகியல் கோட்பாட்டை, தேவையான விரிவாக்கல், திருத்தல்களுடன் ஒரு படைப்பைத் திறனாய்வுசெய்யப் பயன்படுத்தலாம். யந்திரகதியில் எல்லாப் படைப்புகளிலும் இந்தக் கோட்பாட்டை வலுக்கட்டாயமாகப் புகுத்திப் பார்க்கத் தேவையில்லை. ஒன்றுக்கொன்று சேர வேண்டியவற்றைத்தானே சேர்க்க முடியும்?

தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் திராவிட இலக்கிய இயலின் - ஆய்வுச் சித்தாந்தத்தின் மூலக் கருவாகும். அதை விரிவாக்கி எடுத்தால் ஒருவேளை உலகத்தில் மிகவும் பழமையான, மகத்தான ஒரு சுற்றுப்புறச்சூழல் அழகியல் கோட்பாடு நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பூமியும் சொர்க்கமும் பாதாளமும் பகைப்புலனாகியிருக்கிற தாந்தேயின் 'டிவைன் காமெடி'க்கும் மில்ட்டனின் 'பாரடைஸ் லாஸ்ட்'டுக்கும் இந்தக் கோட்பாடு பயன்பட வேண்டுமெனில் யந்திரத் தன்மையற்ற, கற்பனை எழில்வளம் கொழிக்கும் ரீதியில் இதை வளர்த்தெடுக்க வேண்டும். நீண்ட படைப்புகளில், மேலே குறிப்பிட்டவாறு ஒன்றுக்கு மேற்பட்ட திணைகளைக் காணக்கூடும்; அகமும் புறமும் இணைந்தும் வரக்கூடும். உரிப் பொருள்கூடக் கலந்து வரலாம். கருப் பொருள்களைக் கால தேச வேறுபாடுகளுக்கேற்றவாறு திருத்தி அமைக்க வேண்டிவரலாம். இவ்வாறு அகமும் புறமும் இணையும்போது திணைப் பெருக்கம் என்று அழைக்கலாம். எடுத்துக்காட்டு இராமாயணத்தில் அயோத்தியும் காடும் அபிஷேகமும் யுத்தமும் வருவதை விரிவாக ஆய்வுசெய்து பொருள் கொள்ளலாம்.

இதைப் போன்று காலக் கோட்பாட்டை விரிவாக்கலாம். பெரும்பொழுது, சிறு பொழுதுகளைப் போல், காலகட்டமும் வரலாற்று நிகழ்ச்சிகளும் காலத்தால் சூசகமாகலாம். எடுத்துக்காட்டாக, சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம், கல்கி, பங்கிம் சந்திரர், சி.வி. ராமன்பிள்ளை முதலியவர்களின் நாவல்களை எடுத்துக்கொண்டு ஆய்வுசெய்யலாம்.

தான் கூறுவது எடுத்துக்காட்டுகள் மட்டுமே, அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதில்லையென்று தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்கிறார்: எனவே, தொல்காப்பியரின் இலக்கிய தரிசனத்தைச் சமகாலத்திற்குத் தகுந்தவாறு மேலே விவரித்தவாறெல்லலம் வியாக்கியானம் செய்தால் உலக இலக்கியப் படைப்புகளுக்குப் புதிய பரிமாணம் அளிக்க முடியும்.

இப்போது மேனாட்டு மொழிகளில் ecopoetics என்று அழைக்கும் சுற்றுப்புறச்சூழல் இலக்கியச் சிந்தாந்தம் உருவாகி வந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலப் படைப்புகளுடன் பின்னிப் பிணைந்து விரிந்து பரந்துவந்த இந்தத் திணைக் கோட்பாட்டை மாறின இன்றைய சூழ்நிலையில் ஏனைய மொழிப் படைப்புகளுக்கும் சமகால இந்திய இலக்கியப் படைப்புகளுக்கும் பொருத்தி ஆய்வுசெய்து பார்க்கலாம். வையத்தில் வேறெந்த மொழிகளிலும் இதைப் போன்ற ஒரு சுற்றுப்புறச் சூழல் இலக்கியச் சித்தாந்தம் பழமைக் காலத்திலேயே வேர்விட்டு உருக்கொள்ளவில்லையாதலால் இந்தத் திராவிடத் திணைக் கோட்பாடு இவ்விஷயத்திலும் நமக்குப் பயன்படுத்தத் தகுந்த ஓர் அரிய சித்தாந்தமாகும்.