FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Ayisha on October 14, 2018, 01:33:07 PM

Title: எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் உணவுகள்
Post by: Ayisha on October 14, 2018, 01:33:07 PM
(https://i2.wp.com/tamilmedicaltips.com/wp-content/uploads/2015/11/300x225x3.gif.pagespeed.ic_.NdJv8UwoeW.jpg?resize=298%2C225)

காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் மண்பானை நீர் அருந்தவும். சிறிது நேரத்திற்குப் பின் உடற்பயிற்சி. அதன் பிறகு, தேன் கலந்த எலுமிச்சைச் சாறு அல்லது சர்க்கரை, பால் சேர்க்காத ஏதேனும் டீ அருந்தலாம். காலை உணவில் நிறையப் பழங்களும் காய்கறிகளும் இருக்கட்டும்.

நொறுக்குத் தீனியாக முளை விட்ட தானியங்கள், பருப்பு வகைகள், சோயா பீன்ஸ், வேர்க்கடலை, பாதாம், வால்நட் போன்றவை சாப்பிடலாம். வைட்டமின் சி நிறைந்த கொய்யா, நெல்லிக்காய், கீரைகள், காய்ந்த திராட்சை, பேரீச்சை, அத்தி போன்றவற்றை நிறைய எடுத்துக்கொள்ளலாம். எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள மத்தி, சால்மன் போன்ற மீன்களைச் சாப்பிடலாம்.

முட்டையின் வெள்ளைக்கருவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணப் பொடியை, ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, தினமும் இரவில் படுக்கப் போகும் முன்னர் அருந்துவது, மிகவும் நல்லது.

வாரத்துக்கு ஒருநாள் இளநீர் டயட் எடுக்க வேண்டும். வெறும் இளநீர் மற்றும் வழுக்கையை மூன்று நான்கு முறை சாப்பிட வேண்டும். இதை 20 வயதிற்கு மேற்பட்டோர் வாரம் ஒருமுறை என கடைப்பிடித்தால், இது சிறுநீரகத்தின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.