FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: JeGaTisH on October 16, 2018, 09:34:55 PM

Title: நான் சிவப்பு மனிதன்(1985)
Post by: JeGaTisH on October 16, 2018, 09:34:55 PM
http://www.youtube.com/watch?v=WodfEPu6G3Q (http://www.youtube.com/watch?v=WodfEPu6G3Q)

http://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Naan%20Sigappu%20Manithan%20(1985) (http://friendstamilmp3.net/Album/A-ZMovieSongs/Naan%20Sigappu%20Manithan%20(1985))


படம் : நான் சிவப்பு மனிதன்
இசை : இளையராஜா   
பாடல் வரி : வாலி 
பாடியவர்கள் : இளையராஜா

எல்லாருமே திருடங்கதான்
சொல்லப்போனா குருடங்கதான்
நம்ம நாட்டுல நடு ரோட்டுல வீட்டுல காட்டுல
எல்லாருமே திருடங்கதான்

பொன்னான பாரதம் புத்திக் கெட்டு போச்சுடா
சொன்னானே பாரதி சொன்னதென்ன ஆச்சுடா
எல்லாரும் இந்நாட்டு.
மன்னன்  இல்ல...மன்னன் இல்ல.

எல்லாருமே திருடங்கதான்
சொல்லப்போனா குருடங்கதான்
நம்ம நாட்டுல நடு ரோட்டுல வீட்டுல காட்டுல
எல்லாருமே திருடங்கதான்

பந்தலும் மேடையும் போட்டுகிறான்
ஒரு துண்டையும் தோளுல மாட்டிக்கிறான்
ஓட்டுகள் போட்டிட கேட்கிறான்
அதப் போட்டதும் புத்திய மாத்திக்கிறான்

எல்லாமே வேஷம்தான் ஏதேதோ கோஷம்தான்
எங்கேயும் தில்லுமுல்லு திண்டாடுது தேசம்தான்
எந்நாளும் கோழைகளா எதுக்கு வாழணும்
அப்பாவி மனுஷனெல்லாம் சிவப்பா மாறணும்
ஒருத்தனும் இங்க சித்தனும் இல்ல
புத்தனும் இல்ல ஹே...ஹே...ஹே...

எல்லாருமே திருடங்கதான்
சொல்லப்போனா குருடங்கதான்
நம்ம நாட்டுல நடு ரோட்டுல வீட்டுல காட்டுல
எல்லாருமே திருடங்கதான்.

எத்தனை எத்தனை சாமியடா இதில்
என் மதம் உன் மதம் சண்டையடா
எத்தனை எத்தனை ஜாதியடா இதில்
முட்டுது மோதுது மண்டையடா

கல்லான தெய்வங்கள் காணாம நின்னாச்சு
எல்லோரும் கோயில் கட்டி இங்க இப்போ என்னாச்சு
தன்னால புரிஞ்சிக்கிட்டு எல்லாரும் திருந்தணும்
இல்லாட்டி நடந்ததுக்கு பின்னால வருந்தணும்
அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன
புண்ணியமில்ல ஹே......ஹே..ஹே.

எல்லாருமே திருடங்கதான்
சொல்லப்போனா குருடங்கதான்
நம்ம நாட்டுல நடு ரோட்டுல வீட்டுல காட்டுல
எல்லாருமே திருடங்கதான்.